பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 16, 2008

பூங்கோதை ராஜினாமா - ஜெ கருத்து

அமைச்சர் பூங்கோதை ராஜினாமா விவகாரத்தில் கருணாநிதி நாடகமாடி வருவதாக ஜெயலலிதா குற்றச்சாட்டு : அதிகாரத்தில் தொடரும் தார்மீக உரிமையை இழந்து விட்டதாகவும் கண்டனம்.

அமைச்சர் பூங்கோதை ராஜினாமா விவகாரத்தில் பல்வேறு பிரச்னைகள் மறைக்கப்பட்டிருப்பதாகவும், முதலமைச்சர் கருணாநிதி நாடகமாடி வருவதாகவும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படும் விவகரம் ஒரு மாதத்திற்கு முன்பு தமிழகத்தையே உலுக்கியதாகவும், எதிர்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், ஆளும் கட்சி கூட்டணியில் இடம் பெற்றிருந்தவர்கள் கூட முழுநேரமும் கண்காணிக்கப்பட்டு, அவர்களது தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த தனி மனித உரிமை மீறலை ஊடகங்கள் வெளிப்படுத்தியதாக கூறியுள்ள அவர், தமிழக தலைமைச் செயலாளருக்கும், ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநருக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் பதிவுகளை தொலைகாட்சி சேனல்கள் ஒளிபரப்பியதையும் சுட்டிக்காட்டியுள்ளார். ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநருக்கும், முதலமைச்சரின் செயலகத்தைச் சேர்ந்த அதிகாரிக்கும் இடையே நடைபெற்ற மற்றொரு தொலைபேசி உரையாடல் பதிவும் வெளியாகியதாகவும் தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, தனது நெருங்கிய உறவினர் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கை அவருக்கு சாதகமாக கையாளுமாறு, தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை, ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரை கேட்டுக்கொள்ளும் தொலைபேசி உரையாடல் பதிவுகளை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், ஜனதா கட்சித் தலைவர் திரு.சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டிருந்ததாகவும், இதன் தொடர்ச்சியாக பூங்கோதை, தனது ராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள செல்வி ஜெயலலிதா, சுயமரியாதையுடன் செயல்பட்டுள்ள அவருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார். தனது அமைச்சர், தார்மீக பொறுப்பேற்று செயல்பட்டுள்ளதை பயன்படுத்தி கருணாநிதி லாபமடைய முயல்கிறார் - கருணாநிதியை பொறுத்தவரையில் டாக்டர் பூங்கோதை அவசியமில்லாதவர் - அவருக்கு இன்றியமையாதவர் அல்ல - கருணாநிதியின் குடும்ப உறுப்பினரும் அல்ல - கருணாநிதி குடும்பத்தின் கஜானாவை நிரப்புவரும் அல்ல என்றும் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தி.மு.க., தலைமைக்கு எதிராக கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது குரல் எழுப்பிய ஆலடி அருணாவின் மகள் தான் பூங்கோதை எனத் தெரிவித்துள்ள செல்வி. ஜெயலலிதா, அந்த சமயத்தில், கருணாநிதி, தனது மகன் ஸ்டாலினை அடுத்த தலைவராக மகுடம் சூட்ட முயன்று வருவதாக ஆலடி அருணா பகிரங்க புகார் தெரிவித்ததாகவும், தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் கருணாநிதி, தலா 60 லட்சம் ரூபாய் செலுத்தினால் தான் வாய்ப்பு வழங்கப்படும் என்று, நிபந்தனை விதித்து கட்டாய வசூல் செய்ததை, ஆலடி அருணா அம்பலப்படுத்தினார் என்றும் கூறியுள்ளார். இதனால் அவர் தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார் - இது நடந்தது 2004ம் ஆண்டு - அடுத்த சில மாதங்களில் அவர் கொலை செய்யப்பட்டார் - 2006ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், அவரது மகள் டாக்டர் பூங்கோதைக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது - அவரும் வெற்றி பெற்று, அமைச்சரும் ஆக்கப்பட்டார் என்றும், தனக்கு எதிரான சூழ்நிலையை சாதகமாக திருப்பிக்கொள்ளும் கருணாநிதியின் போக்கையே இது காட்டுகிறது எனவும் கூறியுள்ளார். பூங்கோதை அப்போது, கருணாநிதிக்கு பயன்பட்டார், இனி, அவர் தேவையில்லை என்பதால் கைவிடப்பட்டு தூக்கி எறியப்பட்டுள்ளார் என்றும் செல்வி. ஜெயலலிதா தெரிவித்துள்ளார்..


