பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 27, 2008

தமிழ் சந்து கும்மி

பல நண்பர்கள் நகைச்சுவை கொஞ்சம் வரம்பு மீறி இருக்கிறது என்று சொன்னதால், இந்த பதிவை நீக்குகிறேன்.

இந்த பதிவால் உங்கள் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். ...

20 Comments:

ஜயராமன் said...

இட்லி ஐயா,

நீங்கள் யாரென்று எனக்குத்தெரியாது. ஆனால், பெருமைப்படக்கூடிய பங்களிப்பைச் செய்துவருகிறீர்கள்.

ஆனால், இன்று பார்த்தால் திடீரென்று எனக்குப்போட்டியாக கிளம்பி விட்டீர்கள். நானே அங்கொன்றும், இங்கொன்றுமாக சில அல்ப பதிவுகளைப் போட்டு ஓட்டிக்கொண்டு இருப்பவன்.

இன்று உட்லண்ட்ஸ் விவகாரம் குறித்து பதிவு போட்டால் அடுத்த சில நிமிடங்களில் நீங்களும் அதைப்பற்றியே எழுதுகிறீர்கள். நாம் இருவர் சுட்டதும் ஒரே இடத்திலிருந்துதான் என்பதும் வருந்தத்தக்க விஷயம்.

சரி, போகட்டும் என்று தமிழ்இந்து.காம் இணைய தளத்தைப்பற்றி புகழ்ந்தும் அதற்கு லிங்க் கொடுத்தும் எழுதினால், அதையும் அரை மணியில் காப்பி செய்து ஒரு பதிவு போட்டுவிட்டீர்கள்.

நடக்கட்டும், நடக்கட்டும். இதனால் தமிழ்இந்து.காம் பெரிய "ஹிட்லிஸ்டில்" சேர்ந்துவிடும் என்பது நிச்சயம். அதன் பெருமையை என்னிடமிருந்து முழுசாக தட்டிக்கொண்டுபோக நீங்கள் ஆசைப்படுவது நியாயமா? இல்லவே இல்லை.

http://idlyvadai.blogspot.com/2008/05/blog-post_8041.html

இனிமேல் இதுமாதிரி ஈயடிச்சான் காப்பி பண்ண வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்!!!

;-))))

நன்றி

ஜயராமன்

IdlyVadai said...

//இன்று உட்லண்ட்ஸ் விவகாரம் குறித்து பதிவு போட்டால் அடுத்த சில நிமிடங்களில் நீங்களும் அதைப்பற்றியே எழுதுகிறீர்கள். நாம் இருவர் சுட்டதும் ஒரே இடத்திலிருந்துதான் என்பதும் வருந்தத்தக்க விஷயம்.//

இது தற்செயல். அப்பறம் நான் பார்த்த செய்தி தினத்தந்தி நீங்கள் சொல்லுவது தட்ஸ் தமிழ்.

//சரி, போகட்டும் என்று தமிழ்இந்து.காம் இணைய தளத்தைப்பற்றி புகழ்ந்தும் அதற்கு லிங்க் கொடுத்தும் எழுதினால், அதையும் அரை மணியில் காப்பி செய்து ஒரு பதிவு போட்டுவிட்டீர்கள்.//

இதுவும் தற்செயல் தான்.

//இனிமேல் இதுமாதிரி ஈயடிச்சான் காப்பி பண்ண வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்!!!//

இட்லிவடைக்கு எச்சரிக்கை, மற்றும் ஈயடிச்சான் காப்பி இரண்டும் பழக்கபட்ட ஒன்று தான்.

Anonymous said...

ஜந்து எழுச்சிப்பாடல்!

Anonymous said...

இட்லி வடை,

http://onlysuperstar.blogspot.com/2008/05/legend-turns-lesson-superstar-in-cbse.html

இது உண்மையா என பார்த்து சொல்லவும்..

-நகுல்

Anonymous said...

தமிழ் இந்து எனும் அந்த தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றிகள்.

மிக அருமையான தகவல்கள் உள்ள இணைய தளம் என்பது தெரிகிறது.

Anonymous said...

அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அவர்கள் எழுதியிருக்கிறார்கள் - தமிழ் ஹிந்து தளத்தில்.

அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவதை உங்கள் ப்ளாக்கில் எழுதியுள்ளீர்கள்.

பார்க்கலாம், யார் ஆசை நிறைவேறுகிறது என்பதை.

ஆனால், உங்கள் ஆசை நிறைவேறாதவரை மனிதர்களுக்கு நல்லது. அவர்கள் ஆசை நிறைவேறினால் அனைவருக்கும் நல்லது.

Anonymous said...

எவர்க்கும் இளைத்தவர் நாமில்லையே - இங்கு
எவரையும் இழிப்பது நாமில்லையே - (தமிழ் இந்து டாட் காம் )

சந்து கிடைச்சதும் லுங்கி உயர்த்துற
சந்ததி நாமுன்னு தெரிஞ்சிக்கடா - (இட்லிவடை.ப்ளாக்ஸ்பாட்.காம்)

Anonymous said...

thamilchristians.com இருக்குது, tamilmuslim.com இருக்குது. அத விடுங்க, தமிழ்ஜெயின் கூட இருக்குது.

