பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 29, 2008

எல்லோரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் - ஜூன் 2ம் தேதி தேர்வு

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் : மாணவர்களுக்கு ஜூன் 2ம் தேதி தேர்வு

தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனை அடுத்து திருவண்ணாமலை, மதுரை ஆகிய இடங்களில் சைவ சமய அர்ச்சகர்களுக்கான பயிற்சியும், ஸ்ரீரங்கத்தில் வைனவ சமய அர்ச்சகர்களுக்கான பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இவர்களுக்கான இறுதி தேர்வு வருகிற 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2006ல் கீ.வீரமணி அறிக்கை...

முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் அமைந்த ஆட்சியின் சாதனைகள் ஒரு சரித்திர தொடராக, என்றென்றும் வரலாற்றின் வைர வரிகளால் எழுதப்படுபவையாக தொடர்ந்து கொண்டே உள்ளன. அமைச்சரவை கூட்டத்தின் முதல் கூட்டத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வழிவகை செய்யும் ஆணை நிறைவேற்றப்பட்ட முடிவு அறிவிக்கப்பட்டது. அதனைப் பார்த்து பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுப்பது தான் எனது ஆட்சியின் முதல் குறிக்கோள் என்று அறிவித்த கருணாநிதியின் ராக்கெட்வேக முடிவு கேட்டு, அவர்கள் தொண்டர்கள் மகிழ்ச்சிக் கண்ணீரில் மிதந்து கொண்டுள்ளனர். கருணாநிதிக்கும், அவரது அமைச்சரவைக்கும் நிரந்தர நன்றி என்ற சொல்லைத்தவிர வேறு சொற்களை அகராதியில் தேடிப்பார்க்கிறோம். பார்த்துக்கொண்டே இருக்கிறோம். உலகத் தமிழர்களின் பாராட்டு மழையில் கருணாநிதி ஆட்சி குளித்துக் கொண்டுள்ளது. இந்த துணிந்த முடிவுக்காக திராவிடர்கழகம் பாராட்டு நன்றித் திருவிழாக்களை நாடெல்லாம், தமிழர் வீடெல்லாம் நடத்தும்


இது போல FLASH BACK படிக்க விரும்புகிறவர்கள் இங்கே செல்லவும்

2 Comments:

Anonymous said...

1, அரசின் அவசரச் சட்டத்திலலிருந்து
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்
ஆக வழி செய்யும் திருத்தம் நீக்கப்பட்டது.
2,இந்தப் பள்ளிகள் குறித்த வழக்கு
நிலுவையில் உச்சநீதிமன்றத்தில்
இருக்கிறது.
3, எனவே அவர்கள் தேர்வு எழுதலாம். அரசு அர்ச்சகர் ஆக்கும்
ஆணை பிறப்பித்தால் அதற்கு எதிரான
இடைக்காலத் தடை கிடைக்க வாய்ப்பு
அதிகம்.எனவே அவர்கள் அர்ச்சகர் ஆவது சந்தேகமே.

Anonymous said...

பெரியார் கடவுளை நம்புபவனை காட்டுமிராண்டி என்றார். இவனுக எல்லா சாதிக்காரனையும் பூசாரி ஆக்குறானுகளாம்... என்னே பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி!