பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 04, 2008

தமிழன் என்று சொல்லடா கெட்ட வார்த்தை பேசடா

உணர்ச்சிகரமாக பேசலாம், ஆனால் வரம்பு மீறாதீர்கள.. சத்தியராஜ் பேசிய சில வார்த்தைகள் அவர் மேல் வைத்திருந்த மதிப்பை கொஞ்சம் அசைத்தது.

உண்ணாவிரத்தில் சத்யராஜ் பேசுகையில், இங்கு யாருடைய பெயரைச் (ரஜினி) சொன்னால் எனக்குக் கைத்தட்டல் கிடைக்குமோ, அந்தப் பெயரைச் சொல்வதை விட, நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவேன். கர்நாடகத்தில் தமிழனை கன்னடக்காரர்கள் தாக்கிக் கொண்டுள்ளனர். அதைப் பற்றி மட்டும்தான் இங்கு பேசுவேன்.

இதுவரை என்னை மனிதன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் இன்று முதல் என்னை தமிழன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

அப்படியானால் தமிழன் மனிதன் இல்லையா என்ற சந்தேகம் வரும். தமிழன் மனிதன் இல்லை, வெறும் மரம் என்றுதான் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மரமாக இருந்தால் என்ன நடக்கும்? நாய் வந்து ஒண்ணுக்கு அடிக்கும். பிறகு எவனாவது வந்து மரத்தை வெட்டி எடுத்துக் கொண்டு போய் கட்டில் செய்து கால் மேல் கால் போட்டு ஆட்டிக் கொண்டிருப்பான். டேபிள் செய்து அதில் உட்காருவான். மொத்தத்தில் அந்த மரத்திற்கு மரியாதையே இல்லாமல் போய் விடும். எனவே தமிழா, நீ மரமாக இருக்காதே, மனிதனாகவும் இருக்காதே, தமிழனாக இரு என்று சொல்கிறேன்.

காந்தி சொன்னார் கண்ணுக்கு கண் என்று ஆரம்பித்தால் உலகில் உள்ள 600 கோடி பேரும் குருடனாகத்தான் இருப்பார்கள். கடைசியில் உலகில் அத்தனை பேரும் குருடனாகி விடுவார்கள் என்றார். ஆனால் தமிழனுடைய கண்ணை 40 ஆண்டுகளுக்கு முன்பே பிடுங்க ஆரம்பித்து விட்டார்கள்.

முதலில் மகாராஷ்டிரத்தில் பால்தாக்கரே என்ற ஆள் பிடுங்கினார். பின்னர் மலேசியாவில் பிடுங்கினார்கள். ஈழத்தில் பிடுங்கினார்கள். இன்று கர்நாடகத்திலும் பிடுங்க ஆரம்பித்து விட்டார்கள்.

எனவே காந்தி சொல்வதை இன்று கடைப்பிடிப்பதாக இருந்தால் உலகில் உள்ள 10 கோடித் தமிழர்களும் குருடனாக இருப்பார்கள். மற்ற 690 கோடி பேரும் பார்வையுடன் திரிவார்கள். ஏற்கனவே தமிழன் சிந்தனைக் குருடனாக, கருத்துக் குருடனாக இருக்கிறான். கண்ணும் போய் விட்டால் மயிரு மாதிரிதான் இருக்கும் அவனது வாழ்க்கை.

40 வருடங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர், தமிழக முதல்வராக இருந்தபோது, கர்நாடகத்தில் குண்டுராவ் முதல்வராக இருந்தார். அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். ஒருமுறை குண்டுராவ் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். போயிருந்தார். மட்டன், சிக்கன் என அனைத்தும் செய்து போட்டார்கள். எம்.ஜிஆரும் சாப்பிட்டார்.

ஆனால் அவர்கள் வைத்த தண்ணீரை மட்டும் குடிக்க மாட்டேன் என்று கூறி விட்டார். எனது மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். எனக்கு மட்டும் எதற்கு உங்கள் தண்ணீர் என்று கூறி விட்டார்.

சாய்குமார் என்று ஒரு நடிகர். உனக்குப் பிடித்த நடிகர் யார் என்று அவரிடம் கர்நாடகத்தில் கேட்டுள்ளனர். அதற்கு அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று கூறி விட்டார். அவ்வளவுதான் அவரை உதை உதை என்று உதைத்து ராஜ்குமார் என்று சொல் என்று கூறியுள்ளனர். இதற்குப் பெயர்தான் கன்னட வெறி.

