பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 01, 2008

ஒகே ஒக்க க(ன)ல்லில் இரண்டு மாங்கா

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சிகளும் வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, திட்டம் நிறைவேற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அக்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

முக்கிய செய்தி: கன்னட அமைப்பை கண்டித்து சென்னையில் 4-ந்தேதி நடிகர்-நடிகைகள் உண்ணாவிரதம்.

மற்ற பேச்சுக்கள் கீழே..ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தொடங்க உள்ள இந்த நேரத்தில் கன்னட அமைப்புகள், கர்நாடக தமிழ் மக்கள் மீதும், அவர்களுடைய வர்த்தக நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

தமிழ் மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளனர். நமது பகுதியில் ஒரு திட்டம் தொடங்கப்படுவதை அண்டை மாநிலம் தடுப்பது கண்டிக்கத்தக்கது. பக்கத்து மாநிலத்திற்கு குடிக்கக் கூட தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று சகோதர மாநிலமே கூறுவது நாட்டின் இறையாண்மைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தாகும். இதில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? தமிழக அரசு இந்த திட்டத்தை உறுதியாக நிறைவேற்ற வேண்டும். அதேசமயம், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

ஞானசேகரன் (காங்.): கர்நாடகத்தில் உள்ள சில கன்னட அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் தமிழர்கள் மீது வன்முறை தாக்குதல்களை தொடங்கியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

முதலமைச்சர் பெரு முயற்சி எடுத்து இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிறகு சட்டமன்ற தேர்தலில் ஓட்டு வாங்கி குளிர்காய நினைக்கும் கூட்டத்தை மத்திய அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

1998 ஆம் ஆண்டே இந்த திட்டத்திற்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில் குறுகிய தேர்தல் நோக்கத்தோடு பிஜேபியைச் சேர்ந்த எடியூரப்பா இடையூறு செய்து வருகிறார். பல ஆண்டுகள் தமிழகம் அனுபவித்து வரும் ஒரு இடத்தை எல்லைப் பிரச்சனை என்று கூறி இப்போது கன்னடர்கள் எழுப்புவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.

ஜி.கே.மணி (பாமக): காமராஜர் காலத்தில் போடப்பட்ட இந்த திட்டத்திற்கு தற்போது தான் புத்துயிர் கிடைத்துள்ளது. இந்த சமயத்தில் பிஜேபியின் எடியூரப்பா ஒரு இனப்பிரச்சனைக்கு வித்திட்டிருக்கிறார். அவரது வஞ்சக வலையில் விழுந்து கன்னட வெறியர்கள் ஆட்டம் போடுகிறார்கள்.

40 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து விட்ட எல்லைப் பிரச்சனையை மீண்டும் வேண்டுமென்றே எழுப்பி இருப்பது வேதனையாக உள்ளது. கன்னட வெறியர்களின் இந்த நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்கு உரியது.

எல்லைப்பிரச்சனையை மீண்டும் எழுப்பினால், நாங்களும் அமைதியாக இருக்க மாட்டோம். பெங்களூரை எங்களூர் என்போம். மத்திய அரசை மதிக்காத மாநிலமாக உள்ள கர்நாடகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழகம் இன்னும் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்): இது தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் 40 ஆண்டுகால கனவுத் திட்டம். இதை தடுக்க நினைக்கும் கர்நாடக மதவெறி, இனவெறி சக்திகளின் நடவடிக்கைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை. இதனை மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் திட்டம் நிறைவேற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் இறையாண்மையை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்.

சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்): நீண்ட நாள் குடிநீர் பிரச்சனைக்கு மிகுந்த சிரத்தையோடு முதலமைச்சர் திட்டத்தை தொடங்க உள்ள நிலையில், பிஜேபியும், சில கன்னட அமைப்புகளும் தேவையற்ற பிரச்சனையை எழுப்புகின்றன.

குடிநீர் திட்டத்திற்கு எந்த தடையும் போடக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபையே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. காவிரியில் எந்த தீர்ப்பையும் மதிக்காத கர்நாடகா, இந்த விஷயத்திலும் தமிழகத்தை மிரட்டும் போக்கை கையில் எடுத்துள்ளது. இதில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும். இதில் தமிழக மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் வகையில் பந்த் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமகிருஷ்ணன் (மதிமுக): தமிழகத்தின் எல்லையில் அத்துமீறி நுழைந்து தமிழர் பகுதிகளில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருப்பதும், முதலமைச்சர் உருவ பொம்மையை எரித்திருப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மதிமுக ஆதரவு அளிக்கும்.

செல்வம் (சிறுத்தைகள்): தமிழ்நாட்டில் எப்போதெல்லாம் நல்ல காரியத்தை முதலமைச்சர் கொண்டு வருகிறாரோ, அப்போதெல்லாம் தமிழின விரோதிகள் எதிர்ப்பது வழக்கமாக உள்ளது. இந்த விஷயத்தில் தமிழக நடிகர்கள் கர்நாடக அரசுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்து சென்று பிரதமரை சந்தித்து இந்த திட்டம் நிறைவேற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஜயகாந்த்
இந்த திட்டம் குறித்தும், கர்நாடகத்தில் நடைபெறும் தாக்குதல்கள் குறித்தும் இங்கே பேசியவர்கள் விளக்கமாக சொன்னார்கள். இதுபோன்ற சம்பவங்கள் தற்போது அதிகமாக நடைபெற்று வருகிறது.

இதற்கு மற்றவர்களை காரணமாக கூறுவதற்கு முன்பு, நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய வேண்டும்.

ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடுகிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும் என்கிற பழமொழிக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். நமக்கு ஆடியும், பாடியும் கறக்கத் தெரியும்.

நாம் பயந்து கொண்டிருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் நாம் முன்னெச்சரிக்கையோடு அமைதி காக்கிறோம்.

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படி ஒரு புள்ளியை வைக்கும் போது காங்கிரஸ் கட்சி பயந்து நடுங்குகிறதோ, அதே போன்ற ஒரு புள்ளியை இந்த பிரச்சனையில் தமிழக அரசும் வைக்க வேண்டும். அப்போது தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும்
கலைஞர்
கடந்த மாதம் 27ந் தேதி உள்ளாட்சித் துறை அமைச்சர் இங்குள்ள அனைத்து கட்சியினரின் ஒருமித்த கருத்தோடு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். அந்த தீர்மானம் குறித்த விவரங்களை முழுமையாக அறியும் முன்பே மீண்டும் இந்த சபையின் சார்பில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி உள்ளோம்.

நமக்கும், கர்நாடக மாநிலத்தில் உள்ள சில மொழி வெறியர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த கசப்பு கூட ஒரு வகையில் வரவேற்கத்தக்க கசப்பாகவே உள்ளது.

இன்று ஒருநாளாவது இந்த அவை யில் ஒரே கருத்தில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, வழிமொழிந்து நிறைவேற்ற இருக்கிறோம்.

இப்படிப்பட்ட ஒரு நிலமைக்கு வழிவகுத்த ஒரு நிகழ்ச்சியாக கர்நாடகாவில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அமைந்து விட்டன.

தமிழ்நாடு, தமிழர்கள், தமிழ் மக்கள் என்றாலே கர்நாடகாவில் உள்ள ஒரு சில மொழி வெறியர்களுக்கு அறவே பிடிக்கவில்லை. தமிழர்கள் என்றாலே அவர்களுக்கு அலர்ஜியாக உள்ளது. தொடர்ந்து நம்மை வெறுப்பவர் களாகவே அவர்கள் உள்ளனர்.

அத்தகைய உணர்வை நீக்கும் வரையில் ஒருமைப்பாடு, இந்தியா வின் ஒற்றுமை என்று சொல்வ தெல்லாம் வெறும் வாய்மொழியாகத் தான் இருக்குமே தவிர வாய்மை நிறைந்ததாக இருக்க முடியாது.

சான்றாக உலகம் போற்றும் உத்தம ஞானி தமிழர்களுக்கு வழிகாட்ட திருக்குறள் தந்த திருவள்ளுவருக்கு கர்நாடகாவில் மதிப்பில்லை. அந்த நகரின் தமிழ்ச் சங்கத்தின் வாசலில் திருவள்ளூவர் சிலையை திறக்க முடியாமல் துணி கொண்டு மூடப்பட்டுள்ளது.

அதை திறக்க விடாமல் சில வெறியர்கள் தடுத்து வருவது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருக்கு ஒரு நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள். என்றைக்கு திருவள்ளுவர் சிலை திறக்கப்படு கிறதோ அதற்கு மறுநாள் நான் அங்கு வருகிறேன் என்று சொல்லி இருக்கிறேன்.

இப்படியொரு சூளுரையை செய்யும் அளவிற்கு எல்லோராலும் மதிக்கப்படுகிற திருவள்ளுவருக்கே இந்த கதி ஏற்பட்டிருக்கிறது.

இந்த திருவள்ளுவர் சிலையை நாம் திறக்க முடியாமல் தவிக்கும் கால கட்டத்தில் தண்ணீரும் கிடையாது என்று சொல்கிறார்கள். முன்பு பயிர் பச்சைகளுக்கு தண்ணீர் தர முடியாது என்று சொன்னவர்கள் இப்போது உயிர் காப்பதற்கும் குடி தண்ணீர் கிடையாது என்று சொல்லும் அளவிற்கு ஒகேனக்கல் பிரச்ச னையை கையில் எடுத்துள்ளனர்.

இந்த பிரச்சனையை அகில இந்திய அளவில் உள்ள அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த தீர்மானத்தை கொண்டு வருகிறோம்.

கடந்த மாதம் 27ந் தேதி நிறைவேற்றிய தீர்மானத்தின் இறுதியில், "தமிழகம் எப்போதும் தமது அண்டை மாநிலங்களுடன் அந்த மாநில மக்களுடன் நட்புணர்வையும், நல்லுணர்வையும் பேணி பாதுகாத்து வருகிறது.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேறு வதற்கு மத்திய அரசின் முழு ஒத்துழைப்பையும், உதவியையும் வேண்டுவதுடன் கர்நாடக மாநில அரசின் எதிர்ப்பையும் தடுத்திட ஆவண செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறோம்.
அந்த தீர்மானத்தில் இன்னும் சில வாசகங்களை இப்போது சேர்த்துள்ளோம்'.

அமைதி காக்கும் நோக்கத்துடனும், மாநிலங்கள் இடையே ஒற்றுமையை காண வேண்டும் என்ற நோக்கத் துடனும் இந்த அவையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் கர்நாடகாவில் சிலர் தமிழ்நாட்டிற்கும், தமிழர்களின் நலனுக்கும் விரோதமாக நடந்து கொள்ளும் போக்கு, நடத்து கின்ற கலகம் ஆகியவற்றை இந்த பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

இந்திய நாட்டின் இறை யாண்மையை, ஒற்றுமையை பேணி பாதுகாத்திடும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிற காரணத்தால் அந்த பொறுப்பை உடனடியாக நிறை வேற்ற முன் வரவேண்டும் என்றும், தமிழர்களின் உரிமையை காத்திட மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் இந்த பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என்ற வாசகங்களை சேர்த்திருக்கிறோம்.

இந்த தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்றியதற்கு மகிழ்ச்சி.
இந்த அளவோடு இன்றைய பிரச்சனையை நாம் நிறுத்தி வைக்கி றோம். இனி அங்கு (கர்நாடகா) என்ன நடக்கிறது என்று பார்த்து அதன் பின்னர் அணிவகுப்பது, பணி முடிப்பது எப்படி என்று அனைத்து கட்சித் தலைவர்களை கலந்து பேசி முடிவு செய்வோம்.
கர்நாடக பா.ஜ., செய்தி தொடர்பாளர் சுரேஷ்குமார்


கர்நாடக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிராக பா.ஜ., செயல்பட்டு வருகிறது என, தமிழக முதல்வர் கருணாநிதி கூறியது சரியல்ல. மூத்த அரசியல்வாதியான அவர், அதற்கு தகுந்தார் போல் செயல்பட வேண்டும். காவிரி நதி நீர் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ள சூழ்நிலையில், சர்ச்சைக்குரிய இடத்தில், தமிழக அரசு கூட்டு குடிநீர் திட்டத்தை மேற்கொள்வதை, பிரதமர் மன்மோகன் சிங் கண்டிக்கவில்லை. தி.மு.க., கூட்டணி கட்சி என்பதால், அவர் மவுனமாக உள்ளார்.

தமிழக அரசின், இந்த திட்டத்தை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு தொடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். கட்சியின் மேலிட பார்வையாளர் வரும் 5ம் தேதி, பெங்களூரு வருகிறார். அவருடனும், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்த பிறகு, இது குறித்து முடிவு செய்யப்படும்.

கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி
ஒகேனக்கல் திட்டத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி எரிகிற தீயில் எண்ணெய் வார்க்கிறார். 2 மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை பெரியதாக ஆக்காமல் பக்குவமாக கையாள வேண்டும். கருணாநிதியை போன்ற பெரிய அரசியல்வாதிக்கு, அவரது பேச்சு அழகை தராது. இப்பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு உடனே சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். முன்னாள் முதல்வர் தரம்சிங் கூறுகையில், ""ஒகேனக்கல் பிரச்னை பெரிதாக எடியூரப்பா தான் காரணம்,''

பிரச்சனை என்னவென்றால் மே மாதம் கர்நாடகத்தில் எலக்ஷன் வருகிறது.

10 Comments:

geeyar said...

ஏனுங்க இப்படிபண்றீங்க. இப்போ சோனியா என்னங்க பண்ணுவாங்க. பாவம் காங்கிரஸ் கர்நாடகத்திலும் அவுட்டா. பாவம் சோனியாவுக்கு நேரம் சரியில்லை. யாராச்சும் எதாச்சும் பண்ணி கர்நாடக தேர்தல் வரைக்கும் இப்பிரச்சனைய தள்ளிப்போடுங்க. எடியூரப்பா நல்லா விளையாடுறீங்கப்பா. யாராச்சும் இவரை நம்ம ஹாக்கி சம்மௌன தலைவராபோடுங்க. எதிரணி விளையாட திராணியே இல்லாம இருக்கும் போது கோல் மழை பொழிஞ்சிடுவாறுங்கோ!

Anonymous said...

Idu romba Kavalamana Politics. En ippti iruganu theriyala.
Vote vanga makkalin orrumaigu vattu vaikirangalai.

யோசிப்பவர் said...

இட்லிவடை,
இவர்கள் எல்லோரும் பாட்டில் தண்ணீர் தானே குடிப்பார்கள்?
(இதற்கு "இட்லிவடை பதில்கள்" பகுதியில் பதில் சொல்லலாம்;-))

இலவசக்கொத்தனார் said...

நம்ம ஊர் பிஜேபி என்ன சொல்லறாங்க?

சங்கு மாமா said...

இந்த கன்னட ரக்க்ஷன வேதிகே என்ற அமைப்பு...நம்ம ஊர்ல அந்த காலத்துல பா.ம.க எப்படி இருந்ததோ...(எதுக்கெடுத்தாலும்..மரத்த வெட்டி ரோட்டுல போடுறது..போது ஜன இடைஞ்சல் கொடுக்குறது..(இப்பவும் அது தான் செய்யுறாங்க..கொஞ்சம் தார்மீகமான வழியில..) காட்டு கும்பல் போல நடந்துக்கிறது..) அந்த ஸ்டைல் வழி ... ஒரு வேளை..டாக்டர் அய்யா குரூப் கிட்டே ட்ரைனிங் எடுத்து இருப்பாங்களோ ?

சமீபத்துல பெங்களூர் ரயில்வே ஸ்டேஷன் ல கன்னடா காரனுங்களை வேலையில வைக்கல ன்னு புகுந்து எல்லா கம்ப்யூட்டர், சாதனங்கள ஓடைச்சி ஆர்ப்பாட்டம் பண்ணினார்கள்..

இந்த கன்னட காட்டு மிராண்டிகள் அமைப்பு வருங்காலத்துல ஒரு அரசியல் கட்சியா வர (பா. ம. க மாதிரி) இப்போதிருந்தே ஆயத்த வேலைகளில் ஈடு பட்டுள்ள தாக தெரிகிறது... ஏதும் உருப்படுற மாதிரி சரியில்லை...இன்னொரு வாட்டி ஒகேனக்கல் உள்ளார வந்தானுங்கன்னாக்க கைய கால ஒடைச்சா சரிப்படும்...கேப்டன் சொன்னது தான் சரி...

Anonymous said...

இந்தப் பிரச்னையை ஊதி பெரிதாக்கி இந்த நிலைக்கு கொண்டுவந்த கருணாநிதியின் ராஜ தந்திரம் பிரமிக்கத்தக்கது. கர்நாடக பா.ஜ.க அதிமுகவுக்கு சில சீட்டு (சட்டசபை தேர்தலில்) ஒதுக்கப்போகிறது அதனால் தேசிய அளவில் கூட்டணி ஏற்படலாம். மேலும் சமீபத்திய ஒபீனியன் போலில் தமிழகத்தில் பா.ஜ.கவும் அதிமுகவும் கூட்டணி வைத்தால் திமுக-காங்கிரஸ் பெரிய வெற்றி பெறமுடியாது என்று செய்தி வெளியாகியுள்ள நிலையில், தற்போது அதிமுக கர்நாடகத்தில் யெடியூரப்பாவுடன் கூட்டு வைக்கமுடியாத நிலை என்பதால் ஒகே ஒக(ன) கல்லில் இரண்டு மாங்கா அடித்தது கருணாநிதியேதான். செல்வி வீட்டுக்கும், உதயாடிவி அலுவலகத்திற்கும் மட்டும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள். மற்ற தமிழர்கள், தமிழ் கடைகள் மற்றும் நிறுவனங்கள் தாக்கப்பட்டால் க்ருணாநிதிக்கு என்ன போச்சு ?


