பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 17, 2008

இந்துக்களை கமல் களங்கப்படுத்துகிறார் - ராமகோபாலன்

தசாவதாரம்’ படத்தில் சைவ-வைணவ சமயத்தினரிடையே சர்ச்சைக்குரிய சண்டையை காட்சியாக்கியிருக்கிறார் கமல். இதை கேள்விப்பட்டு இந்து முன்னணித் தலைவர் இராம.கோபாலன் கொதித்துப் போய் இருக்கிறார். அவரை சந்தித்தபோது கமலை கடுமையாக விமர்சித்தார்.

‘‘கமலஹாசனின் பொழுதுபோக்கே இந்துக்களின் உணர்வுகளுடன் விளையாடுவதுதான். இது இன்று நேற்றல்ல. பல வருஷமா அவர் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார். ஒரு உண்மையான இந்து தன்னோட மதத்தை உயர்வாகத்தான் சொல்வானே தவிர, இவர் மாதிரி அசிங்கப்படுத்தமாட்டான். இப்படி படம் எடுத்தால் இந்து தர்மம் என்பது கேலிக் கூத்து ஆகிவிடும்.

‘தசாவதாரம்’ படத்தில் பத்து ரோல் பண்ணியிருக்கிறாராம். இருபது ரோல் வேணும்னாலும் பண்ணட்டும். எங்களுக்கு அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. இந்து முன்னணியோட கேள்வி இதுதான். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சைவ _ வைணவ சமயங்களுக்கு இடையே நடந்த சண்டையை இப்போது எதற்காகக் காட்ட வேண்டும்? ஒற்றுமையோடு இருக்கும் இரு சமயத்தாரையும் மோதவிடவேண்டுமென்று நினைக்கிறாரா? இரு சமயத்தாரும் இப்போது ஒற்றுமையோடு இருப்பது இவருக்குத் தெரியாதா? ஒருத்தருக்கு ஒருத்தர் திருமண சம்பந்தம் கூட பண்ணிக் கொள்கிறார்கள். இப்போது உள்ள இளம் தலைமுறைகளுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை படத்தில் காட்டுவதன் மூலம் மீண்டும் கலவரத்தைத் தூண்ட ஆசைப் படுகிறார் போலும். இது விஷயமா கமலிடம் போன் பண்ணி கேட்கலாம் என்றால், அவரிடம் இருந்தோ அவர் தரப்பிலிருந்தோ எந்த பதிலும் இல்லை. கேட்டால் ‘அமெரிக்கா போயிருக்கிறார்; ஆப்பிரிக்கா போயிருக்கிறார்’ என்றுதான் பதில் வருகிறது.இப்படி உணர்வுகளைத் தூண்டிவிட்டு பணம் சம்பாதிக்கும் பிழைப்பு ஒரு பிழைப்பா? சொல்லுங்கள் கமல். நான் கேட்கும் எதற்கும் உங்களால் பதில் சொல்ல முடியாது.

இந்த விஷயம் எப்படித் தெரியும்னா, ‘தசாவதாரம்’ படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதியவர் என் நண்பருக்கு வேண்டியவர். அவர்தான் என்னைச் சந்தித்து ‘எப்போதோ நடந்த பிரச்னையை இந்தப் படத்தின் மூலமா ரொம்பவும் பெரிசுபண்ணப் பாக்குறாங்க’ என்றார். கேட்கக் கேட்க உடம்பெல்லாம் பதைபதைத்தது. எத்தனையோ நடிகர்கள் இருக்க, கமல் மட்டும் இந்துக்களுக்கு எதிரா ஏன் செயல்படுகிறார்? கமல் ஒரு இந்துதானே? சொந்த மதத்தை அசிங்கப்படுத்துவதுதான் வேலையா? உங்களுக்கு தைரியம் இருந்தா மாற்று மதத்தை கிண்டல், கேலி பண்ண முடியுமா? அப்படிப் பண்ணினால் உங்களை அவர்கள் சும்மா விடுவார்களா? இந்துக்கள் மட்டும் என்ன இளிச்சவாயர்களா? நீங்கள் செய்யும் எதையும் கேட்காமல் இருப்பதற்கு.

முதல்வர் கருணாநிதிக்கு சைவ _ வைணவ சண்டையைப் போட்டுக் காட்டினாராம். அதைப் பார்த்துவிட்டு அவரும் அப்படியே மெய்சிலிர்த்துப்போய் தன்னையும் அறியாமல் கமல் கன்னத்தில் முத்தம் கொடுத்தாராம். நெற்றியில் விபூதி இட்டுக் கொள்ளுவதை விமர்சனம் செய்தவர்தானே அவர். இவரால் செய்ய முடியாத ஒன்றை கமல் செய்திருக்கிறாரே என்று பாராட்டி அப்படியே உருகிப் போயிருக்கிறார். இதன் மூலம் இந்துக்களை பலவீனப் படுத்த நினைக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.

இன்னொன்றையும் சொல்கிறேன். பிராமண சமூகத்தில் பெண்கள் மடிசார் புடைவை கட்டுவது பாரம்பரியமான ஒன்று. ரொம்ப ஆச்சாரமானதும்கூட. ஒரு தகப்பன் தன் பெண்ணை தாரை வார்க்கும்போது, அந்தப் பெண் ஒன்பது கெஜம் மடிசார் புடைவையை கட்டிக் கொள்வார். இப்படி சாஸ்திர சம்பிரதாயங்கள், பூஜை புனஸ்காரங்கள் எல்லாவற்றிலும் பெண்களோடு ஐக்கியப்பட்டுப்போன அந்தப் புடைவையை ‘அவ்வை சண்முகி’ படத்தில் ஆள்மாறாட்டத்திற்குப் பயன்படுத்துவார். அது மட்டுமா? அந்தப் புடைவையைக் கட்டிக் கொண்டு மேலிருந்து கீழே தாவுவதும் கீழேயிருந்து மேலே தாவுவதும் இப்படி சண்டைக் காட்சிக்குப் பயன்படுத்துவார். அந்தப் புடைவையின் பெருமையை கேவலப்படுத்த இதைவிட வேறு என்ன வேண்டும்? ‘என் மதத்தை நான் கிண்டல் பண்ணாமல் வேறு யார் பண்ணுவாங்க’ என்று கமல் ஈடுபட்டிருக்கிறார்.

‘மருதநாயகம்’ படத்துக்கு பூஜை போட்டார். ‘மருதநாயகம்’ ஒரு கட்டத்தில் முஸ்லிமாக மதம் மாறி கான்சாயபு என்று பெயர் வைத்துக் கொண்டார். இது எல்லோருக்கும் தெரியும். என்னோட கேள்வி, இவர் கான்சாயபு என்ற பெயரிலேயே படம் எடுக்க வேண்டியதுதானே. அப்படி பெயர் வைத்தால் முஸ்லிம் சமுதாய மக்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்று பயந்து ‘மருதநாயகம்’ என்று படத்துக்குப் பெயர் வைத்தார். எதற்காக உண்மையை மறைக்கணும்? நான் அப்போது இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தேன். கமலிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. யார் இந்த இராம.கோபாலன் என்றுதான் கேட்டார். கடைசியா என்ன ஆச்சு? ‘மருதநாயகம்’ படம் ட்ராப் ஆனது. ஒரு ஏழு, எட்டுக் கோடி விரயம் ஆனதுதான் மிச்சம்.

‘தசாவதாரம்’ ரிலீஸ் ஆவதற்கு முன் நான் சொல்லிக் கொள்வதெல்லாம் இதுதான். சைவ _ வைணவ சமயத்துக்குள் நடந்த சண்டையின்போது கோயிலில் இருந்த சாமி சிலைகள் சேதப்படுத்துவது போன்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிடுங்கள். இல்லையேல் படத்தை எந்த ஊரிலும் ஓட்டவிடமாட்டோம். பிறகு கமலை ஒரு இந்துத் துரோகி என்று எல்லா ஊர்களிலும் போய் மேடை போட்டுப் பேசுவோம். இந்த இராம.கோபாலனும் இந்து முன்னணியும் கோடிக்கணக்கான இந்துக்களும் இனிமேல் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். கமலுக்கு ஒரு எச்ச ரிக்கையாகவே சொல்கிறேன். கேட்பதும் கேட்காததும் அவர் கையில்தான்’’ என்று பொங்கி எழுந்தார் இராம. கோபாலன்..

