பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 30, 2008

பரமசிவன் கழுத்துப் பாம்பாக பாலு!

பரமசிவன் கழுத்துப் பாம்பாக பாலு! என்ற தலைப்பில் பாலு விவகாரம் குறித்து கல்கி தலையங்கம்.


விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது என்கிறார் டி.ஆர்.பாலு! தமது செல்வாக்கைப் பயன்படுத்தி தமது மனைவி - மகன்களின் நிறுவனங்களுக்குக் குறைந்த விலையில் எாிவாயு பெற்றுத் தரவில்லை என்று மறுக்கிறார். தாம் அமைச்சராக இல்லாத காலகட்டத்தில், 1999லேயே போடப்பட்டு, 2004ல் அரசியல் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தத்தைத் திரும்பவும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கே அந்நிறுவனங்கள் போராடி வருவதாகக் கூறுகிறார்!

அப்படியெனில், மார்ச் 2007ல் பாலு எதற்காக கெயில் உயர் அதிகாாியிடம் இந்த நிறுவனங்களுக்கான எாிவாயு சப்ளை குறித்துப் பேச வேண்டும்? அதுவும் பெட்ரோலியத் துறை அமைச்சரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பேச வேண்டும்?

சுப்பிரமணியம் சுவாமியின் ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுப்படி, பாலு தமது குடும்ப நிறுவனங்களுக்கு எாிவாயு சப்ளை செய்ய அவ்வதிகாாிகளை வற்புறுத்தியுள்ளார். அதற்கான ஒப்பந்தம்போட ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அத்துமீறிய ஆணையை எதிர்த்து தமிழ்நாடு மின் உற்பத்தியாளர்கள் சங்கம், பெட்ரோலியத் துறை அமைச்சாிடம் முறையிட்டது; நீதிமன்றத்திலும் முறையிட்டு தடையுத்தரவு பெற்றது.

நீதிமன்றத் தடையானது, ஊழல் நடந்ததற்கான வலுவான ஆதாரங்கள் இருந்தாலன்றி வழங்கப்பட்டிருக்காது. ஆனால், தமது குடும்பத்துக்குத்தான் ஏதோ பாிெய அநீதி நிகழ்ந்துவிட்டதுபோல பாலு ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்.

நல் மரபுகளில் நம்பிக்கைகொண்ட அமைச்சராயிருந்தால் ராஜினாமா செய்ய வேண்டும். எல்லா குற்றச்சாட்டுகளும் பொய் எனில், அதனை நிரூபித்துவிட்டு மீண்டும் பதவியில் அமரலாம்.

ஆனால், பாலுவோ தமது பாிேலான புகார்கள் பிரதமாிடம் தரப்பட்டிருப்பதால் பிரதமர்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பரமசிவன் கழுத்துப் பாம்பாகப் பேசுகிறார்! மன்மோகன் சிங் இது குறித்து வாயே திறக்கவில்லை. தி.மு.க. தலைவர் மு.க.வோ மூச்சுக்கூட விடவில்லை!

முறைகேடாக பணம் பெற்றுக்கொண்டதாக நிரூபணமானால்தான் குற்றமேயொழிய, ஆட்சியிலும் பதவியிலும் உள்ளோர் தங்கள் குடும்ப நலனுக்கும் கட்சி நலனுக்குமான விஷயங்களைச் சாதித்துக்கொள்ள தங்களது பதவி - செல்வாக்கைப் பயன்படுத்துவது தப்பேயில்லையாக்கும் என்ற போலித்தனமான வாதத்தைத்தான் இச்சம்பவம் வலியுறுத்து கிறது!

சொந்த விருப்பு - வெறுப்புகளின் சந்தையாகிப் போன அரசியல் பொதுவாழ்வில், ஒரு தயாநிதி மாறன் ‘கட்சி விரோத’ப் பணிக்காக உடனே வெளியே அனுப்பப்படுகிறார். ஆனால், ஒரு டி.ஆர்.பாலு, ஊழலுக்கான ஆவண சாட்சியங்கள் இருந்தும் பதவியில் தொடர அனுமதிக்கப்படுகிறார்.

இந்தப் போக்கு தொடர்ந்தால், தேசத்தின் உயிரும் ஆன்மாவுமான அதன் நேர்மைப் பண்பு வற்றிச் சுருங்கிவிடும். பொருளாதார முன்னேற்றமும் தொழில்நுட்பச் சாதனையும், உண்மை உறங்குகிற சவப்பெட்டிக்குப் போர்த்தப்பட்ட பகட்டலங்காரமாக மட்டுமே திகழும்!

5 Comments:

Anonymous said...

Irukkavay irukku, pulithu puzhuthu makki pona sidhantham - BAALU ORU SOOTHIRAN! UYARJAATHI HINDUKKAL SATHI...MuKavukka thriyaathu? So far, this issue has been brought up in front of public by - Subramanian Swamy, Jeyalalitha, kalki, dinamalar, BJP etc etc...
summa kekkumbodhay POONUL NELIYUTHILLA!!!
Idlyvadai ootaanda auto varaama iruntha seri...

domaru said...

தலைவா..இதுக்கு ஒரே வழி...
இன்னான்னா..

நம்ம தலைவைரு..

அதாம்பா..

தே.மு.தி.கா. வரட்டும்.

அல்லா அரசியல்வாதிக்கும் பெரீய................ஆப்பு..

Anonymous said...

http://economictimes.indiatimes.com/News/PoliticsNation/Baalu_has_personal_interest_in_Sethu_Swamy_to_SC/articleshow/2993056.cms

More trouble is in store for shipping and transport minister T R Baalu. Janata Party president Subramanian Swamy on Monday approached the Supreme Court accusing Baalu of pushing the controversial Sethusamudram project for his and family’s personal monetary considerations. Swamy in his application sought Baalu to be made a party in the pending petitions challenging the project.

The Janata Party chief claimed that he has unearthed considerable material against Baalu for being instrumental in pushing through the development and execution of the project in its present form for his private interest. He alleged that Baalu and some members of the DMK including Kanimozhi, Rajya Sabha MP and daughter of Tamil Nadu chief minister K Karunanidhi, are to benefit from the project as they have financial interests in the firm involved in the venture.

Baalu and his wife has a share in Meenam Fisheries, whose vessels have been engaged in the project, alleged Swamy. It said, Kanimozhi has shares in Westgate Logistics, the shipping company which is engaged not only stevedoring but in services like shipment consolidation and deconsolidation, global freight forwarding and customs management, regional warehousing and distribution network in the project area.


Swamy said since there was alleged conflict of interest between Baalu’s private business and the impartial performance of his duties as a minister, who is connected to the project, he should be made a respondent in the matter. Meanwhile, a bench comprising Chief Justice K G Balakrishnan, Justice R V Raveendran and Justice M K Sharma posted the bunch of petitions challenging Sethusamudram project for Wednesday when the matter was mentioned before it. The court refused to pass an order directing to supply the documents to the petitioners who complained that the committee appointed by the Centre to review the project was not providing them the documents.

The Bench said it cannot pass any such directions as the apex court has not appointed the committee. “We have not appointed the committee. The committee is not formed under the direction of the court. We can also not insist the parties involved in the matter provide documents submitted to the committee to each other,” the court said.

Anonymous said...

டி ஆர் பாலுவுக்கும் சோனியாவுக்கும் ஏதோ ரகசிய டீல் இருக்கிறது. ராஜீவ்காந்தி கொலையாளியான சிவராஜனை தனது காலியான பெட்ரோல் டாங்கருக்குள் ஒளித்து வைத்து கொளத்தூரில் இருந்து பெங்களூருக்கு கொண்டு சென்றவன் டி ஆர் பாலு. ஆக ராஜீவ் கொலையில் ஒரு கூட்டாளி இந்த டி ஆர் பாலு. நிஜமாகவே பெரிய 'கள்ளன்' தன் கணவனின் கொலையாளிக்கு சோனியா இவ்வளவு தூரம் போய் உதவும் மர்மம் என்ன? அவனுக்கும் சோனியாவுக்கும் என்ன தொடர்பு? மேலும் சேது பாலம் தோண்டுவதில் தனது ஷிப்பிங்/டிரெட்ஜிங் நிறுவனங்களுக்கே காண்டிராக்ட் கொடுத்துக் கொண்டு அதற்கான ஒதுக்கிய பணத்தினை அவன் கொள்ளை அடித்து அதை செயிண்ட் கிட்ஸ் பனாமா மலேஷியா போன்ற இடங்களில் வங்கிகளில் பதுக்குகிறான் அதற்காக அரசு அனுமதி இல்லாமல் அடிக்கடி வெளிநாடு பயணிக்கிறான். இவனுடன் டிரெட்ஜிங் கொள்ளையில் கூடாளியாக கருணாநிதியின் வைப்பாட்டியும் அவளது மகளான கனிமொழியும் கூடாளியாக இருக்கிறார்கள். அதனால் தான் கருணாநிதியின் குடும்பமும் டி ஆர் பாலுவும் சேதுப் பாலம் தோண்டுவதில் ஒத்தைக் காலில் நிற்கிறார்கள். சோழியன் குடுமி சும்மா ஆடுமா? சு சுவாமியிடம் இதற்கு ஆதாரங்கள் உள்ளன. கருணாநிதியைப் போன்ற கயவன் கொள்ளைக்காரன் ஊழல்வாதி இந்த உலகத்தில் யாரும் கிடையாது. அரசாங்கப் பணத்தைக் கொள்ளையடிக்கும் நவீன பூலான் தேவியான கனிமொழியை கவிதாயினின் என்று ஒரு கும்பல் தமிழ் நாட்டில் தலையில் வைத்து ஆடுகிறது. ஊழல் குற்றசாட்டில் களி திங்க வேண்டியவள் எல்லாம் தமிழ் நாட்டில் அறிவு ஜீவி கவிதாயிணி போர்வையில் திரிகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டில் இந்த கொள்ளைக்குத் தீர்வு கிடைக்காது. மக்கள் திருந்தி இந்தக் கொள்ளைக்காரர்களைக் கல்லால் அடித்தால் தான் உண்டு அது வரை இந்த அரக்கர் கும்பலின் ஆட்டம் ஓயாது ஒழியாது

Edgar Dantas said...

hey nice blog really enjoyed goin through it really nice post too.I really appreciate it
with regards
edgar dantas
www.gadgetworld.co.in