பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 16, 2008

‘குஜராத் டுடே’ - மோடி பேட்டி - கல்கி

கல்கியின் வந்த 'குஜராத் டுடே' கவர் ஸ்டோரியில் வந்த
1. மோடி பேட்டி
2. குஜராத் எதிர்க்கட்சிக் தலைவர் + தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டிஇந்தியாவின் மாநில முதலமைச்சர்களில், தம்முடைய செயல்பாடுகளுக்காக அதிக மான அளவுக்குப் பாராட்டுகளுக்கும், விமர்சனத் துக்கும் உள்ளான நரேந்திர மோடி பொதுவாக பத்திரிகைகளுக்குப் பேசாதவர். கல்கிக்கெனப் பிரத்யேகப் பேட்டியளித்தார். ‘குஜராத் டுடே’ யின் சிகரமாக இதோ அவர் பேட்டியிலிருந்து...

முதல் முறையாக குஜராத் முதல்வரானபோது உங்கள் கனவு என்னவாக இருந்தது?

“1995ஆம் ஆண்டுக்குப் பிறகு நான் குஜராத்திலேயே இல்லை. எதிர் பாராதவிதமாகவே முதலமைச்சர் பொறுப் பேற்றுக் கொண்டேன். அப்போது பூகம்பத் தின் தாக்குதலால், குஜராத் நிலை குலைந்து போயிருந்தது. மக்கள் மனத்தில் மீண்டும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும் என்பதே என் தலையாய கடமையாக இருந்தது. அதனைத் தொடர்ந்து, இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. ஒன்று குஜராத்தைச் செழிப்பான ஒரு மாநிலமாக்க வேண்டும். இரண்டாவது, அந்தச் செல்வம், அனைத்துத் தரப்பினருக்கும் பரவலாக அளிக் கப்பட வேண்டும். அதற்காகச் சரியான முறை யில், தீர்க்கதரிசனத்துடன் திட்டங்களை உருவாக்க வேண்டி இருந்தது.”

உங்கள் கனவினை நனவாக்க என்னென்ன சவால்களை எதிர்கொண்டீர்கள்...?

“நான் பதவிக்குப் புதியவன் என்பதால்,- முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டு, முதல்முறையாகத் தலைமைச் செயலகத்துக்கு வந்தபோதுதான், ஒரு மாநில முதலமைச்சரது அறை எப்படி இருக்கும் என்றே தெரிந்து கொண்டேன். அரசாங்கத்தின் நடைமுறை எப்படி இருக்கும் என்பதும் எனக்குத் தொி யாது. அரசாங்கக் கோப்புகளை எப்படிப் படிக்க வேண்டும்? என்றெல்லாம் என் னுடைய பிரதம செயலாளர்தான் சொல்லிக் கொடுத்தார். எனவே, அரசு அதிகரிகள் எல்லாரும் நான் எப்படிப்பட்டவன்? நான் என்ன செய்யப் போகிறேன்? என்று கூர்ந்து கவனிக்கலானார்கள்.

அரசாங்கத்தின் அதிகாரம், நிதி நிலைமை போன்றவற்றைத் தெரிந்துகொண்டேன். ஆனால், மக்களின் தேவை என்ன என்பது எனக்கு எப்போதுமே நன்றாகத் தெரியும். அரசாங்கத்தின் மனித வளமாகட்டும், அதன் இயந்திரங்களாகட்டும், திறமையை முழுமை யாகப் பயன்படுத்தி, மக்கள் பயன்பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எனது லட்சியமாக இருந்தது.”

சிரஞ்சீவி, கன்யா கேல்வாணி, ஜோதி கிராம் போன்ற திட்டங்களைச் செயல்படுத் தும் எண்ணம் எப்படி வந்தது?

“நான் முதல்முறை முதலமைச்ச ராகப் பொறுப்பேற்றவுடன், பல் வேறு துறைகளின் செயலாளர்களையும் சந்தித்தேன். அந்தக் கூட்டத்தில், கல்வித் துறை செயலாளர், “நாட்டிலேயே, குஜராத்தில் தான் பெண் குழந்தைகள் கல்வி மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிறது என்று கூறினார். அது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. அதிர்ச்சி யின் விளைவே கன்யா கேல்வாணி திட்டம். நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில், எனக்கு அளிக்கப்படும் அனைத்துப் பரிசுப் பொருட் களும் ஏலம் விடப்பட்டு, அதன் மூலமாகக் கிடைக்கும் பணம், பெண் குழந்தைகள் கல்வித் திட்டத்துக்காகப் பயன் படுத்தப்படு கிறது. இதுவரை, அப்படிக் கிடைத்துள்ள தொகை மட்டும் பதினான்கு கோடி ரூபாய்.

‘இரவு சாப்பிடுகிற நேரத்தில்கூட மின் சாரமில்லையே!’ என்று வருத்தப்பட்டார்கள். அவர்கள் பிரச்னைக்கு என்ன தீர்வு என்று யோசித்தபோது, பிறந்ததுதான் ஜோதிகிராம் திட்டம். இன்று மாநிலத்தின் அனைத்துக் கிராமங்களிலும், வீடுகளுக்குத் தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது.

அதேபோல, ஏழைமை மற்றும் மருத்துவ வசதி இல்லாத காரணத்தால், பிரவசத் தின்போது கிராமத்தில் இருக்கும் கர்ப்பிணிப் பெண்களும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் மரணமடைவது அதிகமாகவே இருந்தது. அவர்களை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு வரவழைத்து, இலவச மாகப் பிரசவம் பார்த்துக்கொள்ள அரசாங்கம் செயல்படுத்தும் திட்டம்தான் சிரஞ்சீவி. இந் தத் திட்டங்களால் கிராம மக்கள் நேரடியாகப் பயன்பெறுவதை மாநிலத்தின் எந்தக் கிரா மத்துக்குச் சென்றாலும் பார்க்கமுடியும்.”

நர்மதா அணை பிரச்னையில், மத்தியப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் இன்னும் இழுபறி இருக்க... குஜராத்தில் மட்டும் எப்படி இத்தனை வேகமாகப் பணிகள் நடக் கின்றன?

“நான் ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண் டால், அதைச் செம்மையாகச் செய்து முடிக்கும் வரை ஓயாமல் உழைக்கும் மரபில் வந்தவன். ஒரு சங்கிலித் தொடர்போல, அரசாங்கத்தின் அத்தனை அங்கங்களி லும் இந்த உணர்வு தொடர ஆரம் பித்திருக்கிறது. குஜராத் மக்களுக்கு, பெரிதும் பயனளிக்கும் நர்மதா திட்டத்தை, எவ்வளவு சீக்கிரம் முடித்து முழு பலன் கிடைக்கச் செய்ய முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பது அர சின் துடிப்பாக இருக்கிறது. மேலும் அரசாங்கத்தோடு மக்களும் இந்தத் திட்டத்தில் கைகோத்துச் செயல்பட்டுப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.”

ஆனாலும், அணையின் மேற்பகுதியில் மதகுகள் அமைப்பது தாமதமாகிக் கொண் டிருக்கிறதே?

“மத்திய அரசின் அனுமதிக்காகக் காத் திருக்கிறோம்.”

மத்திய அரசு வேண்டுமென்றே தாமதம் செய்வதாக நினைக்கிறீர்களா?

“நான், இந்த விஷயத்தில் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை.”

குஜராத் தேர்தலின்போது, நீங்கள் எழுப் பிய ‘ஜிதேகா குஜராத்’ (குஜராத்தின் வெற்றி) என்ற கோஷத்தின் பின்னணி என்ன?

“ஜிதேகா குஜராத் என்பது, தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கோஷம் அல்ல. சுதந்திரத் துக்கு முன்பு, ‘வந்தே மாதரம்’ என்ற கோஷம், நம் நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டியது. எனவே, அப்படி உந்து சக்தி ஓர் இயக்கத்துக்கு அவசியம் என நினைத்து, ‘ஜிதேகா குஜராத் என்ற கோஷம் உருவானது. அண்மையில், குஜராத்துக்கு அகில இந்திய விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகள் கிடைத்தபோதுகூட, ‘ஜிதேகா குஜராத்!’ என்றுதான் குறிப்பிட்டேன்.”

குஜராத்தில் பல்துறை வளர்ச்சி காணப்பட்டாலும் விளையாட்டுத் துறையில் போதிய அளவு வளர்ச்சி இல்லையே?

“சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, அகில இந்திய அளவில் விளையாட்டுப் போட்டி களில் குஜராத் சாதனை படைக்கவில்லை. ஆனால், கடந்த மூன்றாண்டுகளில் குஜராத் வென்றிருக்கும் தங்கமெடல்களின் எண் ணிக்கை, முந்தைய ஐம்பது வருடங்களில் ஜெயித்ததைவிட அதிகம். இதற்கென பிரத் யேகத் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. அதன் பலனை முழுமையாகக் காண்பதற்கு இன்னும் சில ஆண்டுகளாகும்.”

இந்தியா முழுக்க, இலவசங்கள் வழங்கு வது பிரபலமாகி இருக்க, குஜராத் தேர் தலின்போது, ‘இலவசம் ஏதும் கிடையாது. வரிக், கடன் பாக்கி இருப்பவர்களுக்கு நோட் டீஸ் கொடுப்பேன்’ என்று சொல்லி யிருந்தீர்களே?

“மக்கள், எதையும் இலவசமாகக் கேட்கவில்லை. அவர்கள் கேட்பது நல்ல ஆட்சி; நல்ல சேவைதான். அதற்குரிய கட்டணத்தைச் செலுத்த அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஏழைகள்கூட எதையாவது கொடுத்தால், இலவசமாக வாங்கிக் கொள்வது கிடையாது. தம்மால் முடிந்த சிறு தொகையைத் தருவது தான் இந்த மண்ணின் மரபு.”

உங்களை ஒரு சிலர் சர்வாதிகாரி என்று குற்றம் சாட்டுகிறார்களே?

“எதற்காக என்னை இப்படிச் சொல்கிறார் கள் என்று எனக்குத் தெரியாது. விமர்சனம் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், அவர்களுக்குப் பதில் சொல்லுவதன் மூலம் எனது சக்தியை விரயம் செய்ய எனக்கு விருப்பமில்லை. மற்றவர்கள், இலவசங்களை வழங்கி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக் கிறார்கள். நான், அதிகாரத்தில் இருக்கிறேனா, இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படா மல், அதிகாரம் மக்கள் கையில் இருக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.”

பூகம்பப் பாதிப்பிலிருந்து மிகக் குறுகிய காலத்திலேயே குஜராத்தை எப்படி மீட்க முடிந்தது?

“பூகம்பத்தால் குஜராத்தின் பதிமூன்று மாவட்டங்களில், ஆறாயிரம் கிரா மங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட் டன. பல்முனை பாதிப்புகளிலிருந்து மீள் வது அத்தனை சுலபமில்லை என்பது புரிந்தது. ஆனாலும், முற்றிலுமாக மீள உரிய நடவடிக்கை எடுக்காவிட் டால், குஜராத் வேறு எந்தவகையில் முன்னேற்றம் கண்டாலும், பலன் இல்லை என்று உணர்ந்தேன். அதற்கான நடவடிக்கைளில் மாநிலமே முழு மூச்சாய் இறங்கியது. கோடிக்கணக்கான நிதி உதவியை ஒதுக்கினோம். மக்களை வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்கச் சொல்லி, நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிலேயே பணத்தை வழங்கி, இடைத்தரகர்களையும், ஊழலையும் இல்லா மல் செய்தோம். நாட்டிலேயே முதல் முறை யாகப் பேரழிவு நிர்வாக ஆணையம் அமைக் கப்பட்டது குஜராத்தில்தான்.”

‘மலம் அள்ளினால் சொர்கத்துக்குப் போகலாம்’ என்பதாக நீங்கள் பேசியது தமிழ்நாடுவரை சலசலப்பை ஏற்படுத் தியதே. ஏன் அப்படிப் பேசினீர்கள்?

“இது மிகவும் அபத்தமானது. நான் அப்படிப் பேசவேயில்லை. குஜராத்தில் ஏழு மாநகராட்சிகள் உள்ளன. அவற்றில் ஜாம்நகர், பரோடா ஆகிய இறு மாநகராட்சிகளிலும் மேயராக இருக்கும் என் கட்சியைச் சேர்ந் தவர்கள், அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள். அப்படி இருக்கும்போது, நான் இப்படிப் பேசுவேனா?”

சென்னையில் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவைச் சந்தித்தபோது என்ன பேசினீர்கள்?

“நான் சொல்ல வேண்டியதை, கட்சித் தலைமையிடம் சொல்லிவிட்டேன். அதற்கு மேல் அது பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.”

உங்களை, ‘பிரதமர் பதவிக்குரிய எதிர்கால வேட்பாளர்’ என்று குறிப்பிடு கிறார்கள். தேசிய அரசியலில் ஆர்வம் உண்டா?

“ஒவ்வொரு மாநில முதலமைச்சருமே, தேசிய அரசியலின் அங்கம்தான்.”

குஜராத்தில், பூரண மது விலக்கை அமல் படுத்துவதில் நீங்கள் எத்தகைய சவால்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறது?

“அரசாங்கத்துக்கு எந்த விஷயத் தைச் செயல்படுத்த வேண்டுமென்றா லும், ஏதாவது கஷ்டங்கள் இருந்துதான் தீரும். மது விலக்கைப் பொறுத்தவரை, மக்களுக்கு அறிவூட்ட வேண்டும். அர சியலுக்கு அப்பாற்பட்டு சமூக - சமயத் தலைவர்கள் இந்த விஷயத்தில் சிறப்பான முறையில் பங்காற்ற முடியும்.”

2002 கலவரத்தின் வடு இன்னும் மாற வில்லை. மாநிலத்தின் முதலமைச்சர் என்ற முறையில், பாதிக்கப்பட்ட மக்களின் மனத் தில் உள்ள பயத்தைப் போக்க வேண்டியது உங்கள் கடமை அல்லவா?

“இதுபோன்ற விஷயங்கள் இப்போது சுப்¡£ம் கோர்ட்டில் இருக்கின்றன. தீர்ப்பு வரட்டும்.”

குஜராத்திலும், அகில இந்திய அள விலும், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

“நான் ஜோதிடர் அல்ல.”

இந்தியாவின் பல பகுதிகளிலும் குடும்ப வரிசு அரசியல் போற்றி வளர்க்கப்படும் சூழ்நிலையில், நீங்கள் உங்கள் குடும் பத்தினரை ஒதுக்கி வைத்துவிட்டு, தனி மனிதராக வாழ்கிறீர்களே?

“நீங்கள் சொல்வது தவறு. நானும் எனது குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். எனது குடும்பம் மிகமிகப் பெரியது, அதில் குஜராத்தின் ஐந்தரை கோடி மக்களும் இருக்கிறார்கள்.”

வரிசு அரசியல் பற்றி உங்கள் கருத்து தான் என்ன?

“நான் கருத்து தெரிவிக்க விரும்ப வில்லை.”

ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர்... குஜராத் முதல்வர்... எது மகிழ்ச்சி?

“மகிழ்ச்சிக்கும் நான் ஏற்றிருக்கும் பொறுப்புக்கும் சம்பந்தமில்லை. எங்கே, எப்போது, எந்தப் பணியில் இருந்தாலும், மக்களுக்குப் பணியாற்ற என்னை அர்ப் பணித்துக் கொண்டிருக்கிறேன்.”

மதச்சார்பின்மை என்பதற்கு உங்களது விளக்கம் என்ன?

“நம் நாட்டில் இன்றைக்கு மிகவும் தவ றாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை மதச் சார்பின்மை. சிலருக்கு மதச்சார்பின்மை என்பதற்குப் பொருள் ஓட்டு வங்கி. இன்னும் சிலருக்கு மதச்சார்பின்மை என்பது, அகில உலக அளவில் விருதுகளும், நிதி உதவி களும் பெறும் வழி. இதுபோன்ற மதச் சார்பின்மையை ஆதரிக்கமாட்டேன். என் னைப் பொறுத்தவரை மதச்சார்பின்மை என் றால் நல்லாட்சி; மக்களின் நலன்!
எதிர் கட்சிகளின் பேட்டி

குஜராத்தில், முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியையும், நிர்வாகத்தை யும் பற்றி பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் என்ன நினைக்கிறது? அறிந்துகொள்ள குஜராத் சட்டமன்ற எதிர்க்கட்சிக் தலைவர் சக்திசிங் ஹரிசந்திரசிங் கோஹிலைச் சந்தித்தோம்.

நரேந்திர மோடி மீண்டும் முதலமைச்ச ராகியிருப்பதற்கு என்ன காரணம்?

“மதக்கலவரம் இன்னும் ஆறவில்லை. மத உணர்வுகளைத் தூண்டி மக்களைப் பிளவு படுத்தி மீண்டும் முதலமைச்சராகி இருக்கிறார் மோடி.”

காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வி யினைச் சந்தித்துள்ளதே..?

“நாங்கள் மக்களின் நாடியைச் சா¢யானபடி கணிக்கவில்லையோ என்று நினைக்கிறேன்.”

மோடியின் ஆட்சியின் கீழ் குஜராத் அபாரமான வளர்ச்சி அடைந்துள்ளதே..?

“அதை நான் ஒப்புக்கொள்ளவே மாட் டேன். மோடி, ஒரு சிறந்த மார்க்கெட்டிங் நிபுணர். எனவே, தமது பணிகளைச் சிறந்த முறையில், மக்கள் மத்தியில் வியாபாரம் செய்து, ஓட்டுகளைப் பெற்று வெற்றி அடைந்துவிட்டார். ஆனால், குஜராத்தின் உண்மையான நிலை அவர் சொல்வது போல சிறப்பாக இல்லை. குஜராத்தியர்கள் எப்போ துமே கடுமையாக உழைக்கத் தயங்காதவர் கள்; வியாபாரத்தில் சிறந்தவர்கள். மோடி, முதலமைச்சராவதற்கு முன்னரே குஜராத், நாட்டின் முதல்தர மாநிலமாகத்தான் இருந் தது. சொல்லப்போனால், இப்போது தர வா¢சைப் பட்டியலில் சற்றுக் கீழே இறங்கி இருக்கிறது. குஜராத்திகள், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் வல்லவர்கள். அண்மை யில் பங்குச் சந்தை அபாரமான எழுச்சி கண்ட போது, அதற்கும் தாமே காரணம் என்று பெருமை பட்டுக்கொண்டார் மோடி.”

மோடிக்கு இணையாகச் சொல்லும்படி காங்கிரஸ் கட்சியில் குஜராத்தில் தலைவர்கள் இல்லை என்பது பெரியதொரு குறைதானே?

“மோடி ஒரு தலைவரே இல்லை. அவர் ஒரு சர்வாதிகரி. அவரைப் போன்ற சர்வாதி காரத் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இல்லாமல் இருப்பதுதான் நல்லது.”

2002 கலவரத்துக்குப் பிறகு, குஜராத் மக்கள் மத்தியில் மதச் சார்பின்மை குறித்த கருத்து மாற்றமடைந்திருப்பதாக நினைக்கிறீர் களா?

“மதக் கலவரங்கள் என்பது குஜராத்துக்குப் புதிதல்ல. ஆனால், 2002 கலவரத்துக்குப் பிறகு, மதத்தின் அடிப்படையில் குஜராத் மக்கள் பிரிந்து நிற்கிறார்கள். மோடி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக இருப்பவர்களுக்கு அடைக்கலம் அளித்துப் பாதுகாக்கிறார்.”

மோடியின் அரசாங்கத்தில் லஞ்ச ஊழல் இல்லை என்று மக்களே ஒப்புக் கொள் கிறார்கள்...

“இதுவும் ஒரு பொய்ப் பிரசாரம்தான்.

குஜராத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம்?

“பிரகாசமாக இருக்கிறது. பாராளுமன்றத் தேர்தல் அதை நிரூபிக்கும்.”

சோனியா காந்தி, மரண வியாபாரி என்று மோடியை விமர்சனம் செய்தது, காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்புகளைக் கெடுத்து விட்டதே?

“இல்லவே இல்லை. சோனியாஜியின் பிரசாரம் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்குப் பொ¢ய அளவில் உதவியது.”

குஜராத் பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி என்ன நினைக்கிறார்:

உண்மையில் சொல்லப்போனால், குஜராத் மட்டுமல்ல... இந்தியாவின் எந்த மாநிலத்தை எடுத்துக்கொண்டா லும், அங்கே எதாவது வளர்ச்சித் திட்டங்கள் நடக்கிறது என்றால் அதற்குக் காரணம் மத்திய அரசுதான்.

அந்த நிதியுதவியைக் கொண்டு செயல் படுத்தப்படும் திட்டங்களை, தமது திட்டங் கள் என்று முலாம் பூசி மோசடி செய்கிறார் மோடி.