கே.எஸ்.ரவிக்குமார் கருத்து

இராம.கோபாலன் சொன்னது பற்றி ‘தசாவதாரம்’ படத்தை இயக்கியிருக்கும் இயக்கு நர் கே.எஸ்.ரவிக்குமா ரிடம் கேட்டபோது:

‘‘யார் மனதையும் புண் படுத்தணும்னு எனக்கோ, கமலுக்கோ, தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிக்கோ எந்த எண்ணமும் துளிகூட இல்லை. சைவ-வைணவ சமயங்களிடையே ஒற்றுமையையும் நல்ல உணர்வையும் ஏற்படுத்தும்படிதான் காட்சிகள் இருக்குமே தவிர, அவர்கள் யாரையும் காயப்படுத்தும்படி எதுவும் கிடையாது.

டிரெய்லரைப் பார்த்துவிட்டு இப்படிப் பட்ட வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

‘தசாவதாரம்’ படத்தில் எங்கேயும் கடவுளையோ பிற மதத் தினரையோ அவமதிக்கவில்லை. புண்படுத்தவில்லை. மாறாக படம் பார்ப்பவர்களுக்கு பக்தியும் இறை வழிபாடும் அதிகரிக்கும் என்பதுதான் உண்மை.

நான் இருபத்தைந்து வருடமாக சபரிமலைக்குப் போய் வந்து கொண்டிருக் கிறேன். எனக்கும் என் குடும்பத் தாருக்கும் கடவுள் நம்பிக்கை ரொம்ப ரொம்ப அதிகம். இப்படி இருக்கும்போது நான் கடவுளுக்கு எதிராக ஒரு கருத்தை வைப்பேனா, சொல்லுங்கள்?

எனக்கு லேடிஸ் ஆடியன்ஸ் ரொம்ப முக்கியம். நிலைமை இப்படி இருக்க, அவங்களுக்கு எதிரான விஷயங்களை என் படத்தில் காட்சியாக்குவேனா? காட்சிகளை நீக்கவேண்டும் என்று சொல்பவர்களோ கோர்ட்டில் வழக்குப் போட்டிருக்கும் வைஷ்ணவ அமைப்பினரோ இன்னும் படத்தைப் பார்க்காதபோது ‘இப்படியிருக்கிறது, அப்படியிருக்கிறது’ என்று இவர்களாகவே ஒரு கருத்துச் சொன்னால் அதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? டைரக்டர் என்ற முறையில் எனக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. அதை உணர்ந்தும் இருக்கிறேன்.’’.
( நன்றி: குமுதம் )

இதுக்கு தான் படத்தை சீக்கிரம் ரிலீஸ் செய்துடணும். IPL மாட்ச் முடியும் வரை காத்திருந்தால் இந்த நிலமை தான்.

23 Comments:

Anonymous said...

before releasing hey ram, congress objected and also puthia tamilzhagm party leader krishnasamy was against to the film virumandi. but we found nothing offensive against their people or their party. hope this film will also come in that category.

Anonymous said...

Read this post..

http://vinmathi.blogspot.com/2008/05/blog-post_16.html

sara said...

ஹி.மு. செய்வது கொஞ்சம் ஓவராக இருந்தாலும், நியாயம் என்றே படுகிறது. இப்படி சின்ன விஷயம்தானே என்று சும்மா இருந்தால், பிறகு எல்லை அறிய படம் எடுப்பவர்கள் மேன்மேலும் கலங்கப்படுத்துவார்கள். இது இருக்கட்டும். கொஞ்ச நாட்கள் முன்பு, சென்னையில் முகலாய ஆட்சி பற்றி ஒரு கண்காட்சி நடந்தது. அதில் ஒவ்ரங்கசெப் பற்றி இருந்த படங்களை முஸ்லிம்கள் அகற்ற சொன்னார்கள் - காரணம், ஒவ்ரங்கசெப் ஹிந்துக்களுக்கு செய்த கொடுமைகளை அது காட்டியது. அவர்களுக்கு இணங்கி பொலிசார் கண்காட்சியில்இருந்து அந்த படங்களை நீக்க சொன்னார்கள். அதுவும் வரலாறுதானே? முஸ்லிம்களுக்கு ஒரு நியாயம் ஹிந்துக்களுக்கு ஒரு நியாயமா?

//டைரக்டர் என்ற முறையில் எனக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. அதை உணர்ந்தும் இருக்கிறேன்.

இது செம்ம காமடி. அசல் டைரக்டர அவரல்ல கமல்தான் என்று யாரும் அவரிடம் சொல்லவில்லை போலும்...

Anonymous said...

//தன்னையும் அறியாமல் கமல் கன்னத்தில் முத்தம் கொடுத்தாராம். //

அப்ப 'அவரா' இவரு. முப்பது வருசத்துக்கு முந்தி வந்திருந்தார்னா என்ன ஆகியிருக்குமோ.

Anonymous said...

Without seeing the film, people r opposing it. This is purely dictatorship.

Maruthanayagam is not dropped. After "MARMAYOGI", Maruthanayagam will start.

இராமகோபாலன் சார் ! ஏதாவது உருப்படியான விஷயம் இந்துக்களுக்கு, இந்து மதத்துக்கு செய்ய முயற்சி செய்யுங்க.

தேவையில்லாமல் இந்த படத்திற்கு விளம்பரம் கொடுக்கிறீர்கள்.

Anonymous said...

IV,

The only hope for Dasa is if it gets a good opening on its release.

If, as per your suggestion, they release Dasa before IPL ends, Dasa will be deprived of even its opening collections and the producers Oscar films, who are already in trouble on several fronts, will have to fold up.

Anonymous said...

இந்த வருசம் சூடு கொஞ்சம் ஜாஸ்திதான்னு இத படிச்சாலே தெரியுது.

கோபாலா கோபாலா!!! மலையேறு கோபாலா!!!

Anonymous said...

vela vettiyae illayaa indha aalukku. podhum ramagopalaa. poi pozhappa paaru. periya manushangala edirthaal periya aalu aagalaamnnu ninaikiraar pola irukku.

join tmmk said...

sara said
//காரணம், ஒவ்ரங்கசெப் ஹிந்துக்களுக்கு செய்த கொடுமைகளை அது காட்டியது. அவர்களுக்கு இணங்கி பொலிசார் கண்காட்சியில்இருந்து அந்த படங்களை நீக்க சொன்னார்கள். அதுவும் வரலாறுதானே? முஸ்லிம்களுக்கு ஒரு நியாயம் ஹிந்துக்களுக்கு ஒரு நியாயமா?//

ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா?

முனைவர் அ. தஸ்தகீர்


அரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்துவதும், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் வரலாற்று உண்மை. ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து சுட்டான். இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர். இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு போது ஜைனத் திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே. இந்து மன்னர்களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங் களையும், வைஷ்ணவப் பிரிவினர் சைவத் திருத்தலங்களையும் தாக்கியதுண்டு, தகர்த்ததுண்டு. வைஷ்ணவர்களைக் கொன்று குவித்து, சிதம்பரத்தில் உள்ள கோவிந்தராஜர் சிலையை கடலில் எரிந்ததால்தான் சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் 'கிருமி கண்ட சோழன்' என்றழைக்கப்பட்டான் என்பது வரலாறு.

இது இங்ஙனமிருக்க ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர முஸ்லிம், அவர் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பது மட்டும் பிரபலப்படுத்தப்படுகிறது. உண்மையில் ஒளரங்கசீப் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார் என்பதும், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

ஒளரங்கசீப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள். அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் லி ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.

இதைத்தவிர அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.

அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்?

இதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில. தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார். ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்தனர். வைணவம் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடைப்படுத்தவில்லை.
ஒளரங்கசீப் ஒரு வைதீக முஸ்லிம். இதனால் உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு என்னும் கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர். இதனால் மத மாற்றத்தை இவர் ஊக்குவிக்கவில்லை. சத்திரபதி சிவாஜியின் பேரன், சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன் ஏழாம் வயது முதல் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார். ஒளரங்கசீப்பின் புதல்வி ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார். சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என அனைவரும் மறைந்து விட்ட நிலையில், ஒளரங்கசீப்பின் அவையிலும், முகலாயர்களின் சுற்றுச் சார்புகளிலும் சுமார் 25 ஆண்டுகள் வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப் பட்டதிலிருந்து, ஒளரங்கசீப்பின் தாராள மனப்பான்மை தெளிவாகப் புரியும். அதேபோல் இராஜ புத்திர இராணி ஹாதி, 'ஜோத்பூரை தனது வாரிசுக்கு உரிமை யாக்கினாள். அங்குள்ள இந்து ஆலயங் களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை நிர்மாணிக்கிறேன் என்று சொன்னபோது அதனை ஏற்றுக் கொள்ளாதவர் ஒளரங்கசீப். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ரங்கராயலு தானும் தனது உற்றார் உறவினர்களும், குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்ப தாக அறிவித்த போதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர். ஒளரங்கசீப் குறித்து வரலாற்று மாமேதை ஜாதுநாத் சர்கார் குறிப்பிட்டுள்ளதை உற்றுநோக்கினால் ஒளரங்கசீப்பின் மதசகிப்புத்தன்மை புரியும்.

தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார். ''பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட் படுத்தக்கூடாது'' என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. பேராசிரியர் கே.கே.தத்தாவின் நர்ம்ங் எர்ண்ழ்ம்ஹய்ள் நஹன்ஹக்ள் ஹய்க் ல்ஹழ்ஜ்ஹஜ்ஹள் (1578 லி 1802) என்றும் நூல் ஒளரங்கசீப் இந்துக் களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளை யும் பட்டியலிடுகிறது. ''ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர் கள், இந்துக்கள் ஆகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின் தாராளத்தன் மையையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.

பேரரசர் ஒளரங்கசீப் படை வங்கா ளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட
ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.

தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இளவரசி மட்டும் திரும்பவே இல்லை. இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகை யில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.

நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர். மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது.

இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (ஒள்ப்ஹம் ஹய்க் ஒய்க்ண்ஹய் ஈன்ப்ற்ன்ழ்ங்) என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.

மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மை வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற வரலாறு வேறு. நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா?

ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்.

(கட்டுரையாளர் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், தலைசிறந்த வரலாற்றாசிரியர்)

manju said...

These people just for the sake of publicity will do all such things. Has this Ramagopal done anything for hinduism. Though Kamal Hassan is an atheist, he has shown his spiritual side in Anbe Sivam. He has never tried to push his thoughts on atheism on others, in any of his movies.

There are hundreds of temples in tamil nadu which are not maintainted well at all. And it includes big temples like Madurai Meenakshi Temple and Tiruchi Sri Rangam temple. These are the temples which show the culture and history of tamil nadu. But these people are not bothered to improve these temples at all. They are only bothered to make money, get publicity by some way or the other. Everyone should ignore these people.

These people always target the soft targets like actors. They made a huge mess with actors like Kushboo and Shriya... But they din't have guts to question Mallika's attire in Dasavatharam Audio Release, becos she doesn't care for such threatenings. And thats how the actors need to be to these cracknuts.

Anonymous said...

//(கட்டுரையாளர் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், தலைசிறந்த வரலாற்றாசிரியர்)
//

சார் ....காது சும்மா ஜோவைனு !!?!#$%#$% இருக்கு ...

Anonymous said...

//join tmmk said...

Please dont try to prove that Aurangazheb did gudies to Hindus...This is real commedy.

The real truth is Hindus dont have much contravercy with Babar or Akbar. But Only with Aurangazheb. So Please dont try to hide the truth!

JaiHind!

Anonymous said...

//manju said...

// And it includes big temples like Madurai Meenakshi Temple and Tiruchi Sri Rangam temple. These are the temples which show the culture and history of tamil nadu. But these people are not bothered to improve
//

Yes..all the Big Temples in Tamil Nadu is not maintained well. Why ??

Though the temples got huge money from Hindus (thru Hundies) and lots of land ...But Still temples are in worst state.

Though temples got money from Hindu/ lease money from land / Land acquisition of temples are only done by rulling party members. All the money goes to their packet only.

Then how come these temples atmosphere change?

What ramagobalan / any hindu can do here ?

Moreover TN govt lead by an Athesist, how could temple atmosphere will be good?

Jai Hind!

manju said...

Anonymous,

Why doesn't this Ramagopalan fight against the govt regarding the maintenence of the temples ? If he has the guts, he should do that instead of filing case on a movie, which he doesn't even know what it is about. Let him do some good deed to hinduism first and then think about all these nonsense he is doing.

Anonymous said...

தமுமுக என்ற இஸ்லாமிய வெறிபிடித்த கூட்டம் இன்றும் கூட
தாலிபன்களை ஆதரிக்கிறது.இந்த கூட்டம் சொல்வதையெல்லாம்
நம்ப வேண்டுமா?. இன்றும் கூட
தலையை வாளால் வெட்டுவது,
கல்லால் அடித்து கொல்லும்
தண்டனைகள் இஸ்லாமிய
நாடுகளில்தான் இருக்கின்றன.
இன்றைக்கே இவர்கள் இப்படி
என்றால் இவர்கள் முன்னோர்கள்
எப்படி இருந்திருப்பார்கள்.

Anonymous said...

//Why doesn't this Ramagopalan fight against the govt regarding the maintenence of the temples ?
//

If you are not aware of what Ramagopalan is doing, then please dont comment on him.
He did lots of protest against goverment for Temple Lands aquisition many times. You ppl never even listen those news...

Recently he cliamed to release all hindu temples from Givt control and club them to (some)devesthanam, so that take control over the temple land and use it for temple welfare.

Also, I'm not stand with Ramagopalan for Many issues...

- JaiHind !

சந்திரமௌளீஸ்வரன் said...

படம் வந்தபின்னாடி பிராது கொடுக்கப்பிடாதா.

ராம கோபாலன் சார்

கொஞ்சம் பொறுங்க.. இந்தப் படம் ரிலீசான உடனே .. முதல் காட்சி நம்ம ரெண்டு பேரும் பார்ப்போம். டிக்கெட் செலவு உங்களோடது. தியேட்டரில் பாப் கார்ன், கடலை மிட்டாய் ,ஐஸ் கிரீம் செலவு என்னுது

படம் முடிஞ்ச உடனே நீங்க சொன்ன மாதிரி படம் இருந்தா உடனே ஹைகோர்ட் கதவை தட்டிர வேண்டியது தான்

Anonymous said...

காசி விசுவநாதர் ஆலயம், காஷ்மீர கர்ஷன், கன்னியாகுமரி கலவரம்

எஸ் அரவிந்தன் நீலகண்டன்

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20602034&format=html

அவுரங்கசீப் ஏன் காசி விசுவநாதர் ஆலயத்தை உடைத்தார் என்பதற்காக 'மதச்சார்பற்ற ' (அதாவது தாலிபான் ஆதரவாளர்கள், ஸ்டாலினிச ஆதரவாளர்கள் மற்றும் எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ ஆதரவாளர்களின் தழுக்குப் பெயர்) அறிவுஜீவிகள் கொடுக்கும் வழக்கமான கட்டுக்கதை மீண்டும் மீள்-கூறப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக எவ்வித ஆதாரமும் இல்லாத கட்டுக்கதை என்பது கூறப்பட்டவருக்கே தெரிந்திருக்காமலும் இருக்கலாம். ஆனால் வேண்டுமென்றே உருவாக்கி இவ்வாறு பரப்பப்பட்டு வந்துள்ள இக்கட்டுக்கதையினால் ஒரு பயன் இருக்கிறது. பகுத்தறிவு மூடநம்பிக்கையின்மை மதச்சார்பின்மை இத்யாதிகளின் பெயரால் அரசியல் நடத்திவரும் ஒரு கூட்டத்தின் 'ஆவண ஆதாரம் ' குறித்த கறார் தன்மை எத்தனை நெகிழ்வுத்தன்மையுடன் -நெகிழ்வுத்தன்மை கூட இல்லை அப்பட்டமான மோசடியை நம்பத்தயராகும் மனநிலையுடன்- இருக்கிறது என்பதை வெளிப்படுத்த இந்த 'காசி விசுவநாதர் ' ஆலயம் குறித்த வக்காலத்து விவரணம் ஒரு வாய்ப்பினை நல்குகிறது.


பெல்ஜிய இந்தியவியலாளர் முனைவர்.கொயன்ராட் எல்ஸ்ட் இந்தக் குறிப்பிட்ட விளக்கத்தினை மூடு வரை சென்று ஆராய்ந்தவர். 'மதச்சார்பற்ற ' கும்பல்களின் வெறுப்பு வரிசையில் முன்னணி இடத்தையும் பெற்றவர். 'அவுரங்கசீப் காசி விசுவநாதர் ஆலயத்தை ஏன் உடைத்தார் ? ' எனும் தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் அடிப்படையில் கீழ்காணும் பத்திகள் எழுதப்பட்டுள்ளன.


சுவாரசியமான விசயம் என்னவென்றால் சர்வதேச அளவிலும் இஸ்லாமிய அரசர்களின் கோவில்கள் உடைப்பிற்கு வக்காலத்து வாங்கும் இடதுசாரி வரலாற்றறிஞர்கள் (உ-ம்: ரொமிலா தப்பார், பெர்ஸிவல் ஸ்பியர்) உண்டு. ஆனால் அவர்கள் அங்கு இந்த வக்காலத்தினை முன்வைப்பதில்லை. மாறாக சமூக-பொருளாதார அடிப்படையில் வலிந்து உருவாக்கப்பட்ட பல விளக்கங்களை முன்வைப்பார்கள். ஆனால் உள்ளூரில் இந்த சரக்கே செல்லுபடியாகும் என அவர்களின் அடுத்த-நிலை வரலாற்றறிஞர்கள் மற்றும் அறிவுஜீவிகள் நினைக்கலாம். விசயத்துக்கு வரலாம்.


உதாரணமாக இடதுசாரி வரலாற்றறிஞர் கார்கி சக்ரவர்த்தியின் சான்று பகர்தல் இவ்வாறு:

'காசி விஸ்வநாதர் ஆலயத்தை அழிக்க அவுரங்கசீப் அளித்த ஆணையைக் குறித்து மிகவும் கூறப்படுகிறது. ஆனால் ஆவண ஆதாரம் (Documentary evidence) இந்நிகழ்வுக்கு புதிய பரிமாணத்தை அளிக்கிறது. அவுரங்கசீப் வாரணாசி வழியாக வங்காளத்திற்கு சென்று கொண்டிருந்த போது வழியில் ஹிந்து ராஜாக்கள், தமது ராணிகள் கங்கையில் நீராடி காசி விசுவநாதர் ஆலயத்தினை தரிசிக்க வேண்டி ஒரு நாள் தங்கும்படி வேண்டினர். அவுரங்கசீப் இதற்கு உடனடியாக ஒத்துக்கொண்டான். இராணுவம் வாரணாசிக்கு ஐந்து மைல் தொலைவில் முகாம் அமைத்து தங்கியது. ராணிகள் பல்லக்கில் காசிக்கு சென்றனர். அவர்கள் ஆலயத்தில் வணங்கி திரும்பினர். ஒரு ராணி மட்டும் திரும்பவில்லை. அவர் கட்ச் பிரதேச ராணி. ஆலய வளாகங்கள் முழுமைக்கும் தேடுவதற்கு உத்தரவாயிற்று. எங்கு தேடிய பின்னரும் இராணி கிட்டவில்லை. அவுரங்கசீப் இதனை அறிந்ததும் கடும்கோபம் கொண்டார். அவர் தனது மூத்த அதிகாரிகளை ராணியைத் தேடப் பணித்தான். இறுதியாக அவர்கள் கணேச விக்கிரகம் எளிதில் நகர்த்துவதாக இருப்பதைக் கண்டனர். இந்த சிலை அகற்றப்பட்ட போது கீழே ஒரு பாதாள அறைக்கு படிக்கட்டுகள் இறங்குவதைக் கண்டனர். அங்கே அவர்கள் அதிர்ச்சியடையும்படி அந்த ராணி நகைகள் இல்லாமல் மானபங்கப் படுத்தப்பட்டு அழுதபடி மூலையில் இருப்பதைக் கண்டனர். இந்த பாதாள அறை ஜெகன்னாதர் சிலைக்கு கீழாக இருந்தது. ராஜாக்கள் இதனால் கடுமையாக கோபம் அடைந்தனர். இக்குற்றம் மிகவும் மோசமானது என்பதால் கடுமையான தண்டனை வழங்குமாறு அவர்கள் அவுரங்கசீப்பினைக் கேட்டனர். அவுரங்கசீப் கோவிலின் புனிதம் மாசடைந்தமையால் காசி விசுவநாதரை இடம் மாற்றுமாறு உத்தரவிட்டார். பின்னர் கோவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட பின்னர் தலைமைப் பூசாரியினை (மகந்த்) கைது செய்து தண்டித்தார். '


இந்த மகத்தான வக்காலத்தினை- 'ஆவண ஆதாரத்தினை '- முன்வைத்தவராக கார்கி குறிப்பிடுவது யாரை என்று பார்த்தால் அவர் 'காந்தி தர்ஷன் சமிதி ' சேர்மனாகவும் ஒரிசாவின் கவர்னராகவும் இருந்த பி.என்.பாண்டே. அவர் எந்த 'ஆவண ஆதாரத்தினை ' ஆதாரமாகக் கொண்டு இதனை எழுதியுள்ளார் என்று பார்த்தால் பாண்டேயின் வார்த்தைகளில் 'டாக்டர். பட்டாபி சீதாராமையா தமது புகழ்பெற்ற 'The Feathers and the Stones ' எனும் நூலில் இந்நிகழ்ச்சியினை ஆவண ஆதாரத்துடன் கூறியுள்ளார். ' என்பதாக 'ஆவண ஆதாரம் ' அளித்துள்ளார். அடிப்படையில் தமது சிறைநாட்குறிப்பாக விளங்கிய இந்நூல் இன்று கிடைப்பதற்கு அரியதாக உள்ளது. எனினும் முயன்றால் ஆராய்ச்சி மைய நூலகங்களில் கிடைக்காத ஒன்றல்ல. எனவே எல்ஸ்ட் முனைந்து அந்நூலினை தேடியெடுத்து அந்நூலில் உள்ள ஆவண ஆதாரத்தினைக் காண்கிறார். அந்நூலில் 'பட்டாபி தோல்வி என் தோல்வி ' புகழ் காந்தியவாதியான பட்டாபி சீதாராமையா கூறுகிறார்:


'அவுரங்கசீப் மதவெறியன் என பரவலான ஒரு எண்ணம் இருக்கிறது. என்றாலும் இது ஒரு அறிஞர் குழுவினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவனது மதவெறி ஒரு சில நிகழ்ச்சிகளால் சித்தரிக்கப்படுகிறது. காசி விசுவநாதர் கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டியது அதில் ஒன்று. மதுராவில் மசூதி கட்டியது மற்றொன்று. ஜசியா வரியினை மீண்டும் விதித்தது மற்றொன்று, இதில் முதல் நிகழ்ச்சி குறித்து விளக்க ஒரு கதை சொல்லப் படுகிறது.

'தமது அதிகாரத்தின் உச்சத்தில் மற்றெந்த வேற்றுநாட்டு மன்னரையும் போலவே அவுரங்கசீப்பும் ஹிந்து பிரபுக்களால் சூழப்பட்டிருந்தான். ஒரு நாள் அவர்கள் அனைவருமாக வாரணாசியில் உள்ள புனிதக் கோவிலை பார்க்க கிளம்பினர். அவர்கள் மத்தியில் கட்ச் பிரதேச ராணியும் இருந்தார். அவர்கள் தரிசனம் முடித்து திரும்புகையில் கட்ச் தேச ராணியைக் காணவில்லை. அவர்கள் அவளை நாலாதிசைகளிலும் தேடியும் கிடைக்கவில்லை. மிகவும் நுணுக்கமாக அவர்கள் தேடியபோது கோவிலுக்குள் ஒரு பாதாள அறை ஒருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது ஒரு கதவில் முடிவடைந்த போது அதை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளே அச்சத்தால் வெளுத்து போன ராணி நகைகளை இழந்து காணப்பட்டார். அங்குள்ள மகந்துக்கள் யாத்ரீகர்களினை கோவிலுக்குள் சென்று காட்டுவதாகக் கூறி அவர்களினை பாதாள அறைக்குள் தள்ளி கொள்ளையடிப்பது வழக்கமாக இருப்பது தெரிய வந்தது. அவுரங்கசீப் இத்தகைய கொடுந்செயல்கள் நிகழும் இடம் இறைவனின் ஆலயமாக இருக்கக் கூடாது என்பதற்காக அதனை இடிக்க உத்தரவிட்டார். இடிபாடுகள் அங்கேயே விடப்பட்டன. ஆனால் காப்பாற்றப்பட்ட ராணி அங்கு ஒரு மசூதி எழுப்பப்பட வேண்டும் என வேண்டிக்கொண்டதன் பேரில் அங்கு மசூதி கட்டப்பட்டது. இவ்வாறுதான் விசுவநாதர் ஆலயத்தின் -ஆலயம் என்று கூட சொல்லக்கூடாது சிவலிங்கம் வைக்கப்பட்ட ஒரு குடில் அவ்வளவுதான்- அருகில் இந்த மசூதி வந்தது. மதுரா மசூதி கட்டப்பட்டதன் காரணம் தெரியவில்லை. இந்தக்கதை லக்னோவில் ஒரு அரிய பத்திரத்தில் இருப்பதாகவும், அப்பத்திரம் ஒரு மதிக்கப்படும் முல்லாவிடம் இருப்பதாகவும் அவர் அதனை படித்துவிட்டு அதனை ஒரு நண்பரிடம் கொடுப்பதாகவும் கூறியதாகவும், ஆனால் அதனை கொடுப்பதற்கு முன்னர் அவர் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டதாகவும் தெரிகிறது. ஆனால் அவுரங்கசீப்பிற்கு எதிரான பார்வை இன்னமும் நிலவுகிறது. '


