பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 18, 2008

கருணாநிதி - தயாநிதி சந்திப்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் கருணாநிதியை முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் இன்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

மதுரையில் தினகரன் நாளிதழ் தாக்கப்பட்ட பிரச்சனையை தொடர்ந்து தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இதன் காரணமாக கருணாநிதி மற்றும் தயாநிதி மாறன் குடும்பத் தினர் உறவில் விரிசல் இருந்து வந்தது.

இந்த நிலையில் கழுத்துவலி மற்றும் முதுகுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் கருணாநிதியை தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் இன்று சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.

மேலும் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, மாநில அமைச்சர்கள் ஸ்டாலின், கோ.சி.மணி, பொன்முடி, எ.வ.வேலு, சுப.தங்கவேலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் என்.வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, பிஜேபி தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலர் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்ததாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 Comment:

Anonymous said...

cho meet
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=822&cls=row3