பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 19, 2008

இட்லிவடை வாசகர்களுக்கு ஜூவி சர்வே

விகடன்.காம் தளத்தில் ஜூவி நடத்தும் சர்வே என்று சில கேள்விகளை கேட்டிருந்தார்கள்.
உங்களுக்கு விகடன்.காம் அகவுண்ட் இல்லை என்றால் இதில் கலந்துக்கொள்ள முடியாது. அதனால் அதை அப்படியே இங்கே தந்துள்ளேன். ஜூவி முடிவும், இட்லிவடை முடிவும் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் :-)
( மொத்தம் 9 கேள்விகள், கேள்விகளுக்கு நடுவில் இடைவெளி இருக்கு அதனால் Scroll செய்யவும் )ஜூவி - 11. பிறந்தநாள் தருணத்தில் முதல்வர் மருத்துமனையில் சேரவேண்டிய அவசியம் ஏற்பட்டதற்கு காரணம்...


பணிச்சுமை மற்றும் வயது
குடும்ப ரீதியான நெருக்கடிகள்
கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிகள்

 Current Results
கீழே மற்ற கேள்விகள்..


ஜூவி - 22. முதல்வர் இப்போது செய்ய வேண்டியது...


தொடந்து அவரே முழு நிர்வாக பொறுப்புகளை கவĪ
அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சில பொறுப்புகī
மு.க.ஸ்டாலினைவிட தகுதியுள்ள வேறொரு சீனியī

 Current Results


ஜூவி - 33. தி.மு.க-வின் இரண்டாண்டு ஆட்சி முடிவில்... டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டுகள் வீசியது


முழுக்க முழுக்க அவசியம்தான்
இத்தனை கடுமையாகக் கூடாது
இந்த தருணத்தில் தவிர்த்திருக்கலாம்

 Current Resultsஜூவி - 4கனிமொழி எம்.பி-க்கு மத்திய அமைச்சர் பதவி...


உடனே வாங்கித் தரலாம்
இப்போது கூடாது
எப்போதுமே கூடாது

 Current Resultsஜூவி - 55. தா.கிருட்டிணன் வழக்கு தீர்ப்பை தொடந்து கட்சியில் பதவிப்பெறும் அளவுக்கு அழகிரியின் இமேஜ்...


உயர்ந்துள்ளது
உயரவில்லை
இன்னும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

 Current Results


ஜூவி - 66. கலாநிதி மாறன், தயாநிதி மாறனுடன் நல்லுறவு தொடந்திருந்தால்...


முதல்வருக்கு கூடுதல் பலமாக இருந்திருக்க
இன்னும் பலவீனம் ஆகியிருக்கும்
புதிதாக எந்த பலனும் இருந்திருக்காது

 Current Results


ஜூவி - 77. வெளிநாட்டில் டாக்டராக பணியாற்றிய பூங்கோதையை சிபாரிசு சிக்கலில் தள்ளியது...


மோசமான அரசியல் சூழல்தான்
அவரது குடும்ப சூழல்தான்
பதவி போதைதான்

 Current Results


ஜூவி - 88. அமைச்சர் பூங்கோதை போலவே இன்னும் பல அமைச்சர்களும் சிபாரிசு


ஆம்
பூங்கோதை மட்டுமே செய்திருப்பார்
யூகிக்க இயலவில்லை

 Current Results


ஜூவி - 99. மருத்துவ ஓய்வில் இருந்து மீண்டதும் முதல்வர் முழு உற்சாகம் பெறுவதற்கான மருந்து எங்கே இருக்கிறது.?


அவருடைய குடும்ப உறுப்பினர்களிடம்
தி.மு.க மற்றும் கூட்டணி தலைவர்களிடம்
கலை மற்றும் இலக்கிய பணிகளில்

 Current Results

3 Comments:

Anonymous said...

விகடனுக்கு போதாத காலம்.தினகரன்
இப்படித்தான் சர்வே நடத்தி வாங்கிக்
கட்டிக் கொண்டது.

Anonymous said...

