பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 29, 2008

திமுகவின் கிரிமிலேயர்

நேற்று அர்ஜுன்சிங், திடீர் சென்னை வருகை. காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிணக்கை தீர்க்க முதல்வரின் உதவியை நாடி தான் அவர் சென்னை வந்திருப்பதாக செய்திகள் வந்தது.

ஆனால் அர்ஜுன் சிங் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் வருவதையடுத்து அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவிப்பதற்காக இங்கு வந்தேன். இதுதான் நான் இங்கு வந்ததற்கான உண்மையான காரணம் என்றார். அப்ப நிச்சயம் இது உண்மையான காரணமாக இருக்க வாய்ப்பு இல்லை. போகட்டும்.

அர்ஜுன்சிங்கை கனிமொழி எம்.பி., அமைச்சர் பொன்முடி ஆகியோர் வரவேற்றனர் ஆனால் ஸ்டாலின் மிஸ்ஸிங். ஸ்டாலின் தற்போது பெங்களூர் சென்றுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் கலைஞர் ஆஸ்பத்திரியில் இருந்த போது, முதல்-அமைச்சருக்கு குடும்ப நெருக்கடி அதிகமாக இருப்பதாக எல்லா பத்திரிக்கையிலும் வந்துவிட்டது. ஜூவி சர்வேயே நடத்தியது.

இன்று வந்த டைம்ஸ் செய்தியில் ஸ்டாலின் ரெஸ்ட் எடுக்க பெங்களூர் சென்றுள்ளார் கலைஞர் பிறந்த நாள் விழாவிற்கு வருவாரா என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அழைப்பிதழ்களிலும் அன்பழகன், ஆர்காடு வீராஸ்வாமி பெயர் தான் இருக்கிறதே தவிற, ஸ்டாலின் பெயர் மிஸ்ஸிங் என்றும் சொல்லியுள்ளது

மாறன் குடும்பத்தின் பண பலம், மீடியா பலம் அடுத்த தேர்தலுக்கு உதவும் என்ற நம்பிக்கையில், மீண்டும் நல்லுரவு வைத்துக்கொள்ள ஸ்டாலின் ஓ.கே சொல்லிவிட்டார். ஆனால் அழகிரி அதற்கு சம்மதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஸ்டாலினுக்கு பெரிய பதவி கொடுப்பதில் கலைஞர் ஜவ்வு மாதிரி இழுப்பதற்கு குடும்ப பிரஷர் தான் காரணம் என்றும் தெரிகிறது.

கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால் அவர் ஸ்டாலினைவிட ஒரு படி மேலே சென்றுவிடுவார்( As per the protocol ), அதனால் கொடுக்கவில்லை என்றும் சொல்லபடுகிறது.

கடந்த சில மாதங்களாக கனிமொழி, ஸ்டாலின், அழகிரி ஆகியோரின் மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்த மாதிரி ஸ்டாலின் ரெஸ்ட் எடுக்க செல்லுவது தமிழ் நாட்டுக்கு புதுமை இல்லை மூன்பே தாய்லாந்து சென்றார், பிறகு கோவா சென்றார், இப்ப பெங்களூர்.

கிரிமிலேயரோ, கிருமிலேயரோ கலைஞர் அவர்கள் குடும்பதிலிருந்து ஆரம்பிப்பது நல்லது.

1 Comment:

மாயவரத்தான்... said...

அந்த குடும்பத்திலே மொத்தமுமே கிருமி... ஸாரி.. க்ரீமீ தானே இட்லி வடையாரே... என்ன நான் சொல்றது!