பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 27, 2008

டிரைவ்-இன்-உட்லண்ட்ஸ் ஓட்டல் - என்ன நடக்கிறது ?

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே டிரைவ்-இன்-உட்லண்ட்ஸ் ஓட்டல் செயல்பட்ட 38 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்த சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. கொஞ்சம் நாளாக டிரைவ்-இன்-உட்லண்ட்ஸ் செய்தி நாளிதழ்களில் வந்துக்கொண்டு இருக்கிறது. இன்று வந்த தினத்தந்தி செய்தி.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே தமிழக அரசின் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான 38 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் வேளாண் தோட்டக்கலை சங்கம் என்ற அமைப்புக்கு குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது. இந்த அமைப்பு, டிரைவ்-இன்-உட்லண்ட்ஸ் ஓட்டலை நடத்த ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்தை உள்குத்தகைக்கு விட்டிருந்தது. அந்த இடத்தில் டிரைவ்-இன்-உட்லண்ட்ஸ் ஓட்டல் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு அனுமதியுடன், தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான 38 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் டிரைவ்-இன்-உட்லண்ட்ஸ் ஓட்டல் மூடப்பட்டது. இந்த நிலத்தில், உலக தரத்துடன் சிறப்பு வேளாண் தோட்டக்கலை பூங்கா அமைக்க போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

இதற்கிடையே, தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து வேளாண் தோட்டக்கலை சங்கம் சார்பில் அதன் கவுரவ செயலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி, சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தார். இம்மனு நிலுவையில் இருக்கும் நிலையில், சென்னை ஐகோர்ட்டுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.

எனவே, தமிழக அரசுக்கு எதிராக இதே கோரிக்கையை வலியுறுத்தி, வி.கிருஷ்ணமூர்த்தி, சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் வேளாண் தோட்டக்கலை சங்கத்தின் கவுரவ செயலாளர். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவனாக அறியப்பட்டவன். இந்த 38 ஏக்கர் நிலம், கடந்த 180 ஆண்டுகளாக வேளாண் தோட்டக்கலை சங்கத்தின் வசம் இருந்தது. நகரில் தூய்மையான காற்று வீசவும், பசுமையான சுற்றுச்சூழல் நிலவவும், வேளாண் தோட்டக்கலை சங்கம் சார்பில் இந்த நிலத்தில் நூற்றுக்கணக்கான அரிய மரங்களும், மூலிகை தாவரங்களும், பூக்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், என் மீதான வெறுப்பில் இந்த நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு முயன்று வருகிறது. இந்த இடத்தில் வேளாண் தோட்டக்கலை பூங்கா அமைக்கப் போவதாக தமிழக அரசு கூறுகிறது. இந்த போர்வையில், நிலத்தை கையகப்படுத்தி, என்னை துன்புறுத்த முயற்சிக்கிறது. தமிழக அரசின் இந்த தீய நோக்குடைய, தன்னிச்சையான நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இடைக்கால தடை

இந்த மனு, நீதிபதிகள் சி.கே.தாக்கர், எல்.எஸ்.பாண்டா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான 38 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தவோ, எந்தவகையிலும் மாற்றி அமைக்கவோ கூடாது என்று நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.

அதே சமயத்தில், நிலத்தை மாற்றி அமைப்பதில்லை என்ற நிபந்தனையுடன், வேளாண் தோட்டக்கலை பூங்கா அமைப்பதற்கு டெண்டர் கோரும் பணியை தொடர நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.

மேலும், இந்த மனுவுக்கு தமிழக அரசு 4 வார காலத்துக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

டிரைவ்-இன் உட்லண்ட்ஸ் ஓட்டல் மீண்டும் திறப்பு

0 Comments: