பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, April 26, 2008

ஹர்பஜன் சிங் Vs ஸ்ரீசாந்த்

மும்பை இந்தியன்ஸ் அணி தலைவர் ஹர்பஜன் சிங் கிங்ஸ் 11 பஞ்சாப் அணி ஸ்ரீசாந்தை நேற்ற நடந்த ஐ.பி.எல் போட்டியின்போது அறைந்தார். இந்த விவகாரத்தில் ஹர்பஜனுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், பி.சி.சி.ஐ விதிமுறைகளை மீறியதற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பி.சி.சி.ஐ ஹர்பஜனின் செயலை வன்மையாக கண்டித்துள்ளது. ஹர்பஜனுக்கு ‌எதிராக ஒழுங்குமுறை நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது என்றும் கேட்டுள்ளது. மேலும் இது போன்ற செயல்களில் மைதானத்தில் ஈடுபட்டுவிட்டு பின்பு சம்பந்தப்பட்டவர்கள் பிரச்ணையை நாங்களே சரி செய்து விட்டோம் என்று கூறுவது சரியானது அல்ல என்றும் தெரிவித்துள்ளது.

நேற்று தேம்பி, ‌தேம்பி அழுத ஸ்ரீசாந்த் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திடீரென பல்டி அடித்து ஹர்பஜன் என் மூத்த சகோதரர் மாதிரி என்று தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி ஹர்பஜன் மீது புகார் ஏதும் செய்யப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

ஹர்பஜன் சிங் செய்தது தவறாக இருந்தால் கூட, ஸ்ரீசாந்த் இந்த அடியை வாங்கியதில் எனக்கு சந்தோஷம் தான். அவர் நடத்தைக்கு கிடைக்க வேண்டிய பரிசு, என்ன கொஞ்சம் லேட்டாக கிடைத்துவிட்டது.

சிம்பு, சிம்ரன் மாதிரி இது கூட நாடகமாக கூட இருக்கலாம். ரூமில் அடிவாங்கியவர் ஏன் மைதானத்தில் வந்து கண்ணீர் விட வேண்டும் ?

5 Comments:

Vivek Raghunathan said...

அவர் ரூமில் அடி வாங்கவில்லை மைதானத்திலேயே தான் அடி வாங்கினார்.

ஹரன்பிரசன்னா said...

//ஹர்பஜன் சிங் செய்தது தவறாக இருந்தால் கூட, ஸ்ரீசாந்த் இந்த அடியை வாங்கியதில் எனக்கு சந்தோஷம் தான். அவர் நடத்தைக்கு கிடைக்க வேண்டிய பரிசு, என்ன கொஞ்சம் லேட்டாக கிடைத்துவிட்டது.
//

:))

நானும் இப்படித்தான் நினைத்தேன். இன்னும் ஹர்பஜன் அடிவாங்கவேண்டியது பாக்கியிருக்கிறது. :))

manju said...

Now we can understand who might be at fault during the India-Aus series in Australia... Ya, might be australians are known for such behaviour, but now looks like Indian players are not far behind. And both Harbhajan and Sreesanth needs to be evaluated on their behaviour not just the current series, but also the previous ones.

Anonymous said...

இட்லிவடையாரே! உங்கள் ஒட்டெடுப்பில் பெருந்தவறு இருக்கிறது. சரி, தவறு என விடைகள் இருந்திருக்கலாம். சரியா? தவறா என்றால் குழப்புகிறது. உதாரணமாக அரசின் இம்முடிவு தவறா என்று சொல்பவர்கள் ஆதரிப்பதாகத்தானே அர்த்தம்?

Krishnan said...

Does anyone have the video which they are using as the prima facie evidence again harbajan? That might give the clear picture.