பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 20, 2008

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 20-05-08

இந்த வாரம் இட்லிவடை முனிக்கு எழுதும் கடிதம்

முனி வணக்கம்,

கைலாசத்தில் வெயில் எப்படி இருக்கு ? அங்கே பவர் கட் எல்லாம் உண்டா ?

மே 30க்குப் பின் பவர் கட் இருக்காது என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி சொல்லியிருக்கார். இந்த செய்தியை படித்த போது மதனின் கார்ட்டூன் தான் நினைவுக்கு வந்தது. அதை சைடில் கொடுத்திருக்கிறேன்.

சென்னை மெரினா கடற்கரை இருப்பதால் பிழைத்தோம், ரொம்பா கூட்டம் வருவதால் பார்க்கிங் பிரச்சனை ரொம்ப இருக்கு.

போனவாரம் நக்மா கிறிஸ்டியனா மாறிட்டாங்க, அவர் தங்கை ரோஷினி ஒரு முஸ்லிம், இன்னொரு தங்கை ஜோதிகா இப்ப ஹிந்து. ஆக தேசிய ஒருமைப்பாடு என்பது மகளிரிடம் மட்டும் தான் இருக்கு.

பெண்கள் என்று சொன்னவுடன் ஞாபகத்துக்கு வருது.. பெண்கள் தினத்தில் கொல்லூர் மூகாம்பிகை என்ற படம் போட்டார்கள் வேற எங்கே கலைஞர் டிவியில் தான். நானும் ஏதோ சன் டிவியில் திருவிளையாடலுக்கு போட்டி என்று நினைத்தேன்.

அரை மணி நேரம் இந்த படத்தை பார்க்கும் பாக்கியம் பெற்றேன். (அதற்கு மேல்...முடியலை ) படத்தில் ஒரு சீன் - சின்ன குழந்தை(அசுரன்) கோழையாக இருப்பான். அப்பாவிற்கு கவலை எப்படி இவன் தேவர்களிடம் சண்டை எல்லாம் போடுவான். சுக்கிராச்சாரியார் ஒரு ஐடியா கொடுப்பார். பிராமாவை குறித்து தவம் செய் உனக்கு வேண்டியவற்றை தருவார் என்று. குழந்தை தவம் செய்ய ஆரம்பிக்கும்

அடுத்த ஷாட்டில் அந்த குழந்தை 13 வயசு பையனாக காட்சி தருவான். கால் வரை பாம்பு புற்று மூடியிருக்கும். அடுத்த ஷாட் அவன் 30 வயது இளைஞன்; இடுப்பு வரை பாம்பு புற்று.

அடுத்த ஷாட் வெறும் பாம்பு புற்று. உடனே பிரம்மா தோன்றி தன் கையை உயர்த்துவார். ஒளி வந்து பாம்பு புற்றை மறைத்து அதிலிருந்து 40 வயது ஜடா முடி, தாடியுடன் கூடிய அசுரன் இருப்பான். என்ன வரம் வேண்டும் என்று கேட்பார் பிரம்மா. as usual எனக்கு சாகா வரம் வேண்டும் என்று ஹிரணியன் போல் ஒரு லிஸ்ட் ... பிரம்மா அப்படியே ஆகட்டும் என்பார். (அவருக்கு என்ன கவலை விஷ்ணு, சிவன் பார்த்துக்கொள்வார்)

அசுரன் கையை தலைக்கு மேல் கூப்பி பிரம்மவிற்கு நன்றி சொல்லுவார். எனக்கு இங்கே தான் டவுட். இவ்வளவு வருஷத்தில் தாடி, தலை எல்லாம் முடி வளர்ந்திருக்கு ஆனா அக்குள் மட்டும் சுத்தமாக ஷேவ் செய்யப்பட்டிருக்கு இது எப்படி ?


சரி இந்த கொல்லூர் மூகாம்பிக்கை கோயில் பற்றி சில குறிப்பை கூகிள் ஆண்டவன் தவயால் எனக்கு கிடைத்தது. அது கடைசியில்

இப்ப ஒரு கிசு கிசு கண்டுபிடி பார்க்கலாம் - டை கட்டும் உத்தியோகம் பார்க்கும் நான்கெழுத்து எழுத்தாளர் ஆறெழுத்து உலக நடிகரின் ஐந்தெழுத்து அடுத்தப் பட டிஸ்கஷனுக்குப் போகிராராம். தற்போது சிவசக்தி பெற்ற கனகவேல் எழுத்தாளர் இவருக்கு அட்வைஸ் கொடுப்பாரா ?

சைடில் இருக்கும் அம்மணியை எங்கோ பார்த்த மாதிரி இருக்கா ? அவரே தான் - விசாலி கண்ணதாசன். இப்ப எச்சரிக்கை: ``இனிமேல் பாடல்களும் எழுதுவேன்...பட்டிமன்றத்திலும் பேசுவேன்...அப்பா விட்டு சென்ற இடத்தை நிரப்புவேன்'' என்கிறார், விசாலி கண்ணதாசன்! லியோனி, சாலமன் பாப்பையாவையே தாங்க முடியலை இப்ப இவர் வேற

காண்டலிஸா ரைஸ் இந்தியா வந்ததால் அரிசி தட்டுபாடு வராது எப்படி ? அவர் பெயரிலேயே ரைஸ் இருக்கே! உலக உணவுப் பற்றாகுறைக்கு விலை உயர்வுக்கும் இந்தியர்கள் அதிகம் சாப்பிட ஆரம்பித்துவிட்டதுதான் காரணம் என்று உளறிக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உளறலுக்கு இது எவ்வளவோ தேவலை. என்ன நான் சொல்லுவது சரியா ?

சமிப காலமாக குங்குமம் பத்திரிக்கை விகடன், குமுதத்தை விட நல்லா இருக்கு கவனிச்சையா ? நம்ப முடியலை இல்லை ? ஆனால் அது தான் உண்மை. விகடன், குமுதத்தை விட சினிமா மேட்டர் கம்மியாக வருகிறது அதே போல் படம் போட்டு இடத்தை நிறப்பும் டெக்னிக்கும் கம்மி. நகைச்சுவை(ஜோக்ஸ்) வேற நிறைய வருது. வாழ்த்துக்கள். கல்கி பகவான் விளம்பரம் செய்யும் மாயமா ?.

சினிமா நடிகர்கள் சிகரெட் பிடிப்பதை பார்த்து தான் முதல் முறையாக சிகரெட் புகைக்க 52 சதவீத குழந்தைகள் கற்றுக் கொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அமிதாப் பச்சன், ஷாருக்கானும் அதை சட்டை கூட செய்வதில்லை. ராமதாஸ் பாபாவிற்கு செய்த லூட்டியை வட நாட்டில் செய்ய துணிந்தால் ஒட்ட வெட்டிவிடுவார்கள். இந்தியாவில் இப்படி என்றால் பாகிஸ்தானில் மறைந்த முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் படம் போட்ட சிகரெட் லைட்டர்கள் விற்பனை சக்கை போடு போடுகிறது. முஷாரப்பின் படம் கொண்ட லைட்டர்கள், அல்காய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் பின்லேடன் லைட்டர்களுக்கும் மவுசு அதிகமாம்.

கொல்லூர் மூகாம்பிகை பற்றி மேலும் சில தகவல்கள்...

மங்கரில் இருந்து 200 கி.மீ. தொலைவிற்கு அப்பாலுள்ளது கொல்லூர் மூகாம்பிகை கோவில். இந்த கோவிலின் முக்கிய விஐபி - எம்.ஜி.ஆர். இந்தகோவிலுக்கு வந்தது பற்றி கோவிலின் நிர்வாக அதிகாரி கோவிந்த மோகரல், எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமான கோவில் குருக்கள் மூர்த்தி கணேஷ்பட்டரிடம் சொன்ன தகவல்கள்

மூகாம்பிகை கோவில் கர்நாடகத்தில் இருந்தாலும் கேரள கோவில்களில் உள்ள முறைகள்தான் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி ஆண்கள் சட்டையைக் கழற்றி விட்டுத்தான் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

எம்.ஜி.ஆரும் ஒவ்வொரு முறையும் சட்டையை கழற்றிக் கோவிலுக்குள் சென்று வந்திருக்கிறார். அவரது அந்த தோற்றத்தை அந்தப் பகுதி போட்டோ-ஸ்டூடியோவைச் சேர்ந்தவர் படம் எடுத்து விட்டார்.