ஆக இதுதான் 'ஆவண ஆதாரம் '. ஒருபெயர் தெரியாத நண்பரிடம் பெயர் தெரியாத முல்லா கூறிய கதையின் பதிவு. உண்மையில் இந்த கோவிலுக்குள் அரசகுடும்பத்தை சேர்ந்தவர்கள் கைது செய்து வைக்கப்படும் கற்பனை ஆர்மினிய நாடோடிக்கதையான 'அனயீத் ' ஏறக்குறைய மேற்கண்ட கற்பனையின் பிரதிபிம்பமாக இருப்பதைக் காணலாம். ஆனால் அவுரங்கசீப் காசி விசுவநாதர் ஆலயத்தை அழிக்க அளித்த பிரகடனம் இன்றும் உள்ளது. அது தெள்ளத்தெளிவாக தனது காரணங்களை ஐயமற முன்வைக்கிறது:


'இறைநம்பிக்கையை விரும்பி பாதுகாப்பவரான பேரரச பிரபு, தத்தா முல்தான் மற்றும் குறிப்பாக வாரணாசி ஆகிய பிரதேசங்களில் இறைநம்பிக்கையில்லாத பிராமணர்கள் தமது மையங்களில் தமது பொய் நூல்களின் மூலம் பிரச்சாரம் செய்து வருவதையும், அதனைக் கேட்க ஹிந்துக்களும் முஸ்லீம்களும் வெகுதொலைவுகளிலிருந்து வந்து இந்த பிரசங்கங்களைக் கேட்டு அதனால் மார்க்கப்பாதையிலிருந்து மாற்றப்படுவதையும் அறிந்தார். மேன்மைதங்கிய அரசர் இதனை அறிந்ததும் இஸ்லாமினை நிலைநிறுத்த ஆவலுண்டானவராக, இப்பிரதேச ஆளுநர்களுக்கு இப்பகுதிகளிலுள்ள இஸ்லாமிய நம்பிக்கையற்றவர்களின் கல்வி நிறுவனங்களையும், ஆலயங்களையும் இடித்தொழிக்கும் படி உத்தரவிட்டார். தலையாயக்கடமைகளாக இஸ்லாமியரல்லாதவர்களின் மதப்பிரசங்கங்களையும், அவர்கள் பகிரங்கமாக தமது மதங்களை பின்பற்றுவதையும் இல்லாமலாக்க உத்தரவிட்டார். ' (முகியுத்தீன் முகமது அவுரங்கசீப் ஆலம்கீர் பாதுஷா காஸியின் பொதுப்பிரகடனம், மாஸிர்-இ-ஆலம்கிரி பக்.51-52)


ஆக, காசி விசுவநாதர் ஆலயத்தை ஏன் அவுரங்கசீப் இடித்தார் ? என்பது தெளிவுபடுகிறது. ஆனால் அதைவிட முக்கியமாக, இந்த ஆலய இடிப்புக்கு 'பட்டாபி தோல்வி-என் தோல்வி ' புகழ் பட்டாபி சீதாராமையா - சத்தியத்தை தலையானதாகக் கொண்டதாக தம்மை ஹிந்துஸ்தான மக்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் செய்த முதல் தலைமுறை காந்தியவாதியான பட்டாபி சீதாராமையா- ஏன் இப்படி ஒரு சத்தியமற்ற வக்காலத்தினை அவுரங்கசீப்பின் ஆலய அழிப்பிற்கு அளித்தார் ? இக்கேள்விக்கான விடை பல கசப்பான உண்மைகளை கூறும் ஒன்று.


அடுத்ததாக, காஷ்மீர கர்ஷனுக்கு வருவதற்கு முன்னால் ஒரு சிறிய பின்புலத்தகவல். பொதுவாகவே ஹிந்து மன்னர்களில் ஒரு சில வழிதவறல்களையும், ஒரு சில நிகழ்வுகளையும், இஸ்லாமிய மன்னர்களின் பொதுவான கோவில் இடிப்புகளையும் ஒப்பிடுவதென்பது இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் 'மதச்சார்பற்ற ' வக்காலத்து வாங்கிகளின் வாதிடும் முறைகளில் ஒன்றாகும். அவ்விதத்தில் கடந்த ஐம்பதாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு அரசன் தான் காஷ்மீர மன்னன் கர்ஷன். அவனது இந்த கோவில் இடிப்புச்செயல்களைக் குறித்து வருகிற செய்திகளை காஷ்மீர அரசவம்ச நூலான ராஜதரங்கிணி கூறுகிறது. இந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு ரஞ்சித் சீதாராம் பண்டிட் என்பவரால் செய்யப்பட்டு நேருவின் முன்னுரையுடன் சாகித்திய அகாடமியால் வெளியிடப்பட்டு ஆண்டுகள் நாற்பதைக் கடந்துவிட்டன. ராஜதரங்கிணி முழுமையாக மேற்கோள் காட்டப்படுமானால் அவனது முழு இயல்பும் வெளிப்பட்டிருக்கும். அவன் இஸ்லாமிய மேலாதிக்கத்திற்கு தன்னை முழுமையாக அடிமைப்படுத்திக்கொண்டவன் என்பதனை ராஜதரங்கிணியின் 7:1149 ஆவது பாடல் கூறுகிறது. ( 'he ever fostered with money the Turks, who were his centurions ') மேலும் 1095 ஆவது பாடல் அவனையே 'துருக்க அரசன் ' என்று கூறுமளவுக்கு அவன் இஸ்லாமிய படையெடுப்பாளர்களுடன் ஒன்றிவிட்டான். மேலும் அவன் அழித்தது அவன் இன்னமும் சார்ந்திருந்த மதத்தினைச் சார்ந்த இந்து ஆலயங்களை. அவுரங்கசீப்பும் முகமது கஜினியும் அழித்தவை அவர்கள் சார்ந்திராத இந்து ஆலயங்களை. (பிஜப்பூர் கோல்கொண்டா ஆகிய இடங்களில் கூட அவுரங்கசீப் அழிக்க உத்தரவிட்ட மசூதிகள் ஷியா பிரிவினைச் சார்ந்தவை.)இறுதியாக கன்னியாகுமரி கலவரங்களுக்கு வரலாம். தாழ்த்தப்பட்டவர்கள் என குறிப்பிடப்படும் நாடார் சமுதாயத்தவர்கள் ஷத்திரிய வம்சத்தினைச் சார்ந்தவர்கள் தாம். தென்னாடு என்றில்லை பாரதம் முழுவதுமே வர்ண அமைப்பு ஒரு மிக நெகிழ்வான சாதிக்குடிகள் அங்குமிங்கும் செல்லும் தன்மைத்ததாகவே இருந்திருக்கிறது. அது இறுக்கமுடையதானதற்கு வெளிநாட்டு படையெடுப்புகளும், மூலதன வெளியேற்றமுமே முக்கிய காரணங்களாகும். குயவனான சாதவாகனன் ஷத்திரியன் தாம். நாயர்கள் சூத்திரராக இருந்து ஷத்திரியர்கள் ஆனவர்கள்தாம் (அவர்கள் கிறிஸ்தவ மிஷிநரிகளின் இலக்கியங்களில் நாயர்கள் சூத்திரர் என்றே குறிப்பிடப்படுவதைக் காணலாம்.) தோள்சீலை போராட்டத்திலும் பங்கெடுத்தவர்கள் மதம் மாறாத நாடார்கள்தாம். பின்னர் அவர்கள் குறிவைத்து மதம் மாற்றப்பட்டனர். எனினும் மதமாற்றி மிசிநரிகள் உண்மையில் பாரத சமுதாய சமத்துவ எழுச்சிகளில் உண்மையில் எத்தகைய பங்காற்றினர் என்பதனை ஒரு உதாரணம் மூலம் காணலாம்.


ஐயா வைகுண்டர் சாதீயக் கொடுமைச்சூறாவளியின் நடுநாயகக் கண்ணில் நின்று தர்மத்திற்காகப் போராடினார். ஏசி அறைகளில் இருந்தபடி சமுதாயம் குறித்து சித்தாந்த கோட்பாடுகளை முன்வைக்கும் சித்தாந்தி அல்ல அவர். அல்லது எடைக்குஎடை பொருட்கள் வாங்கி சொத்து சேர்த்து, வெள்ளைக்காரன் தூக்கிப்போட்ட அறிவியல் அடிப்படையற்ற இனவெறிக்கோட்பாடுகளால் சுகம் கண்டு, மடையர்களே எனக்கு சீடர்களாக இருக்கவேண்டும் என வேண்டிய போலி-பகுத்தறிவின் தந்தையான சிறியார் ஈவெரா அல்ல அவர். இத்தகைய போலிகளால் அவரது காலடி மண்ணையும் தொட இயலாது. உயர்ந்த உத்தம அவதார புருஷர் என இன்றும் வணங்கப்படும் ஐயா வைகுண்டர் இயக்கம் சாதீய கொடுமைகளுக்கு எதிராக தூயத்துவராடை வெள்ளைத்திருமண் பொறிக்கப்பட்ட காவிக் கொடியினை அன்புக்கொடியாக ஏந்திப்பிடித்து போராடிய வரலாறு ஹிந்துத்வ வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியது.

