பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, April 05, 2008

சத்தியராஜ் தைரியமற்ற கோழை - ராமகோபாலன்

இந்துக்கள் வழிபடுகின்ற தெய்வங்களுக்கு விரோதமாக நடிகர் சத்யராஜ் பேசியதற்கு இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக கர்நாடகத்தில் சில இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களை எதிர்த்து திரைஉலகத்தினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர் சத்யராஜ், இந்துக்கள் வழிபடுகின்ற தெய்வங்களுக்கு விரோதமாக பேசிய பேச்சை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

தன்னை நாத்திகன் என்று கூறிக் கொள்ளும் இவர், தமிழ்நாட்டில் முருகன் இருக்கும் போது கேரளத்து ஐயப்பனையும், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் உள்ள தெய்வங்களை ஏன் வழிபட வேண்டும்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

முருகன் புகழ்பாடும் சத்யராஜ் எத்தனை முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தியிருக்கிறார்? முருகன் கடவுள் இருக்கிறார் என்பதை ஒத்துக் கொள்கிறாரா? கி.வீரமணியிடம் முருகன் புகழ்பாடுவாரா?

மற்ற மதங்களை பற்றி பேச தைரியமற்ற கோழை, இந்து மதத்தை மட்டும் இழிவுபடுத்தி பேசுகிறார். நடிகர் சங்கம் இதை கண்டிக்க வேண்டும்.

"தமிழ் உணர்வு' சத்யராஜ் தமிழ்நாட்டு பெண் நடிகைகளுடன் மட்டும் தான் நடிப்பேன். வேறு மாநில நடிகைகள் வேண்டாம் என்று சொல்வாரா?


ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் சீக்கிரம் நிறைவேற அரசை வற்புறுத்துகிறோம். மத மோதலை உருவாக்கும் சத்யராஜை வன்மையாக கண்டிக்கிறோம்.


18 Comments:

Anonymous said...

Can Sathyaraj let us know if Jesus and Allah are tamil gods, if not does he have the guts to ask xtians and muslims not to pray to them ?

Raja said...

//"தமிழ் உணர்வு' சத்யராஜ் தமிழ்நாட்டு பெண் நடிகைகளுடன் மட்டும் தான் நடிப்பேன். வேறு மாநில நடிகைகள் வேண்டாம் என்று சொல்வாரா?"//

சூப்பர்....
சத்தியராஜை பொறுத்தவரை கடவுள் போன ம___ போன மாதிரி ஆனா நமிதா போன உசுரே போன மாதிரி.

Anonymous said...

Ramagopalan is a joker and agent of BJB, he does not have guts to talk about karnataka BJB he is talking about Sathyaraj

Anonymous said...

one actor speaks loose talk,another stupid politician wants to create political gain ,why UN nesessarily we have to talk about other religions,lets think all

Anonymous said...

I am slo giviing a idea=
I request united nations peace keeping force for Hokenkal issue and solve the problem of which God should be worshipped in Tamil nadu
hihihi

இத்துப்போன ரீல் said...

சத்தியாராஜ் அப்பட்டமான,கடைந்தெடுத்த கோழை.
இந்துமதம் என்பதால் தெய்வதிற்கே மாநிலம் பிரிக்கிறார்.அந்த தெய்வங்களை கும்பிடாதீர்கள் என்கிறார்.வேற்று மதத்தில் உள்ள வெளிநாட்டுத் தெய்வங்களை என்ன செய்வது என்று சொல்லுமா?.அந்த கடைந்தெடுத்த கோழை.ஒகேனக்கல் பிரச்சனையில் கடவுளை ஏன் இழுக்க வேண்டும்.ஷூட்டிங் இடைவேளையில் நமீதாவிடம் வேறு டிஸ்கஷனில் ஈடுபடுவதை விட சாமி டிஸ்கஷனில் ஈடுபடட்டும்.

scssundar said...

வீரத்துறவி அவர்கள் சொல்வது மிக்க சரி...

முதலில் இவர் வெளி மாநில நடிகைகள் உடன் நடிக்காமல் மறுப்பு தெரிவிக்கட்டுமே? பணம் வந்து கொட்டுவது நின்றுவிடுமே.. கண்டிப்பாக் செய்யமாட்டார்.

நமது தமிழ்நாட்டில் இந்துகடவுள்களை திட்டி பெயர் வாங்குவது மிகச்சுலபம்.

williamssoloman said...

