பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 24, 2008

டி.ஆர். பாலுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஜெயலலிதா

அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்த டி.ஆர். பாலுவை டிஸ்மிஸ் செய்ய ஜெயலலிதா வலியுறுத்தல்: முறைகேடுகளுக்குத் துணை போன பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா செய்யவும் கோரிக்கை

குடும்ப நிறுவனங்களின் சுயலாபத்துக்காக மத்திய அமைச்சர் பதவியைதுஷ்பிரயோகம் செய்துள்ள திரு. டி.ஆர். பாலுவைஉடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். அமைச்சரின் முறைகேடுகளுக்குதுணைபோயுள்ள பிரதமர் திரு. மன்மோகன் சிங், தனது பதவியைராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சுயநல நோக்கத்துக்காக சேது சமுத்திரம் திட்டத்தில் பல முறைகேடுகளைச் செய்த மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறைஅமைச்சர் திரு. டி.ஆர். பாலு, மீண்டும் ஊடகச் செய்திகளில் முக்கிய இடம் பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பதவியைசுயநலத்துக்காக துஷ்பிரயோகம் செய்திருப்பதாகவும், ஊழல் புரிந்திருப்பதாகவும் தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள டி.ஆர். பாலு, இக் குற்றச்சாட்டுகளைமறுக்கவில்லை; மாறாக, அவற்றைநியாயப்படுத்தியுள்ளார் என்பதைஅவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனது மகன்கள் டி.ஆர்.பி. ராஜ்குமார், டி.ஆர்.பி. செல்வகுமார் ஆகிய இருவருக்குச் சொந்தமான கிங்ஸ் இந்தியா பவர் கார்ப்பரேஷன், கிங்ஸ் இந்தியா கெமிக்கல் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்குகாவிரிப் படுகையிலிருந்து எரிவாயு விநியோகம் செய்வதற்காக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கைஎரிவாயு அமைச்சகத்துக்குகடந்த 2 ஆண்டுகளாக டி.ஆர். பாலு நிர்பந்தம் கொடுத்து வருவதாக ஊடகங்களில் புகார்கள் வெளியாகியுள்ளன - இந்த இரண்டு நிறுவனங்களிலும் டி.ஆர். பாலுவின் 2 மனைவிகளான பொற்கொடி, ரேணுகாதேவி ஆகியோருக்குபெருவாரியான பங்குகள் உள்ளன - டி.ஆர். பாலு நிர்பந்தம் கொடுத்ததற்குஆதாரமாக, கெயில் எனப்படும் இந்திய எரிவாயு ஆணையத்தின் தலைவர் திரு. யு.டி. சௌபே, ஓ.என்.ஜி.சி. எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கைஎரிவாயுக் குழுமத்தின் தலைவர் திரு. ஆர்.எஸ். சர்மாவுக்குகடந்த 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் எழுதிய கடிதம் ஊடகங்களில் வெளியானது - மத்திய பெட்ரோலியத் துறைஅமைச்சர் முன்னிலையில் டி.ஆர். பாலுவுடன் கடந்த 2006 ஜூன் மாதம் தான் பேச்சுவார்த்தைநடத்தியதாகவும், அந்தச் சந்திப்பின்போது ஓ.என்.ஜி.சி. நிறுவனம், கூடுதலாகக் கிடைக்கும் எரிவாயுவைகிங்ஸ் பவர் கார்ப்பரேஷன், கிங்ஸ் கெமிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்களுக்குவிநியோகம் செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் திரு. சௌபேகுறிப்பிட்டுள்ளார் - சுருக்கமாகச் சொன்னால், தனது இரு மகன்களின் நிறுவனங்களுக்குஎரிவாயு விநியோகிக்குமாறு ஓ.என்.ஜி.சி. நிறுவனத் தலைவருக்குமத்திய பெட்ரோலிய அமைச்சர் மூலம் டி.ஆர். பாலு உத்தரவிட்டுள்ளார் என செல்வி. ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இந்த விவகாரரம் ஏற்கெனவேசட்டப் பிரச்சினைஆகியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டி.ஆர். பாலு மகன்களின் நிறுவனங்களுக்குகாவிரிப் படுகையில் குத்தாலம் மற்றும் நரிமணத்திலிருந்து கிடைக்கும் எரிவாயுவைவிநியோகிக்குமாறு கடந்த 1998-ல் உத்தரவிடப்பட்டது - எரிவாயு விலை,மில்லியன் மெட்ரிக் கன மீட்டருக்கு654 ரூபாயாக இருந்த அந்தச் சமயத்தில், இதனைவெறும் 250 ரூபாய்க்குக் கொடுக்க டி.ஆர். பாலு வலியுறுத்தினார் - குடும்ப நிறுவனங்களுக்காக டி.ஆர். பாலு காட்டிய இந்த பாரபட்சத்தைஎதிர்த்து மற்ற நிறுவனங்கள் வழக்குத் தொடர்ந்ததால், இந்த எரிவாயு ஒதுக்கீடு நிறுத்தப்பட்டது - இறுதியில், கடந்த 2002-ல் எரிவாயு ஒதுக்கீடு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது என்பதைநினைவுகூர்ந்துள்ள செல்வி. ஜெயலலிதா, தகுந்த நேரத்தில் நீதிமன்றம் இந்தப் பிரச்சினையில் குறுக்கிட்டிருக்கவில்லைஎன்றால், நாட்டுக்குப் பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கூட்டணி அரசு மத்தியில் பதவியேற்றதும், மீண்டும் அமைச்சரான டி.ஆர். பாலு, தனது வேலையைத் திரும்பவும் தொடங்கிவிட்டார் - இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி கெயில் நிறுவனத் தலைவர் திரு. சௌபேயைஅழைத்த டி.ஆர். பாலு, தனது குடும்ப நிறுவனங்களுக்குஎரிவாயு விநியோகிக்குமாறு ஓ.என்.ஜி.சி நிறுவனத் தலைவருக்குகடிதம் எழுதுமாறு பணித்துள்ளார் - மறுநாளேஅவ்வண்ணம் சௌபேகடிதம் எழுதியுள்ளார் - இதனைதேசிய அளவில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், மாநில அளவில் ஜெயா தொலைக்காட்சியும் அம்பலப்படுத்தின என்று நினைவுகூர்ந்துள்ள செல்வி. ஜெயலலிதா, அப்போது இந்த முறைகேட்டுக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவியைடி.ஆர். பாலு ராஜிநாமா செய்ய வேண்டும் என தாம் வலியுறுத்தியதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பிரச்சினையில் தலையிட்டுத் தீர்வு காணுமாறு மத்திய பெட்ரோலிய அமைச்சகத்துக்குதமிழ்நாடு மின் உற்பத்தியாளர்கள் சங்கம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடிதம் எழுதியும் பயனில்லை- குடும்ப நிறுவனங்களுக்காக முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர உத்தரவிடுமாறு கோரி பிரதமர் திரு. மன்மோகன் சிங்குக்கு, ஜனதா கட்சித் தலைவர் திரு. சுப்ரமணியன் சுவாமி கடந்த பிப்ரவரி மாதம் கடிதம் எழுதியபோதிலும் பிரதமர் அலுவலகத்திலிருந்து இதுநாள் வரைபதில் இல்லைஎன்றும் செல்வி. ஜெயலலிதா தெரிவித்துள்ளார். டி.ஆர். பாலு விவகாரம், ஊடகங்களில் கடந்த 21-ம் தேதி மீண்டும் தலைப்புச் செய்தியானதும், இந்தப் பிரச்சினையைநாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று

