பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 26, 2008

கர்நாடக தேர்தலில் அதிக பணப்புழக்கம் -

கர்நாடகா யாருக்கு என்ற இட்லிவடை 'எக்ஸிட் போலில்' படம் :-)

இனி செய்திகள்...
கர்நாடக சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகளிடையே அதிக அளவிலான பணப்புழக்கம் இருந்ததாக தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி தெரிவித்தார்.

தொகுதி சீரமைப்பு அமலுக்கு வந்த பிறகு முதன் முறையாக கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் கட்-அவுட், சுவரொட்டி வாகன ஊர்வலம் என பல்வேறு பிரசாரங்களுக்கு தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.

எனினும், தேர்தல் ஆணையத்தின் கடுமையான விதிகளையும் மீறி அதிக அளவிலான பணப்புழக்கம் நடமாடியதாக புகார்கள் எழுந்தன. தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில் இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமியிடம் நேற்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கோபாலசாமி, `கர்நாடக மாநிலத்தில் நடந்த இந்த தேர்தலில் விதி மீறல்கள் சிறிய அளவிலேயே இருந்தன. ஆனால், மிக அதிகமான அளவில் பணப் புழக்கம் இருந்தது. இதை தேர்தல் ஆணையத்தால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. கணக்கில் காட்டப்படாத பணம், கறுப்பு பணம் போன்றவற்றை கட்டுக்குள் கொண்டு வரும் வரை இது போன்ற பண புழக்கத்தை தடுக்க முடியாது' என்றார்.


கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக அடிக்கடி போராட்டம் நடத்தி வருபவர் வாட்டாள் நாகராஜ். இவர் நடத்தும் போராட்டங்களில் ``கர்நாடகத்தை விட்டு தமிழர்கள் வெளியேற வேண்டும்'' என்று அடிக்கடி கூறுவது வழக்கம். இந்த தேர்தலில் பி.ஜே.பி வெற்றி பெற்றது என்ற நல்ல செய்தியுடன், வாட்டாள் நாகராஜ். டெபாசிட் இழந்தார் என்ற போனஸ் செய்தியுடன் இந்த பதிவை முடிக்கிறேன் :-)


3 Comments:

சந்திரமௌளீஸ்வரன் said...

இட்லி வடை என்ற பெயரை மாற்ற சிபாரிசு செய்கிறேன்

புது பெயர் : சூடான இட்லி சூடான வடை..

காலையில் தான் கேட்டேன் தேர்தல் ஆணையர் பேட்டி வேணும் என்று .. சுடச் சுட

சூடான இட்லி சூடான வடை என்று பேர் மாற்றம் செய்ய வேண்டி மற்ற ரசிகர்களின் ஆதரவு வேண்டுகிறேன்

Seetha said...

வாட்டாள் நாகராஜனின் தோல்வி மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது....ஆனால் எதியூரப்பாவைபற்றி கேள்விபட்டது எதுவும் நன்றாக இல்லை..அவரது சொந்த வாழ்க்கை..சொல்கிறேன்...

geeyar said...

எடியூரப்பாவின் வெற்றி உங்களுக்கு நல்ல செய்தியாக இருக்கலாம். நிச்சயமாக தமிழகத்திற்கு துக்க செய்திதான். கேவலம் ஓட்டுக்காக இருமாநிலங்களையே பிரிக்க துணிந்தவரை அதைவிட கேவலமாக மதத்திற்காக தலையில் தூக்கி வைக்கும் உங்களை என்ன செய்வது.