கதையல்ல நிசம்.

இடம்: முடிதிருத்தும் நிலையம், அஜ்மான், ஐக்கிய அரபு எமிரேட்.

சுமார் 6 வயது நிறைந்த சிறுவன் ஒருவனை அழைத்துக்கொண்டு முடிதிருத்துவதற்கு நடுத்தர வயது வாலிபர் வருகிறார். கடையில் இரு முடிதிருத்தும் தொழிலாளிகள் அவர்களுக்கு முடிதிருத்துவதற்கு தயாராகின்றனர்.
கீரிச்,,, சப்தத்துடன் ஒருவாகனம். உள்ளே ஒட்டுனரையும் சேர்த்து மூவர். சீருடை அணிந்துவண்ணம் உள்ளனர், அரபியில் அவர்கள் கடையில் உள்ளவர்களிடம் ஏதோ கேட்க ஒருவர் அவருக்கு சளைக்காமல் பதிலளிக்கிறார். பின்னர் தான் அவர்கள் பலூதியா (மாநகராட்சி அலுவலகத்தை)வை சேர்ந்தவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் எனவும் தெரியவந்தது.
அவர்கள் கடையின் ஒவ்வொரு பகுதிக்கும், அங்கே உள்ள மேசை மற்றும் அதனுள் உள்ள ட்ராயர், அவர்களது தொழில்சார்ந்த கருவிகள் , சுத்தம் செய்யும் கருவி என அனைத்தையும் சோதனையிடுகின்றனர்.

பின்னர் கடையின் உள்புறம் ஒரு தடுப்பு உள்ளது. அதனுள்ளே ஒரு அதிகாரி நுழைகிறார். அங்கே சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, மேலும் திருப்தி அடையாதவராய் அங்கே திரைசீலையினால் மூடப்பட்டுள்ளதை தன் ஆர்வ்த்தினால் திறந்துபார்க்கிறார். அங்கே இந்துகடவுளின் படங்கள் வைக்கப்பட்டு அதற்கு இந்த இரு ஊழியர்கள் ஊதுவத்தி ஏற்றி வணங்கி வந்துள்ளனர்.அதனை ஒரு ஏளனமாக பார்த்துவிட்டு தனது மேலதிகாரியை அழைத்து அவர்கள் மொழியான அரபியில் ஏதோ கூறுகிறார்.ஒரு ஊழியர் மிக அதிக காலம் அந்த நாட்டில் பணியாற்றியிருப்பதால் அவருக்கு அந்த மொழி மற்றும் அவர்களின் பண்புகள் அனைத்தும் அத்துப்படி.அந்த அதிகாரி ஏதோ அவர்கள் வந்ததிற்கு சோதனை செய்ததனை அறிக்கையாக எழுதி ஒரு காப்பியை ஊழியர்களிடமும், ஒன்றை அவர்களும் வைத்துக்கொண்டு அவர்கள் கிளம்பிச் சென்றனர். இப்பொழுதுதான் விடயமே,

ஊழியர் 1: சே! என்ன மனுசாங்கப்பா? நம்மகடவுள கும்பிடக்கூட உடமாட்டேங்கிறாங்க. நாமதான் அத மறச்சி வச்சிதான கும்பிடுறோம், ஏன் இப்பிடி நடந்துகிறாங்க?
ஊழியர் 2: இத ஒன்னும் செய்யமாட்டாங்க, விடுங்க இவனுங்க அறிவு இவ்வளவுதான்.
ஊழியர் 1: அப்படியில்ல, நாம நம்ம கடவுள கும்பிடுறோம், அவனுங்களுக்கு என்ன ஏதாவது பிரச்சின கொடுத்தோமா? நம்ம நாட்டுல இப்படியா?

யாருவேணும்னாலும் யார வேணாலும் கும்பிடலாமில்லையா?
சிறுவன் : அப்பா! நம்ம சாமிய இவங்களுக்கு தெரியாதாப்பா?
அப்பா : ஆமாண்டா செல்லம் அவங்களுக்கு நம்ம சாமிய தெரியாதுடா கண்ணு !?
சிறுவன் : பாட்டி சொன்னிச்சு, சாமி இந்த உலகத்துல இருக்கிற எல்லாத்தையும் நம்ம சாமி தான் கொடுத்துச்சு, மரம் செடி, காக்கா, நாய், குரங்கு, நான் அப்பா, அம்மா, வீடு எல்லாத்தையும்னு சொன்னிச்சுப்பா!! ஆனா நீ சொல்ற அவங்களுக்கு சாமி தெரியாதுங்கிற. எப்படிப்பா? அவங்க பாட்டி சொல்லலையா? அவங்கள நம்மசாமி கொடுக்கலையா?(படைக்கலையா)