நான் வீரப்பன் செய்த செயல்களை எல்லாம் கேள்விப்பட்டு முன்பு அவன் மீது கோபப்பட்டிருக்கிறேன், ஆவேசப்பட்டிருக்கிறேன். ஆனால் பல வீரப்பன்களை உருவாக்கும் நிலையை இப்போது உருவாக்கி விடாதீர்கள் என்று அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் தமிழகத்திற்கு லாபம் கிடைக்கும். ஆனால் கர்நாடகத்திற்கு ஒரு நஷ்டமும் கிடையாது.

சூப்பர் காமெடியன் வாட்டாள்:

அங்கு வாட்டாள் நாகராஜ் என்கிற ஒரு பெரிய காமெடியன் இருக்கிறார். நல்லவேளை அவர் சினிமாவுக்கு வரவில்லை. வந்திருந்தால் வடிவேலுவை எல்லாம் மிஞ்சியிருப்பார். அவர் சொல்கிறார் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி எல்லாம் கர்நாடகத்தோடு சேர வேண்டியதாம். விட்டால், மெட்ராஸ், பீச் எல்லாமும் எங்களுக்குத்தான் எல்லாம். நாம் என்ன வாயில் விரல் வைத்து கொண்டு போகனுமா.

என் பொண்டாட்டி கூட நான் படுக்குறேன் உனக்கு ஏண்டா வலிக்குது. உன் பொண்டாட்டி கூடவா படுகிறேன்.

நமக்கு சம்பந்தப்பட்ட ஒருவரே வாட்டாள்தான் எனக்குப் பிடித்த பேச்சாளர் என்று கூறியுள்ளார். என்னத்தைச் சொல்ல.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று பேசிக் கொண்டிருக்காதீர்கள். அப்படியே பேசிக் கொண்டிருந்தால் நீ கேன.... ஆகி விடுவாய். வாலாட்டினால் ஒட்ட நறுக்கவும் தெரியணும். அவன்தான் தமிழன். குனிந்து கொண்டே இருந்தால் குதிரை ஏறிக் கொண்டுதான் இருப்பார்கள். குனியாதே, நிமிர்ந்து நில்.

தமிழனுக்கு எங்கிருந்தும் தண்ணீர் வரக் கூடாது என்கிறார்கள். பாலாறில் தண்ணீர் இல்லை. முல்லைப் பெரியாறில் தண்ணீர் இல்லை, சேது சமுத்திரத் திட்டத்தையும் எதிர்க்கிறார்கள்.

கடவுளுக்காக இனிமேல் வெளியில் போகாதீர்கள். தமிழ்க் கடவுள் முருகன் இருக்கிறான். அவனைக் கும்பிடுங்கள். மதுரை வீரனைக் கும்பிடுங்கள், சுடலை மாடனை கும்பிடுங்கள்.
( அப்ப இவர்கள் இந்த கடவுள் எல்லாம் இருக்கிறதா ? )
நமக்கு வடநாட்டு ராமனும் வேண்டாம், ராகவேந்திராவும் வேண்டாம் (ரஜினியை திரும்பிப் பார்த்தபடி), அய்யப்பனும் வேண்டாம்.

உலகில் தமிழன் எங்கு அடிபட்டாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும். ஈழத்தில் அடிபட்டாலும் குரல் கொடுக்க வேண்டும். அங்கு இருப்பவன் உனது சகோதரன், உனது சகோதரி. தமிழனை உலகில் எங்குமே நசுக்க முடியாது. அதை விட மாட்டோம். நீ குரல் கொடுக்கலை என்றால் நீ ஒரு முட்டாக்கூ....அவ்வளவுதான் என்றார் சத்யராஜ்.

( வைரமுத்து பேசும் போது, தந்தை பெரியாரே இங்கு சத்தியராஜ் உருவில் நேரில் வந்த மாதிரி இருக்கிறது என்றார். அதனால் இந்த படம் )

26 Comments:

We The People said...
This comment has been removed by the author.
We The People said...

அட நம்ம சத்தியராஜ் இங்கே இருக்கும் பின்நவின வியாதியஸ்தர்களை விட பெரிய பின்நவினத்துவ வியாதியஸ்தர் போல!!!

இல்ல, ஒரு நாள் சாப்பிட விடாம செய்துவிட்டார்களே என்ற கடுப்புல பேசிட்டாரோ??

Anonymous said...

Hats Off Sathyaraj ! I listent his speech what ever he said was perfect.

Boston Bala said...

சத்யராஜின் சமீப கால சொற்பொழிவுகளுக்கு :(

---ஒரு நாள் சாப்பிட விடாம செய்துவிட்டார்களே என்ற கடுப்புல பேசிட்டாரோ?---

;)

subbu said...

anagarigamahavum tharakuraivahavum pesuvadhu (Adhu Thamizhukkaha endhralum) Azhgalla!! Unarchivasappaduvathum vanmurai thoondum vidhathil pesuvadhum itharunathil sarialla!!

Anonymous said...

Unarchivasappaduvathum tharakkuraivaaha pesuvadhum (Thamizhukaaha endraalum) Azhahalla! Tomorrow if any violence starts in karnataka Satyaraj won't go there to protect the Tamils. It should be handled carefully. This 'fast' should not have been allowed by the Govt.

Anonymous said...

Sathyaraj's speech make me to feel he was under the influence of ......suppamani

Gowri Shankar said...

sathyaraj over reacted totally and was out of senses. also he tried to get some attention by criticizing rajinikanth which was totally not needed at that hour... His speech was cheap

சங்கு மாமா said...

சத்ய ராஜுக்கு ரஜினி மேல என் இவ்வளவு காண்டு ? ரஜினி வரலேன்னா இதெல்லாம் பேசலாம்...அவர் வந்த பின்னர்..சும்மா வெட்டி பேச்சு பேசுறது..வேஸ்ட்.. எனக்கென்னமோ சத்ய ராஜ் பேசியது டூ மச் ஆக படுகிறது...கெட்ட வார்த்தைகளை மீடியா வில் பேசுவது மூலம்..இளைய சமுதாயத்தை சீரழி ப்பதாக படுகிறது..

இல்ல, ஒரு நாள் சாப்பிட விடாம செய்துவிட்டார்களே என்ற கடுப்புல பேசிட்டாரோ??

SUPER !!

Anonymous said...

ஒழுக்கம் என்றால் என்னவென்றே தெரியாத சினிமா ஆசாமிகள். திரைக்குப் பின்னால் அடல்டிரி திரையில் ஆபாசம். இப்படி வாழ்க்கை கொண்டவர்கள். இவர்களிடம் இப்படி தான் சிந்தனை இருக்கும்

Anonymous said...

//வடநாட்டு ராமனும் வேண்டாம், ராகவேந்திராவும் வேண்டாம் (ரஜினியை திரும்பிப் பார்த்தபடி), அய்யப்பனும் வேண்டாம்//

அப்படியே, தண்ணீர் கொடுக்காத மாநிலத்தை சேர்ந்த பெரியார் வேண்டாம் எனச் சொல்லாமல் விட்டவரை சரிதான்,:)

Anonymous said...

When Karnataka has a comedian called Vattal Nagaraj, Tamil Nadu has Muttal SathyaRaj. I don't see any difference between the two rascals.

Raam said...

rightu... ithellam konjam over thaan
enna thaan tamilanukku ketta varthai romba romba pechu valakkunnalum oru open forumla konjam over dosea thaan ninaikirein..

நாகை சங்கர் said...

அவருடைய வார்த்தைகள் தடித்து விட்டாலும் கருத்துகள் மிகச் சரியானவை...

அன்புடன்,
சங்கர்.

Hamitha said...

இட்லி வடை,
இந்த உண்ணாவிரதம் தேவை இல்லையென்று சொல்லிவிட்டு ஏனய்யா உண்ணாவிரத செய்தியை இவ்வளவு முன்னணி படுத்துகிறீர்கள்? சினிமா செய்தி இல்லாமல் உங்களாலும் காலம் ஓட்ட முடியாது போலும்?

Anonymous said...

Talk is cheap.Time and again persons like him are proving it.
Veeramani did not support the struggle by the Malaysian Indians
for their rights.Did Sathyaraj support their demands.Just because he acted in Periyar as Periyar he thinks too much of himself.He will pay a bitter price for this.

rm_slv said...

சத்தியராஜ் பெரியாராக நடித்துவிட்டதில் கொஞ்சம் பெரியார்போல நினைத்துவிட்டார் போல் தெரிகிறது இதற்கு வைரமுத்துவும் பாராட்டு, ஒரு பொறுப்புள்ள பேச்சாக தெரியவில்லை, ரஜினியும் கமலும் காட்டிய நிதானம் பாராட்டதக்கது. இப்படி எல்லோரும் வெட்டுகுத்து என்று பேசுவது எப்படி அங்குள்ள தமிழர்களை பாதுகாக்கும் என்று தெரியவில்லை. தேர்தல் முடியும் வரை இந்த பேச்செல்லாம் கர்நாடகாவில் எடுபடாது, முல்லை பெரியாரு பிரச்சினையில் சுஜாதா கூறியிருந்த மாதிரியான தீர்வுதான் நமக்கு சரி, அதை மனதில் வைத்துதான் கலைஞர் இப்போதைய தீர்வை எடுத்திருக்ககூடும்.

Anonymous said...

Kannada PERIYAR, telugu KARUNANIDHI veendam enru solvara?

Anonymous said...

'யாரைப் பற்றி பேசினால் கைதட்டல் கிடைக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் செய்ய மாட்டேன். அதற்காக நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகவேண்டுமானாலும் செய்வேன்'

இது சத்யராஜின் லேட்டஸ்ட் பன்ச் டயலாக். சக நடிகர்களெல்லாம் அரசியலை ஒரு கை பார்த்துக்கொண்டிருக்கும்போது எந்தவொரு நடிகனுக்கும் இருக்கும் ஆற்றாமை இப்படி எரிச்சலாய் வெளிப்படுவது இயற்கைதான். அப்படி என்னதான் பேசினார்? நமது சிறப்பு பிரதிநிதி விஜயப்பாவின் கருத்தைக் கேட்டோம்.

'சத்யராஜ்க்கு நக்கல் அடிக்க மட்டும்தான் ஸார் தெரியும். வாழ்க்கையில எதையும் அவரு சீரியஸா எடுத்துக்கிட்டது கிடையாது. இந்த முறை சீரியஸா பேசறதா நினைச்சு கத்தியிருக்கார். ஆனா, அது காமெடியா மாறிப்போயிடுச்சு.

இதில் எம்.ஜி.ஆர் பேரை வேறு இழுத்து அசிங்கப்படுத்தியிருக்கார். சிக்கன், மட்டன் சாப்பிட்டாராம். ஆனா, தண்ணீர் குடிக்கலையாம். அப்போ அந்த சிக்கன், மட்டனை எதில் செய்தார்களாம். எம்,ஜி,ஆருக்கு இப்படியொரு முட்டாள் ரசிகனா?

ரஜினிக்கு கிடைத்த கைதட்டல்தான் அவருக்கு கோபத்தை வரவழைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். ரஜினி வந்த பிறகு கூடியிருந்த கூட்டம் 3 மடங்காக ஆகிவிட்டது என்று மாலை முரசு வேறு செய்தி வெளியிட்டிருந்தது. ரஜினி ரசிகர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. கர்நாடக அமைப்புகளை கண்டிக்கும் போராட்டம்தான் என்றாலும் ரஜினி ரசிகர்களால் யாருக்கும் எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லையே..அப்படியிருந்தும் சத்யராஜ்க்கு என்ன கோபம் என்பதுதான் புரியவில்லை. அப்படி கோபம் என்றாலும் அதை வெளிப்படுத்த வேண்டிய இடம் வேறு. இப்படி பொது மேடையில் காட்டுக்கத்தல் கத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை.

பேச்சின்போது நிறைய இடங்களில் என்ன பேசுவதென்பதே அவருக்கு மறந்து போனது வெளிப்படையாக தெரிந்தது. பல இடங்களில் கர்நாடகாவையும், ஒகேனக்கலையும் மறந்து போயிருந்தார். இத்தனைக்கும் என்ன பேசவேண்டும் என்பதை ஒத்திகை பார்த்துக்கொண்டுதான் வந்திருக்கிறார். விகடன் பேட்டியில் அவர் பேசியிருப்பதையும் மேடையில் பேசியிருப்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போதே தெளிவாக தெரிகிறது.

ரஜினி மீது அவருக்கு பொறாமை, கோபம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். அதை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் வெளிப்படுத்தியும் வந்திருக்கிறார். ஆனால், இப்போது தமிழன் என்கிற அடையாளத்தில் பேசுவதாக சொல்லி ஒட்டுமொத்த தமிழ்ர்களையும் அதிர்ச்சிக்கும் அவமானத்திற்குள்ளாக்கியிருக்கிறார். சத்யராஜ் போன்ற பொறுப்பற்ற நடிகர்களை தமிழ் சினிமாவின் பிரதிநிதியாக முன்னால் நிறுத்துவது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் அவமானம்.'

