பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 19, 2008

பூங்கோதை, டி.ஆர்.பாலு, அழகிரி - கல்கி தலையங்கம்

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி... என்ற தலைப்பில் கல்கி தலையங்கம்.

லஞ்ச ஒழிப்பு - கண்காணிப்புத் துறை (DVAC) என்பதாக ஒன்று நிறுவப்பட்டபோதே, அதன் வெற்றிகரமான செயல்பாடு குறித்துச் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஏற்கெனவே உள்ள சட்ட திட்டங்களும் காவல் அமைப்புகளுமே ஊழலைக் கண்டுபிடித்துத் தண்டிக்கப் போதுமானவைதான். அவை ஊழலை ஒழிப்பதற்குப் பதிலாக, ஊழலுக்குத் துணைபோவதுதான் பிரச்னை என்பது சுட்டிக் காட்டப்பட்டது. இப்போது ஊழல் ஒழிப்பு - கண்காணிப்புத் துறைக்கும் அதே கதி நேர்ந்துள்ளது!

இத்துறை இயக்குநர் உபாத்யாயாவுக்கு ஃபோன் செய்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார், தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா. ஆனால், தமது உறவினர் பேரிலான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டைக் குறித்து தகவல் பெற மட்டுமே ஃபோன் செய்ததாகவும் அந்நபரைத் தப்புவிக்க, தமது செல்வாக்கைப் பயன்படுத்தவில்லை என்றும் கூறுகிறார்.

ஆனால், ஒட்டுக்கேட்டுப் பதிவு செய்யப்பெற்று வெளியிடப் பட்டுள்ள தொலைபேசி உரையாடலின் எழுத்தாக்கம், அமைச்சர் தமது உறவினருக்காகப் பரிந்துரைத்ததைத் தெளிவாக உணர்த்துகிறது.

தமது உறவினர் ஜவஹர் மீதான நடவடிக்கை குறித்து விசாரிப்பப்பதுகூட தார்மிக ரீதியில் தவறுதான் என்பதை உணர்ந்து அமைச்சர் ராஜினாமா செய்துவிட்டார்.

அமைச்சரது விசாரிப்பை இயக்குநர் உபாத்யாயா ஏன் அனுமதிக்க வேண்டும்? தமது அதிகாரத்தில் - அதிலும் ஊழல் ஒழிப்பு- கண்காணிப்புத் துறைச் செயல்பாட்டில் தலையிட யாருக்கும் உாிமை இல்லை என்பதுடன், அதன் செயல்பாடுகள் ரகசியமானவை என்பதை அவர் அமைச்சாிடம் வலியுறுத்தியிருக்க வேண்டாமா? மாறாக, அமைச்சர் கேட்டதற்கும் கூடுதலான விவரங்களை இயக்குநர் அளித்ததையே தொலைபேசி உரையாடல் உணர்த்துகிறது. ஜவஹரைத் தப்புவிக்க அவர் மறைமுகமாக யோசனை வழங்கியுள்ளதாக நம்புவதற்கும்
இடமிருக்கிறது!

அப்படியானால், ஊழல் ஒழிப்பு - கண்காணிப்புத் துறை, அதனை ஒழிப் பதற்குப் பதிலாகப் பாதுகாத்து வளர்க்கிறது என்றுதானே கொள்ள வேண்டியிருக்கிறது! ‘ஒட்டுக்கேட்டு அறியப்பட்ட இந்த ஒரு செய்தியைப் போல் இன்னும் எத்தனை அநீதிகளோ?’ என்று கவலைகொள்ள வைக்கிறது.

தமிழக முதல்வர், அமைச்சருடைய செயல்பாடைக் கண்டித்தபோதிலும் அவரது ராஜினாமாவை ஏற்காமலிருப்பது விசித்திரமாக உள்ளது. ஏற்கெனவே வெளியான ஒட்டுக்கேட்கும் சம்பவம் (இதில் லஞ்ச-ஊழல் குற்றச்சாட்டு ஏதுமில்லை) குறித்த நீதிபதி விசாரணையில், அமைச்சர் பூங்கோதை விவகாரத்தையும் சேர்த்துக்கொள்ள இருப்பதாக முதல்வர் தரிவித்துள்ளார். இது தாமதத்துக்கே வழி வகுக்கும்.

டி.ஆர்.பாலு பேரிலான குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவையெல்லாம் கட்சி விரோத நடவடிக்கைகள் என்று அவருக்குத் தோன்றவில்லை! ஆட்சி மீது படிந்துள்ள கறைகள் என்று அவர் கருதவில்லை!

அரசியல் தலைவர்கள், பொது வாழ்வில் இருப்போர், சந்தேகத்துக்கப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்கிற நிலைமை போய், ‘என்ன சந்தேகம் வேண்டுமானாலும் எழட்டும். ஆட்சி நம்மிடம் இருக்கும் வரை சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது; நமக்கு முழு பாதுகாப்புதான்’ என்கிற மனோநிலை வேரூன்றிவிட்டது.

இதன் காரணமாகத்தான், அழகிரி மற்றும் பன்னிரண்டு பேர் கிருட்டிணன் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறபோது, அந்தச் சம்பவம் ஒரு கொண்டாட்டமாக மாறுகிறது. ‘அப்படியானால், யார்தான் கிருட்டிணனைக் கொன்றார்கள்?’ என்கிற சங்கடமான கேள்வி எழுப்பப்படுவதேயில்லை!

லஞ்ச-ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகளும் சாி, அவர்களுக்குத் துணை போகும் அதிகாரிகளும் சரி, நேர்மைத் திறமின்றி இயங்குவார்களே யானால், ஆயிரம் லஞ்ச ஒழிப்புத் துறைகள் இருந்தும் பயனில்லை!

4 Comments:

Anonymous said...

If any newspaper takes a survey at Madurai about Krittinan murder case, the result will be 80% will say against Azhagiri. But nobody will do this.

Coz, Azhagiri is a one of ________ .

Moreover, during his last birthday u must saw madurai...how was it..madurai maanagarame alagri and family bannergalal alangarikkapattiurundhaddhu...Vekkakeku...Yaroda pannam idhellam????

M Arunachalam said...

Tha. Kiruttinan must have "murdered" himself. Poor Azhagiri was unnecessarily has been framed by jaya govt. Now, the court has to somehow give punishment to the murderer.

Anonymous said...

தெலுங்கு படத்தில் வருவதெல்லாம் இப்பொழுது தமிழ்நாட்டில் நிஜமாக நடந்து கொண்டு இருக்கிறது
Ganesh

Anonymous said...

//தெலுங்கு படத்தில் வருவதெல்லாம் இப்பொழுது தமிழ்நாட்டில் நிஜமாக நடந்து கொண்டு இருக்கிறது //

ஆமாம், தெலுங்குப் படங்களின் கதை, கழகங்களின் காணிக்கை.தெலுங்கு பட கேவலமான வில்லன்களை விட மிக மிக மோசமான கும்பல் நம்ம கழகக் கண்மணிகள்.

பாலா