பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 09, 2008

நடிகைகளுக்கு நடிக்க தடை ?

உண்ணாவிரதத்தில் பங்கேற்காத அசின், நவ்யா நாயர், கோபிகா நடிக்க தடை?
அப்போ கலந்துகொண்டவர்கள் எல்லாம் நடிக்கிறார்களா ?

முன்னணி நடிகைகளான அசின், நவ்யா நாயர், மீரா ஜாஸ்மின், மும்தாஜ், மீனா, கோபிகா மற்றும் நடிகர்கள் நெப்போலியன், கார்த்திக் உள்ளிட்ட பலர் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளவில்லை.

நெப்போலியன் ஏற்கனவே திட்டமிட்டப்படி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்ததால் கலந்து கொள்ள இயலவில்லை என்று நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

நம்பியார், நாகேஷ், விஜய குமாரி, எம்.என். ராஜம் உள்ளிட்ட பழைய நடிகர்- நடிகைகள் வயதான கார ணத்தை தெரிவித்துள்ளனர்.

உண்ணாவிரதத்துக்கு வராத 150 நடிகர், நடிகை யிடம் விளக்கம் கேட்கப்படு கிறது. பதில் திருப்தி அளிக்காத பட்சத்தில் அவர்களுக்கு ஒத்து ழைப்பு மறுக்கப்படும்.

இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர். ரகுமான், வித்யாசாகர், பரத்வாஜ், டைரக்டர்கள் பாரதிராஜா, லிங்குசாமி ஆகியோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளவில்லை.

எஸ்.பி. பாலசுப்பிரமணி யம், மனோ, சுஜாதா, கார்த்திக், சித்ரா, திப்பு, ஹரிணி, சீனிவாஸ் உள்ளிட்ட சினிமா பின்னணி பாடகர்களும் கலந்து கொள்ளவில்லை. இவர்களிடம் விளக்கம் கேட்கப்படுகிறது.

ஸ்டண்ட் யூனியன் சங்கத்தில் இருந்தும் மெஜாரிட்டி பேர் வரவில்லை. அனைத்து சங்கங் களில் இருந்தும் சுமார் 1000 பேர் வரை வராமல் புறக்கணித் துள்ளனர். அனைவருக்கும் அந்தந்த சங்கங்கள் சார்பில் விளக்கம் கேட்கப்படுகிறது.

தன்னிலை விளக்க கடிதங் கள் வந்த பிறகு அனைத்து சங்கங்களும் ஒன்று கூடி மேல் நடவடிக்கை எடுக்கும்.

2 Comments:

Poori said...

கருணாநிதி கூடதான் நல்ல நடிகர் அவரும்தான் கலந்துக்கல அவர் மேல நடவடிக்கை எடுக்க சொல்லுவியா. என்ன கதைப்பா இது

Anonymous said...

" இடுப்பை கிள்ளிய ரசிகரை அடித்து ரசித்தேன் "

திருப்பதி கோவில் வாசலில் நடந்த சம்பவம் குறித்து நடிகை ஸ்ரேயா பேட்டி

திருப்பதி, ஏப்.9

திருப்பதியில் சாமி கும்பிட்டுவிட்டு வந்தபோது எனது இடுப்பை கிள்ளியதால் ரசிகரை அடித்தேன் என்று நடிகை ஸ்ரேயா நேற்று தெரிவித்தார். ( அவர் சாமி கும்பிட்டுவிட்டு வந்து கிள்ளிணாரா அல்லது இவர் சாமி கும்பிட்டு வந்தபோது கிள்ளிணாரா ? தெளிவா புரியலே. )

ரசிகருக்கு அறை :
`எனக்கு 20 உனக்கு 18' படத்தின் மூலமாக தமிழ் திரைஉலகில் அறிமுகமாகி, ரஜினி உடன் `சிவாஜி' படத்தில் நடித்ததால் புகழ் உச்சிக்கு சென்றவர் நடிகை ஸ்ரேயா. ( திருப்பதியிலே இன்று கோபத்தின் உச்சிக்கு சென்றார். ) தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் திருமலைக்கு ஸ்ரேயா சென்றிருந்தார்.

அதிகாலையில் சாமி கும்பிட்டு விட்டு கோவிலுக்கு வெளியே வந்தபோது சிலர் அவரை அடையாளம் கண்டனர். உடனே ஸ்ரேயாவை நெருங்கி `ஆட்டோகிராப்' கேட்டனர். கையை பிடித்து குலுக்கவும் முயற்சித்தனர். ( குலுக்கலை ரசித்தார் அவர் .) அப்போது ஒரு ரசிகரை ஸ்ரேயா ஓங்கி அறைந்தார். ( எனக்கு ரெண்டு உனக்கு ரெண்டு என்ற கணக்கிலே. ) அவருடைய உதவியாளர்களும் அந்த ரசிகரை அடித்து உதைத்தனர் (தமது ஆதங்கத்தினையும் வெளிப்படுத்தும் வகையிலே. )

இடுப்பை கிள்ளியதால் கோபம் :

ஸ்ரேயாவின் இடுப்பை அந்த ரசிகர் கிள்ளியதால் அவர் கோபமடைந்து அடித்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து காரில் வேகமாக ஏறிய ஸ்ரேயா, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். திருப்பதி மலை மீது நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்ரேயாவிடம் அடி வாங்கியவர் பெயர் ஹரி என்பது, பின்னர் தெரிய வந்தது. ( " ஹரி செஞ்சது சரியா " என்கிற விவாதம் தமிழஅகதிலே இப்போ சூடு பிடித்துள்ளது. கர்நாடகாவுக்கு சப்போர்ட்டாக இப்போ தெலுங்கானாவும் தமிழ் நடிகர்களை இழிவு செய்வது கண்டு கொதித்து திரயுலகமே திரண்டு "அறை" நாள் உண்ணாவிரதம் அறிவித்துள்ளனர் என்ற செய்தி எதிர்பார்க்கப் படுகிறது.) . திருமலையில் உள்ள ஒரு மடத்தில் துப்புரவு பணியாளராக ஹரி
பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ரசிகரை தாக்கியது குறித்து ஸ்ரேயாவிடம் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்ரேயா கூறியதாவது:-

பின்னால் நின்று சில்மிஷம். ( முன்னால் செய்யவில்லை ) கோவிலில் பிரார்த்தனையை முடித்துவிட்டு வெளியே வந்த நான், பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டு இருந்தேன். அப்போது, எனக்கு பின்னால் நின்று கொண்டு இருந்த ஒருவன் எனது இடுப்பை கிள்ளி சில்மிஷம் செய்தான். புனிதமான இடத்தில் இப்படி நடந்து கொள்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ( வேறு இடமாக இருந்தால் எப்போதும்போலே விட்டு விட்டு ரசித்திருப்பேன். ) இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக பெண்கள் பொங்கி எழ வேண்டும் என்பதே எனது எண்ணம். (வெம்பி அழக்கூடாது.) ஒரு நடிகையாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி எனக்காக நான் போராடுவேன். ஈவ்-டீசிங் மற்றும் சில்மிஷம் போன்றவற்றால் பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணும் பொங்கி எழ வேண்டும். ( பொள்ளேர் - பளார் என அறைய அடிக்கடி பழகவேனும். ) இவ்வாறு நடிகை ஸ்ரேயா தெரிவித்தார்.


----------------

சினிமாவுக்காக வாழ்க்கை தியாகம்
``திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்வேன்'' அயோக்கிய குணச்சித்திர
நடிகர் எஸ்.ஜே.சூர்யா பரபரப்பு பேட்டி

சென்னை, ஏப்.9-

``சினிமாவுக்காக, என் வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டேன். திருமணம் செய்துகொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே வாழ்வேன்'' என்று நடிகர் எஸ்.ஜே.சூர்யா கூறினார்.

