
300 படங்களுக்கு மேல் நடித்த பழம்பெரும் நகைச்சுவை நடிகை டி.பி.முத்துலட்சுமி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. மறைந்த டி.பி.முத்துலட்சுமியின் சொந்த ஊர் தூத்துக்குடி. 1948-ம் ஆண்டு சென்னைக்கு வந்து திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
பல வருடங்களுக்கு முன்பு `பொன்முடி' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டி.பி.முத்துலட்சுமி. `சவுபாக்கியவதி' என்ற படத்தில், சாவித்திரியுடன் 2 கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.
`நாடோடி மன்னன்', `அறிவாளி', `வீரபாண்டிய கட்டப்பொம்மன்', `இருவர் உள்ளம்', `நவராத்திரி', `மக்களை பெற்ற மகராசி', `அன்பே வா' உள்பட 300-க்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி நகைச்சுவை நடிகையாக நடித்து கொடிகட்டி பறந்தார்.
எம்.ஆர்.ராதா, கே.ஏ.தங்கவேலு, சந்திரபாபு, ஏ.கருணாநிதி, டி.எஸ்.பாலையா உள்பட அனைத்து முன்னணி நகைச்சுவை நடிகர்களுக்கும், பல படங்களில் ஜோடியாக நடித்தார். இவர் தமிழக அரசின் `கலைமாமணி' விருது பெற்றவர்.
நகைச்சுவை நடிகை முத்துலட்சுமி என்னுடன் இணைந்து சில திரைப்படங்களில் நடித்தவர். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்.- ஜெயலலிதா












1 Comment:
"அதான் எனக்கு தெரியுமே"- தங்கவேலுவுடன் முத்துலக்ஷ்மி அறிவாளி படத்தில் செய்த காமெடி மறக்க முடியாதது.
சகாதேவன்
Post a Comment