பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 12, 2008

திராவிட் மீது மல்லையா தாக்கு

சரியான வீரர்களை அணியில் தேர்வு செய்ய ராகுல் திராவிட் தவறிவிட்டார் என்று பெங்களூர் அணியின் உரிமையாளரான விஜய் மல்லையா குற்றம் சாட்டியுள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா விலைக்கு வாங்கினார். ஐபிஎல் போட்டிகளில் இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் பெங்களூர் அணி படுமோசமாக ஆடி தோல்வி மேல் தோல்வி கண்டு வருகிறது.

தொடர் தோல்வியை அடுத்த அந்த அணியின் தலைவர் சாரு சர்மா அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல்ஹக் விளையாட வாய்ப்பளிக்கவில்லை என்பதற்காக அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அணியின் கேப்டன் ராகுல் திராவிட் மீது உரிமையாளரான விஜய் மல்லையா பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார். ராகுல் திராவிட் வீரர்கள் தேர்வில் கோட்டை விட்டு விட்டதாக மல்லையா கூறியுள்ளார்.

ராகுல் திராவிட் போன்ற நட்சத்திர வீரரின் திறமையை தான் மிகவும் நம்பியிருந்ததாகவும் ஆனால் அவர் தான் எதிர்பார்த்த் வீரர்களை அணியில் சேர்க்கவில்லை என்றும் மல்லையா கூறியுளளார். வீரர்கள் தேர்வு விஷயத்தில் தான் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்ததே மிகப்பெரிய தவறு என்று மல்லையா கூறியுள்ளார்.

ராகுல் திராவிட்டை நம்பினேன் என்கிறார். கிங் ஃபிஷர் அடித்திருப்பாரோ ?

6 Comments:

IdlyVadai said...

திராவிட் கேப்டன் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய முன் வந்துள்ளார்.

Anonymous said...

மும்பைல கூட தான் நல்ல வீரர்கள் இல்லைன்னு சொன்னாங்க! இப்ப ஜெயிக்கராங்கல்ல. இவரு தான திராவிட் வேணும்னு பெங்களூர் டீம செலக்ட் பண்ணாரு. இப்ப பழி போட்டா என்ன அர்த்தம்!

Anonymous said...

மரங்கொத்தி சமாச்சாரமெல்லாம் உமக்கு எப்படிதெரியும்

கிங் பிஷரைச் சொன்னேன்

Sridhar Narayanan said...

//அடுத்த அந்த அணியின் தலைவர் சாரு சர்மா//
அணித்தலைவர் என்றால் captain என்றுதானே அர்த்தம். சாரு சர்மா CEO-தானே.

முதன்மை செயல் அதிகாரின்னு சொல்லலாமோ?

Anonymous said...

என்ன இட்லி பிளாக் அப்டேட்டே ஆகமாடங்குது, நீர் எதாவது கிங் பிஷர் அடிச்சிட்டு உட்கார்ந்து இருக்கீறோ :)

Bala

வெண்ணை said...

jaichurundha marngothiya eludhi vachurupparaa