பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 09, 2008

உண்ணாவிரத புறக்கணிப்புக்கு காரணம் ரஜினிகாந்த்?: பாரதிராஜா விளக்கம்

கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறையை எதிர்த்து தமிழ்த் திரையுலகினர் நடத்திய கண்டன உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து இயக்குநர் பாரதிராஜா விளக்கமளித்துள்ளார்.

கலைஞர் தொலைக்காட்சிக்காக தான் தயாரித்து இயக்கியுள்ள "தெக்கித்திப் பொண்ணு' நெடுந்தொடர் குறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார் பாரதிராஜா. உண்ணாவிரதத்தில் பங்கேற்காதது குறித்த கேள்விகளுக்கு அப்போது அவர் அளித்த பதில் விவரம்:

இதற்கு முன்பு காவிரிப் பிரச்னையில் கர்நாடகத்துக்கு எதிராக கடந்த 2002-ம் ஆண்டு நெய்வேலியில் நடைபெற்ற போராட்டத்துக்கு தலைமையேற்ற தாங்கள் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.4) நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை?

உண்மைதான். தமிழர்களின் உணர்வைக் காட்ட வேண்டும் என்பதற்காகத் தமிழ் சினிமாவின் அனைத்து அமைப்புகளும் ஒருமனதாக முடிவுசெய்து நெய்வேலியில் போராட்டம் நடத்தினோம். லட்சக்கணக்கானோர் அதில் பங்கேற்றனர். ஆனால் அதற்கு அடுத்த நாளே ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. (காவிரிப் பிரச்னைக்காக நெய்வேலியில் கடந்த 2002-ம் ஆண்டு அக்.12-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்காத நடிகர் ரஜினிகாந்த் அதற்கு மறுநாள் (அக்.13) சென்னை சேப்பாக்கத்தில் தனியாக உண்ணாவிரதம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது)

அந்தப் போராட்டம் ஏன் நடத்தப்பட்டது? அப்படி தனியாக நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்று யாராவது கேட்டார்களா? முதலில் அதற்கு பதில் கூறிவிட்டு பிறகு இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை என என்னை கேட்கட்டும்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ளாதவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என திரைப்பட சங்கங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதே?

எனக்கு இதுவரை எந்த நோட்டீஸும் வரவில்லை. அப்படி என்னிடம் விளக்கம் கேட்டால் இப்போது நான் என்ன சொன்னேனோ அதையேதான் சொல்வேன்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர் சத்யராஜ் ஆக்ரோஷமாகப் பேசியது குறித்து..?

சத்யராஜ் பேசியதில் மூன்றில் ஒரு பங்கு எனக்கு உடன்பாடில்லை. அவர் பேச்சில் தமிழ் உணர்வு இருந்தது. ஆனாலும் சக கலைஞர்களை விமர்சிக்கும்போது ஒரு வரைமுறை இருக்க வேண்டும். மேடை நாகரிகம் கருதி சில கருத்துகளை சத்யராஜ் தவிர்த்திருக்கலாம். அவர் பேசிய சில கருத்துகளுக்காக தொலைபேசி மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். சத்யராஜின் உணர்வு மரியாதைக்குரியது. ஆனால் அதை வெளிப்படுத்த அவர் பயன்படுத்திய வார்த்தைகளில் எனக்கு உடன்பாடில்லை.

உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற ரஜினிகாந்த் பேச்சு குறித்து..?

ரஜினிகாந்த் அவர் மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பேசுபவர். அன்றைய தினமும் அவருக்குத் தோன்றியதைப் பேசியிருக்கிறார்.

இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

காவிரி நீர், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம், அல்லது வேறு எதுவாக இருந்தாலும் இங்கே ஒட்டுமொத்த உணர்வு இல்லை. தமிழகம் மட்டும்தான் கலப்படமாக இருக்கிறது. எல்லா பூமியிலும் மண்ணின் புதல்வர்கள்தான் ஆள வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் மாறுபட்ட நிலை. மண்ணின் மைந்தன்தான் இந்த பூமியை ஆள வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடு மக்களிடையே எழுந்தால்தான் ஒற்றுமையுணர்வு ஏற்படும். அரசியல்ரீதியாக இதற்கு ஏதாவது செய்ய வேண்டும். மக்களின் இந்த மனப்போக்கை சினிமா மழுங்கடித்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. மற்றபடி கலைஞர்கள் எனப்படுபவர்கள் என்றுமே எல்லாருக்கும் பொதுவானவர்கள் என்பது என் கருத்து.
( நன்றி: தினமணி )

7 Comments:

Venkiee said...

Barathiraja is a useless fellow.... funny insane reason to avoid the "Unna Viratham"...

யோசிப்பவர் said...

//எல்லா பூமியிலும் மண்ணின் புதல்வர்கள்தான் ஆள வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் மாறுபட்ட நிலை.//
என்ன சொல்கிறார்? அப்போ கருணாநிதி மண்ணின் மைந்தர் இல்லை என்கிறாரா?

Anonymous said...

ஸ்டாலின்,அழகிரி,அன்புமணி என்று ஏகப்பட்ட புதல்வர்கள் இருக்கிறார்கள்.புதல்வி கனிமொழி வேறு இப்போது இருக்கிறார்.
மண்ணின் திருநங்கைகள் என்ற பிரிவினையும் சேர்த்துக் கொள்வோமோ ?

Anonymous said...

ஸ்டாலின்,அழகிரி,அன்புமணி என்று ஏகப்பட்ட புதல்வர்கள் இருக்கிறார்கள்.புதல்வி கனிமொழி வேறு இப்போது இருக்கிறார்.
மண்ணின் திருநங்கைகள் என்ற பிரிவினையும் சேர்த்துக் கொள்வோமோ ?

சங்கு மாமா said...

இவ்வளவு பேசும் இந்த ஆள்..2002 ல் நெய்வேலியில் தர்ணா நடத்திய போது.. A.C Volvo பஸ் ல் அல்லவா எல்லோரையும் இட்டுணு போனார் ?
கூடவே 5 ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு, அடிக்க சரக்கு, கொறிக்க சைடு டிஷ்...சகிதமா இல்ல நெய்வேலில ரவுசு பண்ணிட்டு வந்தாங்க...காவிரி நதி நீர் போராட்டம் ங்கற பேருல...அப்புறம் என்ன புண்ணாக்கு பேச்சு வேண்டி கிடக்கு..!!
ரஜினி அடுத்த நால் தனியா நிஜம்மா உண்ணாவிரதம் இருந்தாரு...
மொதல்ல தமிழனா நடந்துக்கட்டும்..பிறகு பார்க்கலாம் இவரோட லட்சணத்தை..மார்க்கெட் இல்லை இல்லையா..அதான் அடுத்தவனை பார்த்தா காண்டு.... மண்ணெண்ணெய்.. வேப்பெண்ணை.. வெளக்கெண்ணை... சௌத் ஆப்ரிக்கா ஜெயிச்சா எனக்கென்ன ங்கற மாதிரி.. தேச துரோகி...

Anonymous said...

enna idly vadai sir..yaaro malaysia engineer-ai(arakkonam party-yam) cyber crime police pidichuttangaLaamE? :P

Anonymous said...

ரஜினி மேல எல்லாருக்கும் என்ன கோவமோ தெரியல..//மண்ணின் மைந்தன்தான் இந்த பூமியை ஆள வேண்டும்// ரஜினியை தேவையில்லாமல் பெரிய ஆளாக்குவது இவர்கள்தான்..
//மற்றபடி கலைஞர்கள் எனப்படுபவர்கள் என்றுமே எல்லாருக்கும் பொதுவானவர்கள் என்பது என் கருத்து//சரியான பல்டி,அப்படின்னா வேற்று மாநில மக்கள் நடிக்கலாம் ஆனால் ஒரு ஜடம் போல எந்த கேள்வியும் கேக்காம இருக்கணும்..
என்னய்யா இது?? அப்படின்னா தமிழ்ர்களை விட்டுட்டு எதுக்கு மத்த மாநிலத்தவர்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்துறிங்க? ஏன் ரஜினியை மட்டும் கேள்வி கேக்குறிங்க ,பாலசந்தரை கேளுங்க..அவர்தான அறிமுகப்படுத்தியவர்?அவர் படங்களில் பெரும்பாலும் பிற மாநிலத்தவர்கள் தான் நடிக்கிறார்கள்..