பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 16, 2008

சென்னையில் தீவிரவாதிகள், ராமகோபாலன் அறிக்கை

இந்து மத அமைப்பு தலைவர்களை குண்டு வைத்து கொல்ல சதி திட்டம் தீட்டி இருந்த 3 தீவிரவாதிகளை சென்னை போலீசார் கைது செய்தனர். லாட்ஜில் தங்கி இருந்தபோது அவர்களை போலீஸ் படை சுற்றி வளைத்து மடக்கியது. 2 பேர் தப்பி ஓடிவிட்டார்கள்போலீஸ் அதிகாரி தெரிவித்த தகவல்

கைதான 3 பேரும் "இறைவன் ஒருவனே'' என்ற தீவிரவாத அமைப்பை புதிதாக தொடங்கியுள்ளதாக கூறினர். முதலில் நாங்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையின் போது தஞ்சை அதிராம்பட் டினத்தை சேர்ந்த தவ்பீக் என்ற முக்கிய தீவிரவாதி தான் சதிதிட்டத்துக்கு மூளை யாக இருந்தது தெரிய வந் தது.

இஸ்லாமிய பாதுகாப்பு படை என்ற தீவிர வாத அமைப்பின் தலைவனான தவ்பீக்கை கடந்த 6 ஆண்டு களுக்கு முன்பு சென்னை கொடுங்கையூரில் மும்பை குண்டு வெடிப்பு தொடர் பாக போலீசார் இவரை கைது செய்தனர். ஒரு முறை தேசிய பாது காப்பு சட்டத்தில் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. ஜெயிலில் இருந்து 8 மாதத்துக்கு முன்னர் விடு தலையான தவுபீக்கை போலீசார் தொடர்ந்து கண் காணித்து வந்தனர்.

ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பின்னர் அதிராம்பட்டி னத்தில் உள்ள இவரது வீட்டை மாறு வேடத்தில் போலீசார் கண்காணிக்க தொடங்கினர்.

இதை அறிந்து தவ்பீக் அங் கிருந்து தப்பி சென் னைக்கு வந்துள்ளார். இவரது தலைமையின் கீழ் தான் நாசவேலைகளில் ஈடுபட சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் சென்னை கலெக்டர் அலு வலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் பங்கேற்றார். அப்போது அவரை கொலை செய்யும் நோக்கத்தோடு இந்த தீவிரவாதிகள் வெடி குண்டுகளுடன் பதுங்கி இருந்துள்ளனர். ஆனால் போலீஸ் பாதுகாப்பு அதிக மாக இருந்த தால் அப்போது இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இதே போல மேலும் பல இந்து அமைப்புகளின் தலைவர்களுக்கும் தீவிரவாதி கள் குறி வைத்துள்ளனர். ஆனால் இந்த சதிச் செயல் கள் அனைத்தும் முளை யிலேயே கிள்ளி எரியப்பட்டு விட்டன.


தப்பி ஓடியது யார் ?
தப்பி ஓடிய 2 தீவிரவாதிகள் பற்றியும் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அவர்களில் ஒருவர் பெயர் தவுபிக். இவர் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர். சென்னை கொடுங்கையூரில் 2002-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தவுபிக் கைது செய்யப்பட்டார். `இஸ்லாமிய பாதுகாப்பு படை' என்ற தீவிரவாத இயக்கத்தை ஆரம்பித்ததற்காக போலீசார் இவரை கைது செய்தனர். மும்பை போலீசாரும் இவரை கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர், இவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் மும்பை போலீசார் ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலில் இருந்து கடந்த 8 மாதத்துக்கு முன்புதான் இவர் விடுதலை ஆனார்.

ராமகோபாலன் அறிக்கை
மத்திய அரசும் சரி தமிழக அரசும் சரி பயங்கரவாதி களிடம் மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறது. பயங்கரவாதிகளை தீர்த்து கட்ட கடுமையான சட்டம் எதுவும் இல்லை.

எனவே தான் எதை வேண்டுமானாலும் செய்யலாம். சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தியோ அல்லது சிறுபான்மை என்ற கவசத்தை பயன்படுத்தியோ தப்பித்து விடலாம் என்று துணிந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள். இரும்புக் கரம் கொண்டு அவர்களை ஒடுக்க வேண்டும். மிக கடுமை யான முறையில் மீண்டும் பொடா சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

மதகலவரத்தை தூண்டி னால் குண்டர் சட்டம் பாயும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது என்ன சட்டம் பாயப் போகிறதுப அல்லது சிறு பான்மையினர் என்ற உபச ரிப்போடு விட போகிறாராப என்பத நாடு ஆவலுடன் எதிர்பார்க்கிறது. இப்படியே போனால் தமிழ்நாடும் ஜெய்ப்பூர் ஆகி விடும். தீவிரவாதிகளை அடியோடு வேரறுக்க வேண்டும்.

கோவையில் தீவிரவாதி கள் நடத்திய குண்டுவெடிப்பில் நூற்றுக் கணக்கானோர் பலியானார்கள். அந்த வழக் கில் இருந்து அனைவரும் தப்பி இருக்கிறார்கள்,

எனக்கு சாவைப்பற்றி கவலை இல்லை. தீவிரவாதத் துக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

3 Comments:

Anonymous said...

இவர்களின் அவலம் மாறுமா?

sara said...

கோவையில் குண்டு வைத்ததனால்தானே உள்ளே தள்ளியுள்ளார்கள்? என்னவோ ரோட்டில் போகிறவனை உள்ளே தள்ளியுள்ளதுபோல் இருக்கு அனானி சொல்வது. மற்றவர்களைப்போல் முன்னுக்கு வரப்பாருங்கள், வன்முறை கின்முறை எல்லாம் கைவிட்டுவிட்டு..

Anonymous said...

இந்த திவிரவதிகள் குண்டு வைத்தால் இறந்த பொதுமக்களின் வீடியோவினையும் அனானி பார்த்தால் தெளிவு பிறக்கும். 100 பேரை கொன்று விட்டு எனக்கு கல்யாணம் பண்ணி வை. எனக்கு பிறக்கிற குழந்தையும் குண்டு வைப்பான். அப்போது 100 இல்லை 1000 இறப்பார்கள். இதை தான் அனானி விரும்புகிறாரா? ஏன் இவர்கள் மட்டும் தான் தமிழக சிறைகளில் கஷ்டபடுகிறார்களா? 100 பேரை கொன்றதுக்கு இந்தியா என்பதால் இதோடு விட்டார்கள். முஸ்லீம்கள் மட்டுமே வசிக்கும் அரபு நாடுகளில் 3 நாள் விசாரணையோடு கல் எரிந்து கொன்று இருப்பார்கள். .