Anonymous said...

Porukki Tamilan Satyaraj is going to die out of Tongue Cancer if he continues his blabberings in this way. After all, that is his wish too as he has mentioned in the beginning of his blabbering itself.

vasanth said...

More than anything else, Satyaraj's outbursts show his jealousy towards Rajinikanth. Listening to his spiel, someone who does not know the background of the whole issue might think: 1. That Rajini is responsible for the whole Cauvery/Hogenakkal issue. 2. That Satyaraj and his cronies have sacrified their lives at least a dozen times for the Tamil cause(!) 3. If only Rajini had clearly chosen TN over Karnataka, the whole issue could have been solved long back.
It is only fools like Satyaraj who fuel the fire. More than Vattal Nagaraj, it is people like Muttal Satyaraj we should guard against.

If he has any guts, let him take on people like Kalaignar, Jayalalitha and successive PMs at the Centre for the eluding solution to the Cauvery problem. Let him not pick up soft targets like Rajinikanth, who even children know will not retaliate.

vasanth said...

More than anything else, Satyaraj's outbursts show his jealousy towards Rajinikanth. Listening to his spiel, someone who does not know the background of the whole issue might think: 1. That Rajini is responsible for the whole Cauvery/Hogenakkal issue. 2. That Satyaraj and his cronies have sacrified their lives at least a dozen times for the Tamil cause(!) 3. If only Rajini had clearly chosen TN over Karnataka, the whole issue could have been solved long back.
It is only fools like Satyaraj who fuel the fire. More than Vattal Nagaraj, it is people like Muttal Satyaraj we should guard against.

If he has any guts, let him take on people like Kalaignar, Jayalalitha and successive PMs at the Centre for the eluding solution to the Cauvery problem. Let him not pick up soft targets like Rajinikanth, who even children know will not retaliate.

வால்பையன் said...

இத தானுங்க நானும் சொன்னேன்,
என் டவுசர கிழிச்சுபுட்டாங்க


வால்பையன்

Anonymous said...

Speech by sathyaraj was an emotional one without any thought! Despite being an ardent fan [as an acotr alone]of him it made my toes cringe by his language. It was unwarranted and these people should know about ethics in public speaking. Infact most speakers were toeing the same line of tit for tat and warning kannadigas...i wonder what the police were thinking. I thought these people should be booked and arrested for inciting violence. Speeches by Rajni, kamal and vijaykanth were more mature and addressing the issue. Film stars are better off sticking to their profession rather than loose talks in public.

ஜயராமன் said...

சத்தியராஜ் பேசியது அப்பப்பட்டமான இன வெறி. கன்னடியர்களிடம் எதை கண்டிக்கிறாரோ அதைத்தான் இவர் மனம் நிறைய வளர்த்துக்கொண்டு திரிகிறார்.

இந்த இனவெறி அரசியலில் லாபம் கிடைக்கும் என்று இந்தியாவுக்குக் காட்டிய இழிவு தீராவிட கழகங்களுக்கே சேரும். எம்ஜிஆரை மலையாளி என்றதும், மலையாள வியாபாரிகளிடம் வன்முறையில் நடந்துகொண்டதும் இவர்களே முன்னோடிகள். அதனால் இன்று இந்தியாவில் பெருகிவரும் இந்த விஷத்துக்கு மூல காரணம் என்ன என்பதை சத்யராஜ் தெரிந்துகொண்டால் நன்றி. ரஜினிகாந்தைப் பார்த்து பொறாமையில் வயிறெரியும் ஒரு அல்ப தோற்ற நடிகராகத்தான் அவரின் இந்த கருத்துக்களைப் பார்க்கிறேன். அபத்தமான இரட்டைப் பொருள் நக்கல் ஆபாசத்தை வைத்து தன் தொழிலை நடத்திவரும் இவர் தமிழின உணர்வைப் பற்றிப்பேசுவது மிகவும் நகைச்சுவை.

நன்றி

ஜயராமன்

Ravi said...

I am happy to note that most of us did not approve Sathyaraj's outbursts. Even I was shocked to hear him speak that way. As many commented here, these idiots are not going to come to the rescue of the Tamils being targetted in KA as a result of such provocative talks. And what such people can do is only target innocent Kannadigas here (like Udupi restaurant, Kannada sanga etc.).

First of all, who gave them the right to speak on behalf of all Tamils. Idhu oru fashion-aagi pochu ippo ellaam.