தொட்டால் சுடுபவர், தங்கக் கிரீடமானவர், இறைவனின் தலைவன், சிறையூரின் அழகர் ஆகிய நால்வருடைய தொலைபேசி பேச்சு குறுந்தகடுகள் இருப்பதாக நான்கூடக் கேள்விப்பட்டேன்

குமுதம் ரிப்போர்ட்டரில் வம்பானந்தா சொல்லும் இவர்கள் யார் ? ஆ.வீ, பொ.மு, ஐ.பெ , து.மு ?

----------------------------
22.05.08 வம்பானந்தா

காரணம் என்னவாகத்தான் இருக்கும்?'' என்று தனக்குத் தானே முணுமுணுத்துக்கொண்டு ஆசிரமத்துக்குள் நுழைந்தார் சிஷ்யை.

``என்ன பெண்ணே, புலம்பிக்கொண்டே வருகிறாய், என்ன விஷயம்?'' என்றவாறே வரவேற்றார் சுவாமி.

``என் மனநிலை கருதியும் உடல்நிலை கருதியும் வாழ்த்துகளை ஏற்றிடும் பணியில் இருந்து விலக்கும் ஓய்வும் வழங்க வேண்டும்' என்ற கலைஞரின் அந்த ஒற்றை வரியைத்தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியலும் சுற்றிக்கொண்டிருக்கிறது சுவாமி. நான் மட்டும் என்ன விதிவிலக்கா? அல்லது உங்களுக்குத்தான் தெரியாதா? கலைஞரின் அரசியல் வாழ்வில் இந்த அளவுக்கு மனக் கலக்கமும் குழப்பமும் இருந்திருக்குமா? என்பது சந்தேகம்தான் என்கிறார்கள். அரசியல், தோழமைக் கட்சிகள் எல்லாவற்றையும்விட, குடும்ப ரீதியிலான நெருக்கடிதான் இவற்றுக்குக் காரணமாம். ஸ்டாலின், அழகிரி, கனிமொழி மூவருக்கும் கலைஞர் அறிவுரை கூறியதாக ஏற்கெனவே நான் தெரிவித்திருந்தேன் அல்லவா? இந்த முயற்சியில் குறிப்பிடும்படியான பலன் இல்லையாம்.''

``விளக்கமாகத்தான் சொல்லேன்!''

``முதலில் பரபரப்பாக நடந்ததாகக் கூறப்படும் சில சம்பவங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள். சமூக நலத் துறை அமைச்சர் பூங்கோதை பேசிய குறுந்தகட்டை சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட திங்கள்கிழமை மாலையில் அமைச்சரை அழைத்து ராஜிநாமா கடிதம் பெறப்பட்டதாம். அன்றிரவு சி.ஐ.டி. காலனி இல்லத்தில் கலைஞரிடம் ராஜாத்தி அம்மாள் மிகவும் வருத்தப்பட்டு, எங்களுடைய ஆதரவாளர்கள் மீதுதான் எல்லா நடவடிக்கையும் என்று கோபித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. பூங்கோதையைத் தொடர அனுமதித்தால் தனக்கும் கட்சிக்கும் ஆட்சிக்கும் மரியாதை இருக்காது என்று விளக்கினாராம் கலைஞர். எனினும், சமாதானமாகாததால், இரவே கலைஞர் அங்கிருந்து புறப்பட்டு வந்து விட்டாராம். பிறந்த நாள் விழா வேண்டாம் என செவ்வாய்க்கிழமை அறிக்கை. வடநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்த எம்.பி.க்கள் குழுவில் சென்றுகொண்டிருந்த கனிமொழி அவசரமாகத் திரும்பிவர, செவ்வாய்க்கிழமையும் பிரச்னை தொடர்ந்ததாம். புதன்கிழமை விளக்கமாக மற்றோர் அறிக்கையை வெளியிட்டார் கலைஞர்.''

``ம்.''

``எப்போதும் ராஜாத்தி அம்மாள் ஏதாவது கூறினாலும் கனிமொழி சமாதானமாகச் செயல்படுவாராம். இந்த முறை கனிமொழியும் சேர்ந்துகொண்டு சண்டை போட்டதில் கலைஞர் மிகவும் நொறுங் கிவிட்டாராம். இதனிடையே, கடந்த சில நாட்களாக அதிகாலையில் சி.ஐ.டி. காலனி வீட்டில் நடைப்பயிற்சிக்குத் தோள் கொடுக்கத் தாயும் மகளும் வருவதில்லை. இதனால், அமைச்சர் பரிதி இளம்வழுதிதான் வந்துகொண்டிருக்கிறாராம். எல்லாமும் சேர்ந்துதான் இந்த மனநிலையை ஏற்படுத்தி விட்டதாம்.''

