பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 26, 2008

மதம் மாறப் போவதாக வதந்தி :மறுக்கிறார் நடிகை நக்மா

கிறிஸ்துவ மதத்திற்கு மாறப்போவதாக கூறப்பட்ட வதந்தியை, நடிகை நக்மா மறுத்துள்ளார். "நான் ஆன்மிகவாதி. ஆனால், எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் சேர்ந்தவள் இல்லை. அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்' என, அவர் கூறியுள்ளார். கிறிஸ்துவ மத போதகர் ஒருவர் நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டு, நக்மா பேசியதாக வெளியான தகவலை அடுத்து, இந்த வதந்தி பரவியது.இதை நக்மா மறுத்துள்ளார்.

கிறிஸ்துவ மதம் பற்றி அறிந்து கொள்வதற்காக, அதுகுறித்த தகவல்களை படித்தேன். அப்போது, அந்த அமைப்பினருடன் தொடர்பு ஏற்பட்டது. நற்செய்தி கூட்டத்திற்கு வரும்படி என்னை அழைத்தனர். மரியாதை நிமித்தமாக கலந்து கொண்டேன். இவ்வளவு தான் நடந்தது. அதற்குள், நான், கிறிஸ்துவ மதத்திற்கு மாறப்போவதாக செய்திகள் வெளியாகி விட்டன.நான், ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ள பெண். அதற்காக, எந்த ஒரு குறிப்பிட்ட மத முத்திரையும் என் மீது குத்தப்படுவதை,விரும்பவில்லை. அனைத்து மதங்களுக்கும் பொதுவானவள். மத மாற்றம் தொடர்பான விஷயங்களில் எல்லாம், எனக்கு நம்பிக்கை இல்லை. யாரையும் மதம் மாறும்படி கட்டாயப்படுத்த முடியாது.எனது தாயார், முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். தந்தை இந்து. நான், கிறிஸ்துமஸ் தினத்தன்று பிறந்தேன். கிறிஸ்தவ பள்ளியில் தான் படித்தேன். எனது குடும்பத்தினர், அனைத்து மதங்களையும் மதிப்பவர்கள். பகவத் கீதை, குரான், பைபிள் என, அனைத்தையும் படிக்கிறேன். மத சார்பற்ற பெண், என கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். மதபோதகராகும் திட்டம் எதுவும் இல்லை. நடிகையாவேன் என்று கூட நினைத்தது இல்லை. எனது எதிர்காலம் பற்றி, கடவுளுக்கு மட்டுமே தெரியும். கடவுள் தான், அதை முடிவு செய்ய வேண்டும். கடவுளைத் தேடி, எங்கும் அலைந்து திரிய வேண்டிய அவசியம் இல்லை. நமக்குள்ளேயே கடவுள் இருக்கிறார். இவ்வாறு நக்மா கூறினார்.
(நன்றி: தினமலர்)
தொடர்புடைய பழைய செய்தி:

3 Comments:

சந்திரமௌளீஸ்வரன் said...

அடடா என்ன கருணை இட்லி வடையாரே

இனிமேல் சூடான இட்லி சூடான வடை என்றே கூற வேண்டும்

இதுவல்லவோ,, காட்சி

நக்மா மதம் மாறவில்லை.. மாறினார் எது உண்மையோ..

இந்த மாதிரி போஸ் கொடுத்து மதம் பிடிக்க வைத்தார்

Anonymous said...

கவர்ச்சி எனில் இட்லி வடையாருக்கு எம்மதமும் சம்மதமே!
சூப்பர் படம்.

தமிழகத்தின் தலைவன் said...

கவர்ச்சி எனில் இட்லி வடையாருக்கு எம்மதமும் சம்மதமே!
சூப்பர் படம்.

சூடான இட்லி?? வடை???