பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 30, 2008

நச் பூமராங்

2004 நச் பூமராங் என்ற தலைப்பில் சில பதிவுகள் வந்தது. 2008 அது தொடர்கிறது..

எதிர்ப்புகளையும், சர்ச்சைகளையும் சமாளிப்பது என் அன்றாடப் பணிகளில் ஒன்றாகி விட்டது. முதலில் சர்ச்சைகள் வரும். பின்பு அதுவே சாதனைகளாகும். - அன்புமணி

உங்க அப்பானால இப்ப கலைஞரும் இந்த டயலாக் தான் பேசரார்.

தேமுதிக மலர் போன்றது. இங்கு வருபவர்கள் தேனீக்கள். அவர்களால் மக்களுக்கு நன்மை கிடைக்கும். ஆனால் மற்ற கட்சிகளோ சிலந்தி வலைகள் ஆகும். - பண்ருட்டி ராமச்சந்திரன்

நல்லா மாட்டிகிட்டீங்க போல !

அரசியல் என்பது ஒரு தேர்தலோடு நின்று போவதில்லை. - குமாரசாமி

எந்த ஜோசியர் சொன்னார் ?

நான் சும்மா இருக்கேன்னு எல்லோரும் நினைக்கிறாங்க. நான் ஒண்ணும் சும்மா இல்ல. எனது லேப்டாப் மூலமா எல்லாத்தையும் வாட்ச் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன். - நடிகர் கார்த்திக்

எங்க வீட்டுக்கு ஒரு வாட்ச் மென் தேவை வரீங்களா ?

பெட்ரோல், டீசல் விலை உயர்த்துவது தற்கொலைக்கு சமமானது. - ஏ.பி.பரதன்:

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கூட தற்கொலை தான்!

அன்பழகன் இனமான பேராசிரியரே தவிர வருமான பேராசிரியர் அல்ல. - கருணாநிதி

வருமான பேராசிரியர்கள் லிஸ்டை சு.சுவாமியிடம் கேட்க வேண்டும்.

தசாவதாரம் படம் தாமதமாவதால் நாளென்றுக்கு ரூ.2 கோடி இழப்பு ஏற்படுவதாக தயாரிப்பாளர் கோர்ட்டில் தகவல். - செய்தி

எங்களுக்கு எதற்கு இந்த நியூஸ், கமலுக்கு சொல்லுங்க ?

ஒகேனக்கல் பிரச்சனை யில் தமிழகத்திற்கு சாதக மாக தமிழக பிஜேபி யும், கர்நாடகத்திற்கு சாதகமாக கர்நாடக பிஜேபியும் செயல்படும். - வெங்கையா நாயுடு.

இரண்டு ஊர் சினிமா காரங்களும் சாதகமாக நடந்துக்கொள்வார்களா ?

3 Comments:

Hari said...

"கிசு கிசு கிச்சாமி"-க்கு பதில் : Sundar.C.Babu("கத்தாழ கண்ணால")

சரியா?

IdlyVadai said...

தப்பு :-)

Anonymous said...

விஜயநகரப் பேரரசில் வித்வானாக இருந்தவரின் பேரன் இன்று தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர். யார் அவர்?


வரலாறு குறித்த அறிவு இல்லை.விஜயநகரப் பேரரசு ஆங்கிலேயர் ஆட்சிக்கும் சில
நூற்றாண்டுகள் முந்தையது.
அப்படி இருக்கையில் அதில்
வித்வானாக இருந்தவரின்
பேரர் இந்த நூற்றாண்டில்
இருக்கவே முடியாது.
சில ஆயிரம் ஆண்டுகள்
வாழும் பாபாவாக இருந்தால்தான்
அது இயலும்.நீங்கள் விஜயனகர
ஜமீனைக் குறிப்பிடுகிறீர்கள் என
நினைக்கிறேன்.