``கலைஞர் அறிக்கையில் கூறியபடி கூட இருந்தே குழி பறிப்பது யார்?''

``யார் யாரையோ சொல்கிறார்கள்; நான் சொன்னால் கோபித்துக்கொள்வீர்கள். ஒன்றை மட்டும் கூறுகிறேன். 40 எம்.பி. தொகுதிகளிலும் சர்வே ஒன்றை நடத்தி, `தி.மு.க.வுக்கு எதிராகக் கடும் அதிருப்தி நிலவுகிறது. தேர்தலில் இணைந்து போட்டியிட்டால் 10 தொகுதிகளில்கூட வெல்ல முடியாது' என்று காங்கிரஸ் தலைமைக்கு அறிக்கையொன்றை பா.ம.க. அனுப்பியுள்ளதாம்.''

``ஓஹோ. உள்ளபடியே பிறந்த நாள் கொண்டாட்டம் என்றாலே கலைஞர் பெரிதும் மகிழ்ச்சி கொள்வார். அனைவரையும் பார்ப்பதில் லயித்திருப்பார். விழா இல்லை என்பது சங்கடமாகத்தான் இருக்கிறது.''

``ஆம் சுவாமி. எதிர்க்கட்சிகளிடம்கூட நல்ல உறவும் பெயரும் பெற வேண்டும். விரோதம் கூடாது என்று நினைக்கிறார் அவர். மாறன் குடும்பத்தை இணைத்துவிட வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. ஆனால், இந்த இணைப்பை அழகிரியும் கனிமொழியும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஆளுக்கொரு காரணம். இன்னொரு வருத்தமும் இருக்கிறதாம். தன் விருப்பத்தின் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. ஒரு வாரத்துக்கும் மேல் முயன்றும் அமைச்சர்களில் யாரை நீக்குவது, யாரைச் சேர்ப்பது என்று தீர்மானிக்க இயலவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாரிசுகளைப் பிடித்து வைத்துக்கொண்டிருக்கின்றனர் என்று நினைக்கிறாராம் கலைஞர்.''

``அப்படியா?''

``சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்ததுமே ஆளுநரைச் சந்தித்து அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட விஷயங்களைப் பேசவிருந்தாராம் கலைஞர். பூங்கோதை பற்றிய பிரச்னையைத் தொடர்ந்து எல்லாம் மாறிவிட்டது. இதற்காக, பூங்கோதையை நீக்கினால், இனி சுவாமி சொல்லச் சொல்ல ஒவ்வொருவராக நீக்குவீர்களா? என்று சிஐடி காலனியில் கேட்கப்பட்டதாம்.''

``ஓஹோ. தொட்டால் சுடுபவர், தங்கக் கிரீடமானவர், இறைவனின் தலைவன், சிறையூரின் அழகர் ஆகிய நால்வருடைய தொலைபேசி பேச்சு குறுந்தகடுகள் இருப்பதாக நான்கூடக் கேள்விப்பட்டேன்.''

``இருக்கலாம் சுவாமி. குடும்பத்தில் இன்னமும் உள்குத்துகள். அழகிரிக்குப் பதவி கொடுப்பதில் யாருக்கும் ஆட்சேபனையில்லையாம். ஆனால், அவருடைய மகள் கயல்விழியையும் மேலே கொண்டுவர கனிமொழி விரும்புகிறாராம். இவ்விஷயத்தில் அழகிரியிடம் உறுதியளித் திருக்கிறாராம். கடலூர் மாநாட்டுக்காகக் `கனிமொழி அழைக்கிறார்' என ஏராளமான சுவரொட்டிகளை அச்சிட்டு வைத்திருந்தாராம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். ஸ்டாலின் கோபப்பட்டதால் நிறுத்திவிட்ட னராம். இப்படி ஆளாளுக்கு ஆதரவும் எதிர்ப்புமாக இருப்பதால் இப்போ தெல்லாம் கலைஞர் மிகவும் அப்செட்டாகிவிடுகிறாராம்.''