அப்பா : அது இல்லடா? இது வேற

சிறுவன் : சொல்லுப்பா! என்னன்னு சொல்லு,
ஊழியர்: தம்பி, கண்ணு நீ ரொம்ப சின்னப்பையன், உனக்கு அப்புறமா எல்லாம் சாமி சொல்லித்தரும்,
அங்கிள் நீங்க என்ன ஏமாத்துறீங்க. என்கூட ஒரு பிரண்ட் படிக்கிறான், அவனுக்கும் நம்ம சாமியத்தெரியல. பாட்டி சொன்னிச்சு, பிரம்மா இந்த உலகம் மக்கள் உயிர்கள் எல்லாத்தையிம் படைச்சார்னு, விஷ்ணு எல்லாத்தையும் பாதுகாக்கிறர்ர்னு, சிவன் பெரியவங்களாக்கி சாவடிக்கிறார்னு.மித்த சாமியெல்லாம் நம்மள அங்க அங்க பாத்துகிறதுக்காக இருக்காங்கனு பாட்டி சொன்னிச்சு. அப்பிடின்னா சாமிய எல்லாருக்கும் தெரியனும்தானே. சொல்லுங்க அங்கிள். அப்பயேன் சாமிய என்னோட பிரண்ட்டுகுத்தெரியல.?

ஊழியர்: இந்த அளவு நான் யோசிச்சிருந்தேன்னா, நான் இந்த வேலைக்கே வந்திருக்கமாட்டேன்.

தலைவரே (சிறுவனின் அப்பாவை பார்த்து) உங்க பையனுக்கு கொஞ்சம் எல்லாமே அதிகம் போல நீங்களே பதில் சொல்லிடுங்க. நாங்க ஏதாவது தப்பா சொல்லிடப்போறொம்.
சிறுவன் அப்பாவை பார்த்து என்னப்பா, பதில் சொல்லமாட்டேங்குற ?
டேய், இத ஒன் பாட்டிக்கிட்டப்போய் கேளுடா? ரோதனை பண்ணிகிட்டு.
அப்பொழுது நான் குறுக்கே புகுந்து தம்பி எல்லாம் மனுசன் உண்டாக்குனது. அதனால நம்ம உண்டாக்குனது அவனுக்கு தெரியாது, அவன் உண்டாக்குனது நமக்கு தெரியாது. இயற்கையோட வேலைப்பா! இது ஒனக்கு இப்ப புரியாது சமயம் வரப்ப இது தானா புரியவரும். நல்லா படி பள்ளிக்கூட புத்தகத்தை மட்டுமல்ல அறிவு வளற்ற மாதிரி உள்ள புத்தகத்தையெல்லாம் படி.
சிறுவனின் தந்தை: ஹாலோ !! யாருங்க ? நீங்க குழந்தையை !!!!!!!!!!

குழப்புறது. குழம்புவது, நானா, நீங்களா, அல்லது அந்த குழந்தையா?
விடையுண்டா இந்த சிறுவனின் கேள்விக்கு ?????????????

இந்த கதையே என் பதில். விடைகொடுங்க ஆத்திக நண்பர்களே, அவர்கள் இந்துவோ, முஸ்லீமோ, கிருத்துவனோ, அல்லது எந்த மதத்தவனோ, எதிர்நோக்கும்,

வெங்கி said...

சத்யராஜ் என்னமோ நாட்டு மக்களுக்காக சேவை செஞ்சி களைச்சி போயிட்ட மாதிரி பேசுறாரு... இந்த உண்ணாவிரதம் கன்னட வெறியர்களை கண்டித்து என்பதை அவர் உணரவில்லை போலும்...இந்த பந்த் கடவுள்களை கண்டித்து என்று எடுத்துக்கொண்டாரோ ? பெரியார் வேஷம் போட்டால் பெரியார் ஆகி விட முடியுமா ? பெரியார் தான் கடவுள்களுக்கு against... அவர் வீட்டிலே..சாமி கும்பிட்டது..யாருக்கு தெரியும் ?

