பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 22, 2008

இட்லிவடை பதில்கள் - 22-5-08

ரொம்ப நாள் கழித்து திரும்பவும்.

ஜி.சங்கர் கேள்விகள்
1. கமல் தனது படம் வெற்றிபெறுவதற்கு பிராமண கதாபாத்திரங்களை உபயோகப்படுத்துகிறார் என எனக்குப் படுகிறது (அவரின் பெரும்பாலான சமீபத்திய (15) ஆண்டுகளின் மாஸ் வெற்றிப் படங்களில் இது தெரியவரும். அசினுக்கு ஐயங்காராத்து பாஷை சொல்லிக்கொடுத்ததும் அவரேதானாமே ?

பிராமண சம்பந்தம் இல்லாமல் வெற்றி பெருவது கஷ்டம் என்று சொல்ல வரீங்களா ? ஐயங்கார் பாஷையை ஐயங்கார் சொல்லிக் கொடுப்பது தானே முறை !


2. தங்களின் பிரத்யேகத் துறையில் கொடிகட்டிப் பறந்த பலரும் கடைசியில் தமிழ் சினிமாவில் (ஒரு படத்திலாவது) ஐக்கியமாவது புகழுக்காகவா அல்லது பணத்திற்காகவா ? (சுஜாதா, மதன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாலமன் பாப்பையா, ராஜா, பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, அனுராதா ரமணன், சிவசங்கரி, இந்துமதி....)

இரண்டுக்கும் தான். முதலில் புகழ், பிறகு பணம். முன்னது கிடைப்பதால் பிரபலம் ஆகிறோம். பின்னது கிடைக்காததால் பிராபலம் ஆகிறோம்!.

3. தினமலர் அந்துமணியின் நிஜ முகம் தெரியும் புகைப்படம் இட்லிவடையில் வெளியாகுமா ? (தினகரனில் போனவருடம் வந்த பாஸ்போர்ட் படம் அல்ல)

நான் அவர்கள் படத்தை போட்டு என் படத்தை அவர்கள் தினமலரில் போட்டுவிட்டால் ? எதற்கு வீண் வம்பு.

4. சமீபகால விவேக் காமெடிகளில் சரக்கு தீர்ந்துவிட்டது போல தெரிகிறதே ? கவுண்டரும் செந்திலும், பின்னர் வடிவேலுவும் பிடித்த மாஸ் இடத்தை விவேக்கால் பிடிக்க முடியாதா ?

அவரது காமெடி தி.க பிரச்சார மேடை போல் இருப்பதால் மக்கள் பழைய காமெடி என்று ஒதுக்கி விட்டார்களோ என்னவோ.

5. குமுதம் பக்தி (மற்றும் அனைத்து குமுதம் குழும பத்திரிக்கைகளும்) வெளியிடுபவர் (தற்போது) ஒரு கிறித்துவர் போலிருக்கிறதே ? இது எப்படி ?

பக்தி என்பது எல்லா மதங்களுக்கும் பொது என்று நினைத்திருக்கலாம். குமுதம் பக்தியில் பத்தியை தேட முடியாது. சக்தி விகடனில் அட்லீஸ்ட் அம்மாவசை, பெளர்ணமி எப்போது என்று தெரிந்துக்கொள்ளலாம்.

6. சமீபத்தில் யாருக்கானும் தபால் கார்டில் லெட்டர் எழுதி அனுப்பிய அனுபவம் இட்லிவடைக்கு உண்டா ? இப்போது 50 பைசாவா இல்லை 1 ரூபாயா ?

கிழக்கு பதிப்பகத்தில் சில புத்தகம் வாங்கினேன், கூடவே கருத்து சொல்லுங்க என்று தபால் கார்டு கொடுத்தார்கள். அதை அவர்களுக்கு அனுப்பினேன் (12.4.08). தபால் கார்டு விலை 119 ரூபாய். புத்தகத்தை சேர்த்து. :-)

7. ஹிமேஷ் ரேஷமய்யா ? கமல் ஏன் இளையராஜாவை தசாவதாரத்திற்கு உபயோகப்படுத்தவில்லை ?

ரஜினியை கூப்பிடாமல் ஏன் ஜாக்கி சான்னை கூப்பிட்டார் ? அது போல தான் இதுவும். ஹிமேஷ் ரேஷமய்யா பேர் சர்வேதேச மார்கெட்டிங் உத்தியாக இருக்கலாம். தசாவதார பாடல்கள் எல்லாம் நிஜமாகவே 'சீனி கம்' தான். அதுவும் ஹரிஹரன் பாடல் கேட்கும் போது எல்லாம் "அவள் வருவாளா.." என்ற பாடலை கேட்பது மாதிரியே இருக்கு. பாடல் பற்றிய விமர்சனம் பிறகு தனி பதிவாக போடுகிறேன்.

