பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 21, 2008

ஷாருக் என் காலை நக்குகிறான் - அமீர்கான்

தமிழ் எழுத்தாளர்கள் போல் இப்ப ஹிந்தி நடிகர்கள் பிளாக் எழுத ஆரம்பித்துள்ளார்கள். அமீர் கான் ஷாருக் என் காலை நக்கினார் என்று எழுதி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

....Shahrukh is licking my feet and I am feeding him biscuits every now and then. What more can I ask for?

Now, before you jump to any conclusions let me add that Shahrukh is the name of our dog. And before you jump to any further conclusions let me add that I had nothing to do with naming him. In fact Shahrukh is the dog of the caretakers of our house.

( http://aamirkhan.com/blog.htm )
தமிழ் செய்தி கீழே..

பிரபல இந்தி நடிகர் அமீர்கான் வளர்த்து வரும் செல்ல நாயின் பெயர், `ஷாருக்'. பஞ்சகனி என்ற இடத்தில் உள்ள அமீர்கான் வீட்டில் இந்த நாய் வளர்ந்து வருகிறது. பஞ்சகனிக்கு ஒரு விளம்பர படத்தில் நடிக்க ஷாருக்கான் வந்த நாளில், இந்த நாய் வாங்கப்பட்டதால், அதற்கு `ஷாருக்' என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த நாய் பற்றி அமீர்கான், தனது இணையதளத்தில் கிண்டலாக எழுதி உள்ளார். `ஷாருக் என் காலை நக்குகிறான். அவனுக்கு நான் பிஸ்கெட் கொடுக்கிறேன். இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்?' என்று அவர் எழுதி உள்ளார்.

அமீர்கானின் இந்த அணுகுமுறைக்கு ஏராளமான ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இதுபற்றி விளக்கம் அளித்த அமீர்கான், `நகைச்சுவைக்காகவே அப்படி எழுதினேன். ஷாருக்கான் எனது நெருங்கிய நண்பர். அவரை அவமதிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்'
( நன்றி: தினத்தந்தி )

4 Comments:

Anonymous said...

அப்ப நாய்க்கு 'இட்லிவடை'ன்னு பேர் வைக்கலாமா :)

Anonymous said...

அப்ப நாய்க்கு 'இட்லிவடை'ன்னு பேர் வைக்கலாமா :)

தன்மானத் தமிழ்ர்களின் பாரம்பரிய
உணவை இழிவுபடுத்த அனுமதியோம்,
போராட்டம் வெடிக்கும் :). வேண்டுமானால் பீட்ஸா என்று
வைத்துக் கொள்.

Anonymous said...

very unfortunate. sorry u spoil your own image ameer.

Anonymous said...

அப்ப நாய்க்கு 'இட்லிவடை'ன்னு பேர் வைக்கலாமா :)


இந்த கேள்வி கேட்ட நாயின் மன்னிக்கவும், நாயாரின் பெயர் என்னவோ?