பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 03, 2008

தமிழன் யாருக்கும் சளைத்தவன் அல்ல

ஒகேனக்கல் விவகாரத்தில் உண்மை நிலை என்ன என்பது புரியாமல் சில கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருவது தமிழர்களை அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கி இருக்கிறது. வெறி பிடித்த கன்னடர்கள் தமிழ் எழுத்துக்களை அழிப்பதும், தமிழர் அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதும் கட்டுப்படுத்த முடியாதபடி இருப்பதால் தமிழர்கள் தக்க பதிலடி கொடுக்கத் தொடங்கி உள்ளனர்.

தமிழன் யாருக்கும் சளைத்தவன் அல்ல என் பதை நிரூபிக்கும் வகை யில் மதுரை, கோவை, தஞ்சை, திருவண்ணாமலை, சென்னை நகரங்களில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. கர்நாடக பஸ்கள் மறிக்கப்பட்டன. கர்நாடக தலைவர்களின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன.

பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் தமிழர் அமைப்புகள் இந்த பதிலடி போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.

பெங்களூரில் உள்ள தமிழ் சங்கம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள கர்நாடக சங்கத்தை முற்றுகையிடப்போவதாக விடுதலை சிறுத்தைகள் அறிவித்தனர். இதனால் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அந்த பகுதியில் வாகன சோதனையும் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று பகல் 11 மணிக்கு அபிபுல்லா சாலையில் உள்ள கர்நாடக சங்கம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த சுமார் 500பேர் திரண் டனர். வன்னியரசு தலைமையில் அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிறகு விடுதலை சிறுத்தைகள் கர்நாடக சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். மத்திய அரசு மற்றும் கன்னட அமைப்புகளை கண்டித்து கோஷம் போட்டனர். வாட்டாள் நாகராஜுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

தி.நகர் போலீஸ் உதவி கமிஷனர் தலேத்ராஜ் தலை மையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். ஆர்ப் பாட்டக் காரர்கள் உணர்ச்சி பிழம்பாக காணப்பட்டதால், அவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் திணறினார்கள். திடீரென போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கர்நாடக சங்கம் இருக்கும் வளாகத்துக்குள் கன்னட பள்ளி ஒன்றும் உள்ளது. அந்த பள்ளியை உடனே மூடவேண்டும், கர்நாடக சங் கத்தை திறக்க கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் ஆவேசமாக கூறினார்கள். போலீசார் அவர்களை சமரசம் செய்தனர்.

திடீரென ஒரு பிரிவினர் கர்நாடக சங்கம் மீது அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருந்த கன்னட போர்டு அடித்து நொறுக்கப்பட்டது. அதில் இருந்த கன்னட எழுத்துக் களை தார் பூசி அழித்தனர்.

இதையடுத்து கர்நாடக சங்கம் மீது சரமாரியாக கல்வீசி தாக்கப்பட்டது. உடனே அங்கிருந்த கன்னட ஊழி யர்கள், சங்க நிர்வாகிகள் அறைகளுக்குள் ஓடிச்சென்று கதவை பூட்டிக்கொண்டனர். இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஆர்ப்பாட்டம் கட்டுக்கடங் காததால் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தை முக்கிய நிர்வாகிகள், வன்னியரசு, ஆர்வலன், பொன்னிவளவன், ஆதி வெற்றி செல்வன், செல் வம், தமிழ்மதி, குமரப்பா உள்பட 50பேர் கைது செய் யப்பட்டனர். அவர்கள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் காரணமாக அபிபுல்லா சாலையில் 11மணி முதல் 11.45 மணி வரை பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இதுகுறித்து கன்னட சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது இதற்கு முன்பு இப்படி ஒரு சம்பவம் இங்கு நடந்ததே இல்லை என்றனர். தமிழர்களின் பதிலடி அவர்களுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கர்நாடக சங்க முற்றுகையில் ஈடுபட்டவர்களில் ஒரு பிரிவினர் கார்களில் ஏறி மேற்கு மாம்பலம் நோக்கி புறப்பட்டனர். வழி நெடுக அவர்கள் தமிழர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினார்கள். கன்னட வெறியர்களை கண்டித்து கோஷமிட்டனர்.

