பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 10, 2008

திருவல்லிக்கேணியை தி.கேணி என்று ஏன் எழுத கூடாது - கலைஞர்

நாடாளுமன்ற முன்னாள் எம்.பி. வெற்றிச் செல்வன் மகள் விமலா கஸ்தூரி- பாலச்சந்தர் திருமணத்தை முதல்- அமைச்சர் கருணாநிதி திருமணத்தை நடத்தி வைத்து பேசிய பேச்சு...

கழகத்தின் பொருளாளர் வீராசாமி பேசும்போது ஒன்றைச் சொன்னார், பேசியவர்கள் எல்லாம் ஒவ் வொருவரையும் குறிப்பிட்டு எப்படி அவரை விளித் தார்கள் என்பதை எடுத்துச் சொன்னார். என்னைப் பொறுத்தவரை நான் கவனித்த விஷயம் அதுவல்ல. வெற்றிச் செல்வனைப் பற்றி குறிப்பிடும் போதாகட்டும், அல்லது வேறு சில நண்பர்களைப் பற்றி குறிப்பிடும்போதாகட்டும், அப்போதெல்லாம் முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்று குறிப்பிட்டார்கள்.

நாடாளுமன்றம் அப்படியே இருக்கிறது, அது ஒன்றும் முன்னாள் ஆகி விடவில்லை. சட்டமன்றமும் அப்படியே இருக்கிறது, அது ஒன்றும் முன்னாள் ஆகிவிடவில்லை. எனவே இனியாவது இது போன்ற மணவிழாக்களிலும் அல்லது வேறு விழாக்களிலும் கலந்து கொள்கின்ற சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே அந்தப் பதவிகளிலே இருந்து இப்போது இல்லாத வர்களாக இருந்தால், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் -சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் என்று குறிப்பிட்டால் தமிழ் தப்பும்.

தி.நகர் என்றால் உங்க ளுக்குத் தெரிகிறது, திருவல் லிக்கேணி என்றால் உங்க ளுக்குத் தெரிகிறது. ஏன் தி. நகர் என்று பெயர் வைத்தார்கள் தெரியுமாப தியாகராய நகர் திராவிட இயக்கத்தை உருவாக்கிய முன்னோடித் தலைவர் தியாகராயர் பெயரால் ஒரு பகுதியே விளங்குகிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத, விரும்பாத, இன்னும் சொல்லப் போனால் வெறுக்கின்ற ஒரு கூட்டத்தார், அதைத் தியாகராய நகர் என்று சொல்லி -அவர் பெயரை விளம்பரப்படுத்தத் தேவையில்லை என்று கருதி, அதைச் சுருக்கி தி.நகர் என்று வைத்து விட்டார்கள்.

( வேண்டாம்...வலிக்குது அழுதுடுவேன்....)

பேருந்துகளிலே கூட "தி.நகர்'' என்றுதான் எழுதிக் கொண்டிருந்தார்கள். நம்முடைய ஆட்சி வந்த பிறகுதான் தியாகராயநகர் என்று முழுப் பெயர் எழுதப்பட்டது. கேட்டபோது சொன்னார்கள், அது நீளமான பெயர், அதனால் தான் தி.நகர் என்று எழுது கிறோம் என்றார்கள். அது நீளமான பெயர் என்றால், திருவல்லிக்கேணியை தி.கேணி என்று எழுதுகிறார்களா? இல்லை.

(கருணாநிதி என்பதை சுருக்கி கலைஞர் என்று எழுதுவது போல தான் இதுவும் )

இவைகள் எல்லாம் விஷமத்தனமானவை. அந்த விஷமத்தனத்தைப் புரிந்து கொள்ளாத சில அப்பாவிகள் அதற்கு அடிமையாகிக் கொண் டிருக்கிறார்கள். நான் இந்தத் திருமண விழாவில் இந்தச் சொற்களைப் பற்றி யெல்லாம் சொன்னதற்குக் காரணம், இதிலே தமிழர்களுடைய பெருமை மறைந்திருக்கிறது, தமிழர்களுடைய மானம் புதைந்திருக்கிறது. அவைகளை நாம் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விடக் கூடாது. அதை நாம் இழப்பதற்கு காரணமாக இருப்பவர்களை அடையாளம் காண வேண்டும் என்பதற்காகத் தான் இதைச் சொல்கிறேன்.

