பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 19, 2008

குமுதம், விகடன் கேள்விகள் - அழகிரி, விஜயகாந்த் பதில்கள்

விகடனில் வந்த விஜயகாந்த் பேட்டியிலிந்தும், குமுதத்தில் வந்த அழகிரி பேட்டியிலிந்து சில கேள்வி பதில்கள்.

விஜயகாந்த் பதில்கள்
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரியின் விடுதலை பற்றி..?

”அட, போங்க சார்..! குற்றம் சாட்டப்பட்ட ஒருத்தர் மேலகூட குற்றம் நிரூபிக்கப்படலையாம்ல! ஹ்ம்ம்.. வேற பேசுவோம் சார்!”

நீங்க சொல்லுங்க.. 2011ல் யார் தமிழக முதல்வர்..?

”விஜயகாந்த்தான்! தே.மு.தி.க ஆபீஸ்ல வேற என்ன பதில் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறீங்க? எனக்கு எப்பவும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!”

அழகிரி பதில்கள்
நீங்கள் விடுதலையான செய்தி கேட்டதும் கலைஞரின் முதல் ரியாக்ஷன் என்ன?

‘‘இது கேள்வியே அல்ல. இருந்தாலும் பதில் சொல்கிறேன். நிச்சயம் மகிழ்ச்சிக் கடலில் மிதந்திருப்பார்.’’ (புன்னகை செய்கிறார்)

மதுரையிலிருந்து தமிழகத்துக்கு இன்னொரு அரசியல் தலைவரும் வந்திருக்கிறார், விஜயகாந்த். அவரது வளர்ச்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அந்த மதுரைக்காரரின் வளர்ச்சியை இந்த மதுரைக்காரரால் சமாளிக்க முடியுமா?

‘‘மதுரை மத்தி, மதுரை மேற்கு இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் நடந்த இரண்டு இடைத்தேர்தல்களையும் இந்த மதுரைக்காரர் எப்படிச் சமாளித்தார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.’’

மதுரை தினகரன் அலுவலகம் தாக்குதல் நடந்து ஒரு வருடம் முடிந்துவிட்டது. அந்தத் தாக்குதல் நடந்தபோது உங்கள் மீதுதான் குற்றம் சாட்டப்பட்டது. அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?

‘‘எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சி.பி.ஐ.யே கூறியுள்ளது.’’

2011_ல் அவர்தான் தமிழக முதலமைச்சராவார் என்று பேசுகிறார்களே?

‘‘எந்தப் படத்தில்?’’‑ (ஏளனமாகச் சிரிக்‑கிறார்)

0 Comments: