டி.ஆர்.பாலுவின் முறைகேடு ! என்ற தலைப்பில் துக்ளக் தலையங்கம்
தனது மகன், மனைவி, உற்றார், சுற்றார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள, நிர்வகித்து வருகிற, கம்பெனிக்கு, எரிவாயு கிட்டுவதற்காக, மத்திய (தி.மு.க.) அமைச்சர் டி.ஆர். பாலு, பெட்ரோலியம் துறை அமைச்சரிடம் பேசியதும், எரிவாயு சப்ளை செய்யக்கூடிய அமைப்புகளுக்கு (ஓ.என்.ஜி.ஸி. உட்பட) பெட்ரோலியத்துறையைத் தெளிவாகக் கடிதம் எழுத வைத்ததும், விவகாரமாக, பற்றிக்கொண்டு எரிகிறது.
முன்பு இது பற்றி செய்தி வெளியானபோது, முழுமையாக மறுத்துவிட்ட டி.ஆர். பாலு, இப்போது "ஆமாம், பேசினேன். என்ன தவறு?' என்று ராஜ்ய சபையில் கேட்டிருக்கிறார். இதற்கு இவர் கூறுகிற நியாயம், அலாதியானது.
பல்லாயிரக்கணக்கான பங்குதாரர்கள் அக்கம்பெனியில் இருப்பதால், அவர்களுக்காகத்தான் பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் பேசியதாக, டி.ஆர். பாலு விளக்கம் அளித்திருக்கிறார்.
பல்லாயிரக்கணக்கான பங்குதாரர்களில் ஒவ்வொருவருக்கும் இருக்கிற பங்கு எவ்வளவு; இவருடைய மனைவி, மகன், உற்றார், சுற்றாருக்கு இருக்கிற பங்கு எவ்வளவு என்று பார்த்தால், இவர் பேசியது பல்லாயிரக்கணக்கான பங்குதாரர்களுக்காகவா – அல்லது தன்னுடைய குடும்பத்தினருக்காகவா என்பது
புரிந்துவிடும்.
பல்லாயிரக்கணக்கான பங்குதாரர்கள் இல்லாத பெரிய நிறுவனம் எது? அந்தக் கம்பெனிகள் ஆசைப்படுகிறபோதெல்லாம், கப்பல்துறை அமைச்சர், தனக்குச்
சம்பந்தமில்லாத துறைகளின் அமைச்சர்களைச் சந்தித்து, அந்தக் கம்பெனிகளின் பல்லாயிரக்கணக்கான பங்குதாரர்களின் நலனுக்காக, அந்தக் கம்பெனிகள் விரும்புகிற சலுகைகளைப் பெற்றுத் தருவாரா?
பா.ஜ.க. ஆட்சியில்தான், முதலில் அமைச்சர் டி.ஆர். பாலு குடும்பத்தின் கம்பெனிக்கு எரிவாயு அனுமதி வழங்கப்பட்டது என்பதை காங்கிரஸ் கட்சியினர் சுட்டிக்காட்டியுள்ளனர். பா.ஜ.க.விற்கு தர்மசங்கடம்; ஆனால், காங்கிரஸிற்கோ, தி.மு.க. விற்கோ பா.ஜ.க.வின் இந்தத் தர்மசங்கடத்தால் பலன் இல்லை.
ஏனென்றால், பா.ஜ.க. ஆட்சியின்போது, விலையை கிட்டத்தட்ட பாதியாகக் குறைத்து எரிவாயு தருமாறு டி.ஆர். பாலுவின் நிறுவனம் கேட்டுப் பார்த்தது; அது நடக்கவில்லை; அதனால் எரிவாயுவும் சப்ளை ஆகவில்லை. பின்னர், முதலில் தரப்பட்ட அனுமதியும் காலாவதி ஆகிவிட்டது.
"நாங்கள் (தி.மு.க.) ஆதரவை வாபஸ் வாங்கியதால்தானே, அனுமதியைப் புதுப்பிக்கவில்லை?' என்று பா.ஜ.க.வைப் பார்த்துக் கேள்வி எழுப்பியிருக்கிறார் டி.ஆர். பாலு. பா.ஜ.க.விற்கு இதிலும் தர்மசங்கடமே. ஆனால், டி.ஆர். பாலு சுமத்திய இந்தக் குற்றச்சாட்டினாலும் தி.மு.க.விற்குப் பலன் இல்லை. ஏனென்றால்
– இருகட்சிகளின் ஆட்சியிலும் எரிவாயு சப்ளை பெற டி.ஆர். பாலு முயன்றதும், அதில் முன்னேற்றம் கண்டதும், தான் அந்த ஆட்சிகளில் வகித்த மந்திரி பதவிகளினால்தான் என்று, அவரே முன்வந்து அளித்த ஒப்புதல் வாக்கு மூலமாகவே, இது அமைகிறது. தி.மு.க. ஆதரவு என்பது, சில வர்த்தக சமாச்சாரங்களை ஒட்டியதே என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.
பா.ஜ.க.விற்கும், காங்கிரஸுக்கும் ஒரு சின்ன வித்தியாசம். பா.ஜ.க. ஆட்சியில், பிரதமர் அலுவலகம், டி.ஆர். பாலு சார்பாக ஓ.என்.ஜி.ஸி.க்கு கடிதம் எழுதுகிற அளவிற்குப் போகவில்லை. காங்கிரஸ் ஆட்சியில், பிரதமர் அலுவலகம் எட்டு முறைகள் கடிதம் எழுதி, சிபாரிசு செய்திருக்கிறது.
ஆக, நடந்திருப்பது சரியான முறைகேடு. ஒரு மத்திய அமைச்சர், தனது இலாகா அல்லாத வேறு ஒரு இலாகா அதிகாரிகளுக்கு உத்திரவிட்டிருக்கிறார் – என்று நினைக்கக்கூடிய அளவிற்கு விவகாரம் போயிருக்கிறது. மற்றொரு துறை அமைச்சரிடம் பேசி, தன் குடும்பத்தார் நடத்துகிற, கம்பெனிகளின் சார்பாக, வர்த்தக பேரம் நடத்தியிருக்கிறார் டி.ஆர். பாலு.
அதனால் அவருக்கென்ன? பிரதமர் அலுவலகமே அதில் சம்பந்தப்பட்டுவிட்டது.
அது தவிர, இந்தப் பிரச்சனையை சபையில் எழுப்பப் பார்த்தபோது, அ.தி.மு.க. உறுப்பினர் மைத்ரேயனின் வாய் மூடப்பட்டது. இருபது ஆண்டுகளாகப் பிரயோகிக்கப்படாத, சபாநாயகரின் அதிகாரம் அவர் மீது பாய்ந்தது, அவர் வெளியேற்றப்பட்டார். சபாநாயகர் கூறியும், இருக்கையில் அமராமல், தான்
பேசியதை வலியுறுத்திய குற்றத்திற்காக, மைத்ரேயனை வெளியேற்ற, சபாநாயகருக்கு அதிகாரம் இருக்கிறது.
ஆனால், இருபதாண்டுகளாகப் பயன்படுத்தப்படாத அஸ்திரம் இது. மைத்ரேயனை விடக் கடுமையாகக் கத்தி, கூச்சல் எழுப்பி, சபாநாயகர் இருக்கையை நெருங்கி, ரகளையில் ஈடுபட்ட உறுப்பினர்கள் மீது கூடப் பிரயோகிக்கப்படாத ஆயுதம் இது.
சரி... இனி இந்த அதிகாரம் சபாநாயகரால் பயன்படுத்தப்படும் என்றாலாவது, மைத்ரேயன் மீதான நடவடிக்கைக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்; ரகளை செய்கிற இடதுசாரிகளையும், காங்கிரஸாரையும் சபாநாயகர் வெளியேற்றினால் – இந்த நடவடிக்கைக்கு ஒரு நியாயம் பிறக்கும்.
ஆனால், அதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அதாவது, கழக அமைச்சர் டி.ஆர். பாலுவின் முறைகேடு, அவரே ஒப்புக்கொண்டு விட்ட நிலையில், மத்திய அரசாலும், பிரதமராலும், மேல் சபையினாலும் மூடி மறைக்கப்படுகிறது.
ஊழல், முறைகேடு போன்றவற்றைப் பொறுத்தவரையில், கழக கௌரவம் போலியானது என்பது ஊரறிந்த விஷயம்; இப்போது, அந்தப் போலி கௌரவத்தையும், கழகக் கப்பல்துறை அமைச்சர், கப்பல் ஏற்றியிருக்கிறார்.
( நன்றி: துக்ளக் )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, May 01, 2008
டி.ஆர்.பாலுவின் முறைகேடு ! சோ கருத்து
Posted by IdlyVadai at 5/01/2008 06:23:00 PM
Labels: அரசியல், கட்டுரை, பத்திரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










13 Comments:
ஊழலின் ஊற்றுக் கண் கழகங்கள் என்றால் ஊழலின் ஏக போக கம்பெனி காங்கிரஸ். இவர்கள் கூட்டில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்.
இன்னும் இத்தாலி, கொலம்பியா போன்ற நாடுகளுக்கு சென்றவை எத்தனையோ?
தலை சரியா இருந்தா தானே வால் சரியா இருக்கும்?
சோ ராமசாமி
தனக்கு முன் ஏதாவது கேள்வி வைக்கப்பட்டு விட்டால், தலைகால் புரியாது.இவர் முன் மைக நீட்டி "ம்க்கும்" "ம்க்கும்" என்கிற அருவெருப்பான செருமல்கள் மற்றும் கொனஷ்டைகளுடன் இவர் தருகின்ற பேத்தல்களைப் ஆரம்பித்து விடுவார். தொடர்ந்து உளறுவதில் ஏதாவது சரியான கருத்து வந்து விட்டால், தான் புத்திசாலி என்கிற பொன்னாடையையும், பேத்தலான விஷயங்களுக்கு நகைச்சுவை நையாண்டி என்கிற போர்வையையும் போர்த்துக் கொள்வது இவருடைய நீண்டகால வாழ்நாள் சரித்திரம்.
முன்பெல்லாம் தமிழகத்தின் எந்த அரசியல் நிகழ்வு என்றாலும் இவரையும் தேடிப்பிடித்து "இனம்" கண்டு, இவர் முன் மைக் நீட்டி இவர் தருகின்ற பேத்தல்களைப் பேட்டி என்று காட்டி வந்த வடநாட்டுத் தொலைக்காட்சிகள் இப்போதெல்லாம் இவரைக் கண்டு கொள்வதே இல்லை.
இட்லிவடை -please ignore CHO.
Thanks :-http://rathnesh.blogspot.com/2007/10/blog-post_7697.html
என்ன இட்லி வடையாரே..!
ஐந்து நாள் ஆச்சு !
மாவு அரைகலையா..?
ஒரு இட்லி கூட வார்க்கவில்லை?
ஒடம்பு நல்லா இருக்கா?
அன்புடன், கி.பாலு.
அம்பட்டன் எப்போ சாவான்?
Hello enna aachu, oru update kuda illa.........Captain Delhi-la katchi office open panni irukkaaram, news konjam podurathu :)
இட்லி வடை...
விவேகானந்தர் இல்லம் விஷயத்தில் தமிழக அரசு தன் நிலையை தெளிவுபடுத்தியுள்ளது...
இந்த நிலையில் உங்கள் ஒரு தலைப்பட்சமான வாக்கெடுப்பு தேவைதானா..?
ரொம்ப நாளா soundஅ காணோம்! Auto கிட்டோ விட்டுக்கு அனுப்பிச்சிடாங்களா?!
Idli Vadai, ethanum news podunga! summa vettiya irukkom:-)
ஹலோ என்ன ஆச்சு இட்லி வடைக்கு...
கொஞ்சநாள போஸ்ட்டே காணும்...
Senthil,
Bangalore
அதுதானே! ஒரு வாரமாக செய்தியே அகப்படவில்லயா?
Sad News.. Idly vadai oosi pochu !!
Where are you ? Alive ?
Idly vadayare are you compelling Sathappan to read this story... Many DMK followers are irritated by Cho.. You need not have to read this blog... Enjoy readiung murasoli... You will see Semmozhi, Kanimozhi and Thenmozhi and karunanidhi improved TN by improving tamil
Post a Comment