பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 02, 2008

எஸ்.வி.சேகர் டிவி சேனல்

தமிழ் மக்கள் மிது என்ன கோபமோ, நடிகர் எஸ்.வி.சேகர் டிவி சேனல் ஆரம்பிக்க போகிறார்.

அதிமுக சார்பில் மைலாப்பூர் தொகுதியி்ல் போட்டியிட்டு எம்எல்ஏவாக உள்ள சேகர் 2 புதிய டிவி சானல்களைத் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

ரூ. 10 கோடி முதலீட்டில் 'எஸ்வி டிவி', 'இந்தியா டிவி' ஆகிய 2 சானல்களை வரும் 9 மாதங்களுக்குள் தொடங்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் தலைமை அலுவலகம் சென்னையில் அமைக்கப்படுகிறது.

முழுக்க காமெடி நிகழ்ச்சிகளை மட்டுமே எஸ்வி டிவியில் ஒளிபரப்பப்போவதாக சேகர் கூறினார். இந்திய டிவியில் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமே அல்லாமல் நாடகங்கள், விவாத மேடைகள் போன்ற பிற நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்போவதாக தெரிவித்தார். ஃபேன்சி நம்பர் எப்படி வாங்குவது என்றும் சொல்லித்தர திட்டமிட்டுள்ளார்.

2 Comments:

Venpu said...

// முழுக்க காமெடி நிகழ்ச்சிகளை மட்டுமே எஸ்வி டிவியில் ஒளிபரப்பப்போவதாக சேகர் கூறினார். //

சட்டசபை நிகழ்ச்சிகள நேரடியா ஒளிபரப்புராரோ என்னவோ.

Anonymous said...

Did he announce this on April 1st :)