பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 07, 2008

ஒக்க பிரச்சனை, பல கருத்து

ஒகேனக்கல் கருத்துக்கள்


ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்கலாம் என்று தான் கூறினேன்; இத்திட்டம் அறவே கைவிடப் படுகிறது என்று நான் சொல்லவில்லை.
முதல்வர் கருணாநிதி

கடந்த மூன்று ஆண்டுகளில் 2250 கோடி ரூபாய் அளவுக்குச் சொந்த நிதி வருவாயிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து இலவச கலர் டிவிக்களை வழங்கி வரும் மாநில அரசு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்குக் குடிநீர் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற ஜப்பானிய நிதியுதவி கிடைக்க வேண்டும் என்று காத்திருந்து கிடப்பில் போடலாமா?
டாக்டர் ராமதாஸ்

ஒகேனக்கல் திட்டத்துக்கு எந்தத் தடையும் இல்லாத நிலையில் தன்னிøச்சயாக முதலமைச்சர் அறிவிப்புச் செய்தது, அவரது எதேச்சாதிகார அணுகு முறையையே காட்டுகிறது. மத்திய அரசில் அனுபவித்து வரும் அரசில் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், சொந்த சுய நல அரசியலுக்காகக் காங்கிரசைக் குளிர்விக்கவும் தான் இந்த அறிவிப்பு என்பது பட்ட வர்த்தனமாகத் தெரிகிறது.
வைகோ.

இரு மாநில மக்களுக்கிடையே பதட்டம் அதிகரித்த சூழ்நிலையில் இத்திட்டத்தை வலியுறுத்திக் கொண்டே கர்நாடகத்தில் புதிய ஆட்சி அமையும் வரை காத்திருப்போம் என்று முதல்வர் எடுத்துள்ள நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
என்.வரதராஜன்.

கர்நாடக தேர்தல் முடிந்த பிறகு ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை பார்த்துக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் கூறுகிறார். அவர் இந்த திட்டத்தை நிறுத்தி வைத்தது தவறு. அரசியல் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தமிழக அரசு இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு தமிழக பிஜேபி முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
சு.திருநாவுக்கரசர்.

காங்கிரசுடனான கூட்டணியை காப்பாற்றுவதற்காக ஒகேனக்கல் திட்டத்தை கருணாநிதி நிறுத்தி வைத்துள்ளார். இது தமிழர்களின் முதுகில் குத்தும் செயல்.
பழ. நெடுமாறன்.

ஒகேனக்கல் பிரச்சனையில் கர்நாடகத்தில் என்னை பற்றி தவறாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. கன்னட மக்களை உதைக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல; விவேகம் இல்லாதவன் அல்ல; எனது பேச்சு கர்நாடக மக்களின் மனதை பாதித்து இருந்தால் நான் மன்னிப்பு கேட்க தயார். ஆனால் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு நான் எந்த தவறும் செய்யவில்லை. இதனால் மன்னிப்பு கேட்பதற்கான அவசியம் இல்லை.
நடிகர் ரஜினிகாந்த்

ஒகேனக்கல் திட்டத்திற்கு கர்நாடகம் மட்டுமல்ல, இங்கு இருக்கும் சிலரும் முட்டுக் கட்டையாக இருக்கிறார்கள்.
அமைச்சர் ஸ்டாலின்

ஒகேனக்கல் திட்டம் தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை என்ற தமிழக அரசின் முடிவு, காங்கிரசு அதன் முக்கிய கூட்டணிக் கட்சியான திமுகவுடன் சேர்ந்து கர்நாடக மக்களை ஏமாற்றும் வகையில் செய்த சதித் திட்டம்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா.

ஒகேனக்கல் திட்டம் கர்நாடகத்தில் காங்கிரசின் தேர்தல் ஆதாயத்திற்காக ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. முதல்வரின் நிலைப்பாடு வருத்தம் அளிக்கிறது.
விஜய டி.ராஜேந்தர்.

தமிழ்நாட்டில் உள்ள சில தலைவர்கள் ஏதோ திட்டமே கைவிடப்பட்டது போல ஆர்ப்பரித்து அறிக்கை விடுகிறார்கள். தமிழக அரசு மீது குற்றம் சுமத்த இப்போது இந்த ஆயுதம் கிடைத்தது நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்ற குறுகிய அரசியல் நோக்கத்துடன் ஆதாயம் தேடிட முயலுகின்ற தவறான போக்கு இது. தூங்குபவர்களை எழுப்புவது எளிது, ஆனால் தூங்குபவர்களைப்போல பாசாங்கு செய்பவர்களை எழுப்ப முடியாது.
கி.வீரமணி.

சரி உங்க கருத்து என்ன ?

9 Comments:

Subramanian said...

I could,nt understand; whether Manbumigu Stalin is indirectly referring the C.M
Suppamani

Subramanian said...

With regard to Hoganekkal problem I feel you may use the entire name in tamil insted of as writiing now; if prople taking your first letter "O" as a "Nedil", it gives some different meaning intamil -suppamani

Anonymous said...

