பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 26, 2008

எச்சரிக்கை மணி - ஜாக்கிரதை!

ஏச்சரிக்கை மணி, ஜாக்கிரதை! தினமணி தலையங்கம்.

எதிர்பார்ப்புகளை பொய்யாக்குவது என்பதில் இந்திய வாக்காளர்கள் சமர்த்தர்கள். குஜராத்தைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் கருத்துக் கணிப்புகளையும், பத்திரிகைச் செய்திகளையும் பொய்யாக்கி ஏறத்தாழ தனிப்பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றியை அளித்திருப்பது என்பது ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு கட்டியம் கூறும் விதமாக அமைந்திருக்கிறது.

வடமாநிலங்களில் மட்டும் சக்திவாய்ந்த அரசியல் கட்சியாக இருந்த பாஜக, ஏனைய பகுதிகளில், குறிப்பாக தென்னிந்தியாவில் மாநிலக் கட்சிகளின் துணையோடுதான் வெற்றி பெற முடியும் என்கிற நிலைமைக்கு கர்நாடகத் தேர்தல் முடிவு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. தனது சொந்த பலத்தில் தென்னிந்தியாவிலும் ஆட்சி அமைக்க முடியும் என்கிற வளர்ச்சியை இந்தத் தேர்தல் மூலம் பாஜக பெற்றிருக்கிறது.

கர்நாடகத்தில் பாஜகவின் வெற்றிக்கு எத்தனையோ காரணங்களைக் கூறலாம். தேவ கௌடா தலைமையிலான ஜனதா தளம் நடத்திய அரசியல் பேரங்களும், பாஜகவை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நடத்திய நாடகங்களும் பாஜகவுக்கு இந்த வெற்றியில் மிகப் பெரிய பங்களிப்பைச் செய்தன என்றே கூற வேண்டும். ஒப்பந்தம் செய்துகொண்டபடி குமாரசாமி பதவி விலகி எடியூரப்பாவை முதல்வாராக்கியிருந்தால், கூட்டணியும் பலமாகியிருக்கும், இப்படி ஒரு தேர்தலுக்கும் தேவை இருந்திருக்காது.

அந்தக் கூட்டணி அரசு கவிழ்ந்ததும், அதிக இடங்களைப் பெற்ற பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்திருந்தால், தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா ராஜிநாமா செய்து தேர்தலுக்கு வழிகோலியிருப்பார். ஆளுநரை குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு சிபாரிசு செய்ய வைத்து, அதன் மூலம் எடியூரப்பாவுக்கும் பாஜகவுக்கும் மக்களின் அனுதாபத்தைப் பெற்றுக் கொடுத்த பெருமை காங்கிரûஸயே சாரும்.

பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு மேலும் வலுவூட்டிய விஷயம், காங்கிரஸýம், மதச்சார்பற்ற ஜனதா தளமும் பரஸ்பரம் மற்றவரைப் பலவீனப்படுத்திக் கொண்டது. மகாராஷ்டிர ஆளுநராக இருந்த எஸ்.எம். கிருஷ்ணாவை பிரசாரத்தில் இறக்கி, தேவ கௌடாவின் கட்சிக்கு அஸ்திவாரமான "ஒக்கலிகர்' வாக்குகளை காங்கிரஸ் சிதறடித்தது. தனது பங்குக்கு தேவ கௌடாவோ சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரித்து காங்கிரûஸ பலவீனப்படுத்தினார். போதாக்குறைக்கு காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிகள், டிக்கெட் கிடைக்காத கோபத்தைத் தங்களது கட்சி வேட்பாளர்களைத் தோல்வி அடையச் செய்து, பழி தீர்த்துக் கொண்டனர்.

இந்த ஆட்சியை பாஜக எப்படித் தக்கவைத்துக் கொள்ளப் போகிறது என்பதையும், எப்படி ஆட்சி நடத்தப் போகிறது என்பதையும் பொறுத்துத்தான் அண்டை மாநிலங்களில் அதன் வளர்ச்சி அமையும். காங்கிரûஸ போலல்லாமல், தன்னை ஓர் உண்மையான தேசியக் கட்சியாக நினைத்து, அண்டை மாநிலங்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் மதித்து நடந்தால் மட்டும்தான், பாஜகவின் இந்த வெற்றி மற்ற மாநிலங்களிலும் அந்தக் கட்சியின் வளர்ச்சிக்கு வழிகோலும்.

ஒகேனக்கல் பிரச்னை மூலம் கர்நாடக மாநில மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முயன்றவர் என்கிற அவப்பெயர் பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பாவுக்கு ஏற்கெனவே உண்டு. ஆட்சியைப் பிடித்த பிறகும் அதே மனநிலையில் அவர் தொடர்வாரேயானால், அதன் விளைவுகள் மிகவும் விபரீதமாக இருக்கும்.

அதேநேரத்தில் தமிழகத்துடன் சமாதானமாகப்போவது என்கிற முடிவை எடியூரப்பாவும் பாஜகவும் எடுக்க முயற்சித்தால், அதை மதச்சார்பற்ற ஜனதா தளமும், காங்கிரஸýம் அனுமதிக்குமா என்பதும் சந்தேகம்தான். எதிர்க்கட்சிகளுக்குப் பயந்து, தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள காவிரி மற்றும் ஒகேனக்கல் பிரச்னைகளில் முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் எடியூரப்பா நிச்சயம் தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காமல் இருக்க முடியாது.

கர்நாடக மக்களைப் பொருத்தவரை, ஒரு நிலையான ஆட்சிக்கு வாக்களித்து இருக்கிறார்கள். அண்டை மாநிலங்களுடன் சுமுகமான உறவு இல்லாமல் நிலையான ஆட்சி அமையாது. மக்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பாதிப்பில்லாத, கர்நாடக மாநிலம் முழுவதும் சமச்சீர் வளர்ச்சி ஏற்படுத்துகிற ஆட்சியாக எடியூரப்பாவின் தலைமையில் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் நமது எதிர்பார்ப்பு.

ஆமாம், காங்கிரஸின் தோல்விக்கு என்ன காரணம்? விலைவாசி உயர்வும், மத்திய அரசின் மீதான அதிருப்தியும்தான் காரணமா? குஜராத், இமாசலப்பிரதேசத்தைத் தொடர்ந்து, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது கர்நாடகம், ஜாக்கிரதை!

6 Comments:

Anonymous said...

என்னது இது, இத்தனை எழுத்துப் பிழைகள்? தவறான தட்டச்சா (அ) புதிய செயலி ஏதாவது கோளாறாகிடுச்சா?

படிக்க முடியவில்லை.

Anonymous said...

ஏன் இவ்வளவு தவறுகள்?எழுத்துப் பிழைகள்?

இலவசக்கொத்தனார் said...

எழுத்துப்பிழைகள் எல்லாம் உங்களுதா இல்லை தினமலருதா?

IdlyVadai said...

http://software.nhm.in/Services/NHMConverter/tabid/56/Default.aspx கொண்டு தினமணியிலிருந்து மாற்றினேன். அதன் பலன் என்று நினைக்கிறேன்.

தற்போது திருத்திவிட்டேன்.

நாகராஜன் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா ?

K.S.Nagarajan said...

தினமணி தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த தலையங்கம் தினமணியின் எழுத்துருவைக் கொண்டு உருவாக்கப்பட்டது.

NHM Converter தற்போது இந்த எழுத்துருவுக்கான என்கோடிங்கை support செய்யவில்லை.(ஆனாலும் கூடிய விரைவில் இதனையும் சேர்த்து விடுவோம்)

ஆனால், NHM Converter'ல் உள்ள Autodetect optionஐ பயன்படுத்தும்போது, அது இந்த என்கோடிங்கோடு கிட்டத்தட்ட ஒத்து இருக்கும் மற்றொரு என்கோடிங்கை source encoding என detect செய்து விட்டது.

அதனால் இட்லிவடை, தலையங்கத்தை unicode'க்கு மாற்றும்போது இந்த பிழைகள் நேர்ந்து விட்டது.

இதற்கான தீர்வு.. கூடிய விரைவில் புழக்கத்தில் உள்ள மற்ற என்கோடிங் முறைகளையும் NHM Converter'ல் சேர்ப்பதுதான்.அதற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது.

மற்றொரு தீர்வு.. இட்லிவடை சொந்தமாக தலையங்கம் எழுதுவது :-)

-
K.S.Nagarajan
New Horizon Media

Anonymous said...

இட்லிவடை சொந்தமாக தலையங்கம் எழுதுவது :-)

அதைத்தானே தொழில் ரீதியாக கிழக்கிற்கு செய்கிறாரே ?