புல் ஆக சரக்கு அடித்து விட்டு இந்த மாதிரி மேடை ஏறினால்.... சகட்டு மேனிக்கு உளறிக் கொட்ட தான் தோன்றும்...இதற்க்கு சத்யராஜ் சான்று...ராமகோபாலன் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்...

சோத்தில் உப்பு போட்டு தின்னுபவராய் இருந்தால்..கிறிஸ்துவர், இஸ்லாமியர் கடவுள்களை பழித்து பேசட்டும்...சொட்டை மண்டையில்...ஆப்பு ஆடித்து விடுவார்கள்.... தின்றது பீ அல்லவா ? அதான் ஊருக்கு இளிச்ச வாயன் இந்து தமிழன் ... முதலில்...சத்யராஜ் போன்ற உள்ளூர் பகுத்தறிவு புண்ணாக்குகளை உதைக்க வேண்டும்...அப்பால ஸ்டேட் விட்டு ஸ்டேட் போகலாம்..

ஜயராமன் said...

/// மித்த சாமியெல்லாம் நம்மள அங்க அங்க பாத்துகிறதுக்காக இருக்காங்கனு பாட்டி சொன்னிச்சு. அப்பிடின்னா சாமிய எல்லாருக்கும் தெரியனும்தானே. சொல்லுங்க அங்கிள். ///

நம்மைக் காப்பவர்களை - காப்பவைகளை - எல்லாம் நமக்குத் தெரியவேண்டும் என்று எப்படிச்சொல்கிறீர்கள். ஒரு குழந்தைக்கு நம்மை எதிரிகளிடமிருந்து யார் காக்கிறார்கள் என்று தெரியுமா? இடிதாங்கி எங்கே இருக்கிறது என்று கட்டிடத்தில் வாழ்பவர்களுக்குத் தெரியுமா? பண்டிகையில் போலிஸ் எங்கெங்கே நிற்கிறது - யார் அந்த போலிஸ் - என்று யாராவது பார்த்துக்கொண்டிருக்கிறார்களா? நாம் காக்கப் பட்டுக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே ஆன்மீக உணர்வு. அது யார், எப்படி என்று தெரிந்திருக்க வேண்டிய விவரம் பெரியவர்கள் மற்றும் ஆன்மீக சாத்திரங்களால் வருவது. நமக்கு இவ்வுலக விஷயங்கள் தெரிய வருவதும் இப்படித்தான்.

நன்றி

ஜயராமன்

muthu said...

சத்தியராஜ் காமடியன், அதைவிட கடைந்தெடுத்த காமடியன் இந்த ராமகோபால பண்ணாடை.

Anonymous said...

உலக அளவில் பிரச்சனை வந்தா அவர் இயேசுவுக்கும் அல்லாவுக்கும் எதிரா பேசுவாரு. இப்ப பிரச்சனை மாநில அளவில் அப்போ மாநிலக் கடவுள்களைத்தான் ஏச முடியும். அல்லா எங்க மாநிலத்துலேந்து உங்க மாநிலத்துக்கு வரும்போது நீங்கெல்லாம் கொரங்கா இருந்தீங்கண்ணு எங்கேயும் எழுதலியே சாமி.

ஆனாலும் வெளி மாநில கதாநாயகிகளோட அவர் நடிக்கக் கூடாதுண்றது மோசமான கோரிக்கை. நம்ம ஊர் பெண்கள் 'அந்த' மாதிரி டிரெஸ் போட்டு குத்தாட்டம் போடுறது நம்ம 'கல்சருக்கு' மோசம்ணு அவருக்குத் தெரியாதா என்ன? அதாங்கன்ணு அப்டீ..

சத்யராஜ் இன்னொரு கன்னடாக்கார தமிழ் தலைவர கணக்குல எடுத்துக்காம டீல்ல வுட்டாரு பாரு அதான் சூப்பரு.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Dey Anony,

Satya Raj is not Puratchi Thamizhan. He is a Porukki Thamizhan. No true devotee will talk bad about any other God. In that regard, you are NOT a Murugan devotee but only a Mirugam devotee.

aarkkam said...

Hei guys, His saying was right but none of you will understand caz none of you matured a day might come to understand his words. Until then learn to listen.

Anonymous said...

Mr. Anonymous, in many places sathyaraj said there is no God. He made fun of our cluture. Whats your comment on that?

Anonymous said...

Why Ramagopalan going every wher with BLACK CATS? why does not he believe his god/godesses ?
H is another porruki cheeting people in the name of religion.
Do not to be cry baby, Iam also a Hindu.