இது ரோட்டில் சென்று கொண்டிருந்தவர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பரபரப்பு ஏற்படுத்தியபடி சென்ற அந்த கும்பல் 11.30 மணிக்கு மேற்கு மாம்பலம், பிருந்தாவன் சாலையில் உள்ள உடுப்பி ஓட்டலுக்குள் புகுந்தது. கன்னட அமைப்புகளை எதிர்த்து கோஷமிட்டப்படி அவர்கள் ஓட்டலை சூறையாடினார்கள்.

முதலில் ஓட்டலில் பில் போடும் கம்ப்யூட்டரை துக்கி வந்து ரோட்டில் போட்டு உடைத்தனர். ரெப்ரிஜிரேட்டர், மேஜை, நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பட்டன.கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டக்காரர்களின் இந்த துவம்ச நடவடிக்கையை கண்டு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். ஓட்டலின் பின் பக்க பகுதியில் அவர்கள் பதுங்கிக்கொண்டனர். இத னால் யாருக்கும் காயம் ஏற் படவில்லை.

சுமார் பத்தே நிமிடங்களில் ஓட்டலை சூறையாடி முடித்து விட்டு அந்த கும்பல் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அந்த ஓட்டல் போர்க்களம் போல காட்சி அளித்தது.

ஓட்டல் தாக்கப்பட்டது குறித்து மானேஜர் சிவசங்கர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அந்த ஓட்டலுக்கு சென்று பார்வையிட்டனர். வழக்குபதிவு செய்து அவர் கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். உடுப்பிஓட்டல் மானேஜர் சிவசங்கர் நிரு பர்களிடம் கூறியதாவது:-

கடந்த 15 ஆண்டுகளாக இங்கு ஓட்டல் நடந்து வருகிறது. இதற்கு முன்பு இப்படி நடந்ததே இல்லை. எங்களுக்கு இது அதிர்ச்சியாக உள்ளது.

ஓட்டலில் இருந்த எல்லா பொருட்களும் உடைக்கப்பட்டு விட்டது. 4லட்சம் ரூபாய் வரை பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.

சென்னையில் எங்களுக்கு மொத்தம் 8கிளைகள் உள்ளது. நாங்கள் போலீஸ் பாதுகாப்பு கேட்டிருந்தோம். உரிய பாதுகாப்பை போலீசார் கொடுத்திருந்தனர். அதையும் மீறி இந்த சம்பவம் நடந் துள்ளது.

இவ்வாறு ஓட்டல் மானேஜர் சிவசங்கர் கூறினர்.

எம்.ஜி.ஆர். நகர் அண்ணா மெயின்ரோட்டில் உள்ள உடுப்பி ஓட்டலை முற் றுகையிடப்போவதாக 131வது வார்டு பா.ம.க. கவுன்சிலர் வெங்கடேசன் அறிவித்தார். அதன்படி இன்று அவரும் அவரது ஆதரவாளர்களும் உடுப்பி ஓட்டலை நோக்கி ஊர்வலமாக நடந்து வந்த னர்.

போலீசார் அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத் தினார்கள். இதையடுத்து வெங்கடேசனும் பா.ம.க. நிர்வாகிகளும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கவுன்சிலர் வெங்கடேசன் உள்பட 50பேர் கைது செய்யப்பட்டனர்.

5 Comments:

Anonymous said...

உங்களுடைய உடனடி தகவல்களுக்கு நன்றி. இன்டர்நெட் பேப்பர் ல தேடுனா நாளைக்கு நடிகர்கள் போராட்டம். அசின் வருவாங்களா, நயன் வருவாங்களா, அவர் வருவாரா, இவர் வருவாரா னு தான் சொல்றானுங்க. உண்மையான போராட்டத்த பத்தி சொல்லறதே இல்ல. இந்த தடவையாவது நாம யாருன்னு காட்டணும் அந்த காட்டுப் பசங்களுக்கு.

இலவசக்கொத்தனார் said...

:-(

nilamutram said...

pathivuku nanri
www.kuzhanthainila.blogspot.com

Anonymous said...

we are just be cool at all moments such as mullai periyar, this karnataka matter, in future it should not be, we should show our opposition and we should fight for the right/

Ravi said...

This is really very sad. Even we resort to the same kind of brutality as the goondas in KA, then what morale do we have to condemn them?

When the hotel owner/Kannada sanga people say "Such incidents have never occured in the past" - looks like we are heading back to the pre-civilisation (read barbaric) days.

Yaaro seyyara thappukku yaarayo pazhi vaanguradhu enna nyaayam?