8. சமீபத்திய ஹிந்திப் படங்களில் ஒரு 'சீன்' ஆவது வருகிறதே ? தமிழ் படத்திலும் இது மாதிரி வருமா ?

முன்பு ஜேம்ஸ் பாண்டு படங்களில் வரும் சீன்கள் தான் இப்ப ஹிந்தி படத்தில் வருகிறது. தமிழ் படத்தில் சீன் வருவதில்லை, விழாவிற்கு நேராகவே வந்து சீன் காமிக்கிறார்கள்.

தறுதலை கேள்விகள்

9. பீரோடு கலந்து அடிக்க உகந்தது - ரம்மா? விஸ்கியா?

பீரோடு எதையும் கலக்காமால் அடித்தால் தான் நல்லா இருக்கும். வொட்காவுடன், ஸ்பிரைட் கலந்து குடித்தால் நல்லா இருக்கும், வீட்டுக்கும் தெரியாது.

10. கமலHஆசன் எப்பத்லேர்ந்து கமல் Hஆசன் ஆனாரு? ஏன்?

'காபி வித் அனு'வில் பதில் சொன்னார்கள். எனக்கு ஞாபகம் இல்லை. யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டதில் பதில் சொல்லலாம்.

11. deleted.

12. சென்னை / தமிழக கிரிக்கெட் அணிங்கற பேர்ல அசட்டு அம்பிகள் மட்டுமே கோலோச்சும் மர்மம் என்ன?

கிரிக்கெட் விளையாட்டு சம்பந்தமாக மட்டும் கேள்வி கேட்கவும். IPL கிரிக்கெட் இல்லை.


அனானி
13. வீ.பா.ஆ.மு வீட்டு திருமணத்திற்கு போகவேண்டாம் என நினைத்ததாலேயே கலைஞர் மருத்துவமனைக்கு சென்றார் எனவும் வீ.ஆ ராமதாசுக்கு சரியான பதிலடி கொடுக்க தயங்கினார் எனவும் டீக்கடை பெஞ்ச் சொல்கிறதே ? வீ.ஆ கூப்பிட்டது மாறன் சகோதரர்களையா ?

சில சமயம் டீ.கடை பெஞ்ச் உண்மை பேசும்.

14. பிஜேபி கட்சி முக்யஸ்தர்கள் கலைஞரை சந்தித்து நலம் விசாரித்துள்ளனரே ? (பொதுவாக இல.கணேசனாருக்கு கலைஞரின் மீது பரிவு உண்டு என்றாலும்) பாராளுமன்ற தேர்தலில் திமுக பிஜேபி கூட்டணி வருமா (கர்நாடகாவில் பிஜேபி ஜெயித்தால் - அதுவும் காங்கிரசுக்கு சரியான அடி விழுந்தால்).

விஜயகாந்த், ராமதாஸ் எந்த பக்கம் என்று தெரியாதவரை இதற்கு பதில் சொல்ல முடியாது. கர்நாடகாவில் எப்படி நிலவரம் என்று தெரிந்த பின் காய்களை நகர்த்துவார்கள். கர்நாடகாவில் திரும்பவும் காங்கிரஸ், தேவகவுடா கூட்டு சேர்ந்தாலும் சேர்வார்கள். திமுக பி.ஜே.பி பக்கம் சென்றாலும் வியப்பில்லை.

15. ஸ்டாலினுக்கு உள்துறையோ துணை முதலைமைச்சர் பதவியோ கொடுக்கப்பட்டால் அவர் தா.கிருட்டினன் வழக்கை தூசு தட்டச் சொல்வாரா ?

தா.கிருட்டிணன் பாத்ரூமில் வழுக்கி விழுந்து மண்டையில் அடிப்பட்டு ரத்தம் வந்து இறந்துவிட்டார் என்று சி.பி.ஐயே சொல்லிவிட்டது.

16. ஐபிஎல் போட்டிகளால்தானே தசாவதாரம் ரிலீஸ் தள்ளிப் போகிறது ? இதனால் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு எவ்வளவு நஷ்டம் ? பாஸ்டன் பாலா வெளியிட்டுள்ள கமல், ஆஸ்கர் பிலிம்ஸ் கடிதங்கள் இ.வ.வில் வரவில்லையே ?

