கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் அனைத்து துறைகளிலும் திமுக அரசு தோல்வி அடைந்து விட்டது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு டாக்டர் ராமதாஸ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சமுதாயத்தில் தற்போது ஒரு புதிய ஆபத்தான ஏற்றத்தாழ்வு உருவாகி வருகிறது. பிளஸ் டூ தேர்வு முடிவுகளில் கடந்த 8 ஆண்டுகளாக அதிக வேலைவாய்ப்பு உள்ள முக்கியமான பாடங்களில் முன்னேறிய வகுப்பினர்களே மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்று வருகின்றனர்.
அதிக முக்கியத்துவம் இல்லாத நர்சிங், உணவு பதப்படுத்துதல், பயிர் உற்பத்தி உள்ளிட்ட பாடப்பிரிவு களில் மட்டும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் முதல் மதிப்பெண்களை பெற்று வருகின்றனர். இந்த இந்த பிரிவினர் இந்த இந்த பாடங்கள்தான் பயில வேண்டும் என்று பாகுபாடு உள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டு பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்களில் 75 சதவிகிதம் பேர் தமிழ் வழி கல்வி பயின்றவர்கள். ஆனால் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் அவர்களுக்கு 25 சதவிகிதம் இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
எனவே பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் சட்டம் ஒன்றை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.
மேலும் இந்த கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்த கூடாது. மாணவர்களின் சேர்க்கைக்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட் டுள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும், குறைக்கப்பட வேண்டியது மதிப்பெண்கள் அல்ல, கட்டணமே.
கட்டண உயர்வு குறித்து அமைக் கப்பட்டுள்ள பாலசுப்பிர மணியம் கமிட்டி, தனியார் கல்லூரிகளின் கட்டணத்தை உயர்த்த பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரை நடைமுறைப்படுத்தப் பட்டால் அதை எதிர்த்து பாமக போராடும்.
கடந்த 2003 ஆம் ஆண்டு லாட்டரிச் சீட்டு விற்பனை தமிழகத்தில் தடை செய்யப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் லாட்டரிச் சீட்டுகள் அமோகமாக விற்பனையாகி வருகிறது.
இதே போல் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் கஞ்சா விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது. (கஞ்சா பொட்டலங்கள் மற்றும் லாட்டரிச் சீட்டுக்களை செய்தியாளர் களிடம் டாக்டர் ராமதாஸ் காட்டினார்)
சில இடங்களில் போலீசார் துணையுடனும், பல இடங்களில் யோடு இருந்தோம். சிறந்த முறையில் பழகினோம் என்ற திருப்தியோடு அரசியல்வாதிகளின் துணையுடனும் இந்த லாட்டரிச் சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
லாட்டரிச் சீட்டு பிரச்சனையில் முன்னணி நிறுவனத்தை நடத்தி வரும் முன்னணி தலைவர் ஒருவர் தலைமறைவாகி உள்ளார். அவரை பிடிப்பதற்கு பிடிவாரண்ட் உள்ளது. இருந்தும் சமீபத்தில் அவர் அமைச்சர் ஒருவருடன் விழாவில் பங்கேற்றுள்ளார்.
லாட்டரிச் சீட்டு மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களையும், அதற்கு துணை போகிறவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இதற்கு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட வேண்டும்.
விலைவாசி உயர்வுக்கு காரணமான ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும். சில்லரை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் ஈடுபட தடை விதிக்க வேண்டும். இதற்காக பாமக மகளிர் அணி சார்பில் விரைவில் போராட்டம் நடைபெறும்.
திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந் துள்ளன. இந்த ஆட்சியின் சாதனைகள் குறித்து அரசு பத்திரிகைகளில் விளம்பரம் செய்து சாதனை பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்த ஆட்சியில் உள்ள பல்வேறு குறைபாடுகளை நாங்கள் தொடர்ந்து பட்டியலிட்டு வருகிறோம். மொத்தத்தில் திமுகவின் இரண்டு ஆண்டு கால ஆட்சி தேர்ச்சி பெறவில்லை என்பதே எனது மதிப்பீடு. இவ்வாறு அவர் கூறினார்.
( மாலைமலர் )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, May 13, 2008
திமுக ஆட்சி தோல்வி: ராமதாஸ்
Posted by IdlyVadai at 5/13/2008 02:31:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










8 Comments:
ஏற்கனவே எல்லா துறைகளிலும் ஆந்திர மாணவர்கள் வேகமாக முன்னேறி வருகிறார்கள். இவர் சொன்னதை எல்லாம் நிறைவேற்ற ஆரம்பித்தால் எந்த மத்திய அரசு பணியிலும் அல்லது உயர் தனியார் பதவிகளிலும் தமிழன் இருக்க மாட்டான். கிராமபுற மாணவர்கள் முன்னேற கிராமங்களில் கல்வி தரத்தினை உயர்த்தட்டும். முதலில் பூர்த்தி செய்யப்படாத ஆசிரியர் பணியிடங்களை நிரப்புங்கள். எந்த இட ஒதுக்கீடும் இல்லாமல் கிராமப்புற மாணவர்கள் முன்னேறுவார்கள்.
Well said Anony! Romba sari neenga solradhu... But neenga solradhu nadakkadhu because then these people will lose a "trump card"!
பேசாம எல்லா பாடங்களிலும் முதல் இடங்கள் வன்னியர்களுக்கு மட்டுமே அதுவும் ராமதாசின் வாரிசுகளுக்கு மட்டுமே அறிவித்து விட வேண்டியதுதானே? எதுக்கு பரீட்ச்சை மசுரு மட்டை எல்லாம்?
இந்த ஆள் கீறல் விழுந்த ரெகார்ட் பிளேட் போல உளறுவதை ஏன் பெரிதாக எடுத்துக் கொள்கிறீர்கள்?
இட்லிவடையாரே பயனீர் நாளிதழ்
அன்புமணி தனியாருக்கு சாதமாக
நடந்து கொண்டதை அம்பலப்படுத்தியுள்ளது.
http://dailypioneer.com/indexn12.asp?main_variable=front%5Fpage&file_name=story2%2Etxt&counter_img=2
இதையெல்லாம் தமிழில் யாராவது
எழுதுகிறார்களா?
அன்புமணி பொதுத்துறை நிறுவனங்களை மூடி பாமக
தலமைக்கு நெருக்கமானவர்
தடுப்பூசி நிறுவனம் தொடங்க
உதவுகிறார் என்று பயனீர்
மூன்று நாட்களாக எழுதி
வருகிறது.இதை
ஏன் ஒரு வலைப்பதிவரும்
எழுதவில்லை.
அனானி,
தகவலுக்கு நன்றி. Where are the other articles about this in pioneer ?
இட்லிவடை
பயனீர் தளத்தில் உள்ள கடந்த ஒரு வார இதழ்களைப் பார்க்கவும்.
Post a Comment