பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 17, 2008

இட்லி, வடை விலை குறைப்பு - அமைச்சர் வேலுவிற்கு நன்றி


தமிழகத்தில் ஓட்டல் பண்டங்களின் விலையை உடனடியாக கட்டுப் படுத்த வேண்டுமென்று உணவு அமைச்சர் எ.வ.வேலு ஓட்டல் உரிமையாளர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அதுவும் குறிப்பாக தமிழக மக்கள் விருப்பமான உணவான இட்லிபவடை அன்றாடம் பொதுமக்கள் விரும்பி உண்ணும் உணவு என்பதால் இவற்றின் விலையை உடனடியாக கட்டுபடுத்தப்பட வேண்டும் என்று சொல்லியுள்ளார். அவருக்கு என் நன்றிகள் :-)

தமிழக மக்களின் விருப்பமான உணவு இட்லி, தோசை, வடை என்றால் அது மிகையாகாது. ஹோட்டலுக்கு சென்று இட்லி, தோசை, வடை என சுவைப்பதில் சிறியவர் முதல் ‌முதியவர் வரை அனைவருக்கும் தனி பிரியம் உண்டு.

குஷ்பு இட்லி என்றும் மெகா சைஸ் தோசை என்றும் விதவிதமான பெயர்களில் ஹோட்டல் துறையை ஆக்கிரமத்து கிடக்கிறது இந்த உணவு வகைகள். இவற்றால் ஹோட்டல் அதிபர்களுக்கு எப்பவுமே செம லாபம் தான். என்னதான் பிட்சா, பர்கர் என்று துரித உணவுகள் வந்தாலும் பாரம்பரிய உணவான இட்லி, தோசைக்கு தனி இடம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சமீப காலமாக விலைவாசி உயர்வின் எதிரொலியாக ஹோட்டல்களில் இட்லி, தோசை, வடை போன்ற உணவு வகைகளின் விலை எக்குதப்பாக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து இன்று சென்னையில் உணவு துறை அமைச்சர் வேலு, ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்‌போது பேசிய அமைச்சர் வேலு, சமையல் எண்ணெய்யின் இறக்குமதி விலையை அரசு குறைத்துள்தாலும், உணவு பொருட்களின் ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை விதித்துள்ளதாலும் விலைவாசி உயர்வை காரணம் காட்டி ஹோட்டல்கள் உணவு பொருட்களின் விலையை உயர்த்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும், தடையை மீறி அதிகப்படியான விலையில் உணவு பொருட்களை விற்பனை செய்யும் ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பேச்சுவார்த்தையின் முடிவில், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அரசுடன் சுமுகமான முடிவுக்கு வந்தது. அதன்படி ஹோட்டல் உரிமையாளர்கள் இட்லி, தோசை, வடை போன்ற ‌பதார்த்ங்களின் விலையை குறைப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த முடிவால் அவசரத்துக்கு ஹோட்டல்களை நம்பியிருக்கும் வேலைக்கு ‌செல்வோரும், சுற்றுலா பயணிகளும் பெருமளவில் பயனடைவர் என்பதில் சந்தேகம் இல்லை.
( நன்றி: தினமலர் )
( படம் நன்றி: Rajesh Dangi )

3 Comments:

மாயவரத்தான்... said...

இதிலே என்னவோ 'உள்நாட்டு' சதி இருக்குது. வலையுலக தீவிரவா(ந்)திகள் உங்களுக்கு எதிராக எதோ செய்து அமைச்சரை தூண்டி விட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.

Anonymous said...

Size and quantity will be reduced without raising price.That's a pretty old game.

வெங்கி said...

மகா மொக்கை ன்னாக்க இதுதான்.. டிபன் விலையை குறைச்சிட்டாக்க இ.வ வுக்கு கொண்டாட்டம் ?? விலையை குறைச்சிட்டு சைஸ் இயும் குறைச்சிடுவானுங்க...அப்பால இலையில இட்லி யை தேடணும்.. உருப்படாத திட்டம், அறிக்கை..