ஆஸ்கர் ரசிச்சந்திரன் எவ்வளவு பணம் வட்டிக்கு வாங்கினார் என்பதை பொறுத்தது. அட்லீஸ்ட் 2-3 கேடியாவது இழப்பு இருக்கும். பாஸ்டன் பாலா டுப்லிகேட் வேண்டாம் என்று நினைத்திருப்பார். இரண்டு வலைப்பதிவை வைத்திருந்தால் இது தான் பிரச்சனை.

17. குசேலன் வெளியாகும் அதே ஆகஸ்ட் 15ல் இந்தியில் எடுக்கப்படும் குசேலனும் வெளியாகிறதாமே (ரஜினியுடையது அல்ல)

ஆக்ஸ்ட் 15 இந்தியாவிற்கு சுதந்திர தினம். சிறை கைதிகளை போல் படங்களையும் ரிலீஸ் செய்கிறார்கள். அவ்வளவு தான்.

பாஸ்டன் பாலா கேள்விகள்
18. யமுனா ராஜேந்திரன் & ஷோபா சக்தி - என்ன பாலிடிக்ஸ் ஏன் இப்படி அடிச்சுக்கறாங்க ?

ஜெயமோகன், சாரு பற்றிய அரசு பதில்கள் படிக்கவும். அதே பதில் தான் இதற்கும்.

19. வார்த்தை இரண்டாம் இதழ் எப்படி இருக்கு? வெளிநாட்டினருக்கு மே மாச இதழ் ஜூனில்தானே வந்து சேர்கிறது அங்கே எப்படி?

முன் அட்டையில் இருந்த அடையார் ஆனந்த பவன் விளம்பரம், பின் அட்டைக்கு சென்றுள்ளது. உங்க ஊருக்கு நாற்பது ரூபாய் ஸ்டாம்புக்கு பதில் என்பது ரூபாய் ஸ்ட்ம்பு ஓட்டினால் சீக்கிரம் வர வாய்ப்பு இருக்கு. சென்னையில், வேர்க்க விறுவிறுக்க புத்தக கடைக்கே சென்று வாங்கிவிடலாம்.

20. டவுன்லோட் இலக்கியம் - யார் கலக்கல்? யார் குலுக்கல்? (சாரு, எஸ் ரா, பா.ரா, பாமரன் எக்ஸெட்ரா நிரபிக்கொள்ளவும்)

ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. எல்லோரும் கலக்கல் தான், எல்லா பெயர்களை குடத்தில் போட்டு குலுக்கல் முறையில் யாரையாவது தேர்ந்தெடுக்கணும்.

21. அரசு பதில்களில் சொல்லும் படம் என்ன (ஆங்கில) பெயர்? ஏன் இப்படி வெத்து படமெல்லாம் சொல்லும் அளவு அரசு இறங்கிப் போனார்.

ஆங்கில படத்தின் பெயர் ரெடென்ஷன. அரசு செய்வது தமிழக அரசின் ரிப்ஃலக்ஷன்.

22. கூகிள் ரீடர் வேலை செய்யுதா ?

மொபைலில் கூட நல்லா வேலை செய்யுது.

23. டோண்டுவின் பதிவு சிறப்பா? பதில்கள சிறப்பா?
கேள்விகள்!

24. அமெரிக்காவிலும் துப்பாக்கி வெடிக்கிறது (சின்னப்பசங்களால்)
இந்தியாவிலும் குண்டு வெடிக்கிறது இருந்தாலும் திவிரவாதம் என்று இங்கே மட்டும் பிரச்சினை பெரிதாவது ஏன்? (அமெரிக்காவில் shopping mallகளில், பள்ளிக்கூடங்களில் மாதந்தோறும் சின்னப்பசங்க, மனநலம் பாதிக்கப்பட்டோர் இன்ன பிறர்)
இங்கே அரசியல் தீவிரவாதிகள் அதிகம்.

25. எனக்கு ஒவ்வாமை... ஏதாவது திர்வு இருக்கா?
பிளாக் படிப்பதை முன்று வேளையும் நிறுத்தவும்.

4 Comments:

IdlyVadai said...

கானகம்,
உங்க பின்னூட்டதை தவறுதலாக எடுத்துவிட்டேன். நன்றி.

Anonymous said...

