பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 14, 2008

ஏசு தான் எனக்கு சூப்பர் ஸ்டார் - நக்மா கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்

நடிகை நக்மா கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். சென்னையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் அவர் பேசினார். ``தற்கொலை உணர்வில் இருந்து ஏசு என்னை காப்பாற்றினார்'' என்று அவர் கூறினார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி பட உலகிலும் கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர், நக்மா. சினிமாவில், `மார்க்கெட்' இழந்ததும் சில காலம் அரசியலில் இருந்தார். பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கினார்.

பெங்களூரில் உள்ள `வாழும் கலை' என்ற அமைப்பில் சேர்ந்தார். சில வருடங்கள் அந்த அமைப்புக்காக பணியாற்றினார். பின்னர் அந்த அமைப்பில் இருந்தும் அவர் விலகிவிட்டார்.

இப்போது அவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். ஊர் ஊராக சென்று கிறிஸ்தவ மத கூட்டங்களில் பேச அவர் முடிவு செய்து இருக்கிறார்.

பிரபல கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ், திரையுலகினருக்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு நக்மா `பைபிள்' பிரசங்கம் செய்து, கூட்டத்தினரை ஆச்சரியப்படுத்தினார்.

ஒவ்வொரு அத்தியாயத்தில் உள்ள வாசகங்களை மேற்கோள் காட்டி பேசி, அனைவரையும் வியக்க வைத்தார். அவர் பேசியதாவது:-

``நான் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் `சூப்பர்ஸ்டார்' நடிகர்களுடன் நடித்து விட்டேன். ஆனால் எனது உண்மையான சூப்பர்ஸ்டார் ஏசுதான்.

அரசியலில் சில காலம் இருந்தேன். அப்போது எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. நிம்மதி இழந்து தவித்தேன். அழுதேன். தற்கொலை உணர்வுகளும் வந்து போனது. அந்த நேரம் `பைபிள்' என் கைக்கு கிடைத்தது. படித்தேன்.

கொஞ்சம் கொஞ்சமாக என்னை அழுத்திய துக்கங்கள் விலகின. மகிழ்ச்சியும், சந்தோஷமும் மனமெங்கும் பரவின.

எனக்கு இப்போது அம்மா, அப்பா, சொந்தபந்தம் எல்லாமே `பைபிள்'தான். நான் கர்த்தரின் மகள். ஏசு, என் வாயில் இருந்து பிரசங்கம் செய்கிறார். தேவன் என்னிடம் சொன்னதை நான் உங்களுக்கு சொல்கிறேன்.

எனக்கு இனி கர்த்தர்தான் உலகம். அவருக்காக ஊழியம் செய்யப்போகிறேன்.''

இவ்வாறு நக்மா பேசினார். தொடர்ந்து அவர், `பைபிள்' வாசகங்களை சொல்லி பிரசங்கம் செய்தார்.

'ஏசுவின் இரண்டாம் வருகை' நிச்சயமாக நடக்கப்போகிறது. அதற்காக நாமெல்லாம் காத்திருக்க வேண்டும்" என்றார் நக்மா. சரி நீங்க எப்ப திரும்பவும் படத்தில் நடிக்க போறீங்க ?
( செய்தி: தினத்தந்தி )
பின் குறிப்பு:
நக்மா யார் என்று தெரியாதவர்களுக்கு ...
நக்மாவின் தங்கைதான் ஜோதிகா.
பாட்ஷா படத்தில் ரஜினியுடன் ஸ்விம்மிங் பூல் பாடல் காட்சியில் நடித்தவர்.
மற்ற விவரம் சரத்குமாரிடம் தான் கேட்கணும்.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளில் சரித்திரத்தை ஆங்காங்கே தொட்டுக்கொள்வது சாலச்சிறந்தது;-)

5 Comments:

charmlee said...

வாழுமகலை இயக்கத்திலிருந்து கிருஸ்தவ மதத்திற்கு மாறியதில் நக்மா பொதுவாக ஒரு வியப்பையே அளித்திருக்கிறார். வாழுமகலை குரு ஸ்ரீ ஸ்ரீ எப்போதும் ஹிந்து மத கோட்பாடுகளையே போதிக்கிறார்.பிராணாயாமம், யோகா கீதை இத்யாதி.. அதில் இவ்வளவு ஈடுபாடு உள்ளவர் எப்படி கிருஸ்துவராய் மாறி அந்த மதத்திற்கு ஆள் சேர்க்கும் வேலையும் செய்ய ஆரம்பித்திருக்கிறார் எனபது ஆச்சர்யமாகவே உள்ளது

Anonymous said...

அதென்ன சரத் குமாரிடம் மட்டும் கேட்ப்பது? கங்குலி கிட்ட கேட்க்கணும், தாவூத் இப்ராஹிம் கிட்டக் கேட்க்கணும், சோட்டா ஷகீல் கிட்டக் கேட்க்கணும், தமிழ் நாட்டுக் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கிட்ட கேட்க்கணும். இன்னும் பெரிய லிஸ்டே இருக்கு, இவரைப் பற்றிக் கேட்க்க ஆரம்பித்தா ஆயிரம் பேரிடமாவது கேட்க்க வேண்டி வரும் :)))

இதுக்கு முன்னாடி இந்த அம்மிணி வாழும் கலையில யோகா சொல்லித் தரேன்னு திரிஞ்சுது அங்க காசு எதுவும் பெயரல போலிருக்கு, இப்ப சர்ச் காசு ஏசுவை சரத்குமார் ரேஞ்சுக்குக் கொண்டு வந்து விட்டது ஐயோ பாவம் கிறிஸ்துவ மதம். இப்படி காசு கொடுத்து நடிகைகளை வைத்து மார் கெட் பண்ண வேண்டியிருக்கு. இதுக்கு முன்னாடி காசு கொடுத்து விலைக்கு வாங்கிய நடிக நடிகையரான ஏ வி எம் ராஜன், ஜெய சுதா, ஜூனியர் பாலையா, பிரகாஷ் ராஜ், வி கே ராமசாமி எல்லாம் காச வாங்கிட்டு தூங்கிட்டானுங்க. இந்த அம்மா மட்டும்தான் வாங்குன காசுக்கு நல்லா உழைக்குது,

எப்பவுமே நக்மாவுக்குக் கொடுத்த காசுக்கு மோசம் பண்ண மாட்டாங்கன்னு சரத் குமார், கங்குலி எல்லாம் சத்தியம் செய்யுறாங்க. இந்தியாவுக்குள்ள கள்ள நோட்டு சப்ளை, கள்ள பத்திரம் சப்ளை எல்லாவற்றிலும் இந்த நக்மாவுக்கு என்ன தொடர்புன்னு தெரிஞ்சுகிட்டுதான் பாதிரிங்க காசு கொடுத்திருப்பாய்ங்கன்னு நினைக்கிறேன்.

அடுத்து யாராவது கீதைக்குக் கூடக் காசு கொடுத்தா கண்ணன் என் காதலன் என்று சொல்லி விட்டு ஓடி விடுவார் நக்மா, அது வரை ஜீசஸ் பாவம். இப்படி காசுக்கு அலையும் நடிகைகளை வைத்து மார்க்கெட் செய்யும் அளவுக்கா கிறிஸ்துவத்திற்கு போணியாக மாட்டேன் என்கிறது? இவர் சமீபத்தில் டெல்லி காங்கிரஸ் டின்னரில் கலந்து கொண்டார், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நம்ம தமிழ் நாட்டுக் காங்கிரஸ் காரர்கள் நக்மாவை பிழிந்து தள்ளி வேலை வாங்கி விட்டார்கள் போலும்:)) ஐயோ பாவம். ஜீசசிடமாவது விசுவாசமாக அவர் நீண்ட நாள் இருக்க கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. மும்மதத்திற்கும் பிரச்சாரம் செய்த ஒரே நடிகை இவராகத்தான் இருக்கும், முஸ்லீமாகப் பிறந்து, இந்து யோகாக் கலைக்கு ஏஜெண்டாகப் போய் இப்பொழுது பைபிள் பிரச்சாரம் செய்யும் நிலைக்கு வந்திருக்கிறார். அடுத்து புத்தமதமா ஜைன மதமா என்பது தெரியவில்லை. கொடுக்கும் காசுக்குத் தகுந்த சேவை.

Anonymous said...

ஏன் சாமி அந்த பொண்ணு முஸ்லீமா பொறந்து இந்து மதத்தோட வாழும் கலை பரப்புனப்ப எங்க அப்பு நீ போன.

அன்னிக்கே நீ வந்து சரத்குமார்,கங்குலி மேட்ர வுட்ருந்தீன உன்ன யோக்கியன நெனக்கலாம்.

ஆனா நீ அதெல்லாம் உட்டுபுட்டு அந்தம்மா கிறிஸ்தவள் ஆயிட்டாங்கற வெறியில பேசுறது உன்னோட உருவத்தை நீ மறச்சாலும் நல்லா காட்டுது.

சரி அந்தம்மாவ வாழும் கலைக்கு சிபாரிசு செய்ய எவ்வளவு பணம் குடுத்திங்க.இந்து மத பிரச்சாரம் பண்ண எவ்வளவு பணம் குடுத்திங்க.

இந்தமமா பிரச்சாரம் செய்ய வேண்டிய அளவுக்கு இந்துமதமும்,வாழும்கலையும் செல்லாகாசு ஆகிவிட்டதுன்னு உண்மையை நீங்களே இப்படி மறைமுகமா சொல்றது நல்லா இல்லையாக்கும்.

Anonymous said...

முன்ன அரிசி மூட்டை குடுத்து மாதுவங்க, இப்போ எத குடுத்து மாத்த போறாங்கனு பாத்தேன். ஓ சரி சரி...

நக்குமா என்னமோ போ இயேசு கிறிஸ்துவின் ரத்தம் உன் சகல பாவங்களையும் போக்கட்டும். சாயா(சரத்) வின் சாபம் நீங்கட்டும்.

Anonymous said...

Saya sarathin pavathai katti kondathu Nagma illai, Radhika:-))