பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 18, 2008

பாலு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - வைகோ கேள்வி

அமைச்சர் பூங்கோதையை விட 100 மடங்கு தவறு செய்துள்ள மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மீது கருணாநிதி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு.வைகோ, கேள்வி எழுப்பியுள்ளார். ம.தி.மு.க. வின் 15-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நேற்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் திரு. வைகோ, குடும்பத்திற்காக கட்சியை நடத்தும் திரு.கருணாநிதி, உண்மையான தொண்டர்களுக்கு ஒருபோதும் உரிய மரியாதை அளித்தது கிடையாது என தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து போயிருப்பதாகவும், நெல்லை மாவட்டத்தில் மட்டும் கடந்த 15 நாட்களில், பல கொலை சம்பவங்கள் அரங்கேறியிருப்பது கவலை அளிப்பதாகவும் திரு. வைகோ கூறினார். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த அமைச்சர் திருமதி. பூங்கோதை விவகாரத்தில், வெட்கப்படுவதாக, கூறியுள்ள திரு.கருணாநிதி, அமைச்சர் டி.ஆர். பாலு மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? என திரு. வைகோ கேள்வி எழுப்பினார்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் திரு. கருணாநிதி, தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம் இழைத்திருப்பதாகவும் திரு. வைகோ, தெரிவித்தார்
விடியோ காட்சி கீழே ( நன்றி: ஜெயா டிவி )


0 Comments: