பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 09, 2008

மொய்லி இது நியாயமா ?

இன்று மொய்லி அடித்த அந்தர் பல்டி அறிக்கையாக:

ஓகேனக்கல் குடிநீர்த் திட்டம் தொடர்பாக நான் கூறிய கருத்துக்கள் தவறான கண்ணோட்டத்தில் செய்திகளில் வெளியாகியுள்ளன.

சோனியா காந்தி முதல்வர் கருணாநிதியுடன் பேசிய பின்னரே கருணாநிதி திட்டத்தை நிறுத்தி வைக்கும் முடிவை எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உண்மையில், இரு மாநிலங்களிலும் அமைதி நிலவ வேண்டும். பிரச்சினை சுமூகமாக தீர்த்து வைக்கப்பட வேண்டும். இரு மாநிலத்திற்கும் இடையே சுமூக நிலை நீடிக்க வேண்டும் என்பதுதான் சோனியா காந்தியின் விருப்பமும், கவலையும்.

தமிழகத்தின் தரப்பில் முதல்வர் கருணாநிதி இரு மாநில அமைதியையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவை, கர்நாடக மக்கள் வெகுவாக பாராட்டி வரவேற்றுள்ளனர் என்று கூறியுள்ளார்.

6 Comments:

ஜயராமன் said...

அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பா!!!

( மொய்லி ஒரு பொய்லி...)

Anonymous said...

IV, Karuna & Sonia are Partners in crime.

For the telephone call made by Sonia to Karuna few days back requesting him to put the Hogenakkal project on hold, today Karuna has returned the call to her to hold Moily in check.

I have been expecting this bulti from Moily & it is similar to the bulti forced on EVK Elangovan a couple of years back after he demanded for inclusion of Sonia Cong as coalition partner in TN cabinet.

கல்வெட்டு said...

இட்லிவடை,
இது உண்மையா?? அப்படி என்றால் சிரிப்பதைத் தவிர ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

// நான் கேட்டது, நீங்கள் எப்படி மொய்லியை மட்டும் நம்புகிறீர்கள் என்று . அவர் என்ன வேற்றுக்கிரக அரசியல்வாதியா? அவரின் சோனியா-கர்நாடகா அன்பு பேச்சு 100% வடிகட்டப்பட்ட கர்நாடக அரசியல்தனம்.//

என்று சொல்லியிருந்தேன்.....நான் கேட்டதற்கு இப்போது மொய்லியே பதில் சொல்லிவிட்டார் என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும். :-)))

ஒரு அனானி நண்பர் வேறு இவ்வாறு சொல்லியிருந்தார்..... //மொய்லி சொன்னது பொய் என்றால் கலைஞர் மறுத்து அறிக்கை விடட்டும்.மெளனம் சாதித்தால் அது உண்மை என்றுதானே அர்த்தம்.//

அனைவருக்கும் சேர்த்து மொய்லியே பதில் சொல்லிவிட்டார் :-))))

**

இதெல்லாம் சும்மா சாதாரண பல்டிகள். இன்னும் பல அந்தர்பல்டிகள் வர 2 மாதம் பொறுத்து இருங்கள்.

அனானி சொன்னது போல் ...//சோனியா என்ன சொன்னரோ, இந்தப் பேரத்தில் விட்டுக்கொடுக்க கலைஞர் எதைக் கேட்டாரோ, பெற்றரோ அதெல்லாம் ஒருநாள் வெளியேவராமலா போய்விடும். //

எல்லாம் வெளியில் வரும் வரை காத்து இருப்போம்.

**
அரசியல் சமரசங்கள் இருந்தாலும் கலைஞர் இந்த விசயத்தில் தெளிவாகவே காய் நகர்த்துகிறார் என்றே நான் நம்புகிறேன். பார்ப்போம்.

Anonymous said...

ஏம்பா இட்லி உங்க பிளாக்கை படிச்சி ஜயராமன், கல்வெட்டு சில அனானி (நீரே தானோ என்னவோ) கமெண்ட் அடிக்கிறதும் பதில் போட்டுக்கிறதும்

இதுக்கு தான் சாட் இருக்கே பிரைவேட்டா அரட்டை அடிங்கப்பா

muthu said...

daily 4 or 5 post. that too extracts from news papers. and just highlighting the areas that detoriate DMK, PMK, Congress .

Nice way to Run a Blog Idly Vadai.

Arippuku suya soridhal idhu dhaano?

சங்கு மாமா said...

முத்து...முத்தழகு..... சொம்மா மொக்கை போட வேணாம்..
நியூஸ் பேப்பர் லேர்ந்து எடுக்காம வேற எங்கேயிருந்து எடுக்கிறதாம் ? வர்ற அரசியல் நியூஸ் கலை அலசி ஆராய்சி பண்ணா தான் மனசு ஆறும்.. விருப்பம் இருந்தா பதிவு போடுங்க ..இல்லாங்காட்டி வேற வெட்டி வெப் பதிவு சைட் ங்க இருக்கு அங்கன போயி..
(edited)