இன்றைக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மதமாற்றிகளுக்கும், சாதீய வாக்குவங்கி நடத்தி தர்மத்தின் மக்களை பிரிக்கத்தூண்டும் போலி மதச்சார்பற்ற அரசியல்வியாதிகளுக்கும் எதிராக போராடும் சமுதாய இயக்கங்களின் சமத்துவ போராட்டத்தின் அடிநாதமாக விளங்குவது. இந்த மகத்தான இயக்கத்துடன் கிறிஸ்தவ மிசிநரிகள் என்னவித உறவினைக் கொண்டிருந்தார்கள் என்பதை பார்க்க, கிறிஸ்தவ மதமாற்றத்தின் உண்மை தன்மைகள் விளங்கும்.


ஐயா வைகுண்டரை பொதுவாக ஒரு சாதிக்கு உரியவர் என சிலர் நினைத்தாலும், அவர் முழுமையான ஹிந்துசமுதாயத்தினை ஒருங்கிணைக்கும் பார்வையினைக் கொண்டிருந்தார் என்பதே உண்மை.


'சாணா ரிடையர் சாதி வணிகருடன்

நாணாத காவேரி நல்ல துலுப்பட்டர் முதல்

சூத்திரர் பிரமர் தொல் வாணியர் பறையர்

உத்திர நீசர் உழவருடன் குறவர்

கம்மாளரீழர் கருமறவர் பரவர்

வெம்மா நசுறாணி வேகவண்ட ரிடலையர்

சக்கிலியரோடு சாதி பதினெட்டுகளும் ' (அகிலத்திரட்டு அம்மானை:327)

ஐயா வைகுண்டரின் தர்ம பார்வையில் ஒன்றாகவே இருந்தன.


அவர்களை ஒரே இடத்தில் நீர் அருந்தச் செய்தார் ஐயா வைகுண்டர். அவர்களை ஒரு தாய் மக்களாக உறவாட வைத்தார்.

'சாதி பதினெண்ணும் தலமொன்றிலே குவிந்து

கோரிக் குடிக்கும் ஒரு கிணற்றில் ' (329)


சாதீய வெறி, மிஷிநரி ஆதரவு ஆகியவை மேலோங்கிய திருவாதாங்கூர் மேல்வர்க்கத்தினர் கடும் சித்திரவதைகளை ஐயா வைகுண்டர் மீது சுமத்தியதை அமைதியாக தாங்கிக்கொண்டார் அம்மகான்:


'குண்டியிலே குத்தி குனியவிடு வானொருத்தன்

நொண்டியிவ னென்று அடித்தடித்து தானிழுப்பான்

சாணாருக்காக சமைந்தாயோ சுவாமியென்று

வாணாளை வைப்போமோ மண்டிப்பதனிக்காரா

பனையேறி சுபாவம் பட்டுதில்லையென்று சொல்லி

அனைபேரையும் வருத்தி ஆபரணந் தேடவென்றோ

சமைந்தாயோ சாமியென்று சாணாப்பனையேறி

உனைச் சாமியென்று உன் தேகத்தைப் பார்த்தால்

பனைச் சிரங்கின்னம் பற்றித் தெளியலையே

உனைச் சாமியென்றால் ஒருவருக்கு மேராதே

ஆளான ஆளோ நீ ஆளில் சிறியவனாய்த்

தாழக்கிடந்து சாமியென்று வந்தாயோ ' (அகிலத்திரட்டு: 11354-11366)

என்றெல்லாம் அவரை சித்திரவதை செய்தனர்.


சரி. மிசிநரிகள் இந்த சமுதாய போராட்டத்தில் எந்த இடத்தில் இருந்தனர் ? ஆகா, இதோ சமுதாய தலைமையை ஏற்று சமத்துவம் ஏற்படுத்த நல்ல கருத்துக்களுடன் ஒருவர் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்தே எழுந்துவிட்டார் எனவே அவரை ஆதரிப்போம் என ஐயா வைகுண்டருக்கு தோள் கொடுத்தார்களா மிசிநரிகள் ? கிறிஸ்தவம் சமுதாய சமத்துவத்தை ஆதரித்ததெனில், தாழ்த்தப்பட்ட நாடார்களின் மிகச்சிறந்த எழுச்சியாக்கமான ஐயா வைகுண்டருக்கு எதிராக கட்டுக்கதைகளையும், அவதூறுகளையும் பரப்பியதுமில்லாமல், அவரை 'எதிரி ' 'சாத்தான் ' என்றெல்லாம் தமது மேலதிகாரிகளுக்கு எழுதியது ஏன் ? அரசனை இம்மகானை விடுவிக்கவும் தார்மீக சமுதாய புரட்சியினை ஏற்கவும் வகை செய்தது யார் ? மிசிநரிகளா இல்லையே. மாறாக, மண்டைக்காடு கலவரத்தின் போது மிசிநரிகள் தம் முதல் எதிரியாக கண்ட கிருஷ்ணவகை (இடையர்) குடியினைச் சார்ந்த பூவண்டர் என்பவரே ஆவார்.

மிசிநரிகளோ ஐயா வைகுண்டரை 'ஏமாற்றுக்காரன் ' 'சாத்தான் ' 'வஞ்சகன் ' என்றெல்லாம் தூற்றினரே தவிர அவருடன் கைகொடுத்து சமுதாய ஏற்றம் செய்ய முன்வரவில்லை. மாறாக பூவண்டன் ஹிந்து சமய அடிப்படையிலேயே சமத்துவ பார்வையினைப் பெற்று மன்னருக்கு அறிவுரை பகர்ந்தார்.


'போற்றி நம்பூரி பிராமண சூத்திரர் குலத்தில்

ஏற்றிப் பிறக்க இயல்பில்லாமல் இந்த

பிறர் தீண்டாச் சாணார் குலத்தில் அவதரித்து

பிறக்க வருவாரோ பெரிய நாராயணரும் ' எனும் அரசன் கேள்விக்கு பூவண்டர் பகர்ந்த விடை சாதீய இருளும், மதமாற்ற நோயும் சூழ்ந்திருந்த அன்றைய காலகட்டத்திலும் தர்மத்தின் சமுதாய சமத்துவ ஒளி அணையாது வீசியதனைக் காட்டுகிறது. பூவண்டர் பகிர்ந்தார்:


'சாணெனக் குலத்தில் மாயன் சார்வரோ வென்றெண்ண வேண்டாம்

பாணெனத் தோன்றி நிற்பார் பறையனாய்த் தோன்றி நிற்பார்

தூணெனத் தோன்றி நிற்பார் தோலனாய்த் தோன்றி நிற்பார்

ஆணெனத் தோன்றி நிற்பார் அவருரு கேட்டிலீரோ

குசவெனக் குலத்தில் வந்தார் குறவெனக் குலத்தில் வந்தார்

மசவெனக் குலத்தில் வந்தார் மாடெனக் குலத்தில் வந்தார்

விசுவெனக் குலத்தில் வந்தார் வேடெனக் குலத்தில் வந்தார்

அசுவெனக் குலத்தில் வந்தார் அவருருக் கேட்டிலீரோ ' (அகிலத்திரட்டு 11062-11069)


ஆனால் இத்தகைய சமுதாய சமத்துவ கருத்தாக்கம் கிறிஸ்தவ இறையியலில் எழ சாத்தியமே இல்லை என்பதனை நாம் நினைவுகொள்ளவேண்டும். ஏனெனில் ஏசு குறித்த இறை-முன்னறிவிப்பே அவர் தாவீது அரசரின் வம்சத்தவர் என்பதுதான். அந்த வம்சாவளியில் ஏசுவை நுழைத்திட பொய்யான இரு வேறு வம்சாவளி வரலாற்றினை மத்தேயு ஒன்றாம் அதிகாரத்திலும் லூக்கா மூன்றாம் அதிகாரத்திலும் காண இயலும். அது போலவே ஒரு குறிப்பிட்ட மக்கள் வாழும் பகுதி நுழையத்தக்கதல்ல எனும் கருத்தாக்கம் ஸ்மிருதிகளில் காணப்பட்டாலும் கூட, அதனை ஸ்மிருதிதான் என தூக்கி எறிந்து விடும் சுதந்திரம் ஹிந்துவுக்கு உண்டு. ஆனால் கிறிஸ்தவ விவிலியத்தில் அவ்வாறல்ல. மேலும் அவ்வாறு கூறியது பரமபிதாவின் ஒரே மகனும் கூட. சரி, மிசிநரிகள் ஐயா வைகுண்டருக்கு ஆற்றிய எதிர்வினை என்ன ?