பொதுவாக எம்.ஜி.ஆரை அவர் விரும்பாத தோற்றத்தில் யாரும் புகைப்படம் எடுத்து விடமுடியாது . கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் கண்ணாடி, தொப்பி இல்லாத தோற்றத்தில் எடுத்த புகைப்படக்காரரும் எம்.ஜி.ஆரின் மெய்க்காவலரின் பார்வையில் இருந்து தப்பவில்லை.

மெய்க்காப்பளர் படம் எடுத்தவரிடம் கேமராவை பறித்து பிலிமை உருவி எடுத்துவிட்டாராம். அதனால் எம்.ஜி.ஆர். வந்து போனதற்கு கோவிலிலேயே எந்த புகைப்படமும் இல்லை.

இதற்கு அந்த மூகாம்பிகையே சாட்சி :-)

போன மாசம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தங்கத்தேர் இழுத்து குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த வி.ஐ.பி - நடிகர் சரத்குமார் !

கடைசி செய்தி : இன்று அமைச்சர் பூங்கோதையின் ராஜினாமா ஏற்கப் பட்டதாக தெரிகிறது. கருணாநிதியிடம் இருக்கிற இந்த அமைச்சரவையில் அதாவது முப்பது பேரில் சுமாரா இருபது அமைச்சர்கள், அதாவது முக்கால்வாசிப் பேர், டேப்பில் சிக்கியிருக்கிறார்கள் என்கிறார் சுவாமி. நாளை சுவாமி மற்ற அமைச்சர்களின் மீதும் புகார்களை அடுக்கிக் கொண்டே போவார். அவர்கள் அத்தனை பேரையும் பதவிநீக்கப் போகிறாரா கலைஞர் ? ஒரு வேளை பூங்கோதை ராஜிநாமாவிற்கு தான் காத்துக்கொண்டிருதாரோ ? எதற்கு எடுத்தாலும் கேள்வி பதில் அறிக்கை விடும் கலைஞர் பூங்கோதை, டி.ஆர்.பாலு பற்றி பேசினால் ஆஸ்பத்திரியில் போய் படுத்துக்கொள்கிறார். ஆக பதில் தெரியவில்லை என்றால் கேள்வி கேட்க மாட்டார், நல்ல டெக்னிக் தான்.

பதில் போடு,
இப்படிக்கு அன்புடன்,
இட்லிவடை

11 Comments:

Anonymous said...

Check out this one.. :))

http://thatstamil.oneindia.in/news/2008/05/20/tn-admk-cadre-slaps-dmk-mla-at-hospital.html

Anonymous said...

டை கட்டும் உத்தியோகம் பார்க்கும் நான்கெழுத்து எழுத்தாளர் ஆறெழுத்து உலக நடிகரின் ஐந்தெழுத்து அடுத்தப் பட டிஸ்கஷனுக்குப் போகிராராம்

சொக்கன்-கமலஹாசன் - மர்மயோகி

Anonymous said...

//எதற்கு எடுத்தாலும் கேள்வி பதில் அறிக்கை விடும் கலைஞர் பூங்கோதை, டி.ஆர்.பாலு பற்றி பேசினால் ஆஸ்பத்திரியில் போய் படுத்துக்கொள்கிறார்.
//

:)

தமிழ்சினிமா.காம் said...

தான் அடுத்து நடிக்கும் மர்ம படத்தை வால்-டிஸ்னி தயாரிக்க போவதாக நம்பியிருந்த அவதார நடிகருக்கு அல்வா கொடுத்துவிட்டது அந்த நிறுவனம். காரணம், 20 கோடி பட்ஜெட் படத்தையே 50 கோடிக்கு இழுப்பவர் அவர். இந்த லட்சணத்தில் 100 கோடிக்கு பிளான் போட்டால் எத்தனை கோடி இழுக்குமோ என்ற பயமே காரணம். ஆனாலும் தைரியமாக அவரை கையாளலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறதாம் எகிப்து நிறுவனம்.

