பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 27, 2008

ஜோதிடத்தை நம்பியதால் காங்கிரசுக்கு தோல்வி - கி.வீரமணி

கர்நாடக தேர்தலில் ஜோதிடத்தை நம்பியதால் காங்கிரசுக்கு தோல்வி கி.வீரமணி அறிக்கை

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வில்லை. 2004-ம் ஆண்டு தேர்தலைவிட காங்கிரஸ் 15 இடங்களை கூடுதலாக பெற்ற போதிலும், பா.ஜ.க.வைவிட அதிக இடங்களை பெறத் தவறியதால் கர்நாடகத்தில் காவிக் கறையை ஆட்சிப் பீடத்தில் ஏற்றியுள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்றபோது, தேவகவுடா குடும்பத்தினருக்கு எதிராக பெண் வேட்பாளர்களை நிறுத்தினால், அவர்களை எளிதில் தோற்கடித்துவிடலாம் என்று ஜோதிடர்கள் கணித்ததை காங்கிரஸ் கட்சி ஏற்றது.

அதன்படி, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியை எதிர்த்து ராமகிருஷ்ண ஹெக்டே மகள் மம்தாவை நிறுத்தியும், மற்றொரு மகனான ரேவண்ணாவுக்கு எதிராக பெண் வேட்பாளர் அனுபமாவை நிறுத்தினார்கள். ஆனால், காங்கிரஸ் பெண் வேட்பாளர்கள் எளிதில் தோற்றுவிட்டனர்.

அரசியல் கொள்கைகளை செயல்படுத்தவும், மக்களிடம் செல்வாக்குப் பெற்று தொண்டால் சிறந்தவர்களையும் தேர்வு செய்வதை விடுத்து, ஆலமர ஜோதிடர்களை நம்பியதே, கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் அரியணை ஏற்றாததற்கு முக்கிய காரணம் ஆகும்.

இந்த செய்திக்கு பெண்கள் என்ன நினைக்கிறார்கள் ?
( படம்: பி.ஜே.பி வெற்றியை கொண்டாடும் பெண்கள் )

5 Comments:

மாயவரத்தான்... said...

வீரமணி எல்லாம் ஒரு ஆளுன்னு அதுக்கு ஒரு தனி பதிவை வேஸ்ட் பண்ணிட்டீங்களே இட்லி வடையாரே!

Anonymous said...

[edited] மாதிரி நம் வீரமணி ஐயாவின் காமாலைக் கண்ணுக்கு எல்லாமே அரசமரத்தடியாக தெரிகிறது. பாவம், அவரை விட்டுவிடுங்கள். தான் இருப்பதை அப்பப்போது உணர்த்த இப்படி ஈன அறிக்கைகள் அவருக்கு தேவைதான். எடியூரப்பாவின் ஹொகேனகல் போராட்டத்துக்கு பயந்து கரு-நா-நிதி அவர்கள் திட்டத்தை கைவிட்டதால் அந்த வெற்றிதான் எடியூரப்பாவை முதலமைச்சராக்கி விட்டது என்று நான் சொல்கிறேன். அதற்கு வீரமணியிடம் பதில் உண்டா?

நன்றி

ஜயராமன்

ஜயராமன் said...

இட்லி ஐயா,

தமிழரை வேட்பாளராக நிறுத்தியதால்தான் தோற்றுவிட்டோம் என்று காங்கிரஸ் கட்சியின் ஆலோசகர்கள் சொல்லியுள்ளனர்.

/// From Congress stalwart Dharam Singh's eye problem to the decision against fielding a Tamil candidate to non-performance of candidates in urban and rural seats to recalling S M Krishna into active politics -- the party attributed the failure on everything and everyone. ///

http://dailypioneer.com/indexn12.asp?main_variable=front%5Fpage&file_name=story3%2Etxt&counter_img=3

இந்த வெட்கங்கெட்ட தனத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை கேள்வி கேட்டு நம் தன்மான வீரர் வீரமணி அறிக்கை விடுவாரா?

இல்லை, கூட்டணியில் கிடைக்கும் ரொட்டித்துண்டுக்காக இந்து மதத்தை மட்டுமே பார்த்து குறைப்பாரா?


ஆதாரம் இல்லாத ஒரு அற்பமான புரளியை நம்பி இந்து நம்பிக்கையை கேலி செய்து அறிக்கை விடும் இவர் இப்போது வாயை மூடிக்கொண்டு இருப்பாரா?
நன்றி

ஜயராமன்

Anonymous said...

Ayya veeeeeramani,BJP won the elction because they believed in astrology.Ithuku enna pathil?

M.S. DEVARAJAN said...

aamam, jothidathai nambia congressukku tholvi. (hindu) kadavula nambura BJPkku vetri.