'எளியாரைக் கண்டு இரங்கியிரு என்மகனே

வலியாரைக் கண்டு மகிழாதே என்மகனே

தாழக்கிடப்பவரை தற்காப்பதே தர்மம் ' என்று எடுத்துரைத்த எம்பிரானை 'மக்களை வஞ்சிப்பவன் ' எனக் கூசாமல் ஏசினான் சாமுவேல் சகரியா எனும் கிறிஸ்தவ வெறிபிடித்த வெள்ளைத்தோல் பிரச்சாரகன் (1843). (இன்றைக்கும், நலிந்த சமுதாய முன்னேற்றத்துக்கு பாடுபடும் ஆன்மிக அருளாளர்களை வைவதை முற்போக்காக காட்டும் சகரியாக்களுக்கு பஞ்சமில்லைதான்.)

'காணிக்கை வேண்டாதுங்கோ கைக்கூலி கேளாதுங்கோ ' என்று கூறிய மகான் மிசிநரி பார்வையில் 'எதிரி 'யானார் (1869-ஜேம்ஸ் டவுண் மிசிநரிஅறிக்கை).

'ஞாயமுறை தப்பி நன்றி மறவாதுங்கோ ' என்று எடுத்துரைத்த மகான் மிசிநரி பார்வையில் 'சாத்தான் '(1875 நாகர்கோவில் மிசிநரி அறிக்கை) ஆனார்.


மேலும் ஐயா வைகுண்டர் உண்மையில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் கடைநிலை ஊழியம் செய்தவர் என்பது போன்ற பச்சைப்பொய்களையும் பரப்பினர். இந்த அவதூறு பிரச்சாரம் கிறிஸ்தவ சபைகளால் 1980கள் வரைக்கும் கூட வெளிப்படையாக நடந்தன.


ஐயா வைகுண்டரே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிசிநரிகளின் நோக்கம் சமுதாய விடுதலையன்று, மாறாக சமுதாய தீமைகளை பயன்படுத்தி நடத்தும் மதமாற்றமே எனும் உண்மையை நமக்கு உணர்த்துகிறார். மிசிநரிகளின் போலி புனுகல்களை பார்த்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களை தெளிவாக 'மாநீசர்கள் ' என அடையாளம் காட்டினார். தருமத்திற்கும் தம்மக்களுக்கும் எதிராக இந்த மாநீச மிசிநரிகள் நடத்தும் அநியாயங்களையும் தம் மக்களுக்காக பாடுபடும் தம்மை 'ஏமாற்று வேலைக்காரன் ' என்று அழைத்த மிசிநரி பிரச்சாரங்களையும் ஐயா வைகுண்டர் எதிர்த்தார். இந்த பரவுத்தன்மை கொண்ட அந்நிய மதக்கண்டனத்தினை, சாதீய வெறியர்களுக்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்களுடனேயே அதே உக்கிரத்துடன், சிம்மகர்ஜனையாக வெளியிட்டார்:

'நான் பெரிது நீ பெரிது நிச்சயங்கள் பார்ப்போ மென்று

வான் பெரிதென்றறியாமல் மாள்வார் வீண் வேதமுள்ளோர்

ஒரு வேதந் தொப்பி உலகமெல்லாம் போடுவென்பான்

மறுத்தொரு வேதஞ் சிலுவை வையமெல்லாம் போடுவென்பான்

அத்தறுதி வேதமொன்று அவன் சவுக்கம் போடுவென்பான்

குற்றமுரைப்பான் கொடுவேதக் காரனவன்

ஒருத்தருக்கொருத்தர் உனக்கெனக் கென்றேதான்

உறுதியழிந்து ஒன்றிலுங் கை காணாமல்

குறுகி வழிமுட்டி குறை நோவு கொண்டுடைந்து

மறுகித்தவித்து மடிவார் வீண்வேதமுள்ளோர் ' (அகிலத்திரட்டு அம்மானை 283)


கிறிஸ்தவ சமயத்தினால் சமுதாய மேன்மையா ஏற்பட்டது ? தாழ்த்தப்பட்ட மக்களிடையே பகைமை ஏற்பட்டது. ஐயா வைகுண்டரின் அருள்வாக்கு உண்மை வரலாற்றினை விளக்குகிறது:


'விருச்சமுள்ள நீசன் வேசை நசுறாணியவன்

வையகங்களெல்லாம் வரம்பளித்த மாநீசன்

நெய்யதியச் சான்றோரின் நெறியெல்லாந் தான் குலைத்துப்

பேரழித்துத் தானம் பூப்பியமுந் தானழித்து

மார்வரையைக் கூடும் மைப்புரசு சஞ்சுவம் போல்

தானமழித்து சான்றோரின் கட்டழித்தான். '


(வையகங்களெல்லாம் வரம்பளித்த மாநீசன் என்பதில் அனைத்துக்கண்டங்களிலும் மிசிநரிகள் நடத்திய நச்சுவேலைகளையும் இனக்கருவறுப்புகளையும் வெளிப்படுத்துகிறார் ஐயா வைகுண்டர்.)


ஐயா முத்துக்குட்டி வைகுண்டசுவாமிகளின் சமுதாய சமரசப் புரட்சி காட்டும் உண்மை என்னவென்றால், சமுதாய ஏற்றம் பெற ஒரே நேரத்தில் சாதீய ஏற்றத்தாழ்வுகளையும், ஆன்ம அறுவடை செய்யும் அன்னிய விரிவாதிக்க சித்தாந்தங்களையும் எதிர்க்க வேண்டும். அதனையே ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கமும் அதன் குடும்ப அமைப்புகளும் செய்கின்றன.


கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டமாக்க நடந்த முயற்சிகள் இன்னமும் நீறு பூத்த நெருப்பாக இருந்து வருகின்றன என்றே கூறவேண்டும். கன்னியாகுமரி சாந்தோம் மையம் தனது பிரசுரங்களில் விவேகானந்தர் பாறையை இன்னமும் 'பிரான்ஸிஸ் சேவியர் ' பாறை எனக்கூறுவதையும் குறிப்பிட்டாகவேண்டும். வேணுகோபால் கமிசன் அறிக்கையை குறிப்பிடுபவர்கள் அந்த அறிக்கையை முழுமையாக படித்துப்பார்க்கவேண்டும். அந்த அறிக்கை மதமாற்றத்தினை கலவரங்களுக்கு ஒரு முக்கிய காரணமாக காட்டியது என்பதும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மதத்தலங்கள் கட்ட கலெக்டர் அனுமதி பெற வேண்டும் என பரிந்துரை செய்தது என்பதும், அப்பரிந்துரை இன்றும் மாவட்டத்தில் அமுலில் உள்ளது என்பதால் கிறிஸ்தவ மிசிநரிகள் பல ஏமாற்று வித்தைகளை கையாள்கின்றனர் என்பதும் அவ்வாறு அறிக்கைகளை படிக்காமல் பேசுபவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். உதாரணமாக குமரி மாவட்ட பிஷப் லியோன் தருமராஜ் 14-04-2000 தேதியிட்ட கடிதத்தில் வேணுகோபால் கமிசன் பரிந்துரைகள் அமுலில் இருப்பதால் சர்ச் கட்ட பின்வருமாறு கூறுகிறார்: ' இதனால் சில இடங்களில் சமூகக்கூடம் என்ற பெயரில் அனுமதி பெற்று அக்கூடங்களில் வழிபாடு நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ' இன்றைக்கும் Kanyakumary என கன்னியாகுமரி மாவட்டத்தினை சில கத்தோலிக்க இதழ்களில் குறிப்பிடுவதையும் காட்டமுடியும்.


