பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 29, 2008

தசாவதாரம் படத்திற்கு தடை இல்லை - தீர்ப்பு

கமல்ஹாசனின் தசாவதாரம் படத்திற்கு எதிராக இரு இந்து அமைப்புகள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து விட்டது. படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் எதுவும் இல்லை, எனவே படத்தை திரையிட தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

தீர்ப்பு விவரம்


தசாவதாரம்’ தலைப்புக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. படத்தில் ஓம், பிரணவ மந்திரம், பகவத் கீதை ஆகியவற்றின் மீது கால் வைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக மனுதாரர் கூறியிருப்பது கற்பனையானது.

ராமானுஜர் என்ற கதாபாத்திரம் படத்தில் இடம் பெறவில்லை. மனுதாரர் கற்பனையான குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார்.

அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்துரிமையை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. அதே நேரத்தில் எந்த பிரிவு மக்களின் உணர்வுகளையும், மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் கருத்துரிமையை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது

3 Comments:

Anonymous said...

கோர்ட்டே தீர்ப்பு சொல்லியாச்சு. இப்பவாச்சும் ஜூன் 6 படத்த ரிலீஸ் பண்ணுங்கப்பா.

Anonymous said...

The court should punish the people who lodge a case just for the sake of publicity. Without any evidence, or knowing what has been shot, these people will lodge a complaint, wasting their time, the courts time and money, and producers time and money.

Anonymous said...

DASA WORLDWIDE RELEASE on 12th JUNE

Sunday MORNING NEWS PAPER ADD officially comes.