பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 17, 2008

தமிழ் எழுத்தாளர்கள் இணைய எண்டரி - ஞாநி கருத்து

இந்த வார குமுதம் இதழில் ஞாநி தமிழ் எழுத்தாளர்களின் வலை எண்டரி குறித்தும், தனது ‘ஞாநி பேசுகிறேன்’ என்ற புதிய பகுதி பற்றியும் பேசியுள்ளர். கடைசியில் கொஞ்சம் ஒளறி வைத்துள்ளார்.
( நன்றி: குமுதம் )

அண்மைக் காலமாகத் தமிழ் எழுத்தாளர்கள் அதிகமாக இணைய தளங்களில் பங்கேற்கத் தொடங் கியிருக்கிறார்கள். இணையத்தில் நடத்தப்படும் இதழ்களில் எழுதுவது தவிர, இப்போது தங்களுக்கென்றே ஒரு தளத்தைத் தனியே உருவாக்கிக் கொள்ளும் போக்கு ஆரம்பமாகியிருக்கிறது. இது ஓர் ஆரோக்கியமான போக்குதான்.(வீட்டுக்கு ஆட்டோ வரும் வரையில்) ஆனால், அங்கேயும் தங்கள் போலிப் புலம்பல்களை சிலர் விற்றுக் காசாக்க முயற்சிப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. ( யாரை சொல்றார் ? )

எனக்கு இணைய உலகத்தை ஏழெட்டு ஆண்டுகளாகப் பரிச்சயம். 34 வருடங்களாகப் பத்திரிகையாளன் என்றே நான் பெரிதும் அறியப்பட்டிருந்தாலும், ஆரம்பம் முதல் இதர ஊடகங்களில் ஈடுபடுவது, புதுப்புது தொழில்நுட்பம் சார்ந்த ஊடகங்களில் ஈடுபட முயற்சிப்பது என்பதை செய்து வந்திருக்கிறேன். நாடகம், டி.வி., பயிலரங்குகள், சினிமா முதலிய ஊடகங்களில் குதித்து நீச்சலடிப்பது போல, இணையத்திலும் குதித்து நீந்துவது உகப்பாகத்தான் இருக்கிறது.

என்றாலும் இணையத்தில் பங்கேற்போருக்கு இருக்கும் தலைமறைவு வசதி, கூடவே பொறுப்பற்ற தன்மையையும் அதிகரித்திருப்பது வருத்தமாய் இருக்கிறது. எமர்ஜென்சிக்குப் பிறகு இந்தியன் எக்ஸ்பிரசில் அருண் ஷோரி ஒரு விதியை ஏற்படுத்தினார். வாசகர் கடிதம் எழுதுபவரும் தன் முழு முகவரி தெரிவிக்காமல் எழுதக்கூடாது என்பதே அந்த விதி. பகிரங்கமாகத் தங்கள் கருத்தைச் சொல்ல முன்வரும் துணிச்சல் இல்லாத பொதுமக்கள்தான் மிக எளிதில் சர்வாதிகாரத்துக்கு வழி விடுபவர்களாக மாறிவிடுகிறார்கள் என்பது அவர் வாதம். இது எனக்கும் உடன்பாடானதுதான்.

இணையத்தில் கருத்துச் சொல்ல ஆரம்பித்திருக்கும் அமிதாப்பச்சன் கூட அமைச்சர் அன்புமணி பற்றி பகிரங்கமாக சொல்ல முன் வருகிறார் என்பது ஆரோக்யமானது. இணையம் தரும் தலைமறைவு வசதியைப் பலர் தவறாகப் பயன்படுத்துவது எனக்குப் பல காலமாக இணையத்தில் பங்கேற்க மனத் தடையாக இருக்கிறது.

