பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 16, 2008

பிரியங்கா - நளினி சந்திப்பு - சரியா ? தவறா ?

பிரியங்கா ராஜீவ்காந்தி கொலையாளி நளினியை வேலூர் ஜெயிலுக்கு சென்று சந்தித்தது நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயம்.

* கொலையாளிகளை சந்தித்து, அவர்களுக்கு சட்ட பூர்வமாக கொடுத்த தண்டனையை விட மிகப் பெரியதாக எனக்கு தெரிகிறது.

* இது போல் வேறு எங்கும் நடந்திருக்கா என்று தெரியவில்லை( முன்பு போப் இது மாதிரி செய்ததாக ஞாபகம்), இந்த செயலின் மூலம் இவர் இந்திய நாட்டின் உயர்ந்த பண்பை நிலை நாட்டியுள்ளார். நிச்சயம் பலருக்கு இது Inspiration, சிலருக்கு கடுப்பாக இருக்கும்.

* இதற்கு சிலர் அரசியல் சாயம் பூசுகிறார்கள், ஆத்மார்தமான சந்திப்பு தான் என்பது என் எண்ணம்.

* நிச்சயம் பிரியங்கா வருகை கலைஞருக்கு தெரிந்திருக்கும். ஆனால் எந்த பரபரப்பும் இல்லாமல் காதும் காதும் வைத்தது போல் செய்தது பாராட்டபட வேண்டியது.
( தெரிந்திருந்தால், நிச்சயம் தமிழ் நாடு காங்கிரஸ் கோஷ்டி பூசல் வேலூர் வரை சென்றிருக்கும் )

* பிரியங்கா சட்டத்தை மீறினார் என்று சொல்லுகிறார்கள் ( இதை பற்றி கீழே தனியாக). உண்மைதான், சில சமயம் Exceptions இருக்கலாம் என்பது என் கருத்து. இதே போல் நாளை யாராவது கேட்டால் என்ன செய்ய போகிறது அரசு ? யாராவது கோர்ட்டுக்கு போனாலும் போகலாம். பார்க்கலாம்.

விதிமுறைகளும் மீறல்களும்...* ஜெயிலில் இருக்கும் கைதி ஒருவரை கைதி சம்மதித்தால் யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று விதி உள்ளது. ஆனால் ஏராளமான கட்டுப்பாடுகளும், விதிமுறை களும் இதில் உள்ளன.

பிரியங்கா நளினா சந்தித்தபோது பலவிதிமுறை களை மீறி இருப்பதாக தகவல்கள் வெளிவந் துள்ளன.

* பிரியங்கா வருகை அவருடைய பாதுகாப்புபடை மற்றும் ஐ.பி. புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும். வேலூர் பெண்கள் சிறை சூப்பிரண்டு மற்றும் உயர் சிறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

* ஜெயில் கைதிகளை சந்திக்க யார் வந்தாலும் வருகை பதிவேட்டில் அவர்கள் பெயர் விபரம் பதிவு செய்யப்படும். ஆனால் பிரியங்கா வந்த விபரம் எதுவும் குறிப்பிடாமல் ஒரு பார்வையாளர் நளினியை பார்க்க வந்தார் என்று மட்டும் பெயர் குறிப்பிடாமல் பதிவு செய்து வைத்துள்ளனர்.

* பார்வையாளர் எத்தனை மணிக்கு வந்தார். எத்தனை மணிக்கு திரும்பி சென்றார். என்ற விவரங்களைபார் வையாளர் புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் அதையும் பதியவில்லை.

* கைதிகளை பார்க்க வருபவர் முறைப்படி ஜெயி லுக்கு விண்ணப்பம் அளித்து அதன் பின்னரே பார்க்க முடியும். ஆனால் பிரியங்கா விண்ணப்பம் கொடுத்ததாக தகவல் இல்லை.

* தைகதிகள் பாதிக்கப்பட் டவரின் ரத்தம் சம்மந்தப் பட்ட உறவினர் என்றால் அவருடன் காவலர் ஒருவர் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதுவும் கடைபிடிக்கப்படவில்லை.

* வேலூர் ஜெயிலில் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் பார்வையாளர்கள் கைதி களை பார்க்க அனுமதி உண்டு. ஆனால் பிரியங்கா புதன்கிழமை நளினியை சந்தித்து இருக்கிறார்.