நன்றி இட்லிவடை. தாமதமாயினும் வெந்துள்ளது ;-)

முதல் கேள்வியில் சொல்ல வந்தது - கமல், தான் பிராமணியத்தையும் கடவுள் நம்பிக்கையையும் மறுப்பதாகவும் தான் பெரியாரிஸ்ட் என்றெல்லாம் பம்மாத்து செய்தாலும் அவர் படங்கள் வெற்றி பெறுவதற்கு பிராமணர்களும், கடவும் சம்பந்தப்பட்ட காட்சிகளும் தேவையாக இருக்கிறது. பிராமண சம்பந்தம் இல்லாமல் எடுத்த அவரது சமீபத்திய (10- 15 ஆண்டுகள்)படங்கள் எதுவும் அந்த அளவு 'பெரிய' வெற்றி பெறவில்லை.

(ஜி.சங்கர்)

இதோ அடுத்த செட் கேள்விகள்

இதற்காவது 10 நாட்களுக்குள் பதில் கிடைக்குமா ? வாரம் ஒரு கேள்வி பதில் போடுங்க இட்லிவடையாரே. எங்களுக்கெல்லாம் கேள்வி கேட்கத்தான் தெரியும்.


1) இந்த முறை தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து பல நாட்கள் நல்ல ருசிகர விவாதங்களுடன் நடந்துள்ளதே ? முதல்வரின் அணுகுமுறையும் காரணமோ ?

2) ஸ்டாலின் அடுத்தமாதமாவது (ஜூன் 3 க்குப் பிறகு) 'பெரிய' பதவிக்கு வருவாரா ?

3) சன் டிவி ஒளிபரப்பிய சிங்கப்பூர் திரைவிழாவில் நவராத்திரி சிவாஜி- சாவித்திரி கூத்துக் காட்சியை பிரபு (+ ராதிகா) இவ்வளவு மோசமாகவா செய்வார்கள். பிரபுவுக்கு சிவாஜியின் ஸ்டைலில் 10% கூடவரவில்லையே ?

4) தந்தை மகன் நடிப்புலகில் - சிவாஜி-பிரபு, எம்.ஆர்.ராதா - ராதாரவி, சத்யராஜ் - சிபிராஜ், முத்துராமன் - கார்த்திக், டி.ராஜேந்தர் - சிம்பு, டி.எஸ்.பாலையா - ஜூனியர் பாலையா, நாகேஷ் - ஆனந்த்பாபு (எப்படி இருக்கார் இப்போ?), எஸ்.வி.சேகர் - அஸ்வின், பாக்யராஜ்- சாந்தனு, விஜயகுமார் - அருண்விஜய், இப்படி எந்த காம்பினேஷன் எடுத்துக்கொண்டாலும் மகன்களின் நடிப்பு அவ்வளவாக எடுபடவில்லையே ? திறமை காரணமா ? உழைப்பா இல்லை தந்தையளவு தொழில்மீது அக்கறை இல்லாதது காரணமா ? திறமை இருந்தும் வீணடித்துக் கொண்டவர்களில் பிரபுவும், கார்த்திக்கும் சேருவர் (எதாக). இட்லிவடை கருத்து என்ன ?

5) நாடுமுழுவதும் தினமும் பயணிக்கும் அரசியல் (டெல்லி) பெருந்தலைகள் எப்படி தங்கள் உடமைகளை எடுத்துச் செல்கின்றனர் ? எங்கு தங்குகின்றனர் ? கூட பெட்டி எடுத்துச் செல்லும் உதவியாளர்களுக்கும் சேர்த்து டிக்கெட் (விமான) செல்வு - பொதுமக்கள் வரிப்பணத்திலா ? இதன் விரிவான தகவல்கள் தரமுடியுமா ? உதாரணம் - வெங்கையா நாயுடு, மொய்லி, வயலார் ரவி, அருண்குமார்...

6) எத்தனையோ பேர் சொல்லியும், எழுதியும் ஆன பிறகும் ஜெயலலிதா ஏன் சசிகூடவே இருக்கிறார் ? சட்டமன்றத்துக்கும் ரெகுலராக வராமல், பொதுமக்கள் பிரச்னையில் நேரடி களம் இறங்காமலும் ஓய்வு ஓய்வு என எப்படி இவரால் அரசியல் செய்ய முடிகிறது. ? இவரை நம்பி ராஜ்நாத் சிங் எல்லாம் எப்படி கதவு திறந்து வைக்கிறார் ?

7) தமிழக அமைச்சர்களின் பட்டியலை அவர்கள் ஜாதியுடன் வெளியிடமுடியுமா ? இவர்கள் எல்லோரும் க்ரீமி லேயரில் வருவார்களா ?

