எனது ராஜினாமா பற்றி கருத்து சொல்ல ஜெயலலிதாவுக்கு அருகதை இல்லை
பூங்கோதை அறிக்கை
தமிழ்நாட்டையும், தமிழினத்தையும் பாதுகாக்கும் ஒரே தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதிதான். என் தந்தை ஆலடி அருணா இருந்தாலும், இல்லாவிட்டாலும், நான் பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், என்னுடைய நிரந்தர தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதிதான்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவருடைய அரசியல் ஆதாயத்திற்காக மறைந்த என் தந்தையை பற்றிக் கூறுவது அரசியல் நாகரீகமாகாது. என் தந்தை அவருடைய மரணத்திற்கு முன்பு தன் தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதியை விட்டு பிரிந்து வாடியதும், வருத்தம் அடைந்ததும், மீண்டும் அவருடனும், தி.மு.க.வுடனும் இணைந்து கொள்ள விரும்பியதும் எனக்கும், என்னுடைய குடும்பத்தினருக்கும் அந்த உண்மையும், வலியும் புரியும்.
எல்லா தருணங்களிலும் என்றென்றும் தி.மு.க.வின் தலைவரும் எங்கள் முதல்-அமைச்சருமான கருணாநிதி தலைமையின் கீழ், அவரது வழிகாட்டுதலின்படி பணிபுரிவதையே நான் பெருமையாக கருதுகிறேன்.
என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்தப் பொறுப்பை வழங்கிய அவருக்கு என்னால் சிறு அளவில்கூட எவ்வித சங்கடமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில்தான் ராஜினாமா கடிதத்தை அளித்தேன். என் தலைவருக்காக தி.மு.க.வின் கடைசித் தொண்டராக இருந்து பணியாற்றுவதையே பெருமையாகக் கருதுபவள் நான்.
எனவே, இந்த விஷயம் குறித்து கருத்து சொல்ல ஜெயலலிதாவுக்கு எந்தவித யோக்கியதையோ, அருகதையோ இல்லை. ஜெயலலிதா மேல் எத்தனை வழக்குகள் போடப்பட்டன என்று இந்த நாட்டிற்கே தெரியும்.
பூங்கோதை ரொம்ப நல்லவங்க
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த பூங்கோதை, மற்ற அரசியல்வாதிகளிலிருந்து மாறுபட்டவர் என்பதை நிரூபித்திருக்கிறார்.
.
லஞ்ச வழக்கில் சிக்கிய தனது உறவினருக்காக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருடன் தொலைபேசியில் பேசியது தொடர்பாக டேப் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த டேப்பில் வருவது உங்கள் குரல் தானா என்று பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டு கேட்ட போது, "அதை மறுப்பதற்கு நான் மற்ற அரசியல்வாதிகள் போல் அல்ல' என்று கூறிவிட்டு அந்த குரல் என்னுடையது தான் என்று ஒப்புக் கொண்டார்.
இவர் அடுத்த டி.ஆர்.பாலு
அத்துடன் இல்லாது முதல்வர் கேட்பதற்கு முன்னதாகவே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை கொடுத்திருக்கிறார்.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துவிட்டாலும், முதல்வர் அதுபற்றி முடிவெடுக்காத நிலையில், அவர் தொடர்ந்து அமைச்சர் பதவியில் நீடிக்கிறார்.
இருந்தாலும் பதவியை ராஜினாமா செய்ததால் நேற்று சட்டசபை கூட்டத்திற்கு வருவதை அவர் தவிர்த்தார்.
அதுபோல இன்று காலையில் சென்னை எம்.ஆர்.சி. நகரில் மது மற்றும் போதை பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கில் பூங்கோதையும் கலந்து கொள்வார் என்று அழைப்பிதழில் போடப்பட்டிருந்தது.
பூங்கோதை ஒருவேளை அங்கு வரக்கூடும் என்பதால் பத்திரிகையாளர்கள் அவரை காண்பதற்காக அங்கு காத்திருந்தார்கள். ஆனால் பூங்கோதை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
கோட்டையில் உள்ள அவரது அறைக்கும் அவர் வரவில்லை. அவர் வீட்டில் இருப்பதாக கூறப்பட்டது. உதவியாளர்கள் மட்டுமே இருந்தார்கள். வழக்கமாக அமைச்சரை காண வரும் கூட்டம் கூட இல்லை.
அமைச்சரின் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, அமைச்சர் வெளியில் சென்றிருப்பதாக உதவியாளர் தெரிவித்தார்.
இதை யாரும் ஒட்டுக் கோட்கவில்லையே
தன் மீது குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்ததுடன், முதல்வர் அந்த ராஜினாமா குறித்து முடிவெடுக்காத நிலையில், அமைச்சர் என்ற முறையில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ளாமல் தவிர்த்தது அவர் மற்ற அரசியல்வாதிகள் போல இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார்.
பெண்களுக்கான மருத்துவத்தில் நிபுணரான அவர், லண்டனில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். அதனால் ஆங்கிலத்தில் மிகவும் சரளமாக பேசக் கூடியவர்.
அப்ப ஒட்டுக் கோட்டாலும் பலருக்கு புரியாது என்று சொல்லுங்க
தான் பொறுப்பேற்றுக் கொண்ட சமூக நலத்துறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு மகளிர் மேம்பாட்டிற்காக பல நல்ல திட்டங்களை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
( மாலைசுடர் செய்தி )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, May 17, 2008
கருத்து சொல்ல ஜெயலலிதாவுக்கு அருகதை இல்லை - பூங்கோதை
Posted by IdlyVadai at 5/17/2008 05:47:00 AM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










8 Comments:
Jayalaithaamma va pathi pesurathukku Indha poongothaikku thaan arukathai / thagudi edhuvume kidyadu..
Let see in our next govt, DMK OOLAL peruchaligalai ellam amma eppadi thuvamsam panrangannu...(ncluding MK)
அடத்தூ .. செஞ்சது அயோக்கியத்தனம். இதிலே சுட்டிக்காட்டின உடனே ரோஷம் வருதாக்கும்?!
All politicians are fraud. If I have rights I will not wait (epothan namakku Muthalvan film CM maari oru CM Kidaikaporarao!!!
Amma Seekram vanga Indha paavigalaiellam chumma kooda mannikathinga...makkala kapathunga ivunga kudumba arasiyala irunthu...
Apdiye neengalaum suyama mudivu edunga...(we dont want sasikala and co)
''எல்லா தருணங்களிலும் என்றென்றும் தி.மு.க.வின் தலைவரும் எங்கள் முதல்-அமைச்சருமான கருணாநிதி தலைமையின் கீழ், அவரது வழிகாட்டுதலின்படி பணிபுரிவதையே நான் பெருமையாக கருதுகிறேன்''
என்று சொன்னார் அமைச்சர்.
செஞ்ச இந்த அயோக்கியத்தனம் தான்
கருணாநிதின் வழிகாட்டுதலா?
''எல்லா தருணங்களிலும் என்றென்றும் தி.மு.க.வின் தலைவரும் எங்கள் முதல்-அமைச்சருமான கருணாநிதி தலைமையின் கீழ், அவரது வழிகாட்டுதலின்படி பணிபுரிவதையே நான் பெருமையாக கருதுகிறேன்''
என்று சொன்னார் அமைச்சர்.
செஞ்ச இந்த அயோக்கியத்தனம் தான்
கருணாநிதியின் வழிகாட்டுதலா?
''எல்லா தருணங்களிலும் என்றென்றும் தி.மு.க.வின் தலைவரும் எங்கள் முதல்-அமைச்சருமான கருணாநிதி தலைமையின் கீழ், அவரது வழிகாட்டுதலின்படி பணிபுரிவதையே நான் பெருமையாக கருதுகிறேன்''
என்று சொன்னார் அமைச்சர்.
செஞ்ச இந்த அயோக்கியத்தனம் தான்
கருணாநிதியின் வழிகாட்டுதலா?
See her title "Samuga nalathurai Amaichar" Palayapattu onru ninaivukku varugiradhu...
Nenju porukuthilliaye indha nilai ketta Poongodhaiyai ninaithuvittal...
Su.Swami is going to release all minister's OOLAL verysoon...
http://www.kumudam.com/magazine/Reporter/2008-05-22/pg1.php
J.Amma pls ganinga and take action in your govt against all ministers
Better ellarayum thukkula podunga
Visit
www.tn.gov.in
and click council of ministers
Poongothai Name is not there
The Social Welfare is given to Geetha Jeevan and the Animal Husbandry is moved to Pongalur Palichamy from Geetha
No Govt Notification - all silent actions
Post a Comment