அந்த வழியிலே சொல்லப்படுவது தான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் என்று சொல்வதை -வெற்றிச் செல்வனைப் பார்த்து நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் என்று சொல்வதற்குப் பதிலாக, முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் என்று சொல்லும்போது, நாடாளு மன்றமே இப்போதில்லை, முன்னாள் இருந்தது, இவர் முன்னாள் இருந்த நாடாளு மன்றத்திற்கு உறுப்பினர் என்ற நிலையிலே போய்ச் சேரும் என்பதற்காகத் தான் இதைச் சொல்லுகிறேன். அவரைப் பெருமைப்படுத்துவதாக இருந்தால் நாடாளு மன்றத்தின் முன்னாள் உறுப்பினர் என்று சொல்ல வேண்டும். அவரை சிறுமைப்படுத்துவதாக இருந்தால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூறலாம் என்பதை மாத்திரம் நான் சொல்ல விரும்புகிறேன்.

வெற்றிச் செல்வனைப் பொறுத்தவரையில் அவர் இங்கே சொன்னாரே -அது நூற்றுக்கு நூறு உண்மை. என்னை அவர் உள்ளத்தால் -உணர்வால் -எந்த நேரத்திலும் நினைத்துக் கொண்டிருக்கின்ற ஒருவர். இந்த இயக்கத்தில் வெற்றிகளையும் சந்தித்திருக் கிறோம், தோல்விகளையும் சந்தித்திருக்கிறோம்.

இங்கே பேசிய நண்பர்கள் குறிப்பிட்டதைப் போல், வெற்றி அடைந்த போது நாம் வீறாப்பு கொண்டு அலைந்தது இல்லை. தோல்வி அடைந்த போதும் துவண்டு நின்றதில்லை. அடக்கு முறைகளுக்கு ஆளாகி யிருக்கிறோம், சிறைச் சாலைகளுக்குச் சென்றிருக் கிறோம், எந்த நேரத்திலும் நம்மோடு இருந்து -நம்மோடு தான் இருப்பேன் என்கின்ற அந்த உறுதியோடு -எதையும் தாங்கிக் கொள்கின்ற இதயத்தை அண்ணாவிடம் இருந்து நான் பெற்றதைப் போல, அவரும் பெற்று இந்த இயக்கத்திலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

வருவார் -என்ன எம்.பி. சீட்டா என்றால் சிரிப்பார்- இல்லை, இந்த முறை இல்லை போ என்று சொன்னால் சரி என்று போய்விடுவார், இல்லை, கொடுத்துத் தான் தீரவேண்டும் என்று என்றைக்கும் அவர் பிடிவாதம் பிடித்ததில்லை.
( ஐயோ சிரிப்பு வருது )

அப்படி இருக்கின்ற ஒரு தம்பியாக இருக்கின்ற காரணத்தால் தான் சில நேரங்களில் அவர் கேட்காமல், நானே அவருக்குத் தந்திருக்கின்ற சம்பவங்கள் எல்லாம் நடைபெற்றிருக்கிறது. இதை எல்லா தம்பிமார்களும் பின்பற்றினால் அவர்களுக்கும் இந்த வாய்ப்பு நிச்சயமாக கிடைக்கும் என்பதற்காகத் தான் நான் வெற்றிச்செல்வனை எடுத்துக்காட்டாக உங்களுக்குச் சொன்னேன். அவருடைய குடும்பத்து விளக்குகளாக இன்றைக்கு ஏற்றி வைக்கப் பட்ட -மணமகனும் மண மகளும் எல்லா வளங்களும் பெற்று வாழ்க வாழ்க என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.

20 Comments:

Anonymous said...

தனது சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட தி.கேணியை பாசமாய் சொல்லியிருப்பார். பாவம். புண்ணாக்காதீர்கள்

அதுவுமில்லாமல் சித்திரை மாசம் ஒண்ணாம் தேதி புதுவருஷம் கிடையாதுனு சொன்னமாதிரி தி.கேணி என்று மாற்றினாலும் மாற்றிவிடுவார்

அப்புறம் பு.வாக்கம்(புரசைவாக்கம்), நு.பாக்கம்(நுங்கம்பாக்கம்) கோ.புரம்(கோபாலபுரம்) என்று எல்லாத்தையும் சுருக்கிட போறாருங்க அவரு

Anonymous said...

அன்புள்ள அனானி நண்பரே,
நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்.
அவர் திருவல்லிகேணியை தி.கேணி
என்று அழைக்காத போது
தியாகராய நகரை மட்டும்
தி நகர் என்று ஏன் சொல்ல வேண்டும்
என்று தான் கேட்டார் . எல்லா பெயரையும்
விரிவாக எழுத வேண்டும்
என்று தான் சொன்னரே தவிர
சுருக்கி எழுத சொல்லவில்லை .

அரசியல் ஆர்வலன் said...

வருவார் - என்ன சாப்பாடா என்று கேட்டால் தலையை சொரிவார் - இல்லை, இன்னிக்கு இல்லை, போ போ என்று சொன்னால் சரி என்று போய் விடுவார். இல்லை, இன்னிக்கு சாப்பாடு கொடுத்து தான் தீர வேண்டும் என்று என்றைக்கும் அவர் பிடிவாதம் பிடித்ததில்லை.

அப்படி இருக்கின்ற காரணத்தால் தான் சில நேரங்களில் அவர் கேட்காமல், நானே அவருக்கு பிச்சையாக சாப்பாடு போட்டிருக்கின்ற சம்பவங்கள் எல்லாம் நடைபெற்றிருக்கிறது. இதை எல்லா பிச்சைக்காரர்களும் பின்பற்றினால் அவர்களுக்கும் சாப்பாடு நிச்சயமாக கிடைக்கும் என்பதற்காகத் தான் நான் உங்களுக்குச் சொன்னேன்.

YAGNESWAR said...

Some time I am tired of writing comment after passing thro so many formalities before leaving a comment here in this page

Venpu said...

அது ஒண்ணுமில்ல, தன் பேர்ல உள்ள கலைஞர் கருணாநிதி நகர எல்லாரும் கே.கே.நகர்னு கூப்பிடறாங்கன்னு கடுப்பா இருக்கும்.
அது சரி.. எதுக்கு திடீர்னு "பார்ப்பன எதிர்ப்பு" கொள்கை நினைப்பு வந்திருக்கு?

Anonymous said...

t.nagarnnu sollurathu vasathiya irukuthu... ithai poi sathinnu sollurathu konjam illai, romba over.
thiyagaraya nagar nnu sonna thiyagarayar yaarunnu yellorukkum therinjiduma ? illai bus route boardle avaroda kathaiyai ezhutha poraangala ?

kknagar-ai kalaignar karunanidhi nagarnnu yaaravathu solluraangala ? except for MTC buses, ofcourse.

Sridhar Narayanan said...

கே. கே. நகர், எம்.ஜி.ஆர். நகர், எல்.ஐ.சி. காலனி, எல்லாவற்றையும் விரிவாக எழுத வேண்டும். அது என்ன தியாராயருக்கும் ஒரு நீதி, கலைஞர், எம்ஜிஆருக்கு மட்டும் ஒரு நீதியா?

சென்னையும் - சென்னப்ப நாயக்கரோட பேர்லதான் இருக்கனும். மாத்திடலாம்.

ச்ச... எவ்வளவு விஷமக்காரங்கப்பா இந்த கூட்டம். வடிவேலு கணக்கா எந்த ஒரு மேட்டருக்கும் பழிய சுமக்கறதுக்கு ரெடியா இருக்காங்க.

சட்டசபை / பாராளுமன்றங்கள் அப்படியே இருப்பதில்லை. கவர்னர் ஆட்சி ஏற்பட்டால் சட்டசபை / பாராளுமன்றங்கள் கலைக்கபடுகின்றன.

மன்மோகன் சிங் 14ம் பாராளுமன்றத்தின் (எண்ணிக்கை தவறாக இருக்கலாம்) பிரதம மந்திரியாக இருக்கிறார் என்பதுதான் சரியான வாக்கிய தொடராக இருக்க முடியும்.

அப்படி பார்த்தால் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்பது சரியாக பிரயோகமாகத்தான் இருக்கிறது.

இருந்தாலும் தலைவர் சொல்லிவிட்டார். கேள்வி கேட்டோம் என்றால் உடன்பிறப்புகள், கார்டூன் காரெக்டர்கள் வெகுண்டெழுந்து மேலே விழுந்து பிடுங்குவார்கள். 'தமிழ் பிழைத்து போகட்டும்' என்று பேசிக்கொண்டு இவர்கள் 'தங்கள் பிழைப்பை பார்த்து கொண்டு' போனால் சரிதான்.

Anonymous said...

எனக்கு ஒரு யோசனை. ஏன் திருவல்லிக்கேணியை கனிமொழி நகர் என்று பெயர் மாற்றக்கூடாது?

Anonymous said...

இந்த பின்னுடத்தில் சங்கு மாமாவை காணவில்லையே... :(

Kumaran said...

கல்யாணத்துக்கு வந்துட்டு இப்படியா..? வாழ்த்து சொன்னாரா இல்லையா.. ?

Anonymous said...

சுருக்கமா சொன்னா அவருக்குப் பிடிக்காது. ”சுருக்” னு சொன்னாலும் புரியாது. ஒரு பெரிய மனுஷன் இந்த மாதிரி சின்ன சின்ன வார்த்தை விளையாடிக்கிட்டு.

அப்புறம் நகர் ங்கிறது தமிழ் வார்த்தையா. நான் சொல்றது Nagar ஐ அப்படியே தமிழில் நகர் அப்பிடினு சொல்லலாமா.

Anonymous said...

//சிறைச் சாலைகளுக்குச் சென்றிருக் கிறோம், ....-எதையும் தாங்கிக் கொள்கின்ற இதயத்தை அண்ணாவிடம் இருந்து நான் பெற்றதைப் போல//
ஐயோ கொல்றாங்களே ! ஐயோ காப்பாத்துங்களே !!
//வருவார் -என்ன எம்.பி. சீட்டா என்றால் சிரிப்பார்- இல்லை, இந்த முறை இல்லை போ என்று சொன்னால் சரி என்று போய்விடுவார், இல்லை, கொடுத்துத் தான் தீரவேண்டும் என்று என்றைக்கும் அவர் பிடிவாதம் பிடித்ததில்லை //
SM கிருஷ்ணாவும் இதே ஐடியா தான் follow செஞ்சார்
//வருவார் -என்ன தண்ணியா என்றால் சிரிப்பார்- இல்லை, இந்த முறை இல்லை போ என்று சொன்னால் சரி என்று போய்விடுவார், இல்லை, கொடுத்துத் தான் தீரவேண்டும் என்று என்றைக்கும் அவர் பிடிவாதம் பிடித்ததில்லை //

Anonymous said...

"அப்புறம் நகர் ங்கிறது தமிழ் வார்த்தையா. நான் சொல்றது Nagar ஐ அப்படியே தமிழில் நகர் அப்பிடினு சொல்லலாமா."

ஐயா,
Nagar என்று ஆங்கிலத்தில் எழுதிவிட்டால்
அது ஆங்கில சொல் ஆகிவிடுமா?
நகர் என்பது நகரம் என்பதன் சுருக்கம்
திருச்சிராப்பள்ளியை திருச்சி என்று
அழைப்பது போல.

Anonymous said...

how u will call K K nagar in tamil
KAKa nagar

IdlyVadai said...

