பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 25, 2008

கர்நாடகா யாருக்கு ?

நிலவரம் Twitter'ல் அப்டேட் செய்யப்படுகிறது சைடில்....
கர்நாடக சட்டசபைக்கு 3 கட்டமாக தேர்தல் நடந்தது.
இங்கு மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 224. காங்கிரஸ், பாரதீய ஜனதா மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சி கள் தனித்தனியாக போட்டியிட்டன.
மொத்தம் 2242 வேட் பாளர்கள் களத்தில் இருந்தனர். பாரதீய ஜனதா 224 தொகுதிகளிலும் காங்கிரஸ் 222 தொகுதிகளிலும் மதசார் பற்ற ஜனதாதளம் 119 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. 943 சுயேட்சைகளும் போட்டியிட்டன.

காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. எலெக்ட்ரானிக் எந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு நடந்து இருப்பதால் முதல் 2 மணி நேரத்துக்குள்ளேயே அனைத்து தொகுதி முன்னணி நிலவரங்கள் தெரிந்து விடும். மதியத்துக்குள் அனைத்து தொகுதி முடிவுகளும் வந்து விடும்.

தேர்தலில் பாரதீய ஜனதா காங்கிரஸ் இடையே தான் கடும் போட்டி நிலவியது. தேர்தலுக்கு பிந்திய கருத்து கணிப்புப்படி பாரதீய ஜனதா அதிக இடங்களை பிடிக்கும். ஆனாலும் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்று தெரியவந்தது.


2004-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா 79 இடங்களிலும் காங்கிரஸ் 65 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதாதளம் 58 இடங்களிலும் வெற்றி பெற்றது.

பின்னர் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளமும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. இடையில் பிரச்சினை ஏற்பட்டு மதசார் பற்ற ஜனதாதளம் தனியாக பிரிந்தும் பாரதீய ஜனதாவும் மதசார்பற்ற ஜனதாதளமும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தன. முதலில் மதசார் பற்ற ஜனதாதளமும், அடுத்து பாரதீய ஜனதாவும் ஆட்சியை பகிர்ந்து கொள்வது என்ற முடிவு எடுத்தனர். ஆனால் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி முடிந்த பிறகு அந்த கட்சி பாரதீய ஜனதா ஆட்சிக்கு ஆதரவு அளிக்க மறுத்து விட்டது. இதனால் ஆட்சி கவிழ்ந்து இப்போது தேர்தல் நடந்துள்ளது.

நிலவரம் Twitter'ல் அப்டேட் செய்யப்படுகிறது சைடில்....

0 Comments: