பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 03, 2008

உண்ணாவிரதம் - ரஜினிகாந்த், கமலஹாசன் பங்கேற்க முடிவு

சென்னையில் கன்னடர்களுக்கு எதிராக நாளை (வெள்ளிக்கிழமை) தமிழ் சினிமா உலகம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதில் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்பட அனைத்து நடிகர், நடிகைகள் பங்கேற்கிறார்கள்.

இதைவிட முட்டாள் தனமாக இந்த பிரச்சனையை பெரிசாக்க முடியாது.

`பிலிம் சேம்பர்' தலைவர் கே.ஆர்.ஜி. பேசியது:

"கன்னட வெறியர்களிடம் இருந்து, தமிழர்களை காப்பாற்றுவதற்காக நாங்கள் தமிழ் திரையுலகம் சார்பில் 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை சென்னை சேப்பாக்கத்தில் நடத்துகிறோம். உயிரை கொடுத்தாவது தமிழக மக்களை காப்பாற்றுவது நமது கடமையாகும்."

சினிமாவில் அடிபடாமல் இருக்க டூப் போடும் இவர்கள் எப்படி உயிரை கொடுத்து மக்களை காப்பாற்றுவார்கள் ?

உண்ணாவிரத போராட்டத்தில் பெரிய நடிகர்கள் முதல், சிறிய நடிகர்கள் வரை அனைத்து கலையுலக பிரமுகர்களும் கலந்து கொள்வார்கள். அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் சினிமா படப்பிடிப்பு நடைபெறாது. வெளிநாட்டில் நடைபெறும் படப்பிடிப்புகள் கூட அன்றைய தினம் நடைபெறாது. வெளியூர்களில் இருப்பவர்களை விமானத்தில் வந்து இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டிருக்கிறோம். உண்ணாவிரதத்திற்கு போலீஸ் அனுமதி வழங்கும்படி கமிஷனரிடம் கேட்டுள்ளோம். அவரும் அனுமதி வழங்குவதாக கூறியுள்ளார்.
இதற்கு போலீஸ் அனுமதி கொடுத்திருக்க கூடாது

கேள்வி:- நடிகர் ரஜினிகாந்த் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்வாரா?

பதில்:- அனைத்து நடிகர், நடிகைகளையும் கலந்து கொள்ளும்படி கேட்டுள்ளோம். அனைவரும் கலந்து கொள்வார்கள். பெரிய நடிகர்கள் முதல், நடிகர் குள்ளமணி வரை அனைவரும் கலந்து கொள்வார்கள்.

அடுத்த முறையும் ரஜினி பிச்சைகாரன் வேடத்தில் தான் கர்நாடகாவிற்குள் நுழைய வேண்டும். ரஜினி போன்ற மூத்த நடிகர்களும், கமல் போன்ற முத்த நடிகர்களும் மற்ற மர மண்டைகளுக்கு அட்வைஸ் செய்ய கூடாதா ?


அருகில் நின்று கொண்டிருந்த நடிகர் ராதாரவி, நிருபர்களிடம் கூறும்போது, "நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோரும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்'' என்று தெரிவித்தார்.

பின்னர் அனைவரும் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டனர். உண்ணாவிரத போராட்ட பந்தலை எங்கே அமைப்பது? போராட்டத்தில் கலந்து கொள்ள வரும் நடிகர், நடிகைகளின் கார்களை எங்கே நிற்க வைப்பது? என்பது பற்றி துணை கமிஷனர் ராமசுப்பிரமணியுடன் ஆலோசனை நடத்தினார்கள். 100 நடிகர்-நடிகைகள் அமரும் வகையில் ஒரு பிரமாண்ட மேடையும், 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் ஒரு பிரமாண்ட பந்தலும் அமைக்க திட்டமிடப்பட்டது.

போராட்டத்தில் கலந்து கொள்ள வரும் நடிகர், நடிகைகளின் கார்களை சென்னை அரசினர் தோட்டத்தில் நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. உண்ணாவிரதம் நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு `குசேலன்' படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார். பின்னர் மும்பை சென்று இருந்தார். மும்பையில் இருந்து நேற்று அவர் அவசரமாக சென்னை திரும்பினார்.

அவருடன், `தினத்தந்தி' நிருபர் செல்போனில் தொடர்புகொண்டு கேட்டபோது, ``உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வது பற்றி சரத்குமாருடன் கலந்து பேசியபின், சொல்கிறேன்'' என்றார். நடிகர் கமலஹாசன் கூறும்போது, `நான் வெளிநாடு செல்கிறேன், ஆனாலும் 4-ந் தேதி மதியம் சென்னை திரும்பி உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வேன்' என்றார்.
அவ்வளவு முக்கியமா இது ? தசாவதாரம் ரிலீஸ் இன்னும் தள்ளி போகும்

கர்நாடகா நடிகர்கள்

அர்ஜுன் கலந்துகொள்கிறார்

நாளை நடைபெற இருக்கும் உண்ணாவிரத போராட்டத்தில், நடிகர் அர்ஜுன் கலந்துகொள்கிறார். இந்த தகவலை அர்ஜுன், `தினத்தந்தி' நிருபரிடம் தெரிவித்தார். அர்ஜுன், கர்நாடகாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகத்தில் நடைபெறும் கலவரம் பற்றி அர்ஜுன் குறிப்பிடுகையில், ``யாரோ சிலர் கர்நாடகாவில் செய்யும் கலவரத்தால், தேசிய ஒருமைப்பாட்டுக்கே பாதிப்பு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது'' என்று வருத்தப்பட்டார்.

பிரகாஷ்ராஜ்

இதேபோல் கர்நாடகாவை சேர்ந்த நடிகர் பிரகாஷ்ராஜும், தமிழ் திரையுலக உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அதில் பங்கேற்கிறார்.

கர்நாடகாவை சேர்ந்த மற்றொரு நடிகரான பிரபுதேவாவும், உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்கிறார்.

கர்நாடகா நடிகர்கள் என்ற பாகுபாடு முதலில் இல்லாமல் இருக்கட்டும். அப்பறம் தேசிய ஒருமைப்பாடு ஜல்லி அடிக்கலாம்

போகும் போது ஓட்டு போட்டுட்டு போங்க

17 Comments:

Anonymous said...

கேவலமான கோணத்தில் இந்தப் பிரச்சினையை யோசித்திருத்திருக்கிறீர்கள். தமிழன் துணை நடிகனாகக் கூட கன்னட சினிமாவில் நடிக்க முடியாத போது தமிழ்நாட்டில் வசிக்கும் கன்னட நடிகர்கள் இங்கு உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வது தவறா?

:(

Naren's said...

முட்டாள் யாரு நைனா…எல்லாரும் முட்டாளுங்க நீ மட்டுமே அறிவாளினு நினைச்சுகிட்டு இதை எழுதின பாரு அப்போவே நீ முட்டாள் ஆயிட்ட மாமே…போ போ…இப்போ தசாவதாரம் ரிலீஸ் நாட்டுக்கு பெரிய பிரச்சினையா ..போய்யா கப்பித்தன்மா பேசி மனுசனோட உயிரை வாங்காத….

Anonymous said...

இட்லி வடை யை வெகுகாலமாக படித்து வருகிறேன் இது என் முதல் பின்னோட்டம்
அனானி சொன்னதை வழிமொழிகிறேன் இதை எழுதியது இட்லி வடை தானா ?
வருந்துகிறேன்

Bart said...

ரஜினி, கமல், அர்ஜுன், ப்ரகாஷ்ராஜ் எல்லோரும் கன்னடத்திலும் நடித்துள்ளார்கள். ஆக அவர்கள் இரு உண்ணாவிரதத்திலும் கலந்து கொண்டு, உனக்கும் பெப்பே, உங்க பாட்டனுக்கும் பெப்பேன்னு சொல்லிட்டு escape ஆகலாம்.
இதன் மூலம் அவர்கள் இரு மாநிலத்திலும் உள்ள வெறியர்களுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது போல் statement விடலாம். நம்ம நடிகர் சங்கம் வாயில் வழக்கம் போல் விரல் சூப்பி கொள்ளலாம். இத போயி ஒரு ப்ரச்சினையா பாக்கராங்களே?

Anonymous said...

No blackout of Tamil channels

TIMES NEWS NETWORK

Bangalore: Tamil channels will not be blacked out over the Hogenakkal controversy, even as theatres here did not screen Tamil films.

Cable operators under the Karnataka Cable Television Chamber of Commerce, after a mammoth fourhour discussion on Wednesday, managed to convince most Kannada organisations that blacking out channels would not be in the interests of “peace and harmony’’ in the state.

After the meeting of cable operators and activists ended at 4.30 pm, an internal meeting after 6 pm finalised the earlier decision not to block Tamil channels.

Amrith Kumar, representing cable operators, told TOI that the channels had nothing to do with “politics’’ and operators did not want to trouble viewers and the public. “Viewers are not responsible for what Tamil Nadu CM M Karunanidhi said about Hogenakkal. Karunanidhi has politicised the issue and has made remarks for political gain. We should not react to that by targeting people.’’

Kumar said cable operators will, however, block Tamil channels on the day of the proposed bandh, April 10 or 12, from morning to evening. Operators have agreed also to block Kalaiganar channel indefinitely “as it is the personal channel of Karunanidhi’’.

The decision of cable operators was supported by Kannada Gadi Rakshana Vedike, Kannada Sene and Jai Karnataka. Karnataka Rakshana Vedike has said it would try to talk to the cable operators again to block Tamil channels. “If talks fail, we will protest in front of the operators’ offices. And even if that fails, we will think of ways to get the channels blocked,’’ KRV activist Anjanappa said. The operators clarified no Kannada channels had been blocked in Tamil Nadu. “We spoke to our counterparts in Chennai and they have told us clearly that no Kannada channels have been blocked,’’ Kumar said.

TN reciprocates

Chennai: Tamil Nadu cable operators have responded to their counterparts in Karnataka. Tamil Nadu Cable Operators’ General Welfare Association president P Shakeelan said: “We’ll not block Kannada channels even if Tamil channels are blocked in Karnataka. Business and politics are different fields.’’
The Tamil Nadu Association had earlier planned to block Kannada channels in TN. “But they retracted after they talked to us. They were surprised and happy that Karnataka cable operators had

Anonymous said...

இட்லி வடை யை வெகுகாலமாக படித்து வருகிறேன் இது என் முதல் பின்னோட்டம்
அனானி சொன்னதை வழிமொழிகிறேன் இதை எழுதியது இட்லி வடை தானா ?
வருந்துகிறேன்

Anonymous said...

this dharna is absolutely waste. they are not going to achieve any thing by in this dharna. previously they have done this kind of agitation for kaveri issue. Now they are creating unnecessary problem for the tamil living people in Bangalore. This agitation will helpful for the actor who have no market at present.

geeyar said...

இட்லிவடை கூறியதையே நானும் வழிமொழிகிறேன். முதலில் எந்த ஒருபிரச்சனைக்கும் உணர்ச்சிவசப்படாமல் தீர்வுகாண முயலவேண்டும். திரையுலகமே நெய்வேலியில் நீங்கள் பண்ணிய போராட்டத்தால் தமிழகத்திற்கு கிடைத்த நன்மைகளை பட்டியலிடுங்களேன். சில ஆயிரம் கோழிகளும் ஆடுகளும் உங்களுக்கு உணவானதைத் தவிற. இப்பொழுது உண்ணாவிரதம் இருப்பதால் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன? நேற்றுவரை நண்பனாக உறவினராக இருந்த கன்னட சகோதர்கள் இன்று விரோதியாக மாறிடுவரோ? அங்கே கலவரம் நடந்தால் இங்கேயும் கலவரம் பண்ணவேண்டும் என எங்கே படித்தீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம். சரி இதற்கு தீர்வுதான் என்ன? அதைபற்றிய கவலை யாருக்கும் இருப்பதாக தெரியவில்லையே.

நல்லா மேக்அப் பண்ணிட்டு போங்க. ஷ்ரேயாமேடம் வந்தாங்கன்னா முதலிலேயே சொல்லிருங்க. பிறகு அரைகுறையா வந்தாங்கன்னு பின்னாடி ஏதும் பிரச்சனை வந்தாலும் வரும்.

Ravi said...

How can "tit for tat" work in any situation? Just because of bunch of goondas in KA resort to violence, it so unfortunate that people here have to show their strength when its absolutely unwarranted. This is only going to increase tension. I fully support IV's views here.