இணையத்தின் தமிழ் நேயர்கள் யார் என்று ஏதும் ஆய்வு செய்யப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. யூகமாகச் சொல்வதானால், பெரும்பாலானவர்கள் இந்தியாவுக்கு வெளியே வாழும் இந்தியத் தமிழர்கள் + ஈழத்தமிழர்கள். இவர்களில் பெரும்பாலோர் ஐ.டி. துறை போன்ற கொஞ்சம் வசதியான மேட்டுக்குடித் துறைகளில் இருப்பவர்கள். எழுபதுகளில் சிறுபத்திரிகை வாசகர்களாக நிறைய சம்பளம் வாங்கும் வங்கி ஊழியர்கள் கணிசமாக இருந்தது போல, இப்போது இணையத்துக்கு ஐ.டி. நேயர்கள். பெருவாரியாக இவர்களிடம் தூக்கலாகக் காணப்படுவது _ தேசபக்தி, இளையராஜா பக்தி, பிரபாகரன் பக்தி, மனசாட்சி உறுத்தல்கள் என்று பட்டியலிடலாம்.

ஒவ்வொரு இஸத்துக்கும் பத்துப்பேர் கொண்ட தீவிர குழுக்கள் இயங்குகின்றன. பெரியார் சார்பு, ஆர்.எஸ்.எஸ். சார்பு, இடதுசாரி சார்பு மூன்றும் பிரதான இஸங்கள். ஆபாசம், அவதூறு, குளோனிங், ஆள்மாறாட்டம் போன்று அச்சு ஊடக உலகில் மிகக் குறைவாக உள்ள சில அம்சங்கள், இணைய உலகில் கணிசமாக உலவுகின்றன.( பெரிய கண்டுபிடிப்பு தான் )

எனக்கு இணைய உலகில் பிடிக்காத அம்சம், அங்கு சரி பாதியாக நிலவும் அரைவேக்காட்டுத்தனம்தான். (flippancy என்ற சொல் பொருத்தமானது). பிடித்த அம்சம் இணையத்தின் சிறப்பான இண்டர் ஆக்டிவ் தன்மை எனப்படும் இருவழி உறவாடல். ஆர்க்குட் போன்ற உறவு தளங்கள் எனக்குப் பிடித்திருந்தபோதும், அதில் ஒருவருக்கு 1000 நண்பர்களுக்கு மேல் வைத்துக் கொள்ள அனுமதியில்லை போன்ற அம்சங்கள் எரிச்சல் தருகின்றன.

இணைய தொழில் நுட்பத்தில் என்னை அண்மையில் அசத்தியது குமுதம் டாட் காமின் வெப் வீடியோ தொழில்நுட்பம்தான். டாட்காம் தளமே ஒரு முழுமையான டி.வி. சேனலாகவும் பரிணமிக்கும் புள்ளி இது. மவுசை தட்டியதும் காத்திருக்கத் தேவையில்லாமல் அதிவேக பஃபரிங்கில் (buffering) வீடியோவைக் காண்பதை ஒரு தமிழ்ப் பத்திரிகை தளம் சாத்தியமாக்கியிருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. ( உங்களுக்கு புதுசு என்று சொல்லுங்கள். நீங்களும் இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறீர்கள்... )

அந்த மகிழ்ச்சியில் இன்னொரு பரிசோதனை முயற்சியில் இறங்கியிருக்கிறேன். வாரந்தோறும் ‘ஞாநி பேசுகிறேன்’ என்ற தலைப்பில் ஒரு முக்கியப் பிரமுகருடன் பேசுகிறேன். ஒன்றரை மாதத்திற்குள் பேசியவர்கள் பட்டியல் எனக்கே பிரமிப்பாக இருக்கிறது _ ரஜினிகாந்த் பற்றி புத்தகம் எழுதிய டாக்டர் காயத்திரி, திருமாவளவன், இயக்குநர்கள் சீமான், அமீர், மிஷ்கின், நடிகர் ராதாரவி, எழுத்தாளர் பாலகுமாரன்...( ஒரு கேள்வி உங்களுக்கு: பாலகுமாரனிடம் ‘நீங்கள் இரண்டு மனைவியோடு வாழ்கிறீர்கள், உங்கள் மனைவி இரண்டு கணவனோடு வாழ நினைத்தால் அனுமதிப்பிர்களா?' என்ற கேள்வியை வேறு யாரிடமாகவது கேட்கும் துணிவு உங்களுக்கு இருக்கா ? )