அனானி,
It is a nice article. But I dont have time to translate into tamil now.
If you can do that for me, I can post it :-)
இட்லிவடை

சங்கு மாமா said...

தோ..வந்துட்டன்பா.. மு.க வோட குடும்ப உறுப்பினர் அத்தனை பேரிலும்..நகர்கள் உள்ளது...இவருக்கு என்ன வருத்தம் ??

எதாவது கல்யாணத்துக்கு போகவேண்டியது..பட்டாசு மாதிரி கொளுத்தி போட்டுட்டு வர்றது... வயசாக வயசாக மு.க வோட மொக்கை தாங்க முடியல பா !!

வித்தாரக்கள்ளி காட்டுக்கு போனாளாம்...கத்தாழை முள்ளு கொத்தோட குத்திச்சாம்...

வெங்கி said...

பிறரைப் பழித்தே வாழ்க்கை நடத்துவது கருணாநிதிக்கு கை வந்த கலை. தமிழ் மேல் இத்தனை பாசமும் பற்றும் உள்ள நபர் தன் மகனுக்கு சூட்டுவதற்குத் தமிழ்ப் பெயரே கிடைக்காமல், "ஸ்டாலின்" என்று பெயர் சூட்டிய பெருமையை என்னென்பது? அப்படித்தான் சூட்டினாரே, தமிழ்ப் பற்றால் "சுடாலின்" என்றல்லவா எழுதவோ, படிக்கவோ வேண்டும்? அதுவும் கிடையாது. தனது குடும்பம் துவக்கி நடத்திய தொலைக்காட்சிக்கு "கதிரவன் தொலைகாட்சி" என்று பெயர் வைக்காமல், "சன் டிவி" என்று பெயரிட்டதற்கு என்ன காரணம் என்று சற்று விளக்க முடியுமா? தனக்குத் தான் அஞ்சுகம் அம்மையார் தமிழறிவு போதாமல் கருணாநிதி என்று வடமொழியில் பெயர் சூட்டி விட்டார்கள்; தன் வழித்தோன்றல்களுக்காவது இவர் நல்ல தமிழ்ப் பெயர்களைச் சூடியிருக்கலாமே? அது என்ன உதயநிதி? எழுச்சிச் செல்வம் என்றல்லவா பெயர் சூட்டியிருக்க வேண்டும்? அது என்ன துரை? தலைவன், வேந்தன், முதல்வன் என்று எத்தனையோ பெயர் இருக்கின்றனவே? அது என்ன தயாநிதி? கருணைச்செல்வம் என்றல்லவா சூட்டவேண்டும்? கண்ணாடி வீட்டுக்குள் வாழும் கருணாநிதி கல் வீசி விளையடுவதைத் தவிர்ப்பது அவரது வயதுக்கும், பதவிக்கும் உள்ள பெயருக்கு நல்லது.

Anonymous said...

well said Venky... another proof that all these politicians are nothing but hypocrites...not just these name issues , but umpteen issues that defy logic! No wonder illiterate people follow such third rated politicians and this gives a bad name to all us Indian people in the world stage.

Annamalai said...

மு. க முத்து வின் மகன் அறிவு நிதி என்னுடன் படித்தவர்....அவர் தாத்தா வின் பெயரை சொல்லிக்கொண்டு ஆடி அடி வாங்கியது எனக்கு இன்னமும் ஞயாபகம் இருக்கிறது...

ஒன்று புரிந்து கொள்ளவும்...அவர் குடும்பத்திற்கு நிதி தேவைப்படுவதாலும் , நிதி யை மையமாக வைத்து அரசியல் நடத்துவதாலும்...எல்லோருக்கும்......"நிதி" என்ற பெயரில் முடியுமாறு பெயரிட்டிருக்கிறார் போலும்... :) அவர் மட்டும் அல்ல ...அவர் மொத்த பரம்பரையே...சுய நல வாதிகள்...அண்ணா வின் மகன் தற்கொலை செய்து கொண்டதற்கு இவரும் ஒரு வகையில் காரணமே..

Anonymous said...

Live India Vs Australia 3rd One Day.


http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)