Anonymous said...

டை கட்டும் எழுத்தாளர் இரா.முருகன் அவர் கமலஹாசனின் ம யோகி படத்திற்கு டிஸ்கஷனுக்குப் போகிறார்.

இ வ என் விடை சரியென்றால் எனக்கு பரிசு ஏதும் உண்டா?

அன்புடன்
சதி

Anonymous said...

>>> சொக்கன்-கமலஹாசன் - மர்மயோகி

அச்சச்சோ, அது நானில்லை!

- என். சொக்கன்

IdlyVadai said...

//டை கட்டும் எழுத்தாளர் இரா.முருகன் அவர் கமலஹாசனின் ம யோகி படத்திற்கு டிஸ்கஷனுக்குப் போகிறார்.

இ வ என் விடை சரியென்றால் எனக்கு பரிசு ஏதும் உண்டா?//

முழு கிசுகிசுக்கும் விடை சொல்லனும் அப்ப தான் பரிசு. ( பரிசு ஒரு பாராட்டு அவ்வளவு தான் )

IdlyVadai said...

//சொக்கன்-கமலஹாசன் - மர்மயோகி

அச்சச்சோ, அது நானில்லை!

- என். சொக்கன்//

நீங்க சொல்லிட்டா அது உண்மை இல்லை என்று ஆகிவிடுமா ?

We The People said...

//மங்கரில் இருந்து 200 கி.மீ. தொலைவிற்கு அப்பாலுள்ளது கொல்லூர் மூகாம்பிகை கோவில்.//

அட என்ன தல ... மங்களூரிலிருந்து மூகாம்பிகை கோவில் 135 கி.மி மட்டுமே! தப்பா எழுதலாமா இட்லிவடையாரே?!

//எதற்கு எடுத்தாலும் கேள்வி பதில் அறிக்கை விடும் கலைஞர் பூங்கோதை, டி.ஆர்.பாலு பற்றி பேசினால் ஆஸ்பத்திரியில் போய் படுத்துக்கொள்கிறார்.//

தானே கேள்வி கேட்டு தானே பதில் சொல்லும் போது இந்து போன்ற வசதி தானா வருமில்ல ;)

அவர் பூங்கோதை செய்ததை நினைத்து வெக்கப்படறாரு! ஆனா டி.ஆர்.பாலு செய்தவற்றி வார்த்தையில்லை! அதுக்கு அவர் வெட்கப்படவில்லை போல ;) யாரு கண்டா அந்த கம்பெனியில் 40 ஆயிரம் முதலீட்டாளர்களில் இவரும் ஒருவரோ என்னவோ??!!

Anonymous said...

பெயரில் இரண்டு வார்த்தை கொண்ட அந்தப் பதிவர் சு.சாமி கட்சியில் சேர விரும்புகிறாராம். ஜுன் மாதம் சு.சாமி, பாஸ்டனில் தன் மகள் வீட்டில் தங்கும் போது பேச அப்பாயிண்ட்மெண்ட்
வாங்கியிருக்கிறாராம்.சு.சாமி
பாஜக வில் சேரு, இந்தியாவிற்கு போ என்கிறாராம். இப்பதிவர் இடதுசாரியாக இருந்து இப்போது திசை மாறிய பறவையாக
இருக்கிறாராம்.

Anonymous said...

பெயரில் இரண்டு வார்த்தை கொண்ட அந்தப் பதிவர் சு.சாமி கட்சியில் சேர விரும்புகிறாராம். ஜுன் மாதம் சு.சாமி, பாஸ்டனில் தன் மகள் வீட்டில் தங்கும் போது பேச அப்பாயிண்ட்மெண்ட்
வாங்கியிருக்கிறாராம்.சு.சாமி
பாஜக வில் சேரு, இந்தியாவிற்கு போ என்கிறாராம். இப்பதிவர் இடதுசாரியாக இருந்து இப்போது திசை மாறிய பறவையாக
இருக்கிறாராம்.

இட்லிவடை கட்சி அரசியலில்
குதிக்கிறாரா?
இட்லி வடை+சு.சாமி
what a combination :)