எம்.ஜி.ஆருடன்நெருக்கமாக இருந்து, அதன் மூலம் முதலமைச்சரான கருணாநிதி, பின்னர், அந்த தொடர்பை தூண்டித்துக்கொண்டது மட்டுமின்றி, டாக்டர் எம்.ஜி.ஆரை அவமானப்படுத்தி, அவரை கட்சியில் இருந்தே தூக்கி எறிந்ததாகவும் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சமீபத்தில், தனது பேரன் கலாநிதி மாறன் உருவாக்கிய ஊடக சாம்ராஜ்ஜித்தை பயன்படுத்தி, மக்களை ஏமாற்றி கருணாநிதி ஆட்சியை கைப்பற்றினார் - ஹிந்தியும், ஆங்கிலமும் சரளமாக பேசக்கூடிய தனது மற்றொரு பேரனான தயாநிதி மாறனை பயன்படுத்திக் கொண்டு டெல்லியில் தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டார் - ஆனால் அதன்பிறகு அவர்களுடனான உறவை, தனது சொந்த குழந்தைகளின் நலனுக்காக கருணாநிதி துண்டித்துக் கொண்டார் - தேவைப்படும் போது பயன்படுத்திக் கொண்டு, பின்னர் தூக்கியெறியும் கருணாநிதியின் இந்த இயல்பான செயல்பாடு பூங்கோதை விஷயத்திலும் நிகழ்ந்துள்ளது - பூங்கோதை, தார்மீக அடிப்படையில் பதவி விலகியுள்ளதன் பின்னணியில் பல்வேறு பிரச்னைகள் வசதியாக மறைக்கப்பட்டு மக்களின் கவனம் திசை திருப்பப்பட்டுள்ளது- தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படும் ஒட்டுமொத்த விவகாரத்திற்கும் கருணாநிதியின் பதில் என்ன? - மாநிலத்தில் உள்ள தொலைபேசிகள் அவரது உத்தரவின் பேரில் போலீசாரால் ஒட்டுக்கேட்கப் படுகிறதா? - உள்துறைக்கும் கருணாநிதி தானே அமைச்சர்? இந்த பிரச்னையில் கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் - அவருக்கு தெரியாமல், அல்லது அவரது ஒப்புதல் இல்லாமல் தொலைபேசி ஒட்டுக்கேட்கப் பட்டதா? அப்படியானால் அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள் அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை தானே இது காட்டுகிறது - அதிகாரிகளை கருணாநிதி அடக்கி வைக்க வேண்டும், அல்லது பதவி விலக வேண்டும் -