Hari said...

/*ரஜினி போன்ற மூத்த நடிகர்களும், கமல் போன்ற முத்த நடிகர்களும் மற்ற மர மண்டைகளுக்கு அட்வைஸ் செய்ய கூடாதா ? */

நிர்வாண ஊரில் கோமணங்கள் வாங்கபடுவதில்லை, ஆகையினால் அவை விற்க்கபடுவதுமில்லை

Subramanian said...

What it mean by fasting; not even a day or 24 hours - These VIPS are sitting after finishing their Break Fast a bit early than usual and should have their dinner a bit early after having their quota of apetisers at the Park Sheroton or at GRT; Is this to be called fasting ; mere huMbug; ask them to fast till the solution wOuld BE arriveD at ; no body will tUrn out at the diass and the same would be ONLY empty; by these things they aRE MAKING THE PUBLIC AS FOOLS AS WELL AS KNOWINGLY MAKING THEMSELVES ALSO FOOLS , THOUGH THERE IS NO NECESITY FOR THE SAME
SUPPAMANI

Anonymous said...

will the Chief Minister Mr. Karunanidhi will take part in the dharna - because even today he is writing stories to Films and related to Tamil Cinema.

Naren's said...

nee oru veet leh amaithiya irukeh....anthe area leh enna prachnai naanthaalum prachnai enna nu alasarathukkum munnaadi un veetu jannal leh oru kannaadi aaavathu udaichiduvom......ithu thaan policy nu oru gumbahl alayuthu....now go back and read the first sentence it would seem stupid..isn't it?...thats the kind of status of tamilians in Bangalore...and also more or less the status of tamil cinema in bangalore....u have to appreciate that cinema is a business where a day's delay could cut down producer's throat in the form of vatti etc..intheh maari nailamai leh,oru varushathuleh atleast 10 naalavathu intheh maari aaalungala paaarthu nadunganum ngrathu yellam oru life style eh...anthe nadungal days include mandatory days like rajyotsava day and rajkumar's anniversary (which ironically falls a day before tamil new year)...so Mr.Ravi prachnai enna nu purinjikaama tit for tat nuyellam ularaaatheengha.....same applies to IV also..summa dasavatharam release kooda yellam intheh prachnaya compare panni saaavadikkaatheengha...

Ravi said...

Hari, nacchu-nu sonneenga. sooper!

Naren, adhe dhaan naanum solren. The goondas did aniyayam, araajagam and then we do the same here (read about what happened to Sangeetha hotel that too by a bunch of lawyers and the owner does not want to file a complaint - why? the reason is obvious!), then what right do we have to complain? These people want to stop all film production activities for one day - appo producer-kku loss illayaa? Idhunaala enna payan-nu sollunga? Again, now to counter this, the michief mongers will do something in KA as well. So finally maatikittu thavikkaradhu the innocent people in both states - be it Tamil, Kannada, Hindi or whatever. So therinju/purinju dhaan perisuren Mr.Naren, olaravillai!

Anonymous said...

dont ever think that these people are carrying out this hunger strike for hoganekal issues or for tamils.

this is purely because of their business. tamil moves are not screened in karnataka and some of the tamil movie screening theaters were attacked.

so this fast is purely for their sake.. for thier own business

Anonymous said...

Your comments are total rubbish. You are saying as if the filim industry should not show their protest. Have you ever lived in Karnataka during these tough times..I think no..else you wont be talking like this..

Anonymous said...

the problem wont get solved by this fast... agreed... so what can be done to solve the problem ?

makkal kashtapaduraangannu ethanai naal thaan sollikittu irupeenga ?
IVAN padathule partiban-oda dialogue - "ungalukku kashtam varumpothu kaapatha rajiniyum MGR-um vara maataanga.. neenga thaan poraadanum". there is no other way than to hit back when hit.

summa gandhigiri yellam cinema-le paarka nalla irukkum.... practically not possible...

ppl who tell that we shdnt do tit for tat, give ur addresses.... we will come to ur home and tell u what to do and what not to do. what will be ur reaction ? kashta nashtam namakku nadakkum pothu thaan vali theriyum... suma comment podum pothu venumna mahatma maathiri vesham podalam......