இது பத்தியெல்லாம் எதுவும் சொல்லாத நீங்க தமிழ்இந்துன்ற சைட்டப் பத்தி மட்டும் இவ்வளவு கேவலமா எழுதியிருக்கீங்களே.
எளவெடுத்த செக்யுலர் பேய் உங்களையும் புடிச்சிருச்சா இட்லிவட?

Yet tu, Idlyvadaius?

ஜயராமன் said...

ஐயா,

//// இட்லிவடைக்கு எச்சரிக்கை, மற்றும் ஈயடிச்சான் காப்பி இரண்டும் பழக்கபட்ட ஒன்று தான். ///

நான் கேலியாக எழுதியதை நீங்கள் சிரத்தையாக பதில் கொடுத்திருப்பது வினோதம்.

உங்கள் கும்மியில் சில கருத்துக்கள் ஒப்பாமல் (அருவருப்பாக கூட) இருக்கின்றன. அதனால், அது குறித்து மேலே எழுதவில்லை. நீங்கள் இந்த தளத்தை கேலி செய்கிறீர்களா இல்லை வேறு யாரையாவதா என்று புரியவில்லை. :-(((

நன்றி

ஜயராமன்

IdlyVadai said...

//நான் கேலியாக எழுதியதை நீங்கள் சிரத்தையாக பதில் கொடுத்திருப்பது வினோதம்.//

ஜயராமன் இட்லிவடை வாசகர்கள் முட்டாள் இல்லை.

//உங்கள் கும்மியில் சில கருத்துக்கள் ஒப்பாமல் (அருவருப்பாக கூட) இருக்கின்றன. அதனால், அது குறித்து மேலே எழுதவில்லை. நீங்கள் இந்த தளத்தை கேலி செய்கிறீர்களா இல்லை வேறு யாரையாவதா என்று புரியவில்லை//


கடைசியாக தமிழ்புத்தர் டாட் காம் தளத்திற்கு சென்றீர்களா ? எப்படி இந்த திடீர் ஞாநோதயம் ?

நீங்க போட்ட முதல் பின்னூட்டம் ஒப்பாத கருத்துக்கு போட்ட பின்னூட்டம் மாதிரியே இல்லையே. எப்படி ஜயராமன் செல்லமாக உங்களுக்கு மட்டும் கண்டிக்க முடிகிறது.

இட்லிவடை வாசகர்கள் முட்டாள் இல்லை.

எதற்கும் நீங்க முதல் கமெண்டுக்கு போட்ட ஸ்மைலியை ரிப்பீட் செய்கிறேன். ;-))))

ஜயராமன் said...

/// ஜயராமன் இட்லிவடை வாசகர்கள் முட்டாள் இல்லை. ///

நானும் இட்லிவடை வாசகன்தான் என்று இதுவரை நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

ஆமாம் ஐயா, நிஜமாக கிண்டலாகத்தான் எழுதினேன். நீங்கள் என்னை காப்பி அடிக்கிறீர்கள் என்று சொல்லவில்லை.

/// கடைசியாக தமிழ்புத்தர் டாட் காம் தளத்திற்கு சென்றீர்களா ? எப்படி இந்த திடீர் ஞாநோதயம் ? ///

இல்லை, உங்கள் தளத்திலேயே அந்த ஞானம் கிடைத்துவிட்டது.

நன்றி

ஜயராமன்

Anonymous said...

இந்த கும்மி பாடல் மிக அருமையாக இருக்கிறது. இவ்வளவு அழகாக மரபுத் தமிழ்க் கவிதைகள் எழுதுபவர்களும் இருக்கிறார்கள் என்று மகிழ்ச்சி ஏற்படுகின்றது. கும்மி என்பது தமிழகப் பெண்கள் உருவாக்கிய முக்கியமான ஒரு பாரம்பரியக் கலைவடிவம் என்பதை மறந்து விடவேண்டாம். ஊரில் மழைவேண்டிப் பாடும் கும்மி முதல் பாரதி எழுதிய "பெண்கள் விடுதலைக் கும்மி" வரை தமிழ் இலக்கியத்தில் உண்டு.

// இருக்கற எளவெல்லாம் போதாதுன்னு
இன்னொண்ணு வருது இங்கபாரு //

நீங்கள் இவ்வளவு வெறுப்புக் காட்டும் அளவுக்கு இந்தப் பாடலில் மோசமாக, தீயதாக என்ன உள்ளது? வீரர்கள், மகான்கள், தலைவர்கள் இவர்களை வாழ்த்தித் தானே பாடல் எழுதியுள்ளார்? மனிதநேயம் என்ற அழகான முத்தாய்ப்புடன் பாடல் முடிகிறது.

எதைத் தான் கேலி செய்ய வேண்டும் என்று விவஸ்தையே இல்லையா?

-தமிழ்மைந்தன்

கால்கரி சிவா said...

//தமிழ் இந்து எனும் அந்த தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றிகள்.