காவல்துறை போலீஸ் உயரதிகாரியிடம் தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்த முயன்றதற்காக பூங்கோதை ராஜினாமா செய்கிறார் என்றால், தலைமைச் செயலாளரின் நிலை என்ன? அதே போலீஸ் அதிகாரியிடம் தலைமைச் செயலாளரும் தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்த முயன்றதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதே? இப்பிரச்னையில் அனைவருக்கும் தெரியும் வண்ணம் உண்மையும், சான்றுகளும் கண்முன் இருக்கும்போது, இப்பிரச்னையில் விசாரணை கமிஷன் மூலம் கருணாநிதி என்ன எதிர்பார்க்கிறார்? என்றும் செல்வி ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். அதிகாரியிடம் முறைகேடாக அதிகாரத்தை பயன்படுத்திய போது கையும்களவுமாக பிடிபட்டதற்காக பூங்கோதை ராஜினாமா செய்துள்ளார்-அப்படியானால், சகோதரருடன் காவல்நிலையத்திற்கு சென்று லாக்-அப்பில் அடைக்கப்பட்டிருந்த ரவுடிகளை அடாவடியாக விடுவித்த, கருணாநிதியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மற்றொரு அமைச்சரான கே.பி.பி சாமியின் நிலை என்ன? அந்த சமயத்தில் கருணாநிதியின் தார்மீகப்பொறுப்பு எங்கே போனது? என்றும் செல்வி ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும், ஒரு அவமானகரமான, மோசமான எடுத்துக்காட்டு, கருணாநிதி குடும்பத்திற்கு பெருமளவில் பணம் திரட்டும் மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் சாலைப்போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர் பாலு என குறிப்பிட்டுள்ள செல்வி. ஜெயலலிதா, தனது மனைவி மற்றும் மகன்களின் சொந்த நிறுவனத்திற்கு சலுகைகள் பெறுவதற்காக டி.ஆர். பாலு, அதிகாரிகளிடம் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்திய விவகாரம் ஊடகங்களிலும், நாடாளுமன்றத்திலும் பதிவானதாகக் கூறியுள்ளார். ஆனால் டி.ஆர் பாலு பதவி விலக மறுத்து விட்டார் - மக்களுக்கு நல்லது செய்வதற்காகவே இதனை செய்ததாக அவர் வாதிட்டார் - அந்த சமயத்தில் கருணாநிதியின் தார்மீகப் பொறுப்பு எங்கே போனது?


தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பான வாட்டர்கேட் ஊழலுக்காக, அமெரிக்க அதிபராக இருந்த ரிச்சர்டு நிக்சன் தனது பதவியையே விலையாக கொடுக்க வேண்டியது இருந்தது - கர்நாடக முதலமைச்சராக இருந்த ஹெக்டேவுக்கு, தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் வாட்டர்லுவாக முடிந்தது - இத்தகைய முன்னுதாரணங்கள் மிகத் தெளிவாக உள்ளன - இப்போதைய கேள்வி கருணாநிதி என்ன செய்ய போகிறார் என்பது தான்? -


கருணாநிதியின் உணர்ச்சிகரமான நடிப்பை கண்டு ஊடகங்கள் ஏமாறலாம் ஆனால், கருணாநிதியை நன்கு அறிந்தவர்களுக்கு, அவர், பஞ்சோந்தி போல இடத்திற்கும், சூழ்நிலைக்கும் தகுந்தவாறு அடிக்கடி தனது நிறத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை படைத்த நல்ல நடிகர் என்பது தெரியும் - இந்த கேள்விகளுக்கு எல்லாம் கருணாநிதி பதில் சொல்லியாக வேண்டும் - சரியான முறையில் திருப்பதிகரமான பதிலை அவரால் சொல்ல முடிய வில்லை என்றால், அதிகாரத்தில் தொடரும் தார்மீக உரிமையை அவர் இழந்து விட்டார் என்றே அர்த்தமாகும் என்றும் செல்வி ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

3 Comments:

Anonymous said...

Brilliant! DMK is indeed full of sycophants and as Jayalalitha says no one should heed to crocodile tears of Karuna. I can't believe that such a sensitive and seriuos ne tapping is taken so lightly in a democratic setup and i think the opposition should join forces and up the ante against the government.

Anonymous said...

.... உக்கும் இதெல்லாம் பேசற அளவுக்கு ஜெயலலிதாக்கு வக்கே இல்ல.. ரெண்டு பேரும் திருடா - திருடி தான்.

"என் கை எழுத்தே இல்ல.." , " சென்னா ரெட்டி தகாத முறையில் நடந்து கொண்டார்...", " டன்சி நிலத்தை திருப்பி குடுத்றேன்..." " ஏழு கொலை செய்தவர் பாட்சா..." போன்ற அபத்தங்களையும் மீறி உங்கள முதல்வர் ஆக்கின மக்களை சொல்லணும்.

இந்திரகுமாரி, கு.ப.கி, போன்றவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தாங்க இந்த அம்மா? இதுக்கு கருணாநிதி எவ்வளவோ மேல்.

Anonymous said...

Whatever Amma said, it is 100% correct. Indha aazhu cinema kalai nigalichi la and poluthu pokku nigalchila time pass pannradhukkuthan layakku (Cho displayed in very good front page last week)He will not take stern action / decision for public. Also he always help his family only not for public people