கேள்விநேரம் முடிந்ததும் அ.இ.அ.தி.மு.க. எழுப்பியது - இப்பிரச்சினையைஎழுப்ப நாடாளுமன்ற அ.இ.அ.தி.மு.க. குழுத் தலைவர் டாக்டர் மைத்ரேயன் முயன்றபோது தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து இடையூறு விளைவித்தனர் - இறுதியில் பதிலளித்துப் பேசிய டி.ஆர். பாலு, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் அமைச்சராவதற்குமுன்பு கிங்ஸ் கெமிக்கல்ஸ், கிங்ஸ் பவர் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் தலைவராக தான் பதவி வகித்ததைஒப்புக்கொண்டதுடன், மூடப்படும் நிலையிலிருந்த அந் நிறுவனங்களைக் காப்பாற்ற நடவடிக்கைஎடுக்குமாறு பங்குதாரர்கள் தன்னிடம் கோரிக்கைவிடுத்ததாகவும் தெரிவித்துள்ளார் என்று செல்வி. ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில் தனது மகன்களின் நிறுவனங்களுக்காக அரசு உயரதிகாரிகளைநிர்பந்தப் படுத்தியதையோ, உண்மையான விலையில் 40 சதவீத சலுகைவிலைக்குஎரிவாயுவைவாங்க முயற்சி எடுத்ததையோடி.ஆர். பாலு மறுக்கவில்லைஎன்பதைஅவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனது சுயநலத்தைமறைக்க பங்குதாரரின் நலனுக்காக இந்த நடவடிக்கையைமேற்கொண்டதாக டி.ஆர். பாலு நியாயப்படுத்தியிருப்பதைகடுமையாகக் கண்டித்துள்ள செல்வி. ஜெயலலிதா, இதேபோன்ற உதவியையும் சலுகைகளையும் நலிவடைந்த மற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் மத்திய அரசு வழங்குமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மோசமான நிர்வாகம், பணம் சுருட்டல் ஆகிய காரணங்களால்தான் டி.ஆர். பாலுவின் குடும்ப நிறுவனங்கள் நலிவடைந்தன - பொதுத் துறைவங்கிகளிடமிருந்து கிங்ஸ் கெமிக்கல்ஸ் நிறுவனம் பெற்ற பல கோடி ரூபாய் திரும்பச் செலுத்தப்படாமல் உள்ளது - இந்தக் கடன்தொகையை திருப்பிச் செலுத்தவோவட்டி கட்டவோஎந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை- கடன் தொகைபெறுவதற்காகப் பிணையமாகக் காட்டப்பட்ட நிலங்கள் பின்னர் வேறு பெயருக்குமாற்றப்பட்டுள்ளன என்றும் செல்வி. ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் அவரது சீடரான டி.ஆர். பாலு ஆகியோர் ஊழல், முறைகேடுகளில் திளைப்பதில் ஆச்சரியமில்லை, ஆனால் வித்தியாசமான மனிதர் என்று கருதப்பட்ட பிரதமர் திரு. மன்மோகன் சிங் இதுபோன்ற செயல்களுக்குத் துணைநிற்பது வேதனைஅளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரிசர்வ் வங்கிமுன்னாள் கவர்னர், மிகச் சிறந்த பொருளாதார மேதைஎன்ற புகழுடன் தற்போது இந்தியாவின் பிரதமராகவும் உள்ள திரு. மன்மோகன் சிங்கின் பிரதமர் அலுவலகம், கிங்ஸ் பவர் கார்ப்பரேஷனுக்குஎரிவாயு விநியோகம் செய்யுமாறு நிர்பந்தப்படுத்தி மத்திய பெட்ரோலிய அமைச்சகத்துக்குஒருமுறைஅல்ல 8 முறைநினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன - டி.ஆர். பாலு மீது நடவடிக்கைஎடுக்க வலியுறுத்தி திரு. சுப்ரமணியன் சுவாமி கடிதம் எழுதிய நான்குநாட்களுக்குப் பிறகுகடந்த பிப்ரவரி 4-ம் தேதி கடைசி நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது - எனவேடி.ஆர். பாலுவின் முறைகேடுகள் குறித்து பிரதமருக்குத் தெரியாது என்று கூற இயலாது என செல்வி. ஜெயலலிதா தெரிவித்துள்ளார். வியாழக்கிழமையான இன்றைய தினம் பிரதமர் மாநிலங்களவையில் இருப்பது வழக்கம் என்பதால் டி.ஆர். பாலு விவகாரத்தைஎழுப்ப அ.இ.அ.திமு.க. உறுப்பினர்கள் முயன்றபோதும் அவர்கள் தடுக்கப்பட்டனர் - அ.இ.அ.தி.மு.க. குழுத் தலைவர் டாக்டர் மைத்ரேயனைஅவையிலிருந்து வெளியேறலாம் என அவைத் தலைவர் கூறியுள்ளார் - இதனால்தான் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்ய நேர்ந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஓர் அமைச்சரின் ஊழல் குறித்து தகுந்த ஆதாரங்கள் இருந்தும்கூட, அவர் சார்ந்துள்ள கட்சியின் ஆதரவு, தனது ஆட்சிக்குத் தேவைப்படுவதால், சட்டதிட்டங்களைவளைக்கும் பிரதமர் நாட்டுக்குவாய்த்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ள செல்வி. ஜெயலலிதா, பதவிக்காக தனது நேர்மையையேபலிகொடுக்கும் நபர் மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமராக நீடிப்பதற்குத் தகுதி இல்லைஎன்றும் தெரிவித்துள்ளார். மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறைஅமைச்சர் திரு. டி.ஆர். பாலுவைஉடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என, நீதியிலும், நேர்மையிலும் நம்பிக்கைவைத்துள்ள இந்தியக் குடிமக்கள் சார்பாக தாம் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அமைச்சரின் கிரிமினல் நடவடிக்கைகளுக்குத் துணைபோயுள்ள பிரதமர் திரு. மன்மோகன் சிங் தனது பதவியைராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் செல்வி. ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

5 Comments:

Anonymous said...

Tomorrow News Today
They want him to be dismissed because he is not a brahmin - Karunanidhi
If he is not dismissed I will
approach Supreme Court- Subramanian Swamy
No comments- Congress
Singh should dismiss him- Vijayakanth

Anonymous said...

ஜெயலலிதா இருப்பதனால் தி.மு.க. வும், கருணாநிதி இருப்பதனால் ஆ. தி.மு. க. வும் கொஞ்சமாக ஊழல் செய்கிறார்கள். இல்லையென்றால்... நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது.

Anonymous said...

Bit old but still interesting

http://www.youtube.com/watch?v=5i7g7wfo64A&watch_response

Bala

rangs said...

என்னக்கு ஒரு சந்தேகம் ஹிந்து திருமண சட்டப்படி பல தார மணம் தடை செய்யப்பட்டுள்ள போது இவனுங்க மட்டும் எப்படி ரெண்டு, மூணுன்னு பொண்டாட்டி வெச்சிர்ருகனுங்க?

Anonymous said...

'SATURN IS READING BIBLE' -SUPPAMANI