ஒவ்வொருவருடன் நடத்திய உரையாடலும் எனக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. அவர்களிடம் நான் நேரில் கேட்க விரும்பிய பலவற்றைக் கேட்கும் வாய்ப்பால் மட்டுமல்ல, அவர்களுடைய அதிகம் அறியப்படாத தன்மைகளை இந்த உரையாடல்கள் வெளிப்படுத்தும் காரணத்துக்காகவும் இணையத்தில் நடத்தும் பேட்டி என்பதால் பக்க அளவு, நேர அளவு சிக்கல் எதுவும் இல்லை. பேசும் இருவரும் களைப்படையும் வரை பேசிவிடுகிறோம்.

கடந்த ஒன்றரை மாதமாக இதில் ஈடுபட்டதில் என்னை மிகவும் வருத்தப்படுத்திய ஒரு தகவல் ராதாரவி மனம் திறந்து சொன்ன தகவல்தான். ‘கலகக்கார கலைஞரான நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டு இப்போது முடிந்தது. ஆனால், அவர் பெயரால் ஒரு நடிப்பிற்கான விருது கூட தமிழக அரசாங்கத்தால் அறிவிக்க முடியாத சூழல் இருக்கிறது. காரணம் ராதா எம்.ஜி.ஆரை சுட்டதற்காக சிறைத்தண்டனை பெற்றவர் என்பதுதான். அதைப் பொருட்படுத்தாமல் ராதா பெயரில் ஏதேனும் சிறப்பைச் செய்ய கலைஞர் கருணாநிதியோ, ஜெயலலிதாவோ முன்வந்தால் எம்.ஜி.ஆரை சுட்டவருக்கு சிறப்பா என்ற அரசியல் சிக்கல் அவர்களுக்கு வருமோ என்ற அச்சம் இருக்கிறது’ என்றார் ராதாரவி.

எம்.ஜி.ஆரை சுட்டதால் எம்.ஆர். ராதாவுக்குரிய வரலாற்று நியாயம் மறுக்கப்படுவதும், ராஜிவ் காந்தியை விடுதலைப்புலிகள் கொன்றதால், ஈழத் தமிழருக்கான வரலாற்று நியாயம் மறுக்கப்படுவதும் ஒரே மாதிரியான வேதனைகள்தான்..

இந்த வார குட்டு உங்களுக்கு தான். இரண்டு போரும் குற்றவாளிகள், அவர்களுக்கு வரலாற்றில் என்ன இடம் கிடைக்கவேண்டுமோ அது கிடைக்கும். இந்த மாதிரி பேத்துவதும் ஒரு அரைவேக்காட்டுத்தனம்தான். கூடிய சீக்கறம் நீங்களும் இணையத்தில் நுழையலாம். உங்களுக்கும் அந்த தகுதி நிறையவே இருக்கு. ஒரு இடம் போட்டு வைக்கட்டுமா ?


2 Comments:

Anonymous said...

இட்லி வடை ஏறகனவே ஞானி ஆட்குடடில் பல காரியங்களை செய்து வருகிறார்.அவருக்கு இணையம் புதிது அல்ல.

அவருது தாம் தரிகில இணைய தளம் வயது கூட இட்லி வடை வயதுக்கு இணையாக இருக்கும்

Boston Bala said...

இணையத்தாரின் கவனத்தைக் கோருவது எவ்வாறு, வலைவாசகர்களை தன் பக்கம் திருப்புவது எப்படி என்பதை ஞாநி, ஜெமோ போன்றவர்கள் சேர்ந்து dummies guide போல் எழுதினால், பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்