ஆக, ஆரியசமாஜமாகட்டும், சுவாமி விவேகானந்தராகட்டும், அய்யன் காளியாகட்டும், ஸ்ரீ நாராயணகுருவாகட்டும், ஏன் மகாத்மா காந்தியேயாகட்டும், மிசிநரிகள் பாரத தர்ம நெறி நின்று சமுதாய புரட்சி கண்ட செம்மல்களையும் இயக்கங்களையும் எதிர்த்துள்ளனர், நசுக்கி அழிக்க முயற்சித்துள்ளனர். உதாரணமாக சர்.ஹெர்கோர்ட் பட்லர் அவுத் மற்றும் வடமேற்கு மாகாணங்களின் லெப்டினண்ட் கவர்னர் 1-12-1907 தேதியிட்ட அறிக்கையில் கூறுகிறார்: 'அரசாங்கம் தலையிடவில்லை என்றால் ஆரியசமாஜத்தினால் பெண்களுக்கு கல்வி அளிக்கப்பட்டுவிடும். நமது பெண்கள் இங்கிலாந்திலிருந்து பெருமளவுக்கு வரவழைக்கப்பட்டு அவர்களே பெண்கல்வி அளிக்கும் படிக்கு பார்த்துக்கொள்ள வேண்டும்..ஆரிய சமாஜம் மிகவும் ஆபத்தான இயக்கம். அது தேசிய சிந்தனையையும் கீழ்ஜாதி மக்களை மேம்படுத்துவதையும் ஒருங்கிணைக்கிறது. '( 'Servant of India ' by Martin Gilbert). சுவாமி விவேகானந்தர் அனைத்து மக்களுமான சமஸ்கிருத கல்விசாலையை நிறுவ எடுத்துக்கொண்ட முயற்சிகள் மிசிநரி தூண்டுதலால் அரசாங்கத்தால் தடைபடுத்தப்பட்டன. இவ்வாறு முன்னூறு ஆண்டுகள் தேசியவாத சமுதாய சீர்திருத்தவாதிகளை முட்டுக்கட்டை போட்ட காலனிய அரசாங்கம், மறுபக்கம் தமது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள தயங்காத சில சிறியோரை பெரியாராக சமுதாய சீர்திருத்தவாதிகளாக உலாவர செய்தது. ஏன்..இன்றைக்கும் காலனிய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட சிந்தனையான மார்க்சியத்தின் அடிப்படையில் சிந்திக்கும் இடதுசாரிகள், ஹிந்து தேசியவாதிகளின் நலிவுற்ற சமுதாய மேம்பாட்டு முயற்சிகளுக்கு இதர கிறிஸ்தவ இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் இணைந்து முட்டுக்கட்டைகள் போடுவதைக் காணலாம்.


உண்மைகள் இவ்வாறிருக்க பூசி முழுகும் பிரச்சார புனுகு வேலைகள் சில அறிவுஜீவிகள் என தம்மை காட்ட விரும்புவோருக்கு தேவைப்படுவதில் ஆச்சரியமென்ன ? ஆம். அவர்கள் தங்கள் கண் உத்திரத்தை அறியாதவர்கள்.


----

Anonymous said...

/// ..... "கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக்" கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது. ////

புனிதம் கெட்டுப்போன இடம்தான் மசூதி கட்ட பொருத்தமான இடமாக அவுரங்கசீப்புக்கு தெரிந்தது போலும்.

கேக்கறவன் கேனையனாக இருந்தா ஆபிரகாமிய மதம் அல்வா கொடுக்கும்.

Seetha said...

ராம கோபாலன் போன்றவர்களுக்கு வேறு வேலை இல்லை. மடிசார் பற்றி அள்ளி விடுகிறார். அப்படி என்றால் இந்தியாவின் எல்லா ப்ராமண பெண்களும் மடிசார் கட்டுகிறார்களா என்ன?

நான் சொல்வதெல்லாம், இந்துக்களும் , இஸ்லாமியர்களும் ,க்றிஸ்தவர்களும் ,ஏன் பெரியாரின் சீடர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் எல்லாம்
தங்களுக்கு ஒவ்வாததை சிதைப்பது வழக்கம்.

அதர்க்காக மதங்களைப் பழிக்க வேண்டியதும் இல்லை, தனிமனித சிலாக்கியமும் தேவை இல்லை.


cgs

Anonymous said...

//இன்றும் கூட
தலையை வாளால் வெட்டுவது,
கல்லால் அடித்து கொல்லும்
தண்டனைகள் இஸ்லாமிய
நாடுகளில்தான் இருக்கின்றன.
இன்றைக்கே இவர்கள் இப்படி
என்றால் இவர்கள் முன்னோர்கள்
எப்படி இருந்திருப்பார்கள்.
//

WELL SAID ANAONY !!!

-Subbu

அப்புசாமி said...

அம்மா சீதே,

இப்படி சொல்லலாமா?

///ராம கோபாலன் போன்றவர்களுக்கு வேறு வேலை இல்லை. மடிசார் பற்றி அள்ளி விடுகிறார். அப்படி என்றால் இந்தியாவின் எல்லா ப்ராமண பெண்களும் மடிசார் கட்டுகிறார்களா என்ன?///

இல்லை தாயே. இல்லை. எல்லாரும் "எப்போதும்" கட்டுவதில்லை. விசேட தினங்களிலும், கோயில்களுக்கு செல்லும்போதும் மடிசார் கட்டுவது தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்த படம் வெளி வந்தபோது, இப்படி ஏதேனும் சில நாட்களிலாவது இந்தவகை அழகான ஆடை அணிந்து மகிழ்ந்தவர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள். தெருக்களிலும், கோயில்களிலும் கேலி செய்யப்பட்டார்கள்.

ஆனால், இவர்களை எல்லாம் நாம் பொருட்படுத்தவேண்டாம். திரைப்படத்தில் ஃபர்தா அணிவதையோ, அல்லது கன்யாஸ்த்ரீகளின் கவுன் அணிவதையோ கேலி செய்வதுதான் தவறு. மடிசார் மற்றும் சுங்கிடி சேலைகள் கட்டுவதுதான் கேலி செய்யப்படவேண்டிய, அவமானப்படுத்தபடவேண்டிய விஷயங்கள்.

இதற்காக இவர்கள் ஏதேனும் டைரக்டர் வீட்டில் குண்டு வைத்து பின்னர் ஆதாரம் இல்லை என்று விடுதலை செய்யப்படவா போகிறார்கள்?

அந்த அப்பாவிகளை அவமானப்படுத்குவதை மட்டும் நாம் நிறுத்தக்கூடாது. ஏனென்றால், அதுதான் முற்போக்கு இந்தியர்களின் அடையாளம்.

geeyar said...

எங்கள் ஐயா வைகுண்டரின் கதை கேட்க மிகவும் ஆச்சரியமாக உள்ளது. ஆடு நனைந்ததென ஓநாய் அழுத கதையை மீண்டும் கேட்டதைப் போல் உள்ளது. வர்ண பேதத்தால் மிகவும் பாதிக்கப் பட்ட ஒரு கூட்டம் செல்லும் திசை தெரியாது விழித்து நின்ற கூட்டத்தை, தாயின் பாதுகாப்பின்றி தவிக்கும் கோழிக்குஞ்சை சுற்றி வளைக்கும் பருந்தினைப் போல் மிஷனெரிகள் மதமாற்றினார்கள் என்பது உண்மையே. உயிரினும் மேலானது மானம் எனபதாலே கிறிஸ்தவர்களாய் மாறினர். தோள் சீலை பிரச்சனைக்கு காரணம் கிறிஸ்தவர்கள் அல்ல, மேல் ஜாதி இந்துக்களே. விளைவுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியவர்கள் கிறிஸ்தவர்கள். ஆனால் ஏதோ கிறிஸ்தவர்கள் தாம் இப்பிரச்சனைக்கு காரணம் என்பதுபோலவும் உயர்ஜாதி இந்துக்கள் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் போலவும் அழகாய் எழுதியுள்ளீர்கள். அடுத்து \ஐயா ஹிந்து சமுதாயத்தினை ஒருங்கிணைக்கும் பார்வை கொண்டிருந்தார்\ ஆஹா என்னே உங்கள் கற்பனை! கடவுளை மற மனிதனை நினை என்பது நாத்தீகம். கடவுளே வர்ணபேதத்தின் ஊற்றுக்கண், உனக்கு நீயே கடவுள் என்பதே ஐயா வழி. இன்றும் சாமிதோப்பு சென்று பாருங்கள் அங்கே இருப்பது கடவுள் அல்ல முகம் பார்க்கும் கண்ணாடி என்றும் அது விளக்கும் உனக்கு நீயே கடவுள் தத்துவமும். அது எப்படி சார் உங்களால மட்டும் இப்படியெல்லாம் எழுத முடியுது. இந்து என்று சொல்லி இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவீர்கள் அப்பாவி தமிழர்களை. தன் இனத்தை அழிக்க வந்தவர்களையே கடவுளாய் தொழுது கொண்டிருக்கும் கடைசித் தமிழன் இருக்கும் தமிழகம் தாழ்ந்து கொண்டுதான் இருக்கும். தன்னுடைய எதிரி யார் என்பதே தெரியாமல் இருக்கும் ஒரே இனம் தமிழினமே.