பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 27, 2008

`தசாவதாரம்' படத்தை ஜார்ஜ் புஷ் பார்க்கிறார்

கமலஹாசன் 10 வேடங்களில் நடித்த `தசாவதாரம்' படத்தை ஜார்ஜ் புஷ் பார்க்கிறார் `சப்-டைட்டிலுடன்' ஒரு பிரிண்ட் அமெரிக்கா போகிறது

கமலஹாசன் 10 வேடங்களில் நடித்த `தசாவதாரம்' படம், ரூ.60 கோடி செலவில் தயாராகி இருக்கிறது. இந்த படத்தை கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்து இருக்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரித்து இருக்கிறார்.

இந்த படத்தில் கமலஹாசனுடன், அசின், பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத், ஜெயப்பிரதா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். நெப்போலியன், முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.

கமலஹாசனின் 10 வேடங்களில், அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ்சும் ஒன்று. கோவில் அர்ச்சகர், 8 அடி உயர மனிதர், கறுப்பான தொழிற்சங்க தலைவர், 3 அடி உயரத்தில் 90 வயது பாட்டி ஆகிய வேடங்களிலும் அவர் நடித்து இருக்கிறார்.

ஜார்ஜ்புஷ் வேடத்தில் கமலஹாசன் நடித்து இருப்பதை, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பார்த்தால் படத்துக்கு மிகப்பெரிய விளம்பரம் கிடைக்கும் என்று தயாரிப்பாளர் தரப்பில் கருதினார்கள்.

அமெரிக்காவில் உள்ள லூசியானா கவர்னர் மூலம் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. (லூசியானா கவர்னர், இந்தியாவை சேர்ந்தவர்.) `தசாவதாரம்' படத்தை பற்றிய குறிப்புகளும், டிரைலரும் லூசியானா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர் மூலம் ஜார்ஜ் புஷ், `தசாவதாரம்' படத்தை பார்ப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்காக, `தசாவதாரம்' படத்தின் ஒரு பிரிண்ட், ஆங்கில சப்-டைட்டிலுடன் தயாராகி இருக்கிறது. அந்த பிரிண்ட், ஜார்ஜ் புஷ் பார்ப்பதற்காக அமெரிக்கா அனுப்பப்படுகிறது.

இதேபோல் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் பார்ப்பதற்காக, சப்-டைட்டிலுடன் இன்னொரு பிரிண்ட் ஹாங்காங் அனுப்பி வைக்கப்படுகிறது
( நன்றி: தினத்தந்தி )

அப்படியே ஒரு பிரிண்டை தமிழ் சப்-டைட்டிலுடன் நம்ம ராமகோபாலனுக்கு அனுப்புங்க சார் :-)

6 Comments:

Anonymous said...

This Ravichandran can release the movie..instead spending crores behind Jackie Chan and now George Bush..if the movieis good defnitely it be hit..no need for such a publicity..instead he can donate this money to poor

மாயவரத்தான்... said...

குருவி படம் பாத்துட்டு ஹாஸ்பிடல்ல போய் படுத்த கருணாநிதி கதி ஜார்ஜ் புஷ்ஷுக்கு வராம இருந்தா சரி தான்.

Mani said...

Well said Mr. Anony (1st comment).

Ravichandran, please stop doing such publicity. Andha Bush naai patha unakkenna paakati unakenna...

Avanukku India pathiye akkarai illai...unnoda filmku enna kodukkaporan...

Better u can serve some good things for poor people with ur multi crores of money.

Anonymous said...

கருணாநிதி மாதிரி புஷ்க்கும் ஒருப்படியாக ஒரு வேலையுமில்லை என நினைத்துவிட்டார்கள் போல!

Murthi said...

தமிழ் படத்துக்கே தமிழ்ல சப்-டைட்டிலா? பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு.

Anonymous said...

கிளிண்டனுக்கும் ஒரு காப்பி அனுபுங்கப்பா

முத்தம் தர்றது எப்படினு கமல் சினிமா பாத்து தெரிஞ்சிப்பாரில்ல