8) துபாய், சிங்கப்பூர், மலேசியா என கலைவிழாக்களுக்காகச் செல்லும் கலையுலகினருக்கு ஒரு டிரிப்புக்கு எவ்வளவு சம்பளம் ? (உதாரணம்: விவேக், வடிவேலு, மனோபாலா, சார்லி, அதேபோல ஒரு பாடல் ஆடும் நடிகையர், துணை டான்சர்கள்..)

9) சோவின் பேத்தி பற்றிய சில வார முந்தைய விகடன் கட்டுரையில் முதல்வர் கருணாநிதி சோவுக்கு போன் போட்டு சோ கார் ஓட்டுவது பற்றி பேசினாராமே ? அந்த அளவிற்கா அவர்கள் நட்பு ? (சோ இப்போது டிரைவருடன் தானே yellow santro i10ல் வருகிறார் ?)

10) அம்புலிமாமா இன்னும் வெளிவருகிறதா ? விலை எவ்வளவு ? 10ரூ? 15ரூ ? விக்ரமாதித்யன் வேதாளம் எல்லாம் இருக்கிறதா ? துப்பறியும் சாம்பு கார்டூன் தொடர் புத்தகமாக வெளிவந்துள்ளதா ?

11. இங்கிலாந்து - நியூசிலாந்து, மே.இந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் - எது பார்க்கிறீர்கள் ?

12. இப்படிக்கு ரோஸ் (இப்படிக்கு ரோஸ் செட்டில் உள்ள O வுக்கும் சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரி ஆங்கில புத்தக அட்டைபடத்துக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா ?), நீயா நானா எது சூப்பர் ?

பாஸ்கியும் சேதுவும் கொட்டம் அடிக்கும் அரி-கிரி அசெம்பிளியின் சிவப்பு கலர் சோபா செட் எப்படி ?

13. ஜெயஸ்ரீயின் வலைப்பதிவு சமையல் குறிப்புகள் புத்தகமாக கிடைக்குமா ?

14. தமிழ் நாவல்களில் வரும் துப்பறியும் ஜோடிகளில் எந்த ஜோடி உங்களைக் கவர்ந்தது ? கணேஷ்-வசந்த், விவேக்-இன்ஸ்பெக்டர் கோகுல்நாத், நரேன் - வைஜெயந்தி, சங்கர்லால் - ?, இன்ஸ்பெக்டர் சிங்(காரம்)-(ராம)லிங்க்(கம்), பரத்- சுசீலா (டீஷர்ட் ஸ்பெஷலிஸ்ட்),

15. 2 இட்லி 1 வடையின் விலை (தற்போது) என்ன ? சாதாரண பவன் களிலும், சரவண பவன் மாதிரியான உயர்தர சைவ உணவகங்களிலும் ?

கானகம் said...

01. இவ்வளவு அரசியல் ஞானம் உள்ள சுப்ரமனியசாமி ஏன் இத்தனைதூரம் கோமாளிபோல் கருதப்படுகிறார்.. ????அரசியல் வியாதிகள் மேல் அவர் இட்ட வழக்குகள் மட்டுமே நீதியைபெற்றிருக்கின்றன... இருந்தும் ஏன்??

02. போபர்ஸ் வழக்கின் தற்போதைய நிலை என்ன??

03. சென்னையில் மொத்தம் எத்தனை எஃப் எம் சானல்கள் உள்ளன?? இனையத்தில் கிடைப்பவை எவை எவை??

04. சாரு மற்றும் ஜெயமோகனின் சண்டை இறுதியில் எங்குபோய் முடியும்?? இதற்கு இனையாக சொல்லப்பட்டக்கூடிய வேறு இலக்கிய சண்டைகள் உண்டா??

05. டோண்டு கேள்விபதில்கள் அவரே கேள்விகேட்டு பதில் சொல்வதுபோல் தெரிகிறதே.. இட்லிவடையார் என்ன நினைக்கிறார்???

மீண்டும் வருவேன் :)

Anonymous said...

இட்லிவடையும் பாஸ்டன் பாலாவும் ஒரே நபரா இல்லை ஒரே குழுவில்
உறுப்பினர்களா.
உங்கள் படத்தை அவர்கள் போட்டாலும் பரவாயில்லை
நீங்கள் அந்துமணி படத்தைப்
போடலாம்.
ஜூன் 3ம் தேதி கலைஞருக்கு
வாழ்த்து சொல்லப் போவீர்களா?