* சிறையில் பார்வையாளர் நேரம் பகல் 10மணிமுதல் பிற்பகல் 3மணிவரை என்று உள்ளது. தினமும் 100 பார்வையாளர்கள் மட்டுமே ஜெயிலுக்கு அனும திக்கப்படுவார்கள். அதுவும் மீறப்பட்டுள்ளது.

* அரசியல் தலைவர்கள் ஆராய்ச்சியாளர்கள் போன்றோர் கைதியை சந்திப்பதாக இருந்தால் தமிழக அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற விதி உள்ளது. அதுவும் மீறப்பட்டுள்ளது.

இப்படி பல விஷயங்களிலும் பிரியங்காவுக்காக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.உயர் அதிகாரி களிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்க முடியாமல் திணறுகிறார்கள்.

10 Comments:

Rajaraman said...

Will such a facility be a vailble to every one. can every family condone the cruel deeds of all criminals. Then why should we have courts judges, lawyers, and pending cases. It is the best and easiest way of disposing of all cases. Find a member of the victims family and go and talk to the accused . Then it will ebcome human and understanding. In this casr rajiv is not only a member this family but Former PM of a soverign state. Who will wipe the hurt feeling and emotions of thousandsa of Indians who feel they are badly hurt by this cruel act.
At this rate the victims family can even be intimadated to go and see the accused and the cae can be closed. GOD SAVE US

Gaana said...

இன்னாசெய்தாரை ஒறுத்தல்
அவர்நாண
நன்னயம் செய்துவிடல். -திருக்குறள்

நளினி ,பியங்காவை சந்தித்த போது எவ்வளவு கூனிகுறுகியிருப்பார்.
அதுவே நீதிபதிகள் கொடுத்த தண்டனையை விட பெரிய தண்டனை.இதனால் சிறை தண்டனை ரத்தாகப் போவதில்லை .
சிறை தண்டனையோடு இதையும் சேர்ந்து அனுபவிப்பார்.
மனசாட்சி சிறிது சிறிதாக கொல்லும். நிம்மதி பறிபோகும். நித்திரை தொலைந்துபோகும் . சிறையிலிருந்து வெளியில் வரும் கைதிகள் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்வார்கள். ஆனால் இவர் மீண்டும் தீயோரோடு சேரமாட்டார் . பிரியங்காவின் சந்திப்பு நிச்சயம் அவரை மாற்றிவிடும்.

Anonymous said...

இதில் என்ன தவறு இருக்கிறது? பிரியங்கா செய்தது முற்றிலும் சரியானதே! முக்கிய பிரமுகர்களுக்கு சிறப்பு சலுகை வழங்குவது தவறு என்று வாதிட ஆரம்பித்தால் எல்லாமே தவறாக மாறிவிடும். இப்படி குறை சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும்.

Anonymous said...

இது வரவேற்கதக்க விஷயம்.

`Rsa

Rajaraman said...

She has not followed any process. She has just gone and met her as if we go to temple and come out.
If she can do that evry body must be able to do it. Please understand we are anationof one billion.
All of us supposed to be equal.
To she was ablwe to do ir because DMK is in power and they are in alliance with CONG. If they are not in alliance would this have happened.
Imagine another situation By chance Nalini has still had grudge and sh been infuriated and acted ina violant way can this nation tolerate another catastrophy.
Let us not get emotional and quote Thiruvalluvar.
What great thing has been achieved.It is not Bush Meeting Bin Laden so that the terrorism can to ended.
Or CM meeting Oppositon Leader Jayalalitha that the politics in T. Nadu will get better and T> nadu will become gr8 by their mutual cooperation.

Anonymous said...

I fully concur with rajaraman.He has put the right questions instead of being overwhelmed with
misplaced compassion and a smug
swelling instinct of forgiveness.
Nobody knows the real reason for
the highly secretive visit and
what transpired between the two
ladies,other than what Priyanka
says and what the convict's lawyer
says. His version is second hand
since none was allowed to be present at the meeting. If, as a
client, Nalini had told him what all had transpired, then he is
trying to tell only that part that
may not cause any harm to his
client in future. If she is such
a hard nut to crack, since she has not answered the one question
Priyanka asked as to who planned and exdcuted the assassination, then the very
meeting becomes a failure. One
inference can be that the convict
is mortally afraid for her life
if and when she is released, because the master who controlled
the deed is a ruthless man.

Anonymous said...

ராஜீவ் கொலையில் சோனியாவுக்கும் பங்கு உண்டு என்று சுப்ரமணிய சுவாமி அடித்துக் கூறுகிறார். என் மேல் கேஸ் போடட்டும் என்றும் சவால் விட்டிருக்கிறார். இது வரை சோனியா கேஸ் போடவில்லை.

ராஜீவ் கொலையில் முக்கியமான கூட்டாளியாக ஜெயின் கமிஷனால் குற்றம் சாட்டப் பட்ட கருணாநிதியுடன் சோனியா கூட்டு வைத்திருப்பதால் சு சுவாமியின் குற்றசாட்டில் உண்மை இருக்கிறது என்பது நிருபணமாகிறது

சிவராசனை தனது கெமிக்கல் கம்பெனி டாங்கர் மூலம் பங்களூருக்குக் க்டத்திய டி ஆர் பாலு சோனியாவின் காங்கிரஸ் அரசில் முக்கிய மந்திரி

சிவராசனுக்கும் நளினிக்கும் உதவிய சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றொரு மந்திரி

சிவராசனும், நளினியும், முருகனும், தனுவும் சேர்ந்து ராஜீவை மட்டும் கொல்லவில்லை. ஏராளமான பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரும் கோரமாகக் கொல்லப் பட்டிருக்கின்றனர். எந்தவொரு மன்னிப்பும் அவர்கள் குடும்பங்களின் ஏற்பு இல்லாமல் நடக்கக் கூடாது, முடியாது. அப்படியிருக்கும் பொழுது ப்ரியங்காவுக்கு மட்டும் சிறப்பு சலுகை கொடுத்தது சட்டப் படி தவறு. இதற்காகக் கருணாநிதியும் பிரியங்காவும் கைது செய்யப் பட வேண்டும், அவர்கள் செய்தது தேசத் துரோகக் குற்றம்

நளினிக்கும், முருகனுக்கும் மன்னிப்பு வழங்க சோனியாவும் பிரியங்காவும் யார்? மற்ற குடும்பத்தினரின் அனுமதி இன்றி தன்னிச்சையாக அவர்கள் எப்படி செயல்படலாம். மற்ற குடும்பங்கள் இதை கோர்ட்டுக்கு எடுத்துச் சென்று நீதி கேட்க்க வேண்டும்

சோனியாவின் சதித் திட்டத்தில் ப்ரியங்காவுக்கும் தொடர்பு இருப்பது இந்தச் சந்திப்பின் மூலம் உறுதியாகிறது.

இத்தாலிய மாஃபியாவின் சதிச் செயலுக்கு அப்பாவி ராஜீவ்காந்தியும் பல அப்பாவி மக்களும் தங்கள் உயிரைக் கோரமான முறையில் இழந்துள்ளனர். இதற்குக் காரணமான கருணாந்தி, சோனியா, பிரபாகரன் அனைவரும் தூக்கில் போடப் பட வேண்டும்

Anonymous said...

புது தினமலர் தளம் மிகவும் மெதுவாக இருக்கிறதே ? கட்டுரை எழுத்துகளை கட்-பேஸ்ட் செய்ய முடியவில்லையே - என்ன வழி ? வியூ சோர்ஸில் நோட்பேடில் பார்த்தால் எண்களாகத் தெரிகிறது.

Keyven said...

Joke of the Year !!

பிரியங்கா, நளினி சந்திப்புக்கு நான்தான் மூல காரணம் என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

வேலூர் மத்திய சிறையில் பிரியங்கா, நளினி இடையே நடந்த சந்திப்புக்கு நான் தான் மூல காரணம். விரைவில் இலங்கை இனப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்படும்.

Anonymous said...

We are misusing Thiruvalluvur quite alot. We use his couyplets whenever and wherever it is convenient to us.
This is meant for small afrnots between friends, relatives familars and aquaintences. But certainly not between a criminal and the affected. The moment the crime has taken place and police has taken over the investigation,the victim loses their locus standii. Then the state takes over.The law of the land takes charge Here no place for sympathy, compassion, considerations do not have place,
Then we cant talk of gothra riots. Since all the victims have tuned hostile may be out of fear.(here sudden compassion
Please remeber the after math of Rajivs assasination.
Hundresds of people lost lives and belongings due the rage that followed. what happens to their loss. simply forget and forgive. It ceratainly not between Priyanka and Nalini two individauls. It is between the nation and a group. Let us remeber only after the murder, Nalini and Murugan went round the world got married visited Thirumal and finally were caught when they were about escape to Srilanka. So thinking that she is innocent seems to toatally naive.