தசாவதாரத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலைப் பார்த்து மகிழ்ந்த முதல்வர் கருணாநிதி, நெகிழ்ச்சியுடன் கலைஞானி கமல்ஹாசனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துப் பாராட்டியுள்ளார்.
தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீடு வருகிற 25ம் தேதி பிரமாண்ட மான அளவில் நடைபெறவுள்ளது. ஜாக்கி சான் வந்து ஆடியோவை ரிலீஸ்ச செய்கிறார். அமிதாப்பச்சன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் திரண்டு வருகின்றனர். முதல்வர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.
தற்போது ஆடியோ வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழ்களைக் கொடுக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார் தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.
விழாவில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, நடிகர் விஜய் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். உடன், கமல்ஹாசன், ஆசின், மல்லிகா ஷெராவத் ஆகியோரும் பங்கேற்கின்றனர். ரஜினிகாந்த் திடீரென வந்து சர்ப்ரைஸ் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலைஞர் டிவி இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், போர் பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் முதல்வர் கருணாநிதிக்காக பிரத்யேகமாக படத்தின் டிரெய்லரை போட்டுக் காட்டினார். அப்போது கமல்ஹாசனும் உடன் இருந்தார்.
அதில் கமல்ஹாசனின் நடிப்பையும், மேக்கப்பையும் பார்த்து வியந்து போய் விட்டாராம் முதல்வர். இதெல்லாம் உண்மையிலேயே நீங்கள்தான் செய்தததா, நம்பவே முடியவில்லையே, அற்புதமாக இருக்கிறது என்று கமலை பாராட்டியுள்ளார்.
மேலும் கல்லை மட்டும் பார்த்தால் கடவுள் தெரியாதடா என்ற வாலியின் பாடலையும் முதல்வர் மிகவும் ரசித்துள்ளார். பாடலைப் பார்த்து முடித்ததும், கமல்ஹாசனை கட்டிப்பிடித்து முத்தமிட்டுப் பாராட்டினாராம்.
வழக்கமாக ஹீரோயின்களுக்கு முத்தமிட்டுத்தான் கமலுக்கு வழக்கம். ஆனால் அவருக்கே முத்தமிட்டு இன்ப அதிர்ச்சிக் கொடுத்து விட்டார் கலைஞர்.
( தட்ஸ்தமிழ்.காம் )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, April 21, 2008
கமலுக்கு கருணாநிதி தந்த முத்தம்!
Posted by IdlyVadai at 4/21/2008 03:11:00 PM
Subscribe to:
Post Comments (Atom)











6 Comments:
" முத்தத்திற்கே முத்தமா ?"
கலஞானி கமல்ஜி அவர்களின் "தசாவதாரம்" பாடல் வெளீயீடு ஏப்ரல் 25, வெள்ளியன்று வெளியிடப்படுகிறது.
தசாவதாரம் மேலும் பல செய்திகளை காண சொடுக்குங்கள் www.allthingskamal.info
இது கமல்ஜி பற்றிய ஒரு முழுமையான BLOG.
இணையத்தில் கமல்ஜியின் ரசிகர்கள் அசத்துறாங்க. இந்த BLOG-ல் இருக்கும் தசாவதார கமல்ஜியின் ஸ்டில்ஸ் "மிரட்டலா" இருக்கு.
தசாவதாரம் மே மாதம் திரைக்கு வர இருக்கிறது. இந்தியத் திரை உலகமே கமல்ஜியை பார்த்து மிரளப் போகிறது.
கமல்ஜி பற்றி பதிவு போடும் இட்லி வடைக்கு நன்றி !
அன்புடன்,
ஹார்ட்டாஸ். Z
Heartas - Hope Dasavatharam does not threaten the Indian Filmdom in the same way Aalavandan "threatened" it & made its producer to come to the streets.
என்ன "இட்லி வடையில்" கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றியும் கலைஞர் முத்தம பற்றியும் நல்லபடியாக எழுத ஆரம்பித்து விட்டீர்கள் .கட்சி மாறிவிட்டீர்களா ஜோதி போல.
ஜோதிக்கு பின் அடுத்த ஆள் கவிஞர் இளந்தேவன் தானாமே?
என்னங்க நடக்குது அதிமுகாவுல? இந்த சசிகலா பார்ட்டியின் தொல்லை தாங்க முடியலைங்க.
I thought DASAVATHARAM will be a masterpiece of Kamal. No doubt about it.
In one of his Interview to Mumbai mirror: http://www.mumbaimirror.com/net/mmpaper.aspx?page=article§id=30&contentid=2008032820080328022706233edca6322
Read the above interview.
ANONY u will get answer.
don't insult a LEGEND.
Above Anony - I have not insulted anybody. I just stated some FACTS. Unmai Sudum.
என்னமோ..பெருசா ரெண்டு பெரும்..லிப் டு லிப் அடிச்சிட்ட மாதிரி..இட்லிவடை இந்த நியூஸ் ஐ போட்டிருக்காரு ?
என்ன !! வேற செய்தி கிடைக்கலையா ?
பிரியங்கா நான் சொல்லி தான் நளினியை பாத்தாருன்னு டி.ஆர் சொல்லி அறிக்கை விட்டிருக்காரே? இந்த மாதிரி சூப்பர் மொக்கை நியூஸ் போட வேண்டியது தானே ? அத்த விட்டுட்டு கலைஞரும் , கமலும் கிஸ் அடிச்சிகிட்டது பத்தி போடுறீர் !!
Post a Comment