//ஒகேனக்கல் திட்டத்திற்கு கர்நாடகம் மட்டுமல்ல, இங்கு இருக்கும் சிலரும் முட்டுக் கட்டையாக இருக்கிறார்கள்.
அமைச்சர் ஸ்டாலின்//

நைனா மேல இன்னா திடீர்னு கோவம்.

Anonymous said...

உலக தமிழரை காப்பாற்ற 50C கை மாறிடுச்சுண்ணே; வெட்டியா ஏன் கத்துறீங்க! சீக்கிரமா ஒரு ராமர் பாலம் அல்லது இட ஒதுக்கீடு பிரச்சனைய கிளப்பிட்டா அப்புறம் என் வழிக்கு வந்துற மாட்டீங்க?

Anonymous said...

Veerappa Moily: Sonia told MK to put hold. (in The Hindu)

Sonia intervened on Hogenakkal project: Congress
Bangalore (PTI): It was AICC President Sonia Gandhi's intervention that saw the Hogenakkal project being put on hold temporarily, the Congress said on Tuesday.

"Congress President Sonia Gandhi spoke to Tamil Nadu Chief Minister M Karunanidhi and requested him to defer the project", Congress Media Department head, M Veerappa Moily told a press conference here.

"Sonia has a special love for Karnataka", he said.

The statement comes two days after Tamil Nadu Chief Minister M Karunanidhi said he decided to put on hold the project to discuss it with the new government to be elected after May polls in Karnataka, in order to prevent escalation of violence in both the states.

The chief minister had also said his decision was not based on request made by Congress and he did so considering the welfare of the people of both the states.

Pro-Kannada groups had taken to the streets protesting Tamil Nadu Government's stand on implementing the project, while in Tamil Nadu there were protests against Karnataka's opposition to the project.

The Tamil film industry also supported the government stand observing a fast in Chennai while its Karnataka counterparts staged a dharna here.

BJP and JDS have described the temporary truce as a "conspiracy" between the Congress and DMK.

VIJI said...

//நைனா மேல இன்னா திடீர்னு கோவம்.//

:-)

Anonymous said...

இந்த ஹொகனேக்கல் விஷயத்தில் யார் சொ.செ.சூ வைத்துகொண்டது ?

1. கருணாநிதி ? முதலில் எலும்புப் பேச்சு, பின்னர் சட்டமன்ற அனைத்துக் கட்சி தீர்மானம், பின்னர் சோனியா தலையீட்டில் 1.5 மாத தள்ளிவைப்பு, தற்போது ராமதாஸ், ஜெ. போன்றோரின் அறிக்கைகளுக்குத் தீனி.

2. ஜெயலலிதா ? பிரச்னை சூடேறிய ஒரு வாரத்திற்கு சைலண்டாக இருந்துவிட்டு, கருணாநிதியின் பேச்சுக்களால் இனிமேல் கர்நாடகத்தில் பா.ஜ.கவுடன் கூட்டு சேர முடியாது. இங்கும் யாரும் அதிமுகவின் நிலை பற்றி பெரிய கவலை கொள்ளப்போவதில்லை.

3. ரஜினிகாந்த் ?

சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் வீசிய தூண்டிலில் சிக்கி அனாவசியமாக வீராவசனம் பேசி கன்னடர்களிடம் வாங்கிக்கட்டிகொண்டு தற்போது மன்னிப்பு கேட்கவேண்டிய நிலை. கமல் போல சாதுர்யமாகப் பேசி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பேச்சு பேசியிருந்தால் வருங்கால கர்நாடக மாநில பட பிசினசாவது தடை பட்டிருக்காது.

4. தென்னிந்திய திரைப்பட சபை/சங்கம் ? கொஞ்சம் அமைதிகாத்து மௌன + உண்ணாவிரதமாக இருந்திருந்தால் சரியாய் இருந்திருக்கும் தற்போது ரஜினி சொன்னமாதிரி அவருக்கு 3 வருடத்துக்கு ஒரு படம் ரிலீசாகும் அதனால் நட்டமில்லை. ஆனால் மற்றவர்களுக்கு நிச்சயம் பொருளாதார அளவில் கொஞ்சம் பாதிப்பு இருக்கும்.

Anonymous said...

ராமதாஸ் ஆதாயம் தேடும் அரசியல்வாதி என்றாலும் அவர் கேட்கும் கேள்விக்கு கருணாநிதி பதில் கூறவில்லையே! அனாவிசியமான டிவிக்கு பல கோடி செலவிட முடியும்போது அவசியமான தண்ணீருக்கு பணம் இல்லாது போனது எப்படி?

Anonymous said...

the cat has comes out at last veerappa moiley accepted that because of sonia's instruction only the hogangal project has shelved by our Dr.M.K
in 1971 because of indira cavery case was withdrawn by him and now this drinking water project,.

hats of 2 Dr.M.KARUNANIDHI