மற்றொரு பக்கத்தில் பார்த்தால், சட்டம்- ஒழுங்கு சந்திச் சி¡¢க்கிறது. குஜராத்தில் ஆங் காங்கே குறுநில மன்னர்கள் போல ரவுடிகள் ராஜ்யம் நடத்தி வருகிறார்கள். காந்தி பிறந்த மண்ணில் கள்ளச் சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் மூலம் உள்ளூர் ஆளும் கட்சி யினர் கோடீஸ்வரர்களாக மாறி வருகிறார்கள்.

‘மோடி இந்தியப் பிரதமராக வேண்டும்’ என்று விபா£த ஆசைகளைச் சொல்கிறார்கள். இந்தியாவின் ஒற்றுமையைக் கட்டிக் காப்ப தால் என்றைக்கும் முன்னணியில் இருக்கும், காங்கிரஸ் போ¢யக்கம் இதுபோன்ற துர திர்ஷ்டவசமான நிலை ஏற்பட ஒருபோதும் இடம் கொடுக்காது.


3 Comments:

Hariharan # 03985177737685368452 said...

//இந்தியா முழுக்க, இலவசங்கள் வழங்கு வது பிரபலமாகி இருக்க, குஜராத் தேர் தலின்போது, ‘இலவசம் ஏதும் கிடையாது. வரிக், கடன் பாக்கி இருப்பவர்களுக்கு நோட் டீஸ் கொடுப்பேன்’ என்று சொல்லி யிருந்தீர்களே?

“மக்கள், எதையும் இலவசமாகக் கேட்கவில்லை. அவர்கள் கேட்பது நல்ல ஆட்சி; நல்ல சேவைதான். அதற்குரிய கட்டணத்தைச் செலுத்த அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஏழைகள்கூட எதையாவது கொடுத்தால், இலவசமாக வாங்கிக் கொள்வது கிடையாது. தம்மால் முடிந்த சிறு தொகையைத் தருவது தான் இந்த மண்ணின் மரபு.” //

வாக்காளர் பொதுமக்கள் பற்றிய தனது இந்த தரமான எண்ணத்தின் காரணமாகவே மோடியை மக்களும் ஏற்கின்றனர்.

வாக்காளர் பொதுமக்களை மானமுள்ளவர்களாகப் பார்க்கும் தற்கால அரசியல்வாதி மோடி மட்டுமே உண்மையான மானமிகு!

Hariharan # 03985177737685368452 said...

//இந்தியா முழுக்க, இலவசங்கள் வழங்கு வது பிரபலமாகி இருக்க, குஜராத் தேர் தலின்போது, ‘இலவசம் ஏதும் கிடையாது. வரிக், கடன் பாக்கி இருப்பவர்களுக்கு நோட் டீஸ் கொடுப்பேன்’ என்று சொல்லி யிருந்தீர்களே?

“மக்கள், எதையும் இலவசமாகக் கேட்கவில்லை. அவர்கள் கேட்பது நல்ல ஆட்சி; நல்ல சேவைதான். அதற்குரிய கட்டணத்தைச் செலுத்த அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஏழைகள்கூட எதையாவது கொடுத்தால், இலவசமாக வாங்கிக் கொள்வது கிடையாது. தம்மால் முடிந்த சிறு தொகையைத் தருவது தான் இந்த மண்ணின் மரபு.” //வாக்காளர் பொதுமக்கள் பற்றிய தனது இந்த தரமான எண்ணத்தின் காரணமாகவே மோடியை மக்களும் ஏற்கின்றனர்.

வாக்காளர் பொதுமக்களை மானமுள்ளவர்களாகப் பார்க்கும் தற்கால அரசியல்வாதி மோடி மட்டுமே உண்மையான மானமிகு!

Litmuszine said...

"//உண்மையில் சொல்லப்போனால், குஜராத் மட்டுமல்ல... இந்தியாவின் எந்த மாநிலத்தை எடுத்துக்கொண்டா லும், அங்கே எதாவது வளர்ச்சித் திட்டங்கள் நடக்கிறது என்றால் அதற்குக் காரணம் மத்திய அரசுதான்.//"

கிருஷ்ணசாமிக்கு கருணாநிதி மேலே என்ன ஆத்திரம்? கருணாநிதி கொண்டு வந்த திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி தான் காரணம் தான் புலம்பி தள்ளிவிட்டார் !!!