பேட்டி

`நியுட்டனின் 3ஆம் விதி' என்ற புதிய படத்தில், எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை பற்றி அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ``ஊரில் உங்களுக்கு பெண் பார்த்துக் கொண்டிருந்தார்களே...திருமணம் எப்போது?'' என்று நம் நாட்டின் எதிர்காலத்தின் மீது பெரும் காதலும் கடும் கவலையும் கொண்டுள்ள நிருபர்கள் கேட்டார்கள்.

அதற்கு பதில் அளித்து எஸ்.ஜே.சூர்யா கூறியதாவது:-

``சினிமா மீது எனக்குள்ள காதல், கடல் அளவு. ஆனால் நான் சினிமாவில் சாதித்தது, மிக மிக குறைவு. நான் திருமணம் செய்துகொண்டால், என் இலக்கை அடைய முடியாது. சில விஷயங்களை இழந்தால்தான், சில விஷயங்களை பெற முடியும்.

வாழ்க்கை தியாகம்

சினிமாவில் யாரும் அடைய முடியாத இடத்தை அடைய வேண்டும் என்பது என் ஆசை. அதற்காக, என் வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டேன். திருமணம் செய்துகொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்வது என்று முடிவு செய்து விட்டேன்.''

இவ்வாறு எஸ்.ஜே.சூர்யா பதில் அளித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

``என்னை நானே இயக்கி நடிப்பது, பெரிய விஷயம் அல்ல. ஆனால் என்னை நானே இயக்கி நடித்ததில், முழுமையான நடிகர் ஆக முடியவில்லை. அதனால்தான் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அப்படி மற்ற இயக்குனர்கள், என்னை இயக்கிய இரண்டு படங்கள் சரியாக அமையவில்லை.

நல்ல கதை

மற்ற இயக்குனர்களின் இயக்கத்தில் நான் நடித்து ஒரு வெற்றி படம் கொடுத்தால்தான், முழுமையான நடிகர் என்ற அங்கீகாரம் கிடைக்கும். அதற்காக, கொஞ்சம் `டைம்' எடுத்துக் கொண்டேன். நல்ல கதை வரட்டும் என்று ஒதுங்கி இருந்தேன்.

தாய் முத்து செல்வன் சொன்ன கதை, நான் எதிர்பார்த்த நல்ல கதையாக இருந்தது. தன் காதலியை பலாத்காரம் செய்து அழித்த ஒருவனை, ஒரு இளைஞன் பழிவாங்கி அழிக்கும் கதை. இதில், என்ன புதுமை? என்று கேட்கலாம். பழிவாங்கும் முறை புதுசு.

பழிவாங்குவதற்கு கதாநாயகன் ஐந்து வருடம் அல்லது பத்து வருடம் எடுத்துக்கொள்ளவில்லை. காலை 10 மணியில் இருந்து 12 மணிக்குள், இரண்டு மணி நேரத்தில் பழிவாங்கி விடுகிறான். ஆங்கில படம் பார்க்கும் உணர்வை, `நியுட்டனின் 3ஆம் விதி' ஏற்படுத்தும். நான் நடித்த `நியு' படத்தின் வினியோகஸ்தரான நந்தகோபால், இந்த படத்தை தயாரிக்கிறார்.

`புலி'

இப்போது நான், பவன் கல்யாணை வைத்து `புலி' படத்தை தெலுங்கில் டைரக்டு செய்து வருகிறேன். அந்த படம் முடிவடையும் நிலையில் உள்ளது. `நியுட்டனின் 3ஆம் விதி' படத்தை முடித்துவிட்டு, `புலி' படத்தை தமிழில் இயக்கி, நானே கதாநாயகனாக நடிப்பேன்.''

மேற்கண்டவாறு எஸ்.ஜே.சூர்யா கூறிதொலைத்தார்.