பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 25, 2008

மனிதர்கள் கிராமத்தில் தான் இருக்கிறார்கள் !

ஊசி போட்டதில் குழந்தைகள் சாவு: `சஸ்பெண்டு' ஆன நர்சு மீது பாசம் காட்டும் கிராம மக்கள்.

திருவள்ளூர் மாவட்டத் தில் தட்டம்மை ஊசி போட்டதில் 4 குழந்தைகள் உயிர் இழந்தனர். இதில் 3 குழந்தைகள் பென்னலூர் பேட்டை கிராமத்தை சேர்ந் தவர்கள். அவர்களுக்கு ஊசி போட்ட கிராம நர்சு ஜெயலலிதா சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

3 குழந்தைகள் உயிர் பறி போய் விட்டதால் கிராம மக்கள் நர்சு ஜெயலலிதா மீது ஆவேசமாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்தால் அங்கு நேர் எதிர்மாறான நிலை நிலவுகிறது.

நர்சு ஜெயலலிதா மீது அந்த ஊர் மக்கள் மிகவும் பாசம் காட்டுகிறார்கள். அவரை சஸ்பெண்டு செய்தது தவறு என்று ஒட்டு மொத்தமாக குரல் எழுப்புகிறார்கள்.

இந்த கிராமத்தில் 22 ஆண்டுகளாக ஜெயலலிதா நர்சாக பணியாற்றி வந்துள்ளார். அவர் கிராம மக் களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்வாராம்.

பெண்கள் கர்ப்பமாகி விட்டால் பிர சவம் ஆகும் வரை அடிக்கடி வந்து சந்தித்து தேவையான உதவிகளை செய்வதுடன் ஆறுதலாகவும் இருப்பா ராம். எனவே கிராம மக்கள் அனைவருமே அவ ருக்கு ஆதரவான கருத்துக் களையே கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு ஜெய லலிதாவை வேறு ஊருக்கு மாற்றினார்கள். அப்போது அவரை மாற்றக் கூடாது என்று கிராம மக்கள் போராட்டத்தில் குதித்து மாற்றலை ரத்து செய்ய வைத்துள்ளனர்.

அன்று கூட ஊசி போட்டு குழந்தைகள் மயங்கி விழுந்ததும் துக்கம் தாங்க முடியாமல் அவர் கதறி அழுதாரார். இறந்த குழந்தை ஒன்றின் தந்தை மோகன் இது பற்றி கூறும் போது, "நர்சு ஜெயலலிதா மீது நாங்கள் அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளோம். அவர் மீது எந்த தவறும் இல்லை'' என்றார்.

ஞானம்மாள் என்ற வயது முதிர்ந்த பெண் கூறும் போது, "நர்சு ஜெயலலிதா எப்போது எங்களுடைய சுக, துக்கங்களில் பங்கு பெற்று வந்துள்ளார். குழந் தைகள் மயக்கமாகி தாய் மார்கள் அழுது துடித்த போது ஜெயலலிதாவும் கதறி விட்டார்'' என்றார்.

ஸ்ரீனிவாசன் என்பவர் கூறும் போது, ஜெயலலிதா இங்கு 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறார். இதுவரை சிறு தவறு கூட செய்தது இல்லை. இந்த விஷயத்தில் யார் தவறு செய் தார்கள் என்பதை சரியாக விசாரணை செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

நர்சு ஜெயலலிதா சமீபத் தில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டாராம். இந்த பிரச்சினையில் அவ ருக்கு எதுவும் ஆகி விடக் கூடாது என்று கிராம மக் கள் கவலையை வெளி யிட்டனர்.

நர்சு ஜெயலலிதாவை இது வரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டு இருப்பதாக மட்டும் தகவல்கள் வருகின்றன. அவருடைய செல் போனும் `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது.

இந்த ஜெயலலிதாவை பின்னூட்டதில் பாராட்டலாம் ;-)

4 Comments:

சிறில் அலெக்ஸ் said...

ஜெயலலிதாவை மட்டுமல்ல அந்தக் கிராம மக்களையும் பாராட்டுகிறேன். நேற்று சன் செய்தியில் கலைஞர் 3 லட்சம் அறிவிக்கையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பகுதியில் சில முக்கிய பிரமுகர்கள் சிரித்து ஏதோ பேசிக்கொண்டே மேசையைத் தட்டியதை பார்க்க முடிந்தது. நம் தலைவர்கள் மக்களின் துயரத்திற்குப் பழகிவிட்டார்கள்.

IdlyVadai said...

சிறில் அலெக்ஸ் ஆமாம். நடிகைகள் பற்றியும் இறந்து போனவர்கள் பற்றியும் தான் தலைப்பு செய்தியாக வருகிறது. இந்த மாதிரி நல்ல செய்திகளை யாரும் போடுவதில்லை ( இட்லிவடையும் இதில் அடக்கம் )
நன்றி

Anonymous said...

if the batch of vaccines had any problem what can the nurse do.particularly if she has a good work recordreally the villagers need to be apreciated.

cgs

Anonymous said...

மும்பையிலிருந்து இங்கு புதிதாக வந்துள்ள செய்தித்தாள் இந்த நர்ஸைப் ப்ற்றி எழுதிய பிறகுதான் இவரைத் தெரிந்து கொண்டோம். இங்கிருந்த ஆங்கில ஏடுகள் இந்நாள்வரை இது போன்ற மனிதநேய செய்திகளை போடவே மாட்டார்கள்.

நர்ஸம்மாவிற்கும் கிராம மக்களுக்கும் என் பாராட்டுக்கள்