மிக அருமையான தகவல்கள் உள்ள இணைய தளம் என்பது தெரிகிறது.

//

Repeat

பிரகாஷ் said...

//சந்து கிடைச்சதும் லுங்கி உயர்த்துற
சந்ததி நாமுன்னு தெரிஞ்சிக்கடா - //

நல்லா ருசியான இட்லிவடைய வச்சுட்டு, கூடவே "அசிங்கத்தையும்" வச்சது போல இருக்குது
வருந்துகிறேன்
-பிரகாஷ்

Anonymous said...

// இட்லிவடை வாசகர்கள் முட்டாள் இல்லை. //

நல்லவேளை.

வாசகர்களிடமாவது புத்திசாலித்தனம் இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

கால்கரி சிவா said...

//எதைத் தான் கேலி செய்ய வேண்டும் என்று விவஸ்தையே இல்லையா?//

இந்து என்ற பெயர் இருப்பதால் கேலி செய்கிறார்கள்.

இதே தமிழ்முஸ்லிம், தமிழ்கிறிஸ்டியன் இவைகளை கிண்டலடிக்க தில் இருக்குமா? என்றால் இருக்காது.

சரி அதைவிடுகங்கள், சில கோமாளிகள் தமிழுக்கு மூன்றெழுத்து திமுகவிற்கு முன்றெழுத்து என உளறுவார்கள் அதையாவது கிண்டலடிக்கும் தில் இருக்குமா உங்களுக்கு.

sara said...

disappointed

Anonymous said...

Dear IdliVadai

I did not have a chance to read your poem. It seems it was in a sarcastic tone mimicing the TamilHindu.Com site. The site was started with a noble cause to propagate various philosophies of Hinduism, a collective term for our Bharath's various philosophies. Please dont treat that site on par with any other religious site or fundamentalist sites.

You may find erudite articles from great Tamil scholars like HariKrishnan, Madhurabharathi et al. It is going to serve as a repositary of any information related to Hinduism and Indian culture including all information about our great scriptures, our temples, history, culture etc. It is going to evolve as an one stop encyclopedia for Hindu dharma including Saivam, Vaishnavam and any other subsect of our Hindu Dharma.

The website address is www.TamilHindu.com. It is not a political Hinduism platform. It is purely a site fo Hindu philosophies and culture only.

Whatever may be your poem thanks for giving ample advertisement for the web site. Please contribute any of your suitable articles also for that site.

Thanks for removing that sarcastic poem, please provide the link to www.TamilHindu.com along with your comments.

Thanks
Sa.Thirumalai

Anonymous said...

இட்லிவடை,

கும்மி, பள்ளு போன்ற தொல்மரபு பாடல்கள்மேல் தமிழர்களுக்கு இயல்பான மரியாதை உண்டு. நீங்கள் சந்து, கைலி தூக்குதல் போன்ற வார்த்தைகளை எழுதியதைக் கண்டு அதிர்ச்சியே. அவை இல்லாமல் நீங்கள் கேலி செய்திருந்தால் நாகரீகமாக இருந்திருக்கலாம்.

தரத்தை தாழ்த்திவிடக் கூடியதாக இருந்த உங்களுடைய கும்மி பாடல் போன்ற வரிகளை அழித்துவிட்டதால் தங்கள் ப்ளாக்கின் தரம் பழைய நிலைக்கு வந்துள்ளது. மகிழ்ச்சி.

மதுரபாரதி என்பவர் எழுதிய அந்த கும்மி பாடல் மரபு கவிதை வடிவை ஒட்டியதாகவும், அதே சமயம் எளிமையாக, நல்ல கருத்துக்களை சொல்லுவதாகவும் இருந்தது. இது போன்ற பாடல்கள் எழுதுவது மிகக் கடினம். அதை தங்களது ப்ளாக்கில் படித்து மிக மகிழ்ந்தேன். தமிழ் ஆர்வம் மிக்கவரும், ஒரு அமெரிக்க பல்கலையில் தமிழ் துறையின் முக்கியமான பொறுப்பில் இருப்பவருமான எனது அமெரிக்க நண்பருக்கு தங்களது ப்ளாக்கையும், அந்த கும்மி பாடலையும் பரிந்துரைக்க விரும்புகிறேன்.

மதுரபாரதி அவர்களின் அந்த கும்மி பாடலை நீங்கள் மீண்டும் இங்கே இடுகிறீர்களா?

அது எந்த ஸைட்டில் இருக்கிறது என்பது இப்போது ஞாபகம் வரவில்லை.

நன்றி.

Anonymous said...

இட்டிலிவடை அவர்களே, கேலி செய்யும் வரிகளைத் தாங்கள் நீக்கியமை குறித்து மிக்க மகிழ்ச்சி.

நீங்கள் அறிமுகம் செய்த http://www.tamilhindu.com/ என்கிற அந்தத் தளம் மிக அருமை. குறிப்பாக "இலக்கியம்" பிரிவில் உள்ள கட்டுரைகளில் தமிழ் கொஞ்சிவிளையாடுகின்றது.

அன்புடன்,
-தமிழ்மைந்தன்