பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 24, 2008

சங்கரா டிவி உதயம்

புதிய டி.வி. ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளனர். சங்கரா டி.வி. என்ற பெயரில் வெளிவரும். இதில் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் இந்து சமய நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சி சங்கராச்சாரியார், ஜெயேந்திர சரஸ்வதி ஆகியோர் இந்து மதத்தை பரப்பும் வகையில்

காஞ்சி காமக்கோடி பீடம் டிரஸ்ட் சார்பில் புதிய டி.வி. இன்னும் 20 நாட்களில் ஒளிபரப்பை தொடங்கும் என்று மடத்தின் நிர்வாகி கூறினார். ஏப்ரல் 14-ந்தேதி ஒளிபரப்பை தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. லைசென்சு பெறுவதில் தாமதம் ஆனதால் தள்ளிப்போனது.

இன்னும் 15 நாட்களுக்குள் லைசென்சு கிடைத்து விடும். 20 நாட்களுக்குள் சங்கரா டி.வி. நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். முன்னோட்ட ஒளிபரப்பு தொடங்குவதற்கு 70 மணி நேரத்திற்கு நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது.

சங்கர டி.வி.யில் கோவில் கும்பாபிஷேகம், ஆன்மீக சொற்பொழிவு, பஜனை, கர்நாடக இசை, காலையில் சுப்ரபாதம் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெறும். இந்துக்களுக்கு குறிப்பாக வெளிநாட்டில் உள்ள இந்துக்கள் சமய நிகழ்ச்சிகளை பார்க்க வழி இல்லாமல் இருந்தது.

சங்கரா டி.வி. தொடங்க வெளிநாட்டில் வசிக்கும் இந்துக்கள் நிதி உதவி அளிக்கவும் தயாராக இருக்கிறார்கள். மற்ற மதங்களுக்கு தனி சேனல்களும், குறிப்பிட்ட நேரத்திற்கு ஒளிபரப்பும் நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இந்து மதத்திற்கு என்று தனி சேனல் எதுவும் இல்லை. இந்துக்களை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு சினிமா படங்கள் தற்போது வெளி வருகின்றன.

அதனால் இந்து சமயத்தின் சிறப்பு, வழிபாடு, புனித கோவில்கள் சிறப்புகள் போன்றவற்றை போற்றும் வகையில் சங்கரா டி.வி. நிகழ்ச்சிகள் அமையும் என்று மடத்தின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சங்கரா டி.வி. நிகழ்ச்சி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

பிகு: மதுரை வைகை ஆற்றில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை முழுவதுமாக படம் பிடித்திருக்கிறார்கள் முதல் போணியாக இருக்கும்.

அப்டேட்
//இட்லி-வடை சங்கரா டி.வியில் தோன்றுவாரா?// ( அனானியின் கேள்வி )

இட்லிவடையின் பதில் இங்கே: http://idlyvadai2007.googlepages.com/shankara_tv_iv.jpg

10 Comments:

raam said...

all the best sangara tv

வடுவூர் குமார் said...

அலுவலக முகவரி தெரியுமா?
தெரிந்தால் சொல்லுங்கள்.

Anonymous said...

இட்லி-வடை சங்கரா டி.வியில் தோன்றுவாரா?

IdlyVadai said...

//இட்லி-வடை சங்கரா டி.வியில் தோன்றுவாரா?//

பார்க்க இங்கே: http://idlyvadai2007.googlepages.com/shankara_tv_iv.jpg

IdlyVadai said...

//இட்லி-வடை சங்கரா டி.வியில் தோன்றுவாரா?//

பார்க்க இங்கே:

http://idlyvadai2007.googlepages.com/shankara_tv_iv.jpg

Anonymous said...

ஹ ஹ too much, இட்லிவடையாரே!

Anonymous said...

I think these people are late to the game. When everybody's "youtube"ing, still being stuck to tv seems like a slow embrace of technology. Best wishes to them, though.

சந்தோஷ் = Santhosh said...

சங்கரா டீவி, இருக்குற இடம், தரை இதை வெச்சி பாக்கும் பொழுது இட்லிவடை அமெரிக்காவுல இருக்குற மாதிரியில்ல இருக்கு.. :))

IdlyVadai said...

//சங்கரா டீவி, இருக்குற இடம், தரை இதை வெச்சி பாக்கும் பொழுது இட்லிவடை அமெரிக்காவுல இருக்குற மாதிரியில்ல இருக்கு.. :))//

பல நாள் திருடன் மட்டும் இல்லை, பல நாள் முகமூடி கூட தான்..

Anonymous said...

Whether The proceedings and judgement of the "JAYRNDRARCRIMINAL CASE" would be telecasted in the referred channel then and there;- suppamani