``அவர்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்களாம்?''

``மகளிர் அணியைக் கயல்விழியும் இளைஞர் அணியை துரை தயாநிதியும் எதிர்பார்க்கிறார்களாம். கனிமொழியின் எதிர்பார்ப்பு மத்திய அமைச்சர் பதவியாகத்தானே இருக்க முடியும்? ஆனால், ஸ்டாலின் மகன் உதயநிதியோ பின்னாலிருந்து தந்தைக்கு உதவுவதுடன் நிறுத்திக் கொள்கிறாராம்.''

``அடடா...''

``அமைச்சர்களுமே கோபாலபுரம், சி.ஐ.டி. காலனி, மதுரை என்று மூன்று குழுக்களாக இருக்கிறார்களாம். என்ன பிரச்னை வந்தாலும் இவர்கள் காப்பாற்றி விடுவார்கள் என்று தலைவரைப் பற்றிக்கூட கவலைப்படுவதில்லையாம். இதெல்லாமும்கூட கலைஞருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.''

``சரி, ஓய்வுக்கு கலைஞர் எங்கே செல்லப் போகிறாராம்?''

``கொடைக்கானல், பெங்களூர், கோவா எனப் பேசப்படுகிறது. ஆனால், தற்போதைய உடல்நிலையில் கொடைக்கானல் சென்றுவருவது சிரமம். கர்நாடகத்துக்குச் செல்வது நன்றாக இருக்காது. அனேகமாக கோவாதான். இதனிடையே, உடல்நலனையும் பார்த்துவர அமெரிக்காவுக்குச் செல்லக் கூடும் என்றொரு தகவலும் இருக்கிறது சுவாமி.''

``மாறன் சகோதரர்கள் அமைதிக்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார்களாமே?''

``இருக்கும்தானே. டெல்லித் தொடர்புகள் மூலமும் குடும்பத்தினர் மூலமும் அழகிரியைத் தொடர்பு கொள்ள முயன்று வருகின்றனராம். தொழில்முறையிலும் அழகிரி குடும்பத்துக்கு உதவத் தயார் என்று தெரிவித்திருக்கிறார்களாம். இதன் அடிப்படையில் மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். ஓராண்டு நினைவாக தினகரனில் வரவிருந்த மறைந்த மூவருக்கும் அஞ்சலி செலுத்தும் ஒரு பக்க விளம்பரம்கூட கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதாம்.''

``கலைஞர் பிறந்த நாள் விழா நிறுத்தப்பட்டதற்கு நான் இன்னொரு காரணமும் கேள்விப்பட்டேன். தா. கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரியின் விடுதலையைக் கொண்டாட மதுரையில் விழா எடுக்க அனுமதி கேட்கப்பட்டதாம். இதற்கு அனுமதி மறுத்துவிட்ட கலைஞர், தனது பிறந்த நாள் விழாவையும் தவிர்த்துவிட்டார் என்கிறார்கள்.''

``ஆனால் சுவாமி, தற்போதைய நெருக்கடி காரணமாகத் தி.மு.க. அமைச்சர்கள் மத்தியில் பெரும் கலக்கமும் வருத்தமும் கவலையும் நிலவுகிறது. அவர்கள் தங்களுக்குள் பேசிப் பகிர்ந்துகொள்கிறார்கள்.'' ``சரி, அ.தி.மு.க.வில் என்ன நடக்கிறது?''

என்னவென்று சொல்ல சுவாமி? தி.மு.க.வுக்குள் இத்தனை சிக்கல். ஒரு சிக்கலுமில்லாத நிலையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா என்று கட்சிக்குள் ஏக வருத்தமாம். தக்க வழிகாட்டுதல் இல்லாததாலும், ஜெயலலிதா கோபித்துக் கொள்வாரோ என்ற அச்சத் தாலும் இங்கேயுள்ள தலைவர்களால் செயல்படவும் முடியவில்லையாம். பேரவையில் கலைஞரின் பேச்சு வேறு உருக்குவதாக இருக்கவே அ.தி.மு.க.வினர் நெகிழ்ந்துவிட்டனராம்.''