பெங்களூர்த் தமிழன்

http://www.hindu.com/2008/04/02/stories/2008040258110100.htm

The Vedike threatened to cut off rail and road transport between Karnataka and Tamil Nadu and close down industries and trade establishments owned by persons belonging to Tamil Nadu.

It decided not to allow Tamil films to be screened across the State until the issue was sorted out.

Tamil films and television programmes would go off the air from Wednesday.

Anonymous said...

Ilavasakothanar,

For your question "What is TN BJP guys saying?", my answer is "TN BJP will be saying the same thing as TN Sonia Cong. guys may say for former Karnataka Cong. CM Dharam Singh's remarks on Hogenakkal & MK's speech".

Venpu said...

// நம்ம ஊர் பிஜேபி என்ன சொல்லறாங்க? //

வீட்ல இருக்கிறப்ப "ப்ரொஜக்ட் மேனஜர் சரியில்ல, கேன்டீன்ல சாப்பாடு சரியில்ல" அப்படின்னு பொண்டாட்டிகிட்ட சொல்லணும்,
ப்ரொஜக்ட் மேனஜர்கிட்ட "பொண்டாட்டி டார்ச்சர் தாங்கல"ன்னு சொல்லணும்,
கேன்டீன் போனா "உங்க டேஸ்ட் உலகத்துல எங்கயுமே வராதுங்க, என் பொண்டாட்டியும் செய்றாளே சோறு" அப்படின்னு சொல்லனும்.

இதெல்லாம் உங்களுக்கு புரியுதுன்னா, தேசிய கட்சிகள் தமிழ்நாட்டுல என்ன சொல்றாங்க, கர்நாடகத்துல என்ன சொல்றாங்க அப்படின்னு கேட்கவே மாட்டீங்க.

Keyven said...

சிங்கம் இல்லாத காட்டில் நரி நாட்டாமை செய்யும் என்பார்கள்! இந்தியாவைப் போன்ற நாட்டுக்கு தைரியமும் நெஞ்சுரமும் உடைய தலைவர்கள் தேவை! இந்திராவைப் போன்ற தலைவர் இருந்தால், எடியூரப்பா,தாக்கரே, வாட்டாள் போன்ற போருக்கி அரசியல்வதிகளுக்கு, அடியில் வலி எடுக்கும்! இப்போதைக்கு இந்தியாவில் நெஞ்சுரம் உள்ள தேசிய தலைவர்கள் யாரும் இல்லை! சோனியா, ராஜ் தாக்கறேயின் ரவுடி தனத்தை மவுனமாக வேடிக்கைப் பார்க்கிறார்! அம்மணி ஜெயா, இரும்புக் கரம் கொண்டு அடக்குவதில் பெயர் போனவர்- ஆனால் அவர் வூழல் ராணியாக உள்ளார்! மோதி தைரியம் உள்ள தலைவர் என்பதோடு, இந்தியா முழுவதும் மோதிக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது! குஸராத்தில் வன்முறையை அடக்குவதில்,மோதி இன்னும் விரைந்து செயல் பட்டிருக்க வேண்டும்! ஆனால் கொடிரா ரயில் எறிப்பு சம்பவப் பின்னணி இல், மோதி மட்டும் அல்ல, யார் முதல்வராக இருந்தாலும் கலவரத்தைக் கட்டுப் படுத்த முடியாது! கலிங்கர் இதைப் போன்ற குடி நீர் திட்டங்களை காதும் காதும் வைத்தது போல முடிக்க வேண்டும்!தங்கள் அரசியல் லாபத்தீர்காக ஸ்டாலின் ஐ வைத்துப் பெரிய கூட்டம் போட்டு பந்தா செய்ததால் வந்த வினை இது!

உடன்பிறப்பு said...

//செல்வி வீட்டுக்கும், உதயாடிவி அலுவலகத்திற்கும் மட்டும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள். மற்ற தமிழர்கள், தமிழ் கடைகள் மற்றும் நிறுவனங்கள் தாக்கப்பட்டால் க்ருணாநிதிக்கு என்ன போச்சு ?//

இங்கு தமிழ்நாட்டில் வசிக்கும் கன்னட பிரபலங்களுக்கு மட்டுமல்ல ஒரு சாமாண்யனுக்கு கூட எந்த பாதிப்பும் வராத நிலை உள்ளது என்றால் அது கலைஞர் அவர்கள் வள்ர்த்த திராவிட உணர்வு தந்த பக்குவம். அத்தகைய பக்குவம் இல்லாத கன்னடர்களை விட்டுவிட்டு கலைஞர் அவர்களை குறை சொல்லும் உங்களை என்னவென்று சொல்வது