``ஆமாம், ஆமாம். அ.தி.மு.க.வில் சுமார் 20 எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க. ஆதரவு மனநிலைக்கே வந்துவிட்டதாகக் கூறுகிறார்களே. கலைஞரையும் அமைச்சர்களையும் பாராட்டுகிறார்களாம். அமைச்சர்களிடம் சில வேண்டுதல்களை முன்வைத்து நிறைவேற்றிக் கொள்கிறார்களாம். பரிசுப் பொருள்களை மறுப்பதில்லையாம்.''

``உள்ளதுதான் சுவாமி.''

``இத்தனைக்கும் இடையே மாறன் சகோதர்களுக்குப் போட்டியாக துரை தயாநிதியை வைத்து தயா ஏர்வேஸ் தொடங்க மதுரைக்காரர் திட்டமிட்டிருக்கிறார். இதற்காகத் தில்லியெல்லாம் சென்றுவந்திருக் கின்றனராமே?''

``இருக்கலாம். மாறன் சகோதரர்களின் தொழில்கள் அனைத்திலும் தாங்களும் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் நினைப்பதாக நானும் கேள்விப்பட்டேன் சுவாமி. விஜயகாந்தின் கூட்டணி பற்றி ஏதேனும் கேள்விப்பட்டீர்களா?''

``இல்லையே!''

``ஒவ்வொரு திசையிலும் ஒருவிதமாகப் பேசிக்கொள்கிறார்கள். ஆனால், திருமண மண்டபத்துக்குள் பேசுவதெல்லாம் மைக் வைக்காத குறையாக வெளியே கசிந்துவிடுகிறது என்று சந்தேகப்பட்டு, தன்னுடன் இருந்த தேரோட்டிகளில் ஒருவரைக் கழற்றிவிட்டு விட்டாராம் கேப்டன். ஆனால், தனக்குப் பிடித்த வழியை மட்டுமே தலைவருக்குக் காட்டிக் கொண்டிருப்போரையெல்லாம் அவர் எப்போது கழற்றுவாரோ என்று பொருமிக் கொண்டிருக்கிறார்கள் இந்தப் புதிய கழகத்தினர்'' என்று கூறிக்கொண்டே விடைபெற்றுக் கொண்டார் சிஷ்யை. ஸீ

பா.ம.க. தலைவர் ராமதாஸின் தி.மு.க. ஆட்சியின் இரண்டாவது ஆண்டு நிறைவு மதிப்பீடு விஷயத்தில் கலைஞர் கடும் எரிச்சலில் இருக்கிறாராம். இதைத் தொடர்ந்து, திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் வீட்டுக்குள் புகுந்து தாக்கியதில் ஒருவர் இறந்தது தொடர்பான வழக்கு தூசு தட்டப்படுகிறதாம். காடுவெட்டி குரு உள்பட மேலும் பலர் மீதான குற்ற வழக்குகளும் மேலே வரத் தொடங்குமாம்.

கலைஞர் டிவியில் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் வராத தொடர்களையெல்லாம் படிப்படியாக நிறுத்திவிடும்படி அறிவுறுத்தியுள்ளாராம் கலைஞர். விரைவில் நெடுந்தொடர்கள் முடிக்கப்படலாம்.

கலைஞர் பிறந்த நாள் விழா இல்லாததால் அமைச்சர்கள் எல்லாரும் அவரவர் தொகுதிகளில் விழாக்கள் ஏற்பாடு செய்யத் திட்டமிட்டு வருகிறார்களாம். விளையாட்டுத் துறை அமைச்சர் மைதீன்கான், தனது தொகுதியில் 10, 12_ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மாத இலவச கணினிப் பயிற்சிக்குத் திட்டமிட்டுள்ளாராம்.

Anonymous said...

Dear IV,

Check out this..
இட்லி&பூரியின் அளவைத்தான் குறைப்பார்கள்: விஜயகாந்த் பேச்சு

http://www.vikatan